Friday, August 21, 2009

My litte Bride... சுவாரசியமான படம்


எல்லாரும் சினிமா பத்தி எழுதுறாங்க ... சரி நம்மளும் எழுதுவோம் னு தான் இந்த பதிவு ... தமிழ் சினிமா பத்தியோ ஆங்கில சினிமா பத்தியோ எழுதலாம் தான் ... ஆனா அத எழுதுறதுக்கு நெறைய பேர் இருக்காங்க ... நான் ஒரு கொரியன் படத்த பத்தி எழுதலாம் னு இருக்கேன் ...
மை லிட்டில் ப்ரைட்-

பாய் ப்ரென்ட் கூட இருக்கிற போது
அட இது ஹஸ்பெண்டு ங்க


படத்தோட கதை இதுதான் - ஒரு பதினஞ்சு வயசு பொண்ணுக்கு சாகக்கிடக்கிற தாத்தாவ காரணம் காட்டி குடும்ப நண்பரோட பையனுக்கு கல்யாணம் பண்ணிவச்சுடுறாங்க.. அந்த பையனும் பொண்ணும் சின்ன வயசுல இருந்தே நண்பர்களா இருந்தாலும் கல்யாணம் பண்ணிக்குரதுல ஈடுபாடு இல்ல இருந்தாலும் பெரியவங்களுகாக வேற வழி இல்லாம கல்யாணத்துக்கு ஒத்துக்குறாங்க...

அவங்க ரெண்டு பேரும் தனி வீட்ல அடிக்கிற லூட்டிஸ் லா சான்ஸ் ஏ இல்ல ...
ஸ்கூல் ல படிக்கிற ஒரு பையன அந்த பொண்ணுக்கு ரொம்ப பிடிக்கும் அத தெரிஞ்ச ஹீரோ அவன கூப்ட்டு அவன திட்டவும் முடியாம ஏத்துக்கவும் முடியாம முழிப்பான்...

படத்தோட சுவாரஸ்யங்கள் சில ::

* ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேரும் செம கியுட்...

*
அந்த பொண்ணோட ஸ்கூல் கே ஆர்ட் டீச்சர் ஆ வரப்போறதா ஹீரோயின்
கிட்ட எப்டி சொல்றதுன்னு ஹீரோ ட்ரை பண்ற காட்சி

* ஒரு தலையா காதலிக்குரத ஹீரோ சொல்லாமயே அந்த பொண்ணு தெரிஞ்சுகறது ( அதுக்கு ஒரு லெட்டர் சீன் வரும் .. நல்லா இருந்துச்சு )

* ஒரு வாரமா நைட் ல கஷ்டப்பட்டு காதலிக்காக ஹீரோ வரையிற stage decoration ஓவியம்...

* இன்னும் நிறையா இருக்குங்க எனக்கு தான் கோர்வையா சொல்ல வரல ... நீங்களே படம் பாருங்களேன் ....!!

verdict - டைம் பாஸ்க்கு படம் பாக்குறவங்களுக்கு இந்த படம் நிச்சயமா பிடிக்கும் !!



பி. கு ::

நானும் சினிமா பத்தி எழுதிட்டேன்... எழுதிட்டேன் ...
பாத்துகோங்க நானும் ரௌடிதான்..நானும் ரௌடிதான்..நானும் ரௌடிதான்


இந்த படத்த பாக்கணும் னு பிரியபட்ரவங்க youtube ல பாக்கலாம் ...(with subtitles nu search பண்ணுங்க இல்லனாபேஜாராபூடும் ...)


அந்த வேளை லாம் எங்களுக்கு ஒத்துவராது னு சலிச்சுக்குறவங்க இங்ககிளிக்குங்கோ


வர்ட்டா .......





முக்கியமான குறிப்பு ::
தமிழ் படம் பாத்து நொந்து நூடுல்ஸ் ஆனவங்க இத பாருங்க ஏன்னா இதுல பறந்து பறந்து அடிக்கிற பைட் கிடையாது ... ஓவர் செண்டிமெண்ட் சீன்ஸ் கிடையாது முக்கியமா பன்ச் டயலாக் கிடையாது !!!

Thursday, August 20, 2009

ஆதவன் பாட்டு கேட்டிங்களா ??!!





ரொம்ப ஆவலோட எதிர்பாத்த ஆதவன் பாட்டு ஒரு வழியா ரிலீஸ் பண்ணிடாங்க...

சொந்த சிடி வாங்கி தான் பாட்டு கேட்பேன் னு சொல்றவங்க இந்த பதிவ படிக்கவேணாம் னு இப்பவே சொல்லிகுரேங்க....

மத்தவங்க கீழ உள்ள லிங்க கிளிக் பண்ணி பாட்டு கேட்டுகோங்க...

படத்தின் பெயர் : ஆதவன்
வருடம் : 2009
நடிப்பவர்கள் : சூர்யா, நயனதாரா, ராகுல் தேவ், சரோஜா தேவி , வடிவேலு ...
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
தயாரிப்பு : உதயநிதி ஸ்டாலின்
இயக்கம் : கே எஸ் ரவிக்குமார்
பாடல் வரிகள் : வாலி, பா விஜய் , தாமரை , நா முத்துக்குமார் , ஸ்ரீ சரண் , DR Burn, மாயா

ஒரே சொடுக்கில் அனைத்து பாடல்களையும் பெற

கிளிக்குங்கோ

பாடல் விமர்சனம் தெரிஞ்சுக்க கார்கி அண்ணா பதிவ பாருங்க
விமர்சனம்

Wednesday, August 19, 2009

மேகத்தை துரத்தினவன்

இன்னைக்கு சுஜாதாவோட புத்தகம் ஒன்றை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.... 1979 வருஷத்துல வந்த கதைதான்... ஆனா அத படிக்கும்போது பழைய புக் னு தோணவே இல்ல...அதுதான் சுஜாதாவோட சிறப்பு...

மேகத்தை துரத்தினவன்

நெறைய பேர் இந்த கதைய படிச்சுருப்பிங்க ... படிக்காதவங்களுக்காக ஒரு சின்ன
கதைச் சுருக்கம்...

அன்பழகன் என்கிற சாதரண மனுஷன் வாழ்கைல நடக்கிற சம்பவங்கள்... அவனுக்கே தெரியாமல் அவன் ஒரு பேங்க் கொள்ளையில் ஈடுபடுகிறான் .. போலீஸில் மாட்டிக்கொள்கிறான் ... அவனுக்கு எதிராக வாதாடும் வசந்த் அவனுக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தருகிறான்... அதுக்கு அப்புறம் வசந்த் மற்றும் ரத்னா அன்பழகனுக்கும் அந்த கொல்லைக்கும் தொடர்பு இல்ல னு கண்டுபிடிக்கறது மிச்ச கதை.....


இதுல வசந்த் பேசுற வசனம் ரொம்ப நடைமுறைத்தனமா( பிராக்டிக்கலா இத அப்டி சொல்லலாமா னு தெரில தப்பு சொல்லுங்க திருத்திக்கிறேன் ) இருக்கு...

"ஒரு வக்கீலுக்கு அவனுடைய கட்சிக்காரன்தான் முக்கியம். நான் கூட ஆரம்ப காலத்தில் ஜஸ்டிஸ், நியாயம் அது இதுன்னு கலர் கலரா கண்கள் பாத்துக்கிட்டுத்தான் இருந்தேன். ' சமூக நியாயம்'கிறதுக்கும் ' சட்டப்படி நியாயம்' கிறதுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்குன்னு கேள்விப்பட்டேன். எதோ ஒரு தீபாவளி மலர்லே படிச்சேன். ' நியாயங்கள்' னு ஒரு சிறுகதை. படிச்சுப் பாருங்க ! ஒரு வக்கீலுக்கு மனசாட்சிங்கறது ஒத்து வராது. கூடாது. அவனுக்கு ஒரே ஒரு வழக்கு ! அவன் தேர்ந்தெடுத்தது ஒரு கட்சியை. அந்த கட்சிக்கு அவன் வாதடியாகனும். பிராஸிக்யூன், டிபென்ஸ் இரண்டு பேருக்கும் சட்டப் புஸ்தகம் ஒண்ணுதான். ஒரு புட்பால் மேட்ச் மாதிரி. ரத்னாவின் காட்சிக்கும் வசந்த் காட்சிக்கும் சில விதிகள் உண்டு. அதில் முக்கியமானது சேம் சைடு கோல் போடக் கூடாது. "


இதுல யாருக்கும் ( எந்த வக்கீலுக்கும் ) மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பு இல்லன்னு எனக்குத் தோனுது. உங்களுக்கு??!!!

Sunday, August 16, 2009

கண்டதும் காதல் !!

பார்த்து காதல்
பாக்காம காதல்
பேசி காதல்
பேசாம காதல்
பழகி காதல்
SMS காதல்
E-மெயில் காதல்
(((அப்பப்ப்பா டிசைன் டிசைன் காதலிக்குறாங்க !!!)))

இப்படி எத்தன காதல் இருந்தாலும் கண்டதும் காதல் வயப்படறது பலரோட கெட்ட பழக்கம்...!!

கண்டதும் காதல விவரிக்குறது ரொம்ப கஷ்டமான விஷயம்...

எந்த வித விளக்கமும் இல்லாம அந்த உணர்ச்சிய புரிஞ்சுக்க கீழ உள்ள படத்த பாருங்க!!!!!
|
\/
|
\/
|
\/
|
\/
|
\/
|
\/
|
\/
|
\/
|
\/
|
\/
|
\/
|
\/
|
\/


|
\/
|
\/
|
\/







------------------------------------------------------------------------------------
பின் குறிப்பு ::
============

இந்த படத்த பாத்து

சிரிச்சவங்க...
ரசிச்சவங்க...
கடுப்பானவங்க...
வெறியானவங்க...
மொக்கயானவங்க...


எல்லாரும் பின்னூட்டம் போடுங்க பா!!!
உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location