Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Monday, December 21, 2009

ஜஸ்ட் லைக் ஹெவன் - ரொமாண்டிக் படம்



ரீஸ் விதேர்ஸ்பூன் தான் இந்த படத்தோட கதாநாயகி. என்னமோ தெரியல இவங்கள எனக்கு பாத்த உடனே பிடிச்சுபோச்சு. இவங்க நடிச்ச படங்களா தேடி பிடிச்சு பாத்தகாலம் உண்டு.



அப்படி நான் பாத்ததுல முதல் படம் தான் "ஜஸ்ட் லைக் ஹெவென்".



இந்த படத்தோட கதைன்னு பாத்தாக்க ஹீரோயின் ஒரு டாக்டர். சதா சர்வ காலமும் கடமையே கண்ணா இருக்குறவங்க. வேலை முடிஞ்சு ஒரு நாள் அவங்க ப்ளைண்ட் டேட்ட பாக்க போற சமயத்துல எதிர்பாராத விதமா ஒரு விபத்துல மாட்டிக்கிறாங்க.


அப்டியே கட் பண்ணி அடுத்த சீன். மூணு மாசம் கழிச்சுன்னு போடுறாங்க. ஒருத்தர் வீடு தேடி அலைஞ்சுட்டு இருக்காரு. இவரு தான் ஹீரோன்னு சொல்லவும் வேணுவா??!! மார்க் ருபல்லோ அப்டின்னு ஒருத்தர். பாத்தவுடனே பிடிக்குற டைப் இல்ல. பட் இந்த படத்துல அந்த கதாபாத்திரத்த நல்லா செஞ்சுருக்காரு.

சரி கதைக்கு வருவோம். அப்படி வீடு தேடி வரவரு நம்ம ஹீரோயின் இருந்த வீட்டுல குடியிருக்க நேரிடுது. அங்க திடீர்னு ஹீரோயின் இவரு முன்னாடி வந்து நின்னு கண்டபடி திட்டுறாங்க. இது என் வீடு யார கேட்டு நீ வந்த?? ஏன் பொருள எல்லாம் எடம் மாத்தி மாத்தி வச்சுருக்க அப்பிடினுலாம். கொஞ்ச நேரம் ஹீரோவுக்கு ஒன்னுமே புரியாம குழம்பிபோய் நிக்கிறாரு.

அந்த பொண்ணு சாதாரண பொண்ணா தெரியல. திடீர் திடீர் ன்னு வருது போவுது. செவத்துலலாம் நடக்குது.பாத்து பயங்கரமா டெரர் ஆவுற நம்ம ஹீரோ அவரு நண்பர் ஒருத்தர் கிட்ட போய் கேக்குறாரு ஏன் இப்பிடிலாம் நடக்குதுன்னு. அது பேய் இல்ல ஒரு பொண்ணோட ஆன்மா அப்பிடின்னு சொல்ற நண்பர் அவ உன் கண்ணுக்கு மட்டும் தான் தெரியுறா அதுனால அவளுக்கு என்ன வேணும்ன்னு நீ தான் கேக்கணும் லாம் சொல்றாரு.



கொஞ்ச கொஞ்சமா அந்த பொண்ணுகிட்ட பேசி அவ யாரு என்னன்னுலாம் தெரிஞ்சுக்க முயற்சி பண்றாரு. பழசு எதுவும் ஞாபகம் வராத அந்த பொண்ணு கொஞ்சம் லேட்டா தான் தெரியுது இது வெறும் ஆன்மா மட்டும் தான் அப்பிடின்னு.

உயிரை கைல பிடிச்சுகிட்டு அப்பிடின்னு சொல்லுவாங்கல்ல அந்த மாதிரி அடி பட்டு எப்பிடியும் பொழச்சுடனும் ன்னு ஒரு நம்பிக்கைல ஹீரோயினோட உடம்பு ஹாஸ்பிட்டல்ல இருக்கும். இந்த ஹீரோ என்ன பண்ணாரு அந்த பொண்ண பொழைக்க வச்சாரா அப்பிடிலாம் யோசிக்கறவங்களுக்கு அவரு அந்த பொண்ண ரிஸ்க் எடுத்து பொழைக்க வச்சுடுவாறு. ஆனா பொழைக்குற அந்த பொண்ணுக்கு தான் இவரு மறந்து போயிரும் நம்ம மூன்றாம் பிறை ஸ்ரீதேவி மாதிரி. அப்புறம் என்ன ஆச்சுன்னு டிவிடியோ டோற்றேன்ட்டோ கெடச்சா பாருங்க.

அந்த பொண்ணு அவருக்கு மட்டும் தெரியுரதுக்கு காரணம் அவரு தான் அந்த பொண்ணு சந்திக்க போறதா இருந்த ப்ளைண்ட் டேட்.!!!!


அப்பறம் படத்தோட டெக்னிகல் ஆஸ்பெக்ட்லாம் பேசுறா அளவுக்கு எனக்கு அறிவு பத்தாது. ஸோ விட்டுடேன்.இந்த படம் முழுக்க அவங்க ஒரே காஸ்ட்யும்ல தான் வருவாங்க ஆனா அது போர் அடிக்கல. சில இடங்கள்ல வசனம் நல்லா இருந்துச்சு உதாரணத்துக்கு ஹீரோவும் ஹீரோயினும் படுக்கைல கைகோர்த்துபேசுற காட்சி அப்புறம் கடைசி சீன் இப்படி சில.


மொத்ததுல இது ஒரு ரொமாண்டிக்கான படம். அந்த வகை படங்கள் பிடிக்கும்னா தாராளமா பாருங்க. அப்டியே போறபோக்குல ஒரு ஓட்டையும் போட்டுட்டு போங்க மக்களே!!!

Thursday, December 17, 2009

பின் குறிப்பு : நான் உன்னை காதலிக்கிறேன்

ஒரு மனிதனுக்கு ரொம்ப ஒடம்பு சரி இல்லாம போச்சு. அவனுக்கு பிரைன் ட்யுமார் ன்னு சொல்லி மருத்துவமனைல சேர்க்குறாங்க. அவன குணப் படுத்த எவ்ளவோ முயற்சி பண்ற மருத்துவர்கள் நம்ம தமிழ் சினிமால வராப்புல அவர இனிமே காப்பாத்த mudiyathu ன்னு கண்ணாடிய கலட்டி தொடச்சுகிட்டே சொல்லிட்டு போய்டுவாங்க.

அப்புறம் கொஞ்ச நாள் கூட இல்லாம அந்த மனுஷன் செத்துபோய்டுவான். அவன் செத்து போனத நினச்சு நினச்சு அவனோட மனைவி ரொம்ப அழுவாங்க. அதுக்கு அப்புறம் எல்லா காரியங்களும் முடிஞ்சு அவங்க வீட்டுக்கு போவாங்க.

வீட்டுல புருஷனோட பீரோவ எதோ எடுக்குறதுக்காக திறக்கும்போது அதுக்குள்ளார ஒரு கவர் இருக்கும். சென்ட் அட்ரெஸ்ல மனைவி பெயர போட்டு. நமக்கு என்னத்துக்கு இவரு லெட்டர் எழுதி இருக்காரு அப்டின்னு அந்த பெண் அத திறந்து பாத்த அதுக்குள்ளே சிலபல மாத்திரைகளும் ஒரு கடிதமும் இருக்கும்.

"இந்த மாத்திரிகளை சாப்பிடும்மா. ரொம்ப நேரம் அழுதா உனக்கு ஜலோதோஷம் பிடிச்சுக்கும்"
ன்னு அந்த கடிதத்துல இருக்கிற வரிகள பாத்ததும் அந்த மனைவி அப்டியே ஒடஞ்சு அழுதுருவாங்க.


இதுல இருந்து என்ன தெரியுது???!!!!


மேல சொன்ன நாலு பத்தி கதைய மையமா வச்சு வந்த படம் தான் "P.S. I love You".


கணவன் மனைவியா இருக்கிற ஒவ்வொரு நாளும் சண்ட போட்டுகிட்டே இருக்காங்க ஹீரோவும் ஹீரோயினும். பிரிவு அவங்கள எப்பிடி பொரட்டி போடுது அப்டின்றது தான் கதை.

தான் இறந்து போனாலும் தன்னோட பிரிவு அவங்களுக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாதுன்னு நினைக்குற ஹீரோ கடிதங்கள் மூலமா அவங்களோடவே இருக்கிற மாதிரி காமிச்சுருப்பாங்க.
இந்த கடிதத்துக்கு அப்புறம் இந்த கடிதம்ன்னு ஹீரோ ஆர்டர் பண்ணி வச்சுருக்கதுலயே தான் மனைவி ஒவ்வொரு செயலையும் எப்பிடி செய்வா,இதுக்கு அவளோட ரியாக்க்ஷன் எப்படி இருக்கும்ன்னு ஹீரோ மனைவிய அவ்ளோ புரிஞ்சுவச்சுருப்பாறு.


தன்னோட மனைவிய தனிமைல விட்டுற கூடாது அப்பிடிங்கற எண்ணம் அவரோட ஒவ்வொரு கடிதத்துளையும் தெரியும். P.S. I love You ன்னு எல்லா கடிதத்துளையும் அவரு எழுதிருக்குறது அந்த பொண்ணுக்கு ரொம்ப ஆறுதலா அதேசமயம் இப்பிடி நம்மள நேசிச்சவன் விட்டுட்டு போயிட்டானேன்னு பீல் பண்ண வைக்கும்.


படம் பாக்க ஆரம்பிக்கும்போது ஒருவித சுவாரசியம் இல்லாம தான் ஆரம்பிச்சேன். ஆனா போக போக இந்த படம் எனக்கு பிடிச்சுச்சு.

பொழுதுபோக்குக்காக படம் பாக்குறவங்களுக்கு இது போர் சினிமாவ இருக்கும். கதைல ஒன்றி படம் பாக்குற டைப் னா மே பி உங்களுக்கும் பிடிக்கலாம். :)


ஓட்டு போடுங்க மக்களே!!

Monday, December 14, 2009

இன்னொசென்ட் ஸ்டெப்ஸ் - அழகான படம்

நெறைய பேருக்கு டான்ஸ் பிடிக்கும்..
எனக்கும் டான்ஸ் பிடிக்கும்... அதுல பல வரைட்டி இருந்தாலும் எனக்கு ரொம்ப பிடிக்கற டான்ஸ் டைப்ன்னு பாத்தா அது சல்சாவும் டான்கோவும் தான்... ஆடத்தேறியுதோ இல்லையோ அந்த வகை நடனம் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு...

ஏன் நம்ம நாட்டுல இல்லாத நடனமான்னு நீங்க கேக்கலாம்.... நான் என்ன நினைக்குரேன்னா நம்ம ஊர் டான்ஸ்லலாம் ஒண்ணு தனியா ஆடுறாங்க இல்லைனா நாலு பேருக்கு மேல சேர்ந்து குளுநடனமா ஆடுராப்புல தான் இருக்கு... அதுனால எனக்கு என்னமோ நம்ம ஊர் டான்ஸ் ல ஒரு பிடிப்பு வரல...

அதுவும் இல்லாம இந்த சல்சாவும் டான்கோவுக்கும் கொடுக்குற மியூசிக்கே ரொம்ப துள்ளலா இருக்குறாப்புல எனக்கு ஒரு பீலிங்... இந்த வகை டான்ஸ் பிடிக்குறதுக்கு இன்னொரு காரணம் இது ரெண்டும் பார்ட்னெர் டான்ஸ்!!!

சரி மேட்டருக்கு வரேன்.... டான்ஸ் பத்தி பல மொழிகள்ல படங்கள் வந்துருக்கு... நான் இப்ப சொல்ல போறது "இன்னொசென்ட் ஸ்டெப்ஸ் " அப்டிங்கற கொரியன் படத்த பத்தி...



இந்த படத்தோட கதைன்னு பாத்தாக்க ஹீரோ ஒரு டான்ஸ் மாஸ்டர்... டான்ஸ்ன்னா என்னனே தெரியாத ஒரு பொண்ணுக்கு டான்ஸ் சொல்லிகொடுக்குராறு...
அவரு ஹீரோயின் பொண்ணுக்கு சொல்லிக்கொடுக்குற டான்ஸ் சல்சா!! (நான் என்னத்துக்கு மூணு பத்திக்கு இன்ட்ரோ கொடுத்தேன்ன்னு தெரிஞ்சுடுச்சா...!!)

எதோ ஒரு காரணமா வீட்ட விட்டு ஓடி வராங்க நம்ம ஹீரோயின். ஹீரோ அடுத்து வர டான்ஸ் போட்டிக்கு தன்னோட ஜோடியா ஆடுறதுக்காக வர பொண்ண இன்வைட் பண்ண ஏர்போர்ட்டுக்கு வராரு. அப்படி வந்தவரு வேற பொண்ண (அதாவது ஹீரோயின்ன) வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருராறு..

வீட்டுக்கு வந்ததும் தான் தெரியுது தப்பான பொண்ண கூட்டிட்டு வந்துட்டோம்ன்னு... வீட்ட விட்டு வெளிய போ அப்டின்னு அந்த பொண்ண தொரத்திவிட்டுருவாறு.. இன்னொரு நாள் அந்த பொண்ணு எங்கயோ வேலை செஞ்சு கஷ்டபடுரத பாத்து பீல் ஆகி தன்னோட வீட்டுக்கே கூட்டிட்டு வந்துருவாரு...


"ஒரு டான்ஸ் மாஸ்டர் அப்டினா எப்பேர்ப்பட்ட ஆளுக்கும் டான்ஸ் ஆட சொல்லித்தர தெரியனும்" யோசிக்கிற அந்த ஹீரோ அந்த பொண்ணுக்கே டான்ஸ் ஆட சொல்லி தந்து அவகூடவே போட்டில கலந்துகுவோம்ன்னு முடிவு பண்ணி அந்த பொண்ணுக்கு டான்ஸ் சொல்லிதர ஆரம்பிப்பாரு...

அவரு அந்த பொண்ணுக்கு டான்ஸ் சொல்லிகொடுக்குற காட்சி எல்லாம் அவ்ளோ அழகா இருக்கும்... அவரோட முரட்டுதனத்த பாத்து மொதல்ல அந்த பொண்ணு பயப்படும்.. அப்புறம் அவரே அந்த பொண்ணுக்காக ஸ்டெப்ஸ் லாம் தரைல வரைஞ்சு அதுல ப்ராக்டிஸ் பண்ண சொல்லுவாரு... இப்டியே அந்த பொண்ணு டான்ஸ் கத்துக்குற நேரத்துல அவங்களுக்குள்ள ஒரு புரிதல் வந்துரும்....!!


இங்க தான் ட்விஸ்ட்... படம் ன்னு இருந்தா வில்லன்ன்னு ஒருத்தன் இருந்து தானே ஆகணும்... இங்கயும் வில்லன் உண்டு... அவன் எப்பிடினா நம்ம ஹீரோ கஷ்ட்டப்பட்டு ஒரு புள்ளைக்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்தா அந்த பிள்ளைய இவரு நோகாம கூட்டிகிட்டு போய் போட்டில கலந்து ஜெயுச்சுருவாறு.... இப்படி ஹீரோ ட்ரைன் பண்ண பல பொண்ணுங்கள கூட்டிட்டு போயிருப்பாரு...

அதே மாதிரி ஹீரோயின்னையும் வில்லன் கூட்டிக்கிட்டு போறாரு இல்லையா அப்பிடின்னு யூட்யுப்ல தேடி படத்த பாத்து தெரிஞ்சுக்கோங்க....

இந்த படத்துல வர ரெண்டு டான்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்...
ஹீரோவும் ஹீரோயினும் அவங்க ப்ரெண்ட்ஸ் கிட்ட ஆடிக்காமிக்குற டான்ஸ் அப்புறம் எண்டு கார்டு போட்டதும் ஹீரோவும் ஹீரோயினும் ஆடுற டான்ஸ்...


அப்புறம் அந்த ஹீரோயின்ன பத்தி சொல்ல மறந்துட்டேனே.... கொரியன் ஹீரோயின்ஸ் லயே எனக்கு ரொம்ப பிடிச்சது இந்த பொண்ணு ( மூன் ஜீனா யங் ) தான்... நல்லா நடிப்பாங்க அப்டின்னு தெரியும்.. அழகா ஆடவும் செய்வாங்க அப்பிடின்னு இந்த படம் பாத்ததும் தான் தெரிஞ்சுகிட்டேன்......




உங்களுக்கு டான்ஸ் பிடிக்கும்னா இந்த படமும் பிடிக்கும்....!!!
கண்டிப்பா பாருங்க....


ஓட்டு போடுங்க மக்களே!!!

Friday, December 11, 2009

தலைப்பு பதிவின் இறுதியில் சொல்லப்படும்!!

இன்னைக்கு பதிவிட்ற எல்லா பதிவர்களும் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்றாங்க... அதுனால நானும் சொல்லி வைக்குறேன்

"பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரஜினி அங்கிள் "

ஒரிஜினல் டிவிடி வாங்கி படம் பாக்குற வழக்கம்லாம் எனக்கு இல்லைங்க... என் ப்ரென்ட் சொன்னானு சொல்லிட்டு ஒரு வெப்சைட் ல இருந்து ஒரு படத்த டவுன்லோட் பண்ணி பாக்கலாம்ன்னு முயற்சி பண்ணேன்... அந்த கொடுமையா ஏன் கேக்குறீங்க இந்தா அந்தான்னு ஒரு நாள் முழுக்க அந்த படம் டவுன்லோட் ஆச்சு...

சரி ஆனது ஆச்சு படத்த பாப்போம் ன்னு இயர் போன், பாப்கார்ன் சகிதத்தோட படம் படம் பாக்க உக்காந்தா அந்த படம் மகா மொக்கை (என்னை பொறுத்த வரைக்கும் தான் )...
டவுன்லோட் பண்ணி பாத்த படம் "லவ் ஹாபென்ஸ் " இந்த பேர்ல தாங்க விழுந்துட்டேன்....!!!

படத்தோட கதைன்னு பாத்த ஹீரோ ஒரு தன்னம்பிக்கை புத்தகத்தோட எழுத்தாளர்... அவரோட மனைவி இறந்து போன பிறகு அந்த துயரத்துல இருந்து எப்படி மீண்டு வரது அப்டிங்கற மாதிரி புத்தகம் எழுதுறாரு.... அப்பாலிக்கா ஒரு ப்லாரிஸ்ட் கிட்டக்க லவ் ஆகி... கடைசியில தன்னோட மனைவி இறந்ததுக்கு காரணமே நான் தான் அப்படின்னு பொது மேடையுல ஒப்புக்குராறு.....


இந்த கதைல உங்களுக்கு எதுனாச்சும் விளங்கிச்சா...??!! சத்தியமா எனக்கு ஒன்னும் விளங்கல....இதுக்கு நான் பேசாம ஸ்டார் மூவிசையோ ஹச்பியோவையோ பாத்துகிட்டு இருந்துருக்கலாம்......

இனிமேல்ட்டு டவுன்லோட் பண்ணி படம் பாக்குறது இல்லைன்னு முடிவுக்கு வந்துட்டேன்!!!

எதேர்ச்சியா நேத்திக்கு சேனல் மாத்தும்போது ஒரு சின்ன பொண்ணு நடிக்கிற சீன் வந்துச்சு... இந்த புள்ளைய எங்கயோ பாத்துருக்கொமேன்னு யோசிச்சுகிட்டே இருந்தேன்... இப்படி நான் யோசிக்கிற கேப் ல நாலு சீன் வந்துருச்சு...

அது ஒரு சின்ன பசங்க படம்... நான் பாத்த காட்சியில அந்த படத்தோட ஹீரோ (சின்ன பையன் தான்) அவங்க மிஸ் சொன்ன வேலைய செஞ்சுட்டு வராம எதோ பொய் சொல்லி சமாளிக்குறான்... அய் இந்த பயபுள்ள நம்ம வகையறா போலன்னு படத்துல ஒன்றி போய் நான் படம் பாக்க ஆரம்பிச்சுட்டேன்...


அவன் சொன்னது பொய்ன்னு கண்டுபிடிக்கிற அந்த மிஸ் சாயங்காலம் ஆறு மணிக்குள்ள 1000 வார்த்தைகள்ல ஒரு கதை எழுதிட்டு வந்தாலே ஆச்சு அப்டிங்கறாங்க... அந்த பையனும் பொய் சொல்ற அவன் டாலேன்ட்ட (!!!!) பயன்படுத்தி கதைய எழுதி முடிக்கிறான்.... கதைய எடுத்துகிட்டு போகும்போது ஒரு சின்ன விபத்துல மாட்டிக்கிறான்... அப்புறம் அந்த கார்ல வந்தவர மிரட்டி அவரு கார்லயே ஸ்கூலுக்கு போறான்...


அவசரமா போனவன் எழுதுன கதைய கார்லயே விட்டு போயிடுறான். அந்த காருக்கு சொந்தக்காரான ஹாலிவுட் ப்ரோட்யுசெர் அந்த பையன் விட்டுட்டு போன கதைய படமாக்க பாக்குறாரு... அந்த ட்ரையுலற பாக்குற அந்த பையன் இது தன்னோட கதைன்னு சொல்றான்... ஆனா அவனோட அப்பாவும் அம்மாவும் பொய் சொல்றதுக்கு உனக்கு அளவே இல்லாம போச்சு ன்னு சொலிட்டு அந்த பையன் சொல்றத நம்பமாட்டேன்றங்க...

"நான் பொய் சொல்லுறவன் தான், ஆனா இந்த விசயத்துல பொய் சொல்லல" அப்டின்னு நிரூபிக்கிரதுக்காக அவனும் அவனோட ப்ரென்ட் அந்த பொண்ணு ( அமன்டா ப்ய்ன்ஸ் ) உம் பண்ற கலாட்டா தான் மிச்ச படம்....

படத்தோட பெயர் "BIG FAT LIAR".....

இந்த ரெண்டு படத்தையும் பத்தி சொன்னதுக்கு காரணம்


"நான் முழு நேர வெட்டி ஆபீசரா இருக்கேன் "
அம்புட்டு தான்....
நான் கலர் கலரா எழுதி இருக்கிறது தான் தலைப்பு!!!




பி.கு:
டிவி ல போடுற படத்த பத்தி எழுத தான் இந்த பில்ட்அப்பான்னு யாரும் கேக்கக்கூடாது சொல்லிட்டேன் !!!

Saturday, October 31, 2009

ஜப் வி மெட் Vs கண்டேன் காதலை



பொதுவா தமிழ் படத்த பத்தி எழுதி ரிஸ்க் எடுக்க நான் விரும்புறது இல்ல... ஏன்னாக்க எப்டியும் நீங்க எல்லாரும் படம் பார்த்துருப்பீங்க இல்லனா ஏற்கனவே யாருனாச்சும் எழுதுன விமர்சனங்கள படிச்சி அந்த படம் எப்படி என்ன ஏது னு தெருஞ்சுருப்பீங்க... என்ன நான் சொல்றது?!! ( நோட் திஸ் பாயிண்ட் மிஸ்டர் சஞ்சய்காந்தி, போன பதிவுல குற்றம் கண்டுபிடிச்சிங்கள்ள!!)

அப்புறம் எதுக்கு இந்த வேண்டாத வேலை னு கேட்க்குறீங்களா..??!! சும்மா ஒரு ரிஸ்க்க ரஸ்க்கு மாதிரி சாப்பிடலாம்ன்னு தான்...

ஜப் வி மெட் படம் எனக்கு ரொம்ப பிடிச்ச படம்... ஹிந்தி தெரியலனாலும் நாலு பேர மொழிபெயர்ப்பு பண்ண சொல்லி ஒவ்வொரு சீனையும் நாப்பது தடவைக்கு மேல பாத்து ( ரொம்ப அதிகமா இருக்கோ ??!!) சரி சரி நாலு தடவைக்கு மேல பாத்து ஒரு வழியா படத்த புரிஞ்சுகிட்டேன்....!!

ஷாகித் கபூருக்கும் கரீனாவுக்கும் இருந்த கெமிஸ்ட்ரி என்னமோ சூப்பரா இருந்துச்சு... பரத்துக்கும் தம்மனாவுக்கும் அது கொஞ்சம் கம்மியா தான் இருந்துச்சுன்னு எனக்கு பட்டுச்சு...
ஹிந்தி படத்துல அவங்களுக்கு உள்ள சில சீனஎல்லாம் தமிழ்ல தேவைல்லை ன்னு டைரக்டர் நினைச்சுட்டாரு போல....

அப்பறம் கரீனா ரொம்ப துறுதுறுப்பான பொண்ணா வளம் வருவாங்க அதையே நம்ம தம்மன்னா தங்கச்சி ஓவர் அக்டிங் பண்ணி கொஞ்சம் லூசு மாதிரி சில சீன் ல பண்ணிருச்சு...

பரத் பத்தி என்ன சொல்றது.... அவரு பங்குக்கு ஷாகித்த கொஞ்சம் சீன்ஸ்ல காப்பி பண்ணிருக்காரு...அவரு திரும்பி வந்து கம்பெனி மீட்டிங்க்ல பேசுற சீன்ல ரொம்ப சாதரணமா பேசிட்டாரு... (கஜினி ல சூர்யா என்ன அழகா பேசுவாரு.... ச்சாச்சா சான்சே இல்ல..... சூர்யாவா பத்தி நினச்சது போதும்ங்கறீங்களா ... ரைட்டு விடுங்க ....)

ஹிந்தி படத்துல இல்லாம தமிழ்ல டைரக்டர் சேர்த்துருக்கது நம்ம சந்தானம் கதாபாத்திரம் தான்... படம் முழுக்க வராரு... வழக்கத்த விட கம்மியாவே ரெட்டை அர்த்த வசனங்கள்லாம் பேசாம வரது நல்ல இருக்கு... அவரு டயலாக்ஸ் ரெண்டு மூணு எடத்துல சென்சார் பண்ணிடாங்க.... அப்புறம் அந்த தியேட்டர் சீன் என்னத்துக்குன்னு தான் தெரியல!!!

தம்மன்னாவோட காதலனா வர அந்த கௌதம் பையன் யாருங்க...??!! எங்கயோ பாத்தமாதிரி இருக்கு ஆனா எங்கனு தான் தெரியல....

அப்புறம் நம்ம கேபிள் அண்ணன் சொன்ன மாதிரி ஹிந்தி படத்துல ஷாகித் கரீனா வீட்டுக்கு போனதும் ஒரு கலாச்சார மாற்றமே இருக்கும்... இங்கன அப்டிலாம் ஒன்னும் இல்லாதது பெரிய குறை தான்....

ஜப் வி மெட் ங்கற படத்த தான் ரீமேக் பண்ணிருக்காங்க னு நினச்சேன்... நடுவுல ஒரு பாட்டுக்கு நம்ம பரத் கஜினி ல ஆமீர் கான் ஆடுனாப்ல ஒரு பாட்டுக்கு வேற ஆடுறாரு....!!!

பாட்டும் அவ்ளோ சூப்பராலம் இல்ல.... ஆமா பாடலாசிரியர் னு பேர் போடுரச்ச கார்க்கி னு போட்டாங்களே..... அந்த கார்க்கி யாரு????!!!

சந்தானத்தோட காமெடி நல்லா இருந்துச்சு... "மூணு மில்லு முப்பதிரெண்டு பல்லு" ன்னு ரய்மிங்ங்கா பின்றாப்ள..... வடிவேலு கணக்கா இவரும் இந்த படத்துல சிங்கமுத்து கூட சேர்ந்துருக்காரு... மனோபாலா எதோ ரெண்டு மூணு சீனுக்கு வந்துட்டு போறாரு...

அப்புறம் தமன்னாவோட குடும்பமா வரவங்க யாரும் அவ்ளோ பெருசா கவனத்த ஈர்க்கலன்னு தான் சொல்லுவேன்... ஹிந்தி படத்துல தாத்தாவா வருகிரவர பாத்தாலே கொஞ்சம் டெரர் தாத்தா னு தோணும் இங்க ரவிச்சந்திரன்னா பாத்து அப்படி தெரியல....

ரெண்டு வரில சொல்லனும்னா ஹிந்தி ல இது ஒரு ரொமான்டிக் படம் தமிழ்ல காமெடிய மட்டுமே ரொம்ப நம்பி எடுத்துருக்காங்க....
என்னடா ஒரே மைனஸ் பயின்ட்டா சொல்றேன் னு பாக்குறீங்களா.... ஹிந்தி படம் மொதல்லயே பாத்துட்டுனால இப்படி இருக்கு.... புதுசா தமிழ்ல பாக்குறவங்களுக்கு இந்த படம் கண்டிப்பா பிடிக்கும்....

இதுக்கு மேலயும் என்னத்த சொல்றது... ஆளாளுக்கு அவங்கவங்க பங்குக்கு படத்த பத்தி எழுதுவாங்க... எல்லாத்தையும் படிச்சுட்டு படத்துக்கு போகலாமா வேணாவான்னு முடிவு பண்ணிக்கோங்க....

Wednesday, October 28, 2009

Ella Enchanted - டைம் பாஸுக்கு ஒரு பாண்டஸி படம் !!


இந்த பதிவுல நான் எழுத போற படம் "Ella Enchanted"... இதுவும் ஒரு பாண்டஸி படம் தான்...1997 நாவலா வந்த கதைய தான் 2004 ல படம் எடுத்தாங்க...

இந்த படத்தோட கதை இப்டித்தான் ஆரமிக்கும்.. பிரேல்ங்கற ஒரு ஊருல பிறக்கிற குழந்தை எலா.. அந்த குழந்தைக்கு லுஸிண்டாங்கற தேவதை " கீழ்படிதல்" அப்டிங்கற வரத்தை கொடுத்துருவாங்க... ஆனா நாளாக நாளாக அது வரம் இல்ல சாபம் னு எலாவுக்கு புரியும்... யாரு என்ன சொன்னாலும் அத அப்டியே செய்வா... என்னதான் அது தப்பு னு நினைச்சாலும் அதபண்ணாம இருக்கமுடியாது அவளால...
உதரணத்துக்கு சொல்லணும் னா "stay there till i come" னு சொன்னா அந்த பொண்ணால அவங்க வரவரைக்கும் அந்த இடத்தைவிட்டு நகர முடியாதுனா பாத்துகோங்களேன்...!!!

கொஞ்ச நாள் கழிச்சு எலாவோட அம்மா செத்துபோயிருவாங்க... அவங்க அப்பா பண தேவைக்காக வசதியான இன்னொரு பொம்பளைய கட்டிப்பாரு..... அந்த பொம்பளைக்கு ரெண்டு பொண்ணுங்க இருப்பாங்க... வெயிட் வெயிட் கதை கொஞ்சம் சின்ட்ரலா மாதிரி போகுது னு பீல் பண்றீங்களா?? நானும் அப்படி தான் பீல் பண்ணேன்... புதுசா வர ரெண்டு பொண்ணுங்களும் எலாவுக்கு இந்த மாதிரி ஒரு சாபம் இருக்குனு வந்த கொஞ்ச நாளைலயே தெரிஞ்சுக்கும்... அதுனால அவங்க இஷ்டத்துக்கு எலாவ ஆட்டிப்படைக்க ஆரம்பிச்சுருவாங்க..

இப்ப தான் நம்ம ஹீரோ என்ட்ரி...அவரு தான் அந்த நாட்டுக்கு அடுத்த வாரிசு..... ரொம்ப சூப்பரா ஆகா ஓகோ னு அந்த ஊருல உள்ள எல்லா பொண்ணுங்களும் அலைவாங்க அவரு பின்னாடி ஆனா அந்த பையன் ஒன்னும் அம்புட்டு அழகாலாம் இல்லை... நம்ம ஏலாவும் அந்த இளவரசன் சார்மிங்கும் எதேட்சையா ஒரு நாள் சந்திப்பாங்க... அவங்களுக்கு ஒருதருக்குகொருதர் பிடிச்சுபோகும்.. அப்டியே பாட்டு டூயட் னு முடிஞ்சுரும்னு னு நினைக்காதிங்க... எலாவோட சித்தி பொண்ணுங்க ரெண்டும் சார்மிங்குக்கு ரூட் போடுங்க.. இதுக்கு நடுவுல எலாவ காமெடி பீஸ் ஆகுறதுக்கு ஒரு சீன் வேற வரும்...


இதுக்குமேலையும்இவங்க சொல்ரபடிலாம் ஆட முடியாது னு முடிவு பண்ற எலா தனக்கு இந்த சாபத்த கொடுத்த லுசிண்டாவ தேடி கிளம்பிருவா... ஏனாக்க வரம் கொடுத்தவங்க தான் அத மாத்தமுடியும்ல... அப்படி கெளம்பி போற எலா கூட slannen ங்கற ஒரு kulla மனிதன் கூட வருவான்... அவங்க காட்டுகுள்ள போகும்போது மனுசன சாப்டற கும்பல்கிட்ட மாட்டிக்குவாங்க.. அங்க திடீர் னு நம்ம ஹீரோ என்ட்ரி கொடுத்து அவங்க ரெண்டு பேரையும் காப்பாத்துவாரு. அப்புறம் அவங்களுக்கு தானும் துணையா வரேன்னு போவாரு. அப்புறம் ஒரு ஜயண்ட்ஸ் விருந்துல கலந்துகரவங்க அப்டியே ஒரு பாட்டு பாடி டூயட் ஆடி லவ்வ ஆரம்பிச்சுருவாங்க.

அப்பாலிகா அரண்மனைக்கு வருவாங்க. அங்க நம்ம இளவரசரோட மாமா எப்டினாச்சும் சார்மிங்க போட்டு தள்ளிட்டு தானே அரசராகனும் னு ரொம்ப பக்காவா பிளான் போட்டுக்கிட்டு இருப்பாரு. நம்ம எலா தான் என்ன சொன்னாலும் அத அப்டியே செஞ்சுடுவால அதுனால எலாவ கூப்பிட்டு நீ தான் அவன கொல்லனும் னு சொல்லிட்டு இந்த திட்டத்த வெளில யாருகிட்டயும் சொல்ல கூடாதுனும் சொல்லிருவாரு. நம்ம எலாவுக்கு இப்ப என்ன பன்றதுனே புரியாது. அவளோட கூட வந்த குள்ளன் ஒருத்தன் இருப்பான்ல அவன கூப்பிட்டு அவள ஊருக்கு வெளில இருக்க மரத்துல கட்டிவச்சிட சொல்லிருவா. விதி யார விட்டுச்சு சும்மங்காட்டிக்கு அந்த பக்கம் வர லுஸிண்டா இவ கட்ட அவுத்து விட்டுடுவாங்க.


அப்புறம் என்ன ஆச்சு னு நீங்க படம் பாத்தா தெரிஞ்சுகோங்க.

இது வழக்கம் போல டைம் பாஸுக்கு பாக்கிற படம் தான். படத்துல பெருசா கருத்துனுலாம் ஒன்னும் இருக்காது. அப்புறம் இந்த படத்துல பாட்டுலாம் எனக்கு பிடிச்சுருந்துச்சு... உங்களுக்கு எப்படி னு தெரியல... படம் கடைசில எல்லாரும் ஒரு டான்ஸ் ஆடுவாங்க அது ரொம்ப கலர்புல்லா இருக்கும்.

பி.கு:
யாருனாச்சும் நல்லவங்க இருந்தீங்கனா ஓட்டு போடுங்க பாஸு...!!




Sunday, October 25, 2009

மூணு வாரம் கழிச்சு மூணு படம்....!!!

எல்லாருக்கும் ஒரு பெரிய வணக்கம்... பதிவு எழுதி கிட்டத்தட்ட மூணு வாரம் ஆகிடுச்சு...
நடுவுல ஏன் பதிவு போட முடியல னு சொல்றதுக்கு பெரிய கதையே இருக்கு... பயபடாதிங்க உங்ககிட்ட கதை சொல்லி மொக்க போட போறது இல்ல...சுருக்கமா சொல்லணும் னா BSNL செஞ்ச சதி அவ்ளோ தான்...

சரி மேட்டருக்கு வரேன்... இந்த பதிவுல மூணு படத்த பத்தி எழுதலாம் னு இருக்கேன்... அந்த மூணு படத்துக்கும் சில ஒற்றுமைகள் உண்டு அது என்ன னு அப்பாலிக்கா சொல்றேன்...

மொத படம்

You've Got Mail

இந்த கதை நீங்க அடிக்கடி பாத்த மாதிரி தான் இருக்கும்... அதான் நம்ம ஊர் பக்கம் ரொம்ப நாள் அறைச்சங்கலே பாத்து காதல் பாக்காம காதல் னு டிசைன் டிசைனா அந்த மாதிரி இதுல ஹீரோவும் ஹீரோயினும் AOL Messenger ல சாட்டி( அதான் சாட் பண்ணி) விரும்ப ஆரம்பிப்பாங்க... ஆனா விதி னு ஒண்ணு இருக்கு ல... சாட் ல அவ்ளோ நெருக்கமா இருக்க இவங்க நிஜ வாழ்கை ல பிசினஸ் எதிரியா இருப்பாங்க...

நேர்ல பாக்கும் போது லாம் சண்ட போட்ற இவங்க எப்படி ஒத்து போறாங்க னு காமிக்கறது அவங்களுக்குள்ள நடக்குற வசனங்கள்ல தான்... இந்த படத்துல வசனம்லாம் ரொம்ப நல்லா இருந்துச்சு... சாம்பிள் கு கொஞ்சம் வசனம் இங்க...
"I started helping my mother here after school when I was six years old. I used to watch her, and it wasn't that she was selling books, it was that she was helping people become whoever they were going to turn out to be. When you read a book as a child it becomes part of your identity in a way that no other reading in your life does."

"Sometimes I wonder about my life. I lead a small life. Well, valuable, but small. And sometimes I wonder, do I do it because I like it, or because I haven't been brave? So much of what I see reminds me of something I read in a book, when shouldn't it be the other way around? I don’t really want an answer. I just want to send this cosmic question out into the void. So goodnight, dear void."

படத்தோட பாத்த வசனம்லாம் இன்னும் நல்லா இருக்கும்..... ஸோ பாருங்க....!!

அடுத்த படம்

Kate & Leopold

இது ஒரு பாண்டஸி படம்... அதாவது ஒருத்தன் ஒரு பார்முலாவ கண்டுபிடிச்சு இதுக்கு முன்னாடி உள்ள நூற்றாண்டுக்கு எப்படி போறதுன்னு தெரிஞ்சுப்பான்... அப்படி இவன் போகும்போது இவன் பின்னாடியே நம்ம ஹீரோ ட்யுக்கும் அவரு காலத்த விட்டு நம்ம நிகழ்காலத்துக்கு வந்துருவாரு... அப்படி வர ட்யுக் இங்க என்ன பண்றாரு னு தான் மிச்ச சாரி சாரி மொத்த கதை ;)

இங்க வந்த ட்யுக் கேட் அப்டிங்கற பொண்ணுகிட்ட மனச பரிகொடுக்குறாறு.. அந்த பொண்ணு ஒரு விளம்பர நிறுவனத்துல வேலை பாக்குது.. அவ ஒரு விளம்பரத்துக்கு நடிகறதுக்காக நம்ம ட்யுக் கிட்ட கேக்கும்... அவரும் சம்மதிப்பாரு. ஆனா பாருங்க அந்த விளம்பர பொருள் அவ்ளோ தரமானதா இல்ல காசுக்காக எதுக்கு வேணா விளம்பரம்பன்னுவீன்களோ ஆச்சாக்கும் பூச்சாக்கும் னு கத்திட்டு ட்யுக் அந்த எடாத விட்டே போய்டுவாரு.. அந்த பொண்ணும் சரி போறான் விடு னு நினைக்கும் .ஆனா முடியாது... அப்பளிக அந்த பொண்ணு ட்யுக்க தேடி அவரு வாழ்ந்த காலத்துக்கு போய்டும்... அவங்க ரெண்டு பேரும் சேருராங்களா இல்லையானு நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியனுமா???!!

நெக்ஸ்ட் படம்

Sleepless in Saettle


நம்ம ஹீரோ ஓர் Widower (இத எப்படி தமிழ்ல சொல்லணும் னு யாருனா சொல்லுங்களேன்) . அவரு தான் பையனோட சியாட்டல்ங்கற ஊருக்கு மனைவி இறந்த சோகத்த மறந்துட்டு புது வாழ்க்கை ஆரம்பிக்க போறாரு. ஒரு நாள் ரேடியோல நடக்குற ஒரு கௌன்சிலிங் நிகழ்ச்சி ல அந்த பையன் பேசுறான். தன்னோட அப்பா கவலையாவே இருக்காரு அவருக்கு நீங்க எதுனா சொல்லுங்க னு நிகழ்ச்சி நடத்துற ஆன்ட்டி கிட்ட கேக்குறான். அந்த ஆண்ட்டி உங்க அப்பாவ பேச சொல்லு னு சொல்றாங்க... நம்ம ஹீரோவும் பேசுறாரு.. தான் மனைவிய அவரு எப்படி எப்பிடி லாம் நேசிச்சாரு இப்ப எவ்ளோ மிஸ் பண்றேன் ( மிஸ் பண்றதுக்கும் தமிழ்ல யாருனா சொல்லுங்க பா) னு சொல்லுறாரு...

இவரு சொன்னத கேட்ட பொண்ணுங்க நெறையா பேரு அவருக்கு லெட்டர் போடுறாங்க. அத்தனையும் ஹீரோவா விரும்புறதா சொல்லி வருது. நம்ம ஹீரோயினும் லெட்டர் போட்டவங்க தான்.ஆனா அவங்க ஹீரோவா விரும்புறதா சொல்லிருக்கமாட்டங்க. ஹீரோவோட பையனுக்கு ஹீரோயின் எழுதிருந்த கடுதாசி ரொம்ப பிடிச்சிபோகும். ஆனா ஹீரோ அதுலாம் ஒதுக்காது டா நான் என் கூட வேலை பாக்குற பொண்ணயே கட்டிக்கலாம் னு இருக்கேன் னு சொல்லுவாரு. ஆனா அந்த பையனுக்கு ஹீரோ சொல்ற பொண்ண பிடிக்காது.ஹீரோயினுக்கு கூடிய சீக்கிரம் கல்யாணம் ஆனா அவங்களுக்கு அந்த கல்யாணத்துல எல்லாம் இருக்கு ஆனா எதோ இல்லை னு தொநிடே இருக்கும். அந்த குட்டி பையன் ஹீரோயினுக்கு ஒரு லெட்டர் எழுதும் அதாவது காதலர் தினதன்னைக்கு அவங்க தன்னோட அப்பாவ ஈபிள் டவர் ல சந்திக்கணும்னு. ஹீரோ ஹீரோயின் அன்னிக்கு சந்திச்சங்களா இல்லையா னு கிளைமாக்ஸ் பாத்துகோங்க.

சரி மூணு படத்துக்கும் உள்ள ஒத்துமை என்ன னா மூணு படத்துக்கும் ஹீரோயின் மெக் ரியான்.
என்னமோ போங்க இந்த ஹீரோயின் எதுலயும் ஹீரோயினாவே தெரியல.... அப்பிடியே கதாபாத்திரமா தான் தெரியுறாங்க னு சொல்லவந்தேன்...

அடுத்த ஒற்றுமை முதல் படமும் மூணாவது படமும் ஏற்கனவே வந்தா படத்தோட தழுவல்கள்...
You've Got Mail - A Shop Around the Corner
Sleepless in Seattle - An Affair to remember
(அங்கலாம் இந்த படம் இந்த படத்தோட தழுவல் னு சொல்லிகிறாங்க... இங்க தன் வித்தியாசமான கதை னு சொல்லி ஒரே கதையா பத்து பதினஞ்சு வாட்டி எடுக்குறாங்க)
இன்னொரு ஒத்துமை கூட இருக்கு... மூனும் ரொமான்ஸ் படம்... கொஞ்சம் பொதுவா தான் போகும்.. பொறுமை இருக்கவங்க பாருங்க...
மூணு படமும் வந்து எட்டு பத்து வருஷம் ஆச்சுங்க....


அப்பாலிக்கா மெயின் மேட்டர் ஒண்ணு இருக்குது... கே. எஸ். ரவிக்குமார் கிட்ட இருந்து எப்படி கலை படம் எதிர்பார்க்க கூடாதோ அதே மாதிரி என் கிட்டருந்தும் உலக சினிமாலாம் எதிர்பாக்காதிங்க... நா எதோ பொழுதுபோக்குக்கு படம் பாக்குரவ... எனது ரசணை னு பேர் வச்சுருக்கனால எனக்கு பிடிச்ச படம் தான் போட முடியும்.. உலக தரத்துக்கு லாம் இன்னும் படம் பாக்க ஆரம்பிக்கல... மொதல்ல என் தரத்துக்கு உள்ள எல்லா படத்தையும் பாக்குறதுனு முடிவுல இருக்கேன். நான் பாத்ததுல பிடிச்சத உங்க கூட பகிர்ந்துகுரேன் அம்புட்டுதான்!!

Wednesday, October 7, 2009

மிஸ்டர் பெர்பெக்ட் ஐ கவுப்பது எப்படி?!!!

இது படத்தோட பேருங்க....ஹே நான் மறுபடியும் கொரியன் படத்த பத்தி எழுத போறேன்...

இந்த தரம் நான் எழுத போறது செட்யுசிங் மிஸ்டர் பெர்பெக்ட் படத்த பத்தி...


இந்த படத்தோட கதாநாயகி மின்ஜூனா(Uhm Jung-hwa) காதல்ல ரொம்ப நம்பிக்கை உள்ளவங்க. தன்னோட பாய் பிரென்ட் கிட்ட உண்மையா இருக்கணும் எப்பவுமே னு நினைபாங்க. ஆனா என்னமோ இவங்களுக்கு யாருமே ரொம்ப நாள் பாய் பிரெண்டா நிலைக்கமாட்டாங்க. இப்படி தான் ஒரு நாள் அவங்க லவ் பிரேக் அப் ஆனா விரக்தில கார் ஓட்டிட்டு வரும்போது இன்னொரு கார் மேல மோதிடுவாங்க. அந்த கார் இருந்து இறங்குறவர் ராபின் ஹேடன்(Daniel Henney) தான் மின்ஜூனா வோட புது பாஸ்.

ராபின் ஹேடன் எல்லாத்துலயும் பெர்பெக்ட். அவரு எல்லாத்தையும் பிளான் பண்ணி தான் பண்ணுவாரு ( வடிவேலு மாதிரி காமெடி பீஸ் இல்லைங்க... மெய்யாலுமே எல்லாத்தையும் கரெக்டா பண்ணுவாரு).
அவர் மின்ஜூனா கிட்ட லவ் , உறவு எல்லாமே ஒரு கேம் மாதிரி னு சொல்லுவாரு. மின்ஜூனா அவருகிட்ட லவ் விசயத்துல தனக்கு உதவி செய்யமுடியுமா னு கேப்பாங்க. ராபினும் ஒத்துபாரு.

ராபின் சொல்ல சொல்ல அந்த பொண்ணு அது மாதிரியே நடந்துக்கும். ஆனா மின்ஜூனுக்கு இப்படி லவ் மைன்ட் கேம் விளையாடுறது பிடிக்காது. இப்படி பண்றதுக்கு முன்ன மாதிரியே இருந்துட்டு போலாம் னு தோணிடும். ராபின் காதல கேம் பாக்குறதுக்கு ஒரு காரணம் அவரோட முன்னால் கசப்பான காதல் அனுபவம்.

மின்ஜூனா வோட நடவடிக்கைகளால ராபினுக்கு கொஞ்சம் கொஞ்சமா அவ மேல காதல் வந்துடும். அவங்க ரெண்டு பேருக்கும் ஒத்து போய் எப்புடி ஒண்ணா சேருவாங்க னு தான் மிச்ச கதை.

இந்த படத்துல உள்ள தனித்துவம் என்ன னா... இந்த படம் முழுக்க ராபின் ஆங்கிலத்துல தான் பேசுவாரு.. மின்ஜூனா கொரியா மொழி தான் பேசுவாங்க.... இந்த மாதிரி டயலொக் கொரியன் படங்கள்ல புதுசு...


ஏற்கனவே இந்த படத்த பாத்தவங்க உங்க கருத்தை சொல்லிட்டு போங்க... இல்லைனா போய் இந்த படத்த பாருங்க...

ட்ரைலர் இங்க பாருங்க.......

என்ன தான் சொன்னாலும் கொரியன் நடிகருங்க நடிகைங்க எல்லாரும் சும்மா செம க்யூட்... ஹி ஹி ... :):)

Monday, September 28, 2009

[ரொமான்ஸ்+காமெடி] லைசென்ஸ் டு வெட்-2007

வோட்டுபெட்டி பெட்டி வச்சு கணக்கு எடுத்ததுல கொஞ்சம் பேர் (82 பேர் 12 பேர்) திரைப்படங்களை பற்றி எழுத சொல்லிருந்தாங்க... அவங்க எதை நினைச்சு சொன்னாங்களோ...!! நான் எழுத போறது நான் பார்த்த, எனக்கு பிடிச்ச படங்கள பத்தி தான்... இன்னைக்கு இந்த படம் ...... License to Wed



வழக்கமா எல்லா படத்துலயும் ஹீரோவும் ஹீரோஇனும் பாத்ததும் காதலிக்க ஆரம்பிச்சுடுவாங்க, கொஞ்ச நாள் கழிச்சு ப்ரொபோஸ் பண்ணி கல்யாணம் பண்ணிப்பாங்க... இந்த படமும் அப்படி தான் இருக்கும் னு நினச்சு பாக்க ஆரம்பிச்சேன்..



இதுல ஒரு சின்ன மாற்றம்.. முதல் பத்தில சொன்னது எல்லாம் படம் ஆரம்பிச்சு பத்து நிமிஷத்துலயே முடிஞ்சுடும்... இதுல சின்ன சிக்கல் என்ன னா ஹீரோவும் ஹீரோயினும் கல்யாணம் பண்ணிகரதுக்கு முன்னாடி அவங்க "Marriage Preparation Course" அ முடிக்கணும் னு அவங்க கல்யாணம் பண்ணிக்க போற சர்ச்சோட பாதிரியார் சொல்லுவார்..

அந்த பாதிரியார் சொல்லுற மாதிரி லாம் நடந்துகிட்டா தான் அவங்க கல்யாணம் நடக்கும்... அந்த ஹீரோயின் இந்த கோர்சுக்கு ஒத்துக்கும்.. அந்த ஹீரோவுக்கு இது பிடிக்காது...


அந்த கோர்ஸ் ல அவங்க என்னலாம் பண்றாங்க எப்பிடி பண்றாங்க னு லாம் ரொம்ப நகைச்சுவையா காட்டிருப்பாங்க...


(இது கிரீப்பி ரோபோட் பாப்பா .. அவங்க கோர்ஸ் இந்த பாப்பாவையும் ஒழுங்கா பாத்துக்கணும்... ஆனா ஹீரோ அதுங்க பண்ற அலும்புல டென்ஷன்ஆகி ஒரு பாப்பாவ ஒடச்சுருவான்!!)

கல்யாணத்தன்னைக்கு அந்த பொண்ணு " இல்ல எனக்கும் அவனுக்கும் ஒத்து வராது இந்த கல்யாணம் வேணாம்" னு சொல்லிட்டு போய்டுவா..
அந்த பொண்ணும் பையனும் சேர்ந்தாங்களா னு படம் பாத்து தெரிஞ்சுகோங்க... :)


அந்த பாதிரியார் அப்பிடி ஒரு கோர்ஸ் வைக்கறதுக்கு காரணம் கல்யாணம்ங்கறது பப்பி லவ்வ தாண்டி ஆழமான புரிதலோட இருக்கனும் னு தான்!!! ( இது தான் இந்த படத்தோட மெசேஜ் )

பி.கு:
நான் அதிகமா ரொமான்டிக் காமெடி படம் தான் பார்ப்பேன். இங்க எழுதுறது எல்லாம் பழைய படங்கள் தான்.. ஏற்கனவே படம் பாத்தவங்களுக்கு ஒரு சின்ன நினைவூட்டல் பாக்காதவங்களுக்கு நல்ல படம்ங்கற தகவல் அவ்ளோ தான்...


அப்புறம் இன்னும் ஒண்ணு சொல்லணும்... சுத்த தமிழ் ல எழுத முயற்சி பண்றேன்... ஆனா அங்கங்க ஆங்கிலம் வர தான் செய்யுது.. :( அதுக்கும் மன்னிச்சு விட்டுருங்க...

Wednesday, September 23, 2009

"ஒரிஜினல்" திருட்டு விசிடி - உன்னைப்போல் ஒருவன்

வலை உலக பெருமக்கள் எல்லாரும் உன்னைப்போல் ஒருவன் படத்த பத்தி பல கோணங்கள்ள சொல்லிருக்காங்களே, சரி அந்த படத்தையும் தான் திரையரங்கத்துக்கு போய் பாப்போம் னு முடிவு பண்ணிட்டேன்...

ரொம்ப பிஸியா இருந்த எங்க அம்மாவையும் கூட்டிட்டு எங்க ஊருல இருக்க ஒரே ஒரு தியேட்டருக்கு மாட்டினி ஷோ பாக்க கெளம்பினோம்... எல்லா ஊருலயும் படம் ரிலீஸ் ஆகி முதல் வாரத்துல கூட்டம் கும்மியடிக்கும்... ஆனா நாங்க போன தியேட்டருல பாருங்க எண்ணி இருவது பேர் தான் இருந்துருப்பாங்க...

அவங்களும் யாருன்னு சொல்லிருரேன்..

கணவன்,மனைவி அவங்க குழந்தைங்க ரெண்டு பேர் -4
பென்ஷன் வாங்குற ஒரு தம்பதி -2
மூன்று டி-ஷர்ட் வாலிபர்கள் -3
பத்து வயசுலயே தம்மடிக்கிற பசங்க -4
லாரி டிரைவர்ஸ் -5
அப்புறம் நானும் எங்க அம்மாவும் -2

மொத்தம் இருவது வந்துருச்சா??!! அவ்ளோ பேரு தாங்க வந்திருந்தாங்க படத்த தியேட்டருல பாக்க... ரொம்ப கவலைய போச்சு...

படம் ரிலீஸ் ஆகி நாலு நாள்ல "ஒரிஜினல்" திருட்டு விசிடி யோ இல்ல watch ஆன்லைன் லிங்க் ஒ கிடச்சுருது... அப்புறம் யாருங்க படம் பாக்க தியேட்டருகேல்லாம் வருவா?? ஒரு மனுஷன் தியேட்டருக்கு ஒரு டிக்கெட்டுக்கு கொடுக்குற காசுல நாலு படம் குடும்பத்தோட பாத்துரலாம்ங்கற எண்ணம் நெறைய பேருக்கு வந்துருச்சுல்ல... என்ன தான் திருட்டு விசிடி ல பாக்காதிங்க னு எல்லாரும் மைக் வச்சு சொன்னாலும் படம் பாக்குறது அவன் அவன் காசுலதானே.. தான் சொந்த காச எவனோ நடிகறதுக்கு எதுக்கு கொடுக்கணும்... அதே படம் இருவது முப்பது ரூபாய்க்கே கிடைக்கும்போது நூறு இருநூறு னு எதுக்கு செலவளிக்கணும்??!! இப்படி லாம் பல கேள்வி வருது...
இந்த காரணத்துக்காகவே எங்க ஊருல மூணு நாலு தியேட்டர இழுத்து மூடிட்டாங்க... இருக்கிற ஒரு தியேட்டரையும் எப்ப மூடுவாங்க னு தெரியல...
இங்க என்னோட நண்பர்கள் கிட்டவே ஏன்டா தியேட்டருல படம் பாக்குறது இல்ல னு கேள்வி கேட்டா அவங்களோட பதில் என்ன தெரியுமா ?? "இதெல்லாம் ஒரு தியேட்டரு, இங்க லாம் மனுஷன் படம் பாப்பானா? " அப்படி னு என்னவோ இவிங்க பொறந்ததுல இருந்தே சத்யம் மாயாஜால் இந்த மாதிரி இடத்துல தான் படம் பாக்குற மாதிரி பேசுவாங்க... சின்ன வயசுல இந்த தியேட்டருக்கு ஆடிக்கு ஒரு தரம் அம்மாவசைக்கு ஒரு தரம் எதோ படத்துக்கு கூட்டிட்டு போக சொல்லி கெஞ்சுனது எல்லாம் இவங்களுக்கு மறந்து போச்சு...

எனக்கு மறக்கலைங்க.. தியேட்டருல படம் பாக்குறது சந்தோசம்... விசில் சத்ததோட படம் பாக்குறது, இண்டேர்வல்ல சாப்பிடுற ஐஸ் கிரீம் , சமோசா , பாப் கார்ன் , அடிச்சு பிடிச்சு டிக்கெட் வாங்குறது இப்படி எல்லாம் நினப்புல இருக்கு... எல்லா படத்தையும் தியேட்டருல பாக்க வாய்ப்பு இல்லனாலும் ஒண்ணு ரெண்டு படத்தையாவது கண்டிப்பா தியேட்டருல தான் பாக்கணும் னு தோனுது... போக போக தியேட்டரு னு ஒண்ணு எங்க ஊருல இல்லாமயே போயிருமோ னு கவலையா இருக்கு......!!!

சன் டிவி டாப் 10 மூவிஸ் லா வரமாதிரி " இந்த படத்த பத்தி வலை உலக நண்பர்கள் ஏற்கனவே தேவையான அளவு அலசிட்டனால " இந்த படத்த பத்தி புதுசா சொல்றதுக்கு என்கிட்டே ஒன்னும் இல்லைங்க...

இருந்தாலும் ஒண்ணு சொல்லிக்குறேன் படம் முழுக்க இறுக்கமான முகத்தோட வர கமல் கடைசி கட்சியில போலீஸ் வண்டி வேணாமா னு மோகன் லால் கேக்குறப்போ "வேண்டாம்" னு சொல்லி சிரிப்பாரே... கமல் அழகுங்க....!!!

பி. கு: இன்னும் இந்த ஊருல உன்னைப்போல் ஒருவன் விசிடி வரலைங்க !!!

[ரசனைக்குரிய படம்] - "வாட் எ கேர்ள் வாண்ட்ஸ்"

ஹாய்..

திரும்பவும் ஒரு அப்பா பொண்ணு கதைய பத்தி தான் ங்க எழுதபோறேன் ...
ரொமான்டிக் காமெடி படங்கள் தான் என் சாய்ஸ்... இதுனால நான் சொல்ல வராது என்ன னா இது ஒரு ரொமான்டிக் காமெடி படம்...

"வாட் எ கேர்ள் வாண்ட்ஸ்"


டாப்னே ரெனோல்ட்ஸ் ( Amanda Bynes ) , ஒரு அமெரிக்க பொண்ணு, தனக்கு னு ஒரு ஸ்டைல் வச்சுக்கிட்டு தான் அம்மாவோட வாழ்கைய ரொம்ப சுவாரசியமா வாழுது அந்த பொண்ணு... இருக்கு ஆனா இல்ல னு நம்ம எஸ் ஜே சூர்யா சொல்லுறமாதிரி அந்த பொண்ணு வாழ்கைல எல்லாம் இருக்கு ஆனா எதோ ஒண்ணு இல்ல னு அந்த பொண்ணுக்கு தோணும்...

அந்த பொண்ணுக்கு ஒரு ஆசை... தன்னோட வாழ்கைல இது வரைக்கும் பாக்காத அப்பாவ ஒரு தடவையாவது பாக்கணும் னு... அந்த பொண்ணோட அப்பாவும் அம்மாவும் பதினேழு வருசத்துக்கு முன்னாடி லவ் பண்ணி கல்யாணம் பண்ணிப்பாங்க... ஆனா அந்த அப்பாவோட குடும்பத்துக்கு அவங்க அம்மா ஒத்துவரமாடங்க னு சொல்லி அந்த வீட்டுல இருந்து அப்பாவுக்கு தெரியாம அம்மாவ வெளில அனுப்பிருவாங்க ....


என்ன நடந்தாலும் தன்னோட அப்பாவ பாதே தீரனும் னு நினச்சு டாப்னே ஒரு நாள் லண்டனக்கு சொல்லிகாம கொள்ளிகாம கிளம்பிரும்... அங்க அவங்க அப்பா பெரிய அரசியல் பின்னணி ல இருகாரு னு தெரிஞ்சுக்குற டாப்னே ஒரு நாள் திருட்டு தனமா அவரு வீட்டுல்ல புகுந்துரும்...

அவ தன்னோட பொண்ணு னு தெரிஞ்சு ஒரு பக்கம் சந்தோசம் ஆனாலும் ,இப்படி தீடிர்னு பொண்ணு னு சொன்னா அரசியல் வாழ்க்கை இது பாதிக்குமோ னு ல கவலையா போய்டும்.. அதுமட்டும் இல்லாம அவர இப்ப கல்யாணம் பண்ணிகறதா இருக்க லேடிக்கும் அவங்க பொன்னுக்கும் டாப்னே அவங்க பப்ளிசிட்டி வாழ்க்கைக்கு இடைஞ்சலா இருப்பான்னு னும் தோணும்...


பத்திரிக்க காரங்க சைக்கிள் காப் லயே ஆட்டோ ஓட்டுவாங்க... இப்படி எலெக்க்ஷன் ல நிக்கபோறவருக்கு புதுசா பொண்ணு வந்துருக்கா னா சும்மா விடுவாங்களா... அந்த பொண்ண தொரத்தி தொரத்தி கவர் பண்ணுவாங்க... அந்த போர்ஷன் லாம் ரொம்ப காமெடியா இருக்கும்...


இந்த பொண்ணு பண்ற சேட்டையெல்லாம் தாங்கமுடியாத அவங்க அப்பா ஒரு நாள் அந்த பொண்ண கூப்பிட்டு நம்ம குடும்பம் இப்படி, தாத அப்படி இப்படி னு பழைய கதையெல்லாம் சொல்லி நீ இப்டியே இருக்கிறது எனக்கு பிடிக்கல... கொஞ்சமாச்சும் அடக்க ஒடுக்கமா நடந்துக்க னு லாம் அட்வைஸ் மலையா பொலிவாரு... இதுவரைக்கும் தன்ன எதுக்காத அப்பா இப்டிலாம் சொல்லுறாரே னு அந்த பொண்ணும் அவரு சொன்ன படியெல்லாம் நடந்துக்கும்...


அந்த பொண்ணோட பதினெட்டாவது பிறந்தநாள் அப்போ அந்த பொண்ணு ரொம்ப ஆசையா அவங்க அப்பாவோட டான்ஸ் ஆடனும் னு நினச்சுட்டு இருக்கும்... ஆனா அத அவரு புதுசா கல்யாணம் பண்ணிகறதா இருக்க லேடி கெடுத்து விட்டுரும்..

அதனால டென்ஷன் ஆகுற டாப்னே அவங்க அப்பாகிட்ட போய் உங்களுக்காக நா என்னயவே மாத்திகிட்டதுல நா சுயத்த இழந்தது தான் மிச்சம்... என்ன தான் இங்க எல்லாம் இருந்தாலும் நான் எங்க அம்மாகூட இருந்த மாதிரி சந்தோசமா இல்ல... எனக்கு நீங்களும் வேணாம் உங்க பப்ளிசிட்டியும் வேணாம் நான் எங்க அம்மா கூடவே போறேன் னு சொல்லிட்டு போயிரும்...

பொண்ணு நினப்புல இருக்கிற அப்பாவும் அரசியலாச்சு மண்ணாச்சு னு எல்லாத்தையும் விட்டுட்டு தன்னோட பொண்ணையும் பழைய பொண்டாட்டியும் தேடி அமெரிக்காவுக்கு கெளம்பிருவாரு...


அப்புறம் என்னங்க வழக்கம் போல ஹாப்பி எண்டிங் தான்...
படம் பாக்குறின்களோ இல்லையோ ஓட்டயாச்சும் போடுங்க பாஸ்!!!

Sunday, September 20, 2009

[ரசனைக்குரிய படம்] The Game Plan - ஒரு சிறுமிக்கும் தந்தைக்குமான உறவு மிகவும் அழகானது !!

எல்லா குழந்தைகளுக்கும் முதல் கதாநாயகன் அவரவருடைய தந்தை தான். அதே போல் குழந்தையின் ஒவ்வொரு செயலுக்கும் முதல் ரசிகன் தந்தையே. (இதை இந்த இடத்தில அழுத்திச் சொல்ல ஆசைபடுகிறேன். தந்தைகளுக்கு இருக்கும் ரசனையை ஏனோ அவர்கள் வெளிப்படுத்த பல சமயங்களில் தவறிப்போகிறார்கள்)
கிங்க்மான் பாஸ்டன் ரீபெல்ஸ் கால் பந்து அணியை சேர்ந்தவர். நியூயார்க் ட்யுக்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மாபெரும் வெற்றிக்கு காரணமானவர். ஆட்டத்தின் மறுநாள் கிங்க்மானிற்காக ஒரு அதிசியம் அவர் வீட்டின் கதவை தட்டியது, அது அவருக்கும் அவரது முன்னால் மனைவிக்கும் பிறந்த பேட்டன் என்ற எட்டு வயது சிறுமி.


பேட்டன் தான் கிங்க்மானின் மகள் என்றும், தன்னுடைய தாய் அவரை பார்ப்பதற்காக அவளை அங்கு அனுபியுள்ளதாகவும் கூறுகிறாள். ஸ்டெல்லா பாக் என்ற கிங்க்மானின் ஏஜெண்டோ பேட்டனின் வரவு கிங்க்மானின் அடுத்தகட்ட விளையாட்டுபோட்டிகளை பாதிக்கும் என்று நினைக்கிறாள்.


ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் , நிருபர்களின் கேள்விகளால் திண்டாடும் கிங்க்மானை பேட்டன் தன்னுடைய புத்திசாலித்தனமான பதில்களால் காப்பாற்றுகிறாள். இதற்க்கு உபகாரமாக அவள் வேண்டுவது பாலே நடன வகுப்பில் இடம். இதற்க்கு சம்மதிக்கும் கிங்க்மானும் அவளை அவள் விரும்பிய நடன ஆசிரியையிடம் சேர்த்துவிடுகிறார். அந்த ஆசிரியை கிங்க்மானும் தாங்கள் நடத்தும் நடன நாடகத்தில் பங்கேற்க வேண்டும் என்று விரும்புகிறார்.


எதிர்பாராதவிதமாக ஒரு நாள் பேட்டன் தன்னுடைய அம்மாவிற்கு தான் இங்கு வந்தது தெரியாது என்று உளறிவிடுகிறாள். தன்னிடம் பொய் சொல்லியதால் கிங்க்மானுக்கு பேட்டன் மேல் கோவம் வருகிறது. அப்பொழுது சாப்பிட்ட உணவு ஒத்து கொள்ளாமல் போவதால் மயக்கம் போடும் பேட்டனை , பதற்றத்துடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார் கிங்க்மான்.



மருத்துவமனையில் சேர்க்கப்படும் பேட்டனை பார்க்கவரும் அவளது பெரியம்மா சொன்னதற்கு பிறகே பேட்டனின் தாயும் தன்னுடைய முன்னால் மனைவியுமான சாரா தற்பொழுது உயிருடன் இல்லை என்பதை கிங்க்மான் அறிந்து கொள்கிறார்.

மருத்துவமனையில் இருந்து பேட்டன் தன்னுடைய பெரியாம்மாவுடனே சென்று விடுவதால் இங்கு கிங்க்மான் தனியாள் ஆக்கப்படுகிறார். இறுதி கால் பந்து போட்டியில் பேட்டனின் நினைவுகளுடன் இருக்கும் கிங்க்மானால் கவனமாக விளையாட இயலவில்லை. ஒரு கட்டத்தில் தோள்பட்டையில் அடிபடவே கிங்க்மான் ஓய்வறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

அந்த போட்டியை காண பெரியம்மாவுடன் வந்திருக்கும் பேட்டன் அவரை ஓய்வறைக்கு சென்று சந்திக்கிறாள். தன்னுடைய தந்தை ஒருபோதும் தோற்றுபோவதில்லை என்று கூறி கிங்க்மானுக்கு உற்சாகமூட்டுகிறாள். அவளின் உந்துதலுக்கு பின் போட்டியில் மீண்டும் பங்கு பெரும் கிங்க்மான் அந்த போட்டியில் வென்றார் என்றும் சொல்லவேண்டுமா ?!!

ஒரு தந்தைக்கும் சிறுமிக்குமான அழகான உறவை மிக அழகாக உரைத்த படம். இந்த படம் பார்க்கும்போது நீங்கள் தந்தையாக இருந்தால் உங்கள் மகள் நினைவும், மகளாக இருந்தால் தந்தையின் நினைவும் வரும் என்பது நிச்சயம்.

சொல்ல மறந்துவிட்டேன் பேட்டனாக நடித்த அந்த சிறுமி Madison பேட்டிஸ் கொள்ளை அழகு. கிங்க்மானாக நடித்தவர் Dwayne ஜோத்ன்சொன்.



என்னால் இயன்றவரை உரைநடை தமிழில் எழுதுவதற்கு முயற்சித்து இருக்கிறேன். பிழை ஏதும் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

பி.கு:
இந்த படத்த முந்தாநேத்து ஸ்டார் மூவிஸ்ல பாத்துட்டு இந்த பதிவ போடலைனு சொல்லிக்க பிரியப்படுறேன். கல்லூரி நாட்கள்ல இருந்து எங்க பல பேருக்கு ரொம்ப பிடிச்ச படம் அதான் உங்ககிட்ட பகிர்ந்துக்குறேன்.
அவ்ளோ தான்.

Friday, September 18, 2009

[ரசிக்கவேண்டிய படம்] Enchanted - நிஜமும் கற்பனையும் கலந்தா இப்டி தான் இருக்கும்


நீங்க எப்பவாச்சும் யோசிச்சு பாத்துருக்கிங்களா கார்டூன் கதாப்பாத்திரம் லாம் நிகழ்காலத்துக்கு வந்தா எப்டி இருக்கும் னு?? அப்டி ஒரு கார்டூன் ஹீரோயின் உலகத்துக்கு வந்து நிஜ கதாநாயகன கை பிடிக்கிற கதை தான் "Enchanted".


ஜிசேல் ( Amy Adams ) கார்ட்டூன் உலகமான ஆண்டலேசியாவுள்ள வாழுகிற பொண்ணு. அது ஒரு டிபிகல் பாண்டஸி உலகம். அங்க மிருகங்கள் பேசும், எல்லாத்துக்கும் இசை இருக்கும். அங்க வாழுற ஜிசேல் தன்னோட காதலன் எப்டிலாம் இருக்கனும் னு தன்னோட நண்பர்களான பிப் ங்கற சிப்மங் கிட்டயும் மத்த காட்டு விலங்குகள் கிட்டயும் பாட்டுலயே சொல்லுரா... அந்த பாட்ட கேட்டு மயங்குன அந்த நாட்டோட இளவரசன் அவள கல்யாணம் பண்ணிக்க விருப்ப படுறான்... இத பிடிக்காத இளவரசனோட சித்தி(வில்லி) ஜிசேல் ஒரு மாஜிக்கல் போர்ட் தந்திரமா தள்ளி விட்டுடுறாங்க...


மாஜிக்கல் போர்ட் விழுகிற ஜிசேல் நியூ யார்க் நகர டைம்ஸ் சதுரம் வழியா நிகழ்காலத்துக்கு வராங்க. சில பல சந்தர்பத்துக்கு அப்புறம் ஜிசேல் ராபர்ட் ங்கற ஒரு லாயர மீட் பண்ணுது. அந்த பொண்ணுக்கு ஹெல்ப் பண்ணனும் னு நினைக்கிற அந்த வக்கீல் அவள தான் வீட்டுல தங்க அனுமதிக்கிராறு. ஆனா காட்டுல இருக்க மாதிரியே இங்கயும் பாட்டு பாடி எலி,புறா னு லாம் வீட்டுக்குள்ள வர வைக்குற ஜிசேல் பாத்து கடுப்பாகுராறு.



இதுக்கு நடுவில கார்டூன் உலகத்துல இருந்து ஜிசேல் தேடி அந்த இளவரசனும் பிப் உம் நிகழ்காலத்துக்கு வராங்க. இத தெரிஞ்சுகிட்டு அவனோட சித்தியும் ஜிசேல் கொல்ல ஆள் அனுப்புறாங்க.


ஜிசேல் என்ன ஆனா, அவ அந்த இளவரசனோட சேர்ந்தாளா இல்ல வில்லி கிட்ட மாட்டிகிட்டு கஷ்டபட்டாலா,நிகழ்காலதுள்ளயே தங்கினாலா இல்ல கார்டூன் உலகத்துக்குபோனாளா னு லாம் தெரிஞ்சுக்க படத்த பாருங்க.


இது ஒரு ரொமான்ஸ், காமெடி, ம்யூசிகல் படம்.
பொழுதுபோக்குக்கு படம் பாக்குறவங்களுக்கு இந்த படம் என் பரிந்துரை. இந்த படம் பாக்கும்போது ஒரு குழந்தை மாதிரி அட்லீஸ்ட் நாலு சீன்லயாச்சும் கண்டிப்பா பீல் பண்ணுவிங்க.


படத்துக்கான லிங்க்


உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location