Showing posts with label கருத்து. Show all posts
Showing posts with label கருத்து. Show all posts

Wednesday, December 2, 2009

சார்மிங்க்கா இருக்கிறது எப்படி??!!!!




ஒரு சிலர எல்லாருக்கும் பிடிக்கும்... அவங்க எப்படி இருந்தாலும் ஏழையா,பணக்காரனா,அழகானவனா, சுமரானவனா இப்படி எப்படி இருந்தாலும் அவங்கள எல்லாருக்கும் பிடிக்கறதுக்கு காரணம் அவங்க கிட்ட உள்ள ஒரு விதமான காந்த சக்தி... சிலருக்கு இயற்கையாவே அது உண்டு நம்ம சூப்பர் ஸ்டார் மாதிரி... இன்னும் சிலர் தன்னோட செயல்களால அத கொண்டுவந்துருவாங்க...


அப்பிடி "Center Of Attraction" ஆகுறதுக்கு சில சாம்பிள் டிப்ஸ் இங்க

1. "நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் " னு பாரதியார் சொல்லிருக்குறது போல நடக்க ஆரம்பிங்க. அதுக்குன்னு வடிவேலு கணக்கா விரச்சுகிட்டு நடக்ககூடாது.

2 . முடிஞ்ச அளவுக்கு சிரிச்ச முகத்தோடவே இருக்க முயற்சி பண்ணுங்க. உம்முன்னு வச்சுக்க கூடாது. எதுவந்தாலும் சமாளிப்போம் னு முகத்துலயே தெரியனும் .

3 . ஒருத்தர சந்திக்கும்போது சின்ன தலை அசைப்போட சிரிங்க. கண்களை பார்த்து பேசனும். அதே சமயம் ஓவரா சிரிச்சு வச்சுடாதிங்க . அவரும் இதயே திருப்பி பண்ணனும் னு எதிர்பார்க்காதிங்க .

4 . நீங்க சந்திக்கிற எல்லா மனிதர்களையும் பெயரோட நினைவுல வச்சுகோங்க. பேச்ச தொடங்கும்போதும் முடிக்கும்போதும் பேர சொல்லுங்க. இப்படி சொல்றது மூலமா உங்களுக்கு பெயர் நினைவுல இருக்கதோட நீங்க பேசிகிட்டு இருக்குறவருக்கும் ஒரு சந்தோசம் கிடைக்கும் அதாவது உங்களுக்கு அவர பிடிச்சுருக்குதுன்னு .

5 . மனிதர்கள சந்திக்கிறதுல ஆர்வம் காட்டுங்க. நீங்க சந்திக்கிற எல்லாருகிட்டயும் பேச்சு கொடுங்க. பல சமயங்களுல அது உங்களுக்கு உதவி பண்ணும். அதுக்குன்னு தொன தொன பேசிகிட்டே இருக்கபடாது.

6 . இப்ப நீங்க ஒரு நண்பர்கள் கூட்டத்துல இருக்கீங்க அப்டினா அவங்களுக்கு என்ன பிடிக்குமோ அத பத்தி பேசனும். சும்மா உங்களுக்கு தெரியும் அப்டிங்கரதுகாக எதையாவது பேசக்கூடாது.

7 . யாரவது உங்ககிட்டக யாரைப்பதியாவது எதுனா பேசினா நீங்களும் நாலு பிட்ட சேத்து போடக்கூடாது. அவங்கள பத்தின நல்லா விசயங்கள மட்டும் தான் நாலு பேர்கிட்ட சொல்லணும். இப்படி நீங்க சொல்றது மூலமா எல்லாருகிட்டயும் நீங்க ரொம்ப நல்லவரு அப்டின்னு பெயர் வாங்கிடலாம் :)

8 . பொய் சொல்லாம இருக்கனும் . அப்டியே சொன்னாலும் அத எல்லாருகிட்டயும் மெயின்டைன் பண்ணனும். உதரணத்துக்கு ராணி கிட்ட எனக்கு கமலை பிடிக்கும் னு சொல்லிட்டு ராஜி கிட்ட எனக்கு கமலை பிடிக்காது னு சொன்னா ராணியும் ராஜியும் பேசிக்கும்போதும் உங்க குட்டு வெளிபடுரதுக்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கு. எதுக்கு இந்த ரிஸ்க் னு பொய் சொல்லாம இருக்க பழகிக்கோங்க.

