Saturday, October 31, 2009

ஜப் வி மெட் Vs கண்டேன் காதலை



பொதுவா தமிழ் படத்த பத்தி எழுதி ரிஸ்க் எடுக்க நான் விரும்புறது இல்ல... ஏன்னாக்க எப்டியும் நீங்க எல்லாரும் படம் பார்த்துருப்பீங்க இல்லனா ஏற்கனவே யாருனாச்சும் எழுதுன விமர்சனங்கள படிச்சி அந்த படம் எப்படி என்ன ஏது னு தெருஞ்சுருப்பீங்க... என்ன நான் சொல்றது?!! ( நோட் திஸ் பாயிண்ட் மிஸ்டர் சஞ்சய்காந்தி, போன பதிவுல குற்றம் கண்டுபிடிச்சிங்கள்ள!!)

அப்புறம் எதுக்கு இந்த வேண்டாத வேலை னு கேட்க்குறீங்களா..??!! சும்மா ஒரு ரிஸ்க்க ரஸ்க்கு மாதிரி சாப்பிடலாம்ன்னு தான்...

ஜப் வி மெட் படம் எனக்கு ரொம்ப பிடிச்ச படம்... ஹிந்தி தெரியலனாலும் நாலு பேர மொழிபெயர்ப்பு பண்ண சொல்லி ஒவ்வொரு சீனையும் நாப்பது தடவைக்கு மேல பாத்து ( ரொம்ப அதிகமா இருக்கோ ??!!) சரி சரி நாலு தடவைக்கு மேல பாத்து ஒரு வழியா படத்த புரிஞ்சுகிட்டேன்....!!

ஷாகித் கபூருக்கும் கரீனாவுக்கும் இருந்த கெமிஸ்ட்ரி என்னமோ சூப்பரா இருந்துச்சு... பரத்துக்கும் தம்மனாவுக்கும் அது கொஞ்சம் கம்மியா தான் இருந்துச்சுன்னு எனக்கு பட்டுச்சு...
ஹிந்தி படத்துல அவங்களுக்கு உள்ள சில சீனஎல்லாம் தமிழ்ல தேவைல்லை ன்னு டைரக்டர் நினைச்சுட்டாரு போல....

அப்பறம் கரீனா ரொம்ப துறுதுறுப்பான பொண்ணா வளம் வருவாங்க அதையே நம்ம தம்மன்னா தங்கச்சி ஓவர் அக்டிங் பண்ணி கொஞ்சம் லூசு மாதிரி சில சீன் ல பண்ணிருச்சு...

பரத் பத்தி என்ன சொல்றது.... அவரு பங்குக்கு ஷாகித்த கொஞ்சம் சீன்ஸ்ல காப்பி பண்ணிருக்காரு...அவரு திரும்பி வந்து கம்பெனி மீட்டிங்க்ல பேசுற சீன்ல ரொம்ப சாதரணமா பேசிட்டாரு... (கஜினி ல சூர்யா என்ன அழகா பேசுவாரு.... ச்சாச்சா சான்சே இல்ல..... சூர்யாவா பத்தி நினச்சது போதும்ங்கறீங்களா ... ரைட்டு விடுங்க ....)

ஹிந்தி படத்துல இல்லாம தமிழ்ல டைரக்டர் சேர்த்துருக்கது நம்ம சந்தானம் கதாபாத்திரம் தான்... படம் முழுக்க வராரு... வழக்கத்த விட கம்மியாவே ரெட்டை அர்த்த வசனங்கள்லாம் பேசாம வரது நல்ல இருக்கு... அவரு டயலாக்ஸ் ரெண்டு மூணு எடத்துல சென்சார் பண்ணிடாங்க.... அப்புறம் அந்த தியேட்டர் சீன் என்னத்துக்குன்னு தான் தெரியல!!!

தம்மன்னாவோட காதலனா வர அந்த கௌதம் பையன் யாருங்க...??!! எங்கயோ பாத்தமாதிரி இருக்கு ஆனா எங்கனு தான் தெரியல....

அப்புறம் நம்ம கேபிள் அண்ணன் சொன்ன மாதிரி ஹிந்தி படத்துல ஷாகித் கரீனா வீட்டுக்கு போனதும் ஒரு கலாச்சார மாற்றமே இருக்கும்... இங்கன அப்டிலாம் ஒன்னும் இல்லாதது பெரிய குறை தான்....

ஜப் வி மெட் ங்கற படத்த தான் ரீமேக் பண்ணிருக்காங்க னு நினச்சேன்... நடுவுல ஒரு பாட்டுக்கு நம்ம பரத் கஜினி ல ஆமீர் கான் ஆடுனாப்ல ஒரு பாட்டுக்கு வேற ஆடுறாரு....!!!

பாட்டும் அவ்ளோ சூப்பராலம் இல்ல.... ஆமா பாடலாசிரியர் னு பேர் போடுரச்ச கார்க்கி னு போட்டாங்களே..... அந்த கார்க்கி யாரு????!!!

சந்தானத்தோட காமெடி நல்லா இருந்துச்சு... "மூணு மில்லு முப்பதிரெண்டு பல்லு" ன்னு ரய்மிங்ங்கா பின்றாப்ள..... வடிவேலு கணக்கா இவரும் இந்த படத்துல சிங்கமுத்து கூட சேர்ந்துருக்காரு... மனோபாலா எதோ ரெண்டு மூணு சீனுக்கு வந்துட்டு போறாரு...

அப்புறம் தமன்னாவோட குடும்பமா வரவங்க யாரும் அவ்ளோ பெருசா கவனத்த ஈர்க்கலன்னு தான் சொல்லுவேன்... ஹிந்தி படத்துல தாத்தாவா வருகிரவர பாத்தாலே கொஞ்சம் டெரர் தாத்தா னு தோணும் இங்க ரவிச்சந்திரன்னா பாத்து அப்படி தெரியல....

ரெண்டு வரில சொல்லனும்னா ஹிந்தி ல இது ஒரு ரொமான்டிக் படம் தமிழ்ல காமெடிய மட்டுமே ரொம்ப நம்பி எடுத்துருக்காங்க....
என்னடா ஒரே மைனஸ் பயின்ட்டா சொல்றேன் னு பாக்குறீங்களா.... ஹிந்தி படம் மொதல்லயே பாத்துட்டுனால இப்படி இருக்கு.... புதுசா தமிழ்ல பாக்குறவங்களுக்கு இந்த படம் கண்டிப்பா பிடிக்கும்....

இதுக்கு மேலயும் என்னத்த சொல்றது... ஆளாளுக்கு அவங்கவங்க பங்குக்கு படத்த பத்தி எழுதுவாங்க... எல்லாத்தையும் படிச்சுட்டு படத்துக்கு போகலாமா வேணாவான்னு முடிவு பண்ணிக்கோங்க....

Thursday, October 29, 2009

நாலு பேருகிட்ட நல்ல பேர் வாங்குறது எப்பிடி ?!!!


" நான் நிறைய நல்ல காரியம்லாம் பண்ணிக்கிட்டுருக்கேன். இருந்தாலும் எனக்கு ஒரு பெரிய குறை !" அப்பிடின்னு என் நண்பர் சொன்னாரு.

"என்ன குறை ?" ன்னு நானும் கேட்டேன்.

" என்னை யாரும் நல்லவன்னு சொல்றதில்லே! அதுதான் குறை !" ன்னார் அவர்.

நல்ல செயல்களை செய்யுறதுங்கறது வேறே! நல்லவன்னு பேர் எடுக்கறது வேறே !

நல்ல பேர் வாங்குறதுன்னா சும்மாவா ?

அதுசரி... எல்லாருகிட்டயும் நல்ல பேர் வாங்கறது எப்படி?

இதுக்கு ஒரு அனுபவசாலி (டேல் கார்னர்) சில வழிகளைச் சொல்கிறார்.

அப்டியாவது நல்ல பேர் வாங்க முடியுதான்னு பார்ப்போமே! என்ன சொல்றீங்க ?

அவரு முக்கியமா இதுக்கு ஒரு எட்டு வழிகளைச் சொல்றாரு! எது எது நம்மாலே முடியுதோ அந்த வழியில்லேயெல்லாம் போய் பார்கலாமே!

அவரு சொல்ற முதல் வழி : மற்றவங்களை உண்மையாவே பாராட்டுறதுக்குப் பழகணும்ங்கறார்.

நம்மள்ல பல பேர் எப்பிடின்னா, அடுத்தவங்க ஏதாவது ஒரு நல்ல காரியம் பண்ணினா, அவங்களை பாராட்டுறதுக்கு பதிலா அவங்க மேலே பொறாமைப்பட ஆரம்பிச்சுடுறோம்! அல்லது அவங்க கிட்ட பேசுறதை நிறுதிக்கிறோம்.

அதனாலே நம்ம பேரும் கெட்டுப் போவுது; உடம்பும் கெட்டுப் போவுது.

பிறர் மேலே உண்மையாவே அக்கறை கொள்ளனும்ங்கறது ரெண்டாவது வழி.

உங்க பக்கத்துல இருக்குறவருக்கு லேசா தலைவலி. அதுக்கு உங்ககிட்டக்க மாத்திரை இருக்கு. அப்பிடி இருந்தா அதுலே ஒண்ணை கொடுத்து உதவுங்களேன். என்ன கொறைஞ்சிட போவுது இப்ப.

ஒருக்கால் அந்தத் தலைவலியே நீங்க பக்கத்துலே இருக்கறதுனாலே கூட அவருக்கு வந்துருக்கலாம்!!!

அடுத்தவங்க ஒரு தவறு பண்ணிபுட்டாங்கன்னா அதை மறைமுகமா சுட்டிகாட்டணும்.

"அய்யய்யோ, இப்படி பண்ணிப்புட்டீங்களே !" ன்னு ஆரம்பிகப்புடாது! தவருங்கறது திருத்திக் கொள்ளக்கூடியதுதான் ங்கறதை அவருக்கு உணர்த்தி ஊக்கம் அளிக்கணும்.

"பரவாயில்லே இனிமே இதுமாதிரி நடக்காமே பார்த்துக்கலாம் !" ன்னு சொல்லணும்.

உங்களுக்கு எதிர்லே இருகரவங்களை அலட்சியப் படுத்தப்புடாது! அவரும் முக்கியமானவர்தான் ங்கறதை அவரே உணர்ற அளவுக்கு நீங்க நடந்துக்கணும்.

அதுக்கு என்ன பண்ணலாம்.

அவருடைய ஆலோசனைகளையும் அடிக்கடி கேளுங்க;

"இதை பத்தி நீங்க என்ன நினைகறீங்க ?" ன்னு கேளுங்க! "என்னங்க... நாணன் சொல்றது சரிதானா ?" ன்னு கேளுங்க.

அவரையும் பேசுறதுக்கு ஊக்கப்படுத்துங்க. நீங்க மட்டுமே பேசிக்கிட்டுருக்காதீங்க. அவர் பேசுறதையும் பொறுமையா கேளுங்க. அப்பதான் உங்க பேர்லயும் அவருக்கு ஒரு நல்ல அபிப்பராயம் வரும்!

ஒரு கடுமையான வாக்குவாதம் பண்ணிக் கிட்டுருக்கீங்க; அதுமாதிரி வாக்குவாதங்கள்லேயிருந்து சிறந்த பலன் பெறனும்னா அதுலேயிருந்து ஒதுங்குறதுதான் நல்ல வழியாம்.

நழுவறதுக்கு நமக்கு சொல்லியா கொடுக்கணும்? அதுதான் நமக்கு கைவந்த கலையாச்சே!

இன்னொரு விஷயம் என்னன்னா.... அடுத்தவங்களை மகிழ்ச்சியடைய வைக்கிறது மூலமா நாமளும் மகிழ்ச்சியடையுறோம் ங்கறதை நல்ல புரிஞ்சுக்கணும்.

சில பேருக்கு அடுத்தவங்களை அதிர்ச்சியடயவச்சி வேடிக்கைப் பார்க்குறதுலேயே ஒரு தனி சுவாரஸ்யம்! அதுலாம் ரொம்ப தப்பு!

அப்புறம் இன்னொரு முக்கியமான பாயிண்ட்.

ஒருத்தருக்கு அவரோட பேர் மட்டும்தான் அவரைப் பொருத்தவரைக்கும் மிக இனிமையான வார்த்தை அப்படிங்கறதை ஞாபகத்திலே வச்சிக்கணுமாம்.

அதனாலே அவங்க பேரை எழுதுறப்போவும் சொல்றப்போவும் சரியா எழுதணும்- சரியா சொல்லணும்! அது அவங்களுக்கு சந்தோஷமா இருக்கும்.

நல்ல பேர் வாங்குறது எப்படிங்கறதுக்கு ஒரு வெளி நாட்டு நிபுணர் சொல்லியிருக்குற யோசனைகள் இவ்வளவும்.

இதெல்லாம் உங்களால முடிஞ்ச அளவு முயற்சி பண்ணிபாருங்க அப்பனாச்சும் நல்ல பேர் கிடைக்குதான்னு பாப்போம். !!!

இப்டித்தான் இந்த வழிகள எல்லாம் என் தோழி கிட்டக்க சொன்னேன். அவ எல்லாத்தையும் முயற்சி செய்யமுடியலனாலும் கடைசி பாயின்ட்ட மட்டும் முயற்சி பண்றேன் னு சொல்லிருக்கா. அதாவது எல்லாரையும் பேர் சொல்லி கூப்பிடறது. ஆனா பாருங்க அதுக்கு அவங்க வீட்டுல உள்ளவங்க எல்லாம் ரொம்ப கோவமாகிட்டாங்க. ஏன்னு கேளுங்களேன் அவங்க அப்பா பேர் மாடசாமி அத இந்த பிள்ள சுருக்கி செல்லமா கூப்பிட ட்ரை பண்ணிருக்கா வீட்ல உள்ளவங்க சும்மா விடுவாங்களா சொல்லுங்க ??!!!

------------------------------------------------------------------------------------------------------

பி.கு:
இந்த பதிவ போடுறதுக்கு மிக முக்கியக்காரணமா இருந்தவங்க போன பதிவுல நான் எழுதின
" யாருனாச்சும் நல்லவங்க இருந்தா ஒரு ஒட்டு போடுங்க" ங்கற ஒத்த வரிக்காக ஒட்டு போட்ட
ரொம்ப நல்லவங்க.

அவங்க இந்த பதிவுக்கும் நல்லவங்களாவே நடந்துக்குவாங்க னு நம்பிக்கையுடன் விடைபெரும் உங்கள்
ரசிக்கும் சீமாட்டி.

Wednesday, October 28, 2009

Ella Enchanted - டைம் பாஸுக்கு ஒரு பாண்டஸி படம் !!


இந்த பதிவுல நான் எழுத போற படம் "Ella Enchanted"... இதுவும் ஒரு பாண்டஸி படம் தான்...1997 நாவலா வந்த கதைய தான் 2004 ல படம் எடுத்தாங்க...

இந்த படத்தோட கதை இப்டித்தான் ஆரமிக்கும்.. பிரேல்ங்கற ஒரு ஊருல பிறக்கிற குழந்தை எலா.. அந்த குழந்தைக்கு லுஸிண்டாங்கற தேவதை " கீழ்படிதல்" அப்டிங்கற வரத்தை கொடுத்துருவாங்க... ஆனா நாளாக நாளாக அது வரம் இல்ல சாபம் னு எலாவுக்கு புரியும்... யாரு என்ன சொன்னாலும் அத அப்டியே செய்வா... என்னதான் அது தப்பு னு நினைச்சாலும் அதபண்ணாம இருக்கமுடியாது அவளால...
உதரணத்துக்கு சொல்லணும் னா "stay there till i come" னு சொன்னா அந்த பொண்ணால அவங்க வரவரைக்கும் அந்த இடத்தைவிட்டு நகர முடியாதுனா பாத்துகோங்களேன்...!!!

கொஞ்ச நாள் கழிச்சு எலாவோட அம்மா செத்துபோயிருவாங்க... அவங்க அப்பா பண தேவைக்காக வசதியான இன்னொரு பொம்பளைய கட்டிப்பாரு..... அந்த பொம்பளைக்கு ரெண்டு பொண்ணுங்க இருப்பாங்க... வெயிட் வெயிட் கதை கொஞ்சம் சின்ட்ரலா மாதிரி போகுது னு பீல் பண்றீங்களா?? நானும் அப்படி தான் பீல் பண்ணேன்... புதுசா வர ரெண்டு பொண்ணுங்களும் எலாவுக்கு இந்த மாதிரி ஒரு சாபம் இருக்குனு வந்த கொஞ்ச நாளைலயே தெரிஞ்சுக்கும்... அதுனால அவங்க இஷ்டத்துக்கு எலாவ ஆட்டிப்படைக்க ஆரம்பிச்சுருவாங்க..

இப்ப தான் நம்ம ஹீரோ என்ட்ரி...அவரு தான் அந்த நாட்டுக்கு அடுத்த வாரிசு..... ரொம்ப சூப்பரா ஆகா ஓகோ னு அந்த ஊருல உள்ள எல்லா பொண்ணுங்களும் அலைவாங்க அவரு பின்னாடி ஆனா அந்த பையன் ஒன்னும் அம்புட்டு அழகாலாம் இல்லை... நம்ம ஏலாவும் அந்த இளவரசன் சார்மிங்கும் எதேட்சையா ஒரு நாள் சந்திப்பாங்க... அவங்களுக்கு ஒருதருக்குகொருதர் பிடிச்சுபோகும்.. அப்டியே பாட்டு டூயட் னு முடிஞ்சுரும்னு னு நினைக்காதிங்க... எலாவோட சித்தி பொண்ணுங்க ரெண்டும் சார்மிங்குக்கு ரூட் போடுங்க.. இதுக்கு நடுவுல எலாவ காமெடி பீஸ் ஆகுறதுக்கு ஒரு சீன் வேற வரும்...


இதுக்குமேலையும்இவங்க சொல்ரபடிலாம் ஆட முடியாது னு முடிவு பண்ற எலா தனக்கு இந்த சாபத்த கொடுத்த லுசிண்டாவ தேடி கிளம்பிருவா... ஏனாக்க வரம் கொடுத்தவங்க தான் அத மாத்தமுடியும்ல... அப்படி கெளம்பி போற எலா கூட slannen ங்கற ஒரு kulla மனிதன் கூட வருவான்... அவங்க காட்டுகுள்ள போகும்போது மனுசன சாப்டற கும்பல்கிட்ட மாட்டிக்குவாங்க.. அங்க திடீர் னு நம்ம ஹீரோ என்ட்ரி கொடுத்து அவங்க ரெண்டு பேரையும் காப்பாத்துவாரு. அப்புறம் அவங்களுக்கு தானும் துணையா வரேன்னு போவாரு. அப்புறம் ஒரு ஜயண்ட்ஸ் விருந்துல கலந்துகரவங்க அப்டியே ஒரு பாட்டு பாடி டூயட் ஆடி லவ்வ ஆரம்பிச்சுருவாங்க.

அப்பாலிகா அரண்மனைக்கு வருவாங்க. அங்க நம்ம இளவரசரோட மாமா எப்டினாச்சும் சார்மிங்க போட்டு தள்ளிட்டு தானே அரசராகனும் னு ரொம்ப பக்காவா பிளான் போட்டுக்கிட்டு இருப்பாரு. நம்ம எலா தான் என்ன சொன்னாலும் அத அப்டியே செஞ்சுடுவால அதுனால எலாவ கூப்பிட்டு நீ தான் அவன கொல்லனும் னு சொல்லிட்டு இந்த திட்டத்த வெளில யாருகிட்டயும் சொல்ல கூடாதுனும் சொல்லிருவாரு. நம்ம எலாவுக்கு இப்ப என்ன பன்றதுனே புரியாது. அவளோட கூட வந்த குள்ளன் ஒருத்தன் இருப்பான்ல அவன கூப்பிட்டு அவள ஊருக்கு வெளில இருக்க மரத்துல கட்டிவச்சிட சொல்லிருவா. விதி யார விட்டுச்சு சும்மங்காட்டிக்கு அந்த பக்கம் வர லுஸிண்டா இவ கட்ட அவுத்து விட்டுடுவாங்க.


அப்புறம் என்ன ஆச்சு னு நீங்க படம் பாத்தா தெரிஞ்சுகோங்க.

இது வழக்கம் போல டைம் பாஸுக்கு பாக்கிற படம் தான். படத்துல பெருசா கருத்துனுலாம் ஒன்னும் இருக்காது. அப்புறம் இந்த படத்துல பாட்டுலாம் எனக்கு பிடிச்சுருந்துச்சு... உங்களுக்கு எப்படி னு தெரியல... படம் கடைசில எல்லாரும் ஒரு டான்ஸ் ஆடுவாங்க அது ரொம்ப கலர்புல்லா இருக்கும்.

பி.கு:
யாருனாச்சும் நல்லவங்க இருந்தீங்கனா ஓட்டு போடுங்க பாஸு...!!




Sunday, October 25, 2009

மூணு வாரம் கழிச்சு மூணு படம்....!!!

எல்லாருக்கும் ஒரு பெரிய வணக்கம்... பதிவு எழுதி கிட்டத்தட்ட மூணு வாரம் ஆகிடுச்சு...
நடுவுல ஏன் பதிவு போட முடியல னு சொல்றதுக்கு பெரிய கதையே இருக்கு... பயபடாதிங்க உங்ககிட்ட கதை சொல்லி மொக்க போட போறது இல்ல...சுருக்கமா சொல்லணும் னா BSNL செஞ்ச சதி அவ்ளோ தான்...

சரி மேட்டருக்கு வரேன்... இந்த பதிவுல மூணு படத்த பத்தி எழுதலாம் னு இருக்கேன்... அந்த மூணு படத்துக்கும் சில ஒற்றுமைகள் உண்டு அது என்ன னு அப்பாலிக்கா சொல்றேன்...

மொத படம்

You've Got Mail

இந்த கதை நீங்க அடிக்கடி பாத்த மாதிரி தான் இருக்கும்... அதான் நம்ம ஊர் பக்கம் ரொம்ப நாள் அறைச்சங்கலே பாத்து காதல் பாக்காம காதல் னு டிசைன் டிசைனா அந்த மாதிரி இதுல ஹீரோவும் ஹீரோயினும் AOL Messenger ல சாட்டி( அதான் சாட் பண்ணி) விரும்ப ஆரம்பிப்பாங்க... ஆனா விதி னு ஒண்ணு இருக்கு ல... சாட் ல அவ்ளோ நெருக்கமா இருக்க இவங்க நிஜ வாழ்கை ல பிசினஸ் எதிரியா இருப்பாங்க...

நேர்ல பாக்கும் போது லாம் சண்ட போட்ற இவங்க எப்படி ஒத்து போறாங்க னு காமிக்கறது அவங்களுக்குள்ள நடக்குற வசனங்கள்ல தான்... இந்த படத்துல வசனம்லாம் ரொம்ப நல்லா இருந்துச்சு... சாம்பிள் கு கொஞ்சம் வசனம் இங்க...
"I started helping my mother here after school when I was six years old. I used to watch her, and it wasn't that she was selling books, it was that she was helping people become whoever they were going to turn out to be. When you read a book as a child it becomes part of your identity in a way that no other reading in your life does."

"Sometimes I wonder about my life. I lead a small life. Well, valuable, but small. And sometimes I wonder, do I do it because I like it, or because I haven't been brave? So much of what I see reminds me of something I read in a book, when shouldn't it be the other way around? I don’t really want an answer. I just want to send this cosmic question out into the void. So goodnight, dear void."

படத்தோட பாத்த வசனம்லாம் இன்னும் நல்லா இருக்கும்..... ஸோ பாருங்க....!!

அடுத்த படம்

Kate & Leopold

இது ஒரு பாண்டஸி படம்... அதாவது ஒருத்தன் ஒரு பார்முலாவ கண்டுபிடிச்சு இதுக்கு முன்னாடி உள்ள நூற்றாண்டுக்கு எப்படி போறதுன்னு தெரிஞ்சுப்பான்... அப்படி இவன் போகும்போது இவன் பின்னாடியே நம்ம ஹீரோ ட்யுக்கும் அவரு காலத்த விட்டு நம்ம நிகழ்காலத்துக்கு வந்துருவாரு... அப்படி வர ட்யுக் இங்க என்ன பண்றாரு னு தான் மிச்ச சாரி சாரி மொத்த கதை ;)

இங்க வந்த ட்யுக் கேட் அப்டிங்கற பொண்ணுகிட்ட மனச பரிகொடுக்குறாறு.. அந்த பொண்ணு ஒரு விளம்பர நிறுவனத்துல வேலை பாக்குது.. அவ ஒரு விளம்பரத்துக்கு நடிகறதுக்காக நம்ம ட்யுக் கிட்ட கேக்கும்... அவரும் சம்மதிப்பாரு. ஆனா பாருங்க அந்த விளம்பர பொருள் அவ்ளோ தரமானதா இல்ல காசுக்காக எதுக்கு வேணா விளம்பரம்பன்னுவீன்களோ ஆச்சாக்கும் பூச்சாக்கும் னு கத்திட்டு ட்யுக் அந்த எடாத விட்டே போய்டுவாரு.. அந்த பொண்ணும் சரி போறான் விடு னு நினைக்கும் .ஆனா முடியாது... அப்பளிக அந்த பொண்ணு ட்யுக்க தேடி அவரு வாழ்ந்த காலத்துக்கு போய்டும்... அவங்க ரெண்டு பேரும் சேருராங்களா இல்லையானு நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியனுமா???!!

நெக்ஸ்ட் படம்

Sleepless in Saettle


நம்ம ஹீரோ ஓர் Widower (இத எப்படி தமிழ்ல சொல்லணும் னு யாருனா சொல்லுங்களேன்) . அவரு தான் பையனோட சியாட்டல்ங்கற ஊருக்கு மனைவி இறந்த சோகத்த மறந்துட்டு புது வாழ்க்கை ஆரம்பிக்க போறாரு. ஒரு நாள் ரேடியோல நடக்குற ஒரு கௌன்சிலிங் நிகழ்ச்சி ல அந்த பையன் பேசுறான். தன்னோட அப்பா கவலையாவே இருக்காரு அவருக்கு நீங்க எதுனா சொல்லுங்க னு நிகழ்ச்சி நடத்துற ஆன்ட்டி கிட்ட கேக்குறான். அந்த ஆண்ட்டி உங்க அப்பாவ பேச சொல்லு னு சொல்றாங்க... நம்ம ஹீரோவும் பேசுறாரு.. தான் மனைவிய அவரு எப்படி எப்பிடி லாம் நேசிச்சாரு இப்ப எவ்ளோ மிஸ் பண்றேன் ( மிஸ் பண்றதுக்கும் தமிழ்ல யாருனா சொல்லுங்க பா) னு சொல்லுறாரு...

இவரு சொன்னத கேட்ட பொண்ணுங்க நெறையா பேரு அவருக்கு லெட்டர் போடுறாங்க. அத்தனையும் ஹீரோவா விரும்புறதா சொல்லி வருது. நம்ம ஹீரோயினும் லெட்டர் போட்டவங்க தான்.ஆனா அவங்க ஹீரோவா விரும்புறதா சொல்லிருக்கமாட்டங்க. ஹீரோவோட பையனுக்கு ஹீரோயின் எழுதிருந்த கடுதாசி ரொம்ப பிடிச்சிபோகும். ஆனா ஹீரோ அதுலாம் ஒதுக்காது டா நான் என் கூட வேலை பாக்குற பொண்ணயே கட்டிக்கலாம் னு இருக்கேன் னு சொல்லுவாரு. ஆனா அந்த பையனுக்கு ஹீரோ சொல்ற பொண்ண பிடிக்காது.ஹீரோயினுக்கு கூடிய சீக்கிரம் கல்யாணம் ஆனா அவங்களுக்கு அந்த கல்யாணத்துல எல்லாம் இருக்கு ஆனா எதோ இல்லை னு தொநிடே இருக்கும். அந்த குட்டி பையன் ஹீரோயினுக்கு ஒரு லெட்டர் எழுதும் அதாவது காதலர் தினதன்னைக்கு அவங்க தன்னோட அப்பாவ ஈபிள் டவர் ல சந்திக்கணும்னு. ஹீரோ ஹீரோயின் அன்னிக்கு சந்திச்சங்களா இல்லையா னு கிளைமாக்ஸ் பாத்துகோங்க.

சரி மூணு படத்துக்கும் உள்ள ஒத்துமை என்ன னா மூணு படத்துக்கும் ஹீரோயின் மெக் ரியான்.
என்னமோ போங்க இந்த ஹீரோயின் எதுலயும் ஹீரோயினாவே தெரியல.... அப்பிடியே கதாபாத்திரமா தான் தெரியுறாங்க னு சொல்லவந்தேன்...

அடுத்த ஒற்றுமை முதல் படமும் மூணாவது படமும் ஏற்கனவே வந்தா படத்தோட தழுவல்கள்...
You've Got Mail - A Shop Around the Corner
Sleepless in Seattle - An Affair to remember
(அங்கலாம் இந்த படம் இந்த படத்தோட தழுவல் னு சொல்லிகிறாங்க... இங்க தன் வித்தியாசமான கதை னு சொல்லி ஒரே கதையா பத்து பதினஞ்சு வாட்டி எடுக்குறாங்க)
இன்னொரு ஒத்துமை கூட இருக்கு... மூனும் ரொமான்ஸ் படம்... கொஞ்சம் பொதுவா தான் போகும்.. பொறுமை இருக்கவங்க பாருங்க...
மூணு படமும் வந்து எட்டு பத்து வருஷம் ஆச்சுங்க....


அப்பாலிக்கா மெயின் மேட்டர் ஒண்ணு இருக்குது... கே. எஸ். ரவிக்குமார் கிட்ட இருந்து எப்படி கலை படம் எதிர்பார்க்க கூடாதோ அதே மாதிரி என் கிட்டருந்தும் உலக சினிமாலாம் எதிர்பாக்காதிங்க... நா எதோ பொழுதுபோக்குக்கு படம் பாக்குரவ... எனது ரசணை னு பேர் வச்சுருக்கனால எனக்கு பிடிச்ச படம் தான் போட முடியும்.. உலக தரத்துக்கு லாம் இன்னும் படம் பாக்க ஆரம்பிக்கல... மொதல்ல என் தரத்துக்கு உள்ள எல்லா படத்தையும் பாக்குறதுனு முடிவுல இருக்கேன். நான் பாத்ததுல பிடிச்சத உங்க கூட பகிர்ந்துகுரேன் அம்புட்டுதான்!!
உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location