பொதுவா எல்லா பதிவர்களும் கவிதை எழுதுறாங்க , அட்லீஸ்ட் கவிதை முயற்சினாச்சும் எதையாச்சும் எழுதுறாங்க... நமக்கு தான் இந்த கற்பனை சக்தி லாம் இல்ல போல னு பல நாள் வருத்தபட்டுருக்கேன்(!!!)...
உக்காந்து உக்காந்து யோசிச்சாலும் அடுத்து என்ன பதிவு போடலாம் னு முடிவு பண்ண முழுசா மூணு நாள் ஆகிடும் எனக்கு.. ஆனா பாருங்க நேத்து ராத்திரி தீடிர்னு எதோ வார்த்தைல யோசிச்ச மனசு அங்கயே சுத்திசுத்தி வருது... அட இது என்ன என்னமோ கவித தோனுற மாதிரில சிம்ப்டம்ஸ் லா இருக்கு னு நானும் அடம் பிடிச்சு அந்த வார்த்தயயே முன்னாடி பின்னாடி மாத்தி மாத்தி போட்டு எப்பிடியோ நாலு வரிக்கு கவித ரேஞ்க்கு கொண்டுவந்துடோம் ல...
அந்த கொடுமைய உங்களுக்கும் சொல்றேன்...
படிச்சுட்டு கவிதையா இல்ல கவித மாதிரி னு நா போட்டுருக்க தலைப்புக்கு சரியா இருக்க னு சொல்லிட்டு போங்க...
உன்னுடனான என் நிமிடங்கள்
வாழ்கையின் சுவையை கூட்டுங்கின்றன
அண்டா பாயசத்தில் ஆங்காங்கே
மிதக்கும் முந்திரி போன்று.....
வாழ்கையின் சுவையை கூட்டுங்கின்றன
அண்டா பாயசத்தில் ஆங்காங்கே
மிதக்கும் முந்திரி போன்று.....
என்னடா இப்டி திங்கருதுலயே நம்ம கற்பனை குதுர நின்னிருச்சேனு மண்டைய இன்னும் கொஞ்சம் காயவச்சு யோசிச்சப்ப தோணுனது....
உன்னுடனான என் நிமிடங்கள்
வாழ்கையின் சுவையை கூட்டுங்கின்றன
பிரியாணியில் போடப்படும்
பிரிஞ்சி இலை போன்று....
வாழ்கையின் சுவையை கூட்டுங்கின்றன
பிரியாணியில் போடப்படும்
பிரிஞ்சி இலை போன்று....
சுவை னு ரெண்டாவது வரில போட்டுடனாலயோ என்னவோ அடுத்த ரெண்டு வரியும் கிட்ச்சென விட்டு தாண்டவே இல்ல....
ஸ்ஸ்ஸப்பா... ஒரு வழியா நாமளும் கவிதைங்கற பேர்ல ஒரு பதிவ போட்டாச்சு...!!!
பி.கு:
படங்கள் கூகிள் உபயம்.
ஸ்ஸ்ஸப்பா... ஒரு வழியா நாமளும் கவிதைங்கற பேர்ல ஒரு பதிவ போட்டாச்சு...!!!
பி.கு:
படங்கள் கூகிள் உபயம்.
17 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:
//உன்னுடனான என் நிமிடங்கள்
வாழ்கையின் சுவையை கூட்டுங்கின்றன
அண்டா பாயசத்தில் ஆங்காங்கே
மிதக்கும் முந்திரி போன்று.....//
சூப்பருங்கோ
aagaa!
Payaasam, Briyaani rendume arumai!
samaikka katthundaccha!?
@ சூர்யா கண்ணன்
அட நம்மளையும் மதிச்சு கமெண்ட் போட்டதுக்கு நன்றிங்க அண்ணோவ்!!!
@ அத்திவெட்டி ஜோதிபாரதி
சமைக்கரதாங்க முக்கியம்... சாப்பிடுறதே அத பத்தி எழுதுரதுக்குன்டான தகுதி இல்லையா ?!!
பின்னூட்டம் போட்டதுக்கு நன்றி சகா...
ரசனைக்காரி said...
@ அத்திவெட்டி ஜோதிபாரதி
சமைக்கரதாங்க முக்கியம்... சாப்பிடுறதே அத பத்தி எழுதுரதுக்குன்டான தகுதி இல்லையா ?!!
பின்னூட்டம் போட்டதுக்கு நன்றி சகா...//
avv!
intha kathaya yaaraavathu ketteengala!?
:)
போட்டோலாம் பார்த்தா நாக்குல எச்சில் ஊறுதுங்க
பார்சல் கிடைக்குமா ????
காஞ்சி போய் கெடக்குறோம் முடிஞ்சா அனுப்பி வைங்களேன் ப்ளீஸ்
ஹா ஹா... அருமை.. நீங்க எந்த ஊருங்க? பயங்கரமா யோசிக்கறீங்க..
///படங்கள் கூகிள் உபயம்.///
நாம சமையல் பண்ணினா இப்படியா இருக்கும் ?????
@பாலா
ஹ ஹ ஹா....பார்சல் தானே அனுப்பிட்டா போச்சு.....
@ சுபா
எந்த ஊருல இருந்தாலும் நான் யோசிக்கறது இப்டி தாங்க இருக்கும் !!!
@ஜீவன்
இருக்கலாம்... இதெல்லாம் சமைக்கரவங்க கிட்ட கேக்க வேண்டிய கேள்வி பாஸ்....
நல்லா எழுத வருது ஒங்களுக்கு. ஆனாக் கவிதை வைரஸ்கிட்ட இருந்து தப்பிச்சிருங்க.
தமிழ்நாட்டுல சராசரியா தெருவுக்கு ஏழு பேர் கவிதை எழுதிகிட்டிருக்காங்க.
கவிதைக்கு அல்லது கவிதை எழுதுற பேப்பருக்கு ஒரு நல்ல உபயோகம் இருக்கு.
அந்தப் பேப்பரைப் பயன்படுத்த வீட்ல சின்னக் கொழந்தைங்க இருக்கணும்.
கவித்தென்றல் ராமலக்ஷ்மி...
உனக்குல இப்டி ஒரு அவதாரம் இருக்கரதா சொல்லவே இல்ல???
சுப்பரூ
அஹ சுப்பரு..
முதல் சூப்பர் கவிதைக்கு
ரெண்டாவது-சாப்பாடுக்கு :)
அவ்வ்வ்வ்வ்
/ஜீவன் said...
///படங்கள் கூகிள் உபயம்.///
நாம சமையல் பண்ணினா இப்படியா இருக்கும் ?????/
ஹா..ஹா..ஹா..
ஹா ஹா நல்லா இருக்கு ...
@லதானந்த்
எப்டியோ சூசகமா இந்த வேலையெல்லாம் தேவையா உனக்கு னு கேக்காம கேட்டுட்டிங்க... இன்னிமே எழுதல விடுங்க...
@கிருத்திகா
மொத கவிதைக்கே இப்படி பட்டம் லாம் கொடுத்து என்ன முடக்கிடாதிங்க.. கலாய்ச்சதுக்கு ரொம்ப நன்றி!!
@நிஜமா நல்லவன்
நோ நோ அழக்கூடாது...
@சிவன்
சிவனே நம்ம கவிதைய ( சாரி கவித மாதிரிய ) நல்லா இருக்கு னு சொல்லிட்டாரு. ரொம்ப சந்தோசம்ங்க....
Post a Comment
வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க