9 . மனசார பாராட்டுங்க. ஒருத்தர் எதையாவது சிறப்பா செய்யும்போது உடனே வாய்விட்டு பாரட்டிடனும். கொஞ்சம் லேட் ஆனாலும் அது சின்ன பொறாமைய கிளப்பிவிட்டுரும்.

10 . அதே மாதிரி அடுத்தவங்க உங்கள பாராட்டினா வெறுமன நன்றியோட நிப்பாட்டிக்காம நீங்க இத கவனிச்சு சொல்றது எனக்கு ரொம்ப சந்தோசம் அப்படி இப்படி னு ரெண்டு வரி சேத்து சொல்லுங்க.

11 .உங்க குரல்ல உங்க சந்தோசம் தெரியனும். ஒருத்தர பாராட்டும்போது கத்தி பேசக்கூடாது. எதுலயும் ஒரு நிதானம் ஜென்டில்னஸ் இருக்கமாதிரி பாத்துக்கோங்க.

பி.கு: charishma அப்டிங்கறது உள்ள இருந்து வரணும். மேல சொல்லிருகறது எல்லாம் அத கொஞ்சம் பாலிஷ் பண்ற சமாச்சாரங்கள் தான்.

தயவு செஞ்சு அடுத்தவங்கள இமிடேட் பண்ணாதிங்க. உங்களுக்கு னு ஒரிஜினாலிட்டி இருக்கனும்.



இதெல்லாம் என்னங்க பெரிய விஷயம் நடுவுல நாற்காலிய போட்டு சுத்தி பத்து பேர உட்காரவச்சா ஆடோமடிக்கா "Center of Attraction" ஆகிடலாம் னு மொக்க போடுறவங்க உங்க காமேன்ட்டுகள பின்னூடத்துல சொல்லிட்டு போங்க...

அப்டியே போற போக்குல ஓட்டையும் மறக்காம போட்டுடுங்க மகராசனுங்கலே!!!!

Thursday, October 29, 2009

நாலு பேருகிட்ட நல்ல பேர் வாங்குறது எப்பிடி ?!!!


" நான் நிறைய நல்ல காரியம்லாம் பண்ணிக்கிட்டுருக்கேன். இருந்தாலும் எனக்கு ஒரு பெரிய குறை !" அப்பிடின்னு என் நண்பர் சொன்னாரு.

"என்ன குறை ?" ன்னு நானும் கேட்டேன்.

" என்னை யாரும் நல்லவன்னு சொல்றதில்லே! அதுதான் குறை !" ன்னார் அவர்.

நல்ல செயல்களை செய்யுறதுங்கறது வேறே! நல்லவன்னு பேர் எடுக்கறது வேறே !

நல்ல பேர் வாங்குறதுன்னா சும்மாவா ?

அதுசரி... எல்லாருகிட்டயும் நல்ல பேர் வாங்கறது எப்படி?

இதுக்கு ஒரு அனுபவசாலி (டேல் கார்னர்) சில வழிகளைச் சொல்கிறார்.

அப்டியாவது நல்ல பேர் வாங்க முடியுதான்னு பார்ப்போமே! என்ன சொல்றீங்க ?

அவரு முக்கியமா இதுக்கு ஒரு எட்டு வழிகளைச் சொல்றாரு! எது எது நம்மாலே முடியுதோ அந்த வழியில்லேயெல்லாம் போய் பார்கலாமே!

அவரு சொல்ற முதல் வழி : மற்றவங்களை உண்மையாவே பாராட்டுறதுக்குப் பழகணும்ங்கறார்.

நம்மள்ல பல பேர் எப்பிடின்னா, அடுத்தவங்க ஏதாவது ஒரு நல்ல காரியம் பண்ணினா, அவங்களை பாராட்டுறதுக்கு பதிலா அவங்க மேலே பொறாமைப்பட ஆரம்பிச்சுடுறோம்! அல்லது அவங்க கிட்ட பேசுறதை நிறுதிக்கிறோம்.

அதனாலே நம்ம பேரும் கெட்டுப் போவுது; உடம்பும் கெட்டுப் போவுது.

பிறர் மேலே உண்மையாவே அக்கறை கொள்ளனும்ங்கறது ரெண்டாவது வழி.

உங்க பக்கத்துல இருக்குறவருக்கு லேசா தலைவலி. அதுக்கு உங்ககிட்டக்க மாத்திரை இருக்கு. அப்பிடி இருந்தா அதுலே ஒண்ணை கொடுத்து உதவுங்களேன். என்ன கொறைஞ்சிட போவுது இப்ப.

ஒருக்கால் அந்தத் தலைவலியே நீங்க பக்கத்துலே இருக்கறதுனாலே கூட அவருக்கு வந்துருக்கலாம்!!!

அடுத்தவங்க ஒரு தவறு பண்ணிபுட்டாங்கன்னா அதை மறைமுகமா சுட்டிகாட்டணும்.

"அய்யய்யோ, இப்படி பண்ணிப்புட்டீங்களே !" ன்னு ஆரம்பிகப்புடாது! தவருங்கறது திருத்திக் கொள்ளக்கூடியதுதான் ங்கறதை அவருக்கு உணர்த்தி ஊக்கம் அளிக்கணும்.

"பரவாயில்லே இனிமே இதுமாதிரி நடக்காமே பார்த்துக்கலாம் !" ன்னு சொல்லணும்.

உங்களுக்கு எதிர்லே இருகரவங்களை அலட்சியப் படுத்தப்புடாது! அவரும் முக்கியமானவர்தான் ங்கறதை அவரே உணர்ற அளவுக்கு நீங்க நடந்துக்கணும்.

அதுக்கு என்ன பண்ணலாம்.

அவருடைய ஆலோசனைகளையும் அடிக்கடி கேளுங்க;

"இதை பத்தி நீங்க என்ன நினைகறீங்க ?" ன்னு கேளுங்க! "என்னங்க... நாணன் சொல்றது சரிதானா ?" ன்னு கேளுங்க.

அவரையும் பேசுறதுக்கு ஊக்கப்படுத்துங்க. நீங்க மட்டுமே பேசிக்கிட்டுருக்காதீங்க. அவர் பேசுறதையும் பொறுமையா கேளுங்க. அப்பதான் உங்க பேர்லயும் அவருக்கு ஒரு நல்ல அபிப்பராயம் வரும்!

ஒரு கடுமையான வாக்குவாதம் பண்ணிக் கிட்டுருக்கீங்க; அதுமாதிரி வாக்குவாதங்கள்லேயிருந்து சிறந்த பலன் பெறனும்னா அதுலேயிருந்து ஒதுங்குறதுதான் நல்ல வழியாம்.

நழுவறதுக்கு நமக்கு சொல்லியா கொடுக்கணும்? அதுதான் நமக்கு கைவந்த கலையாச்சே!

இன்னொரு விஷயம் என்னன்னா.... அடுத்தவங்களை மகிழ்ச்சியடைய வைக்கிறது மூலமா நாமளும் மகிழ்ச்சியடையுறோம் ங்கறதை நல்ல புரிஞ்சுக்கணும்.

சில பேருக்கு அடுத்தவங்களை அதிர்ச்சியடயவச்சி வேடிக்கைப் பார்க்குறதுலேயே ஒரு தனி சுவாரஸ்யம்! அதுலாம் ரொம்ப தப்பு!

அப்புறம் இன்னொரு முக்கியமான பாயிண்ட்.

ஒருத்தருக்கு அவரோட பேர் மட்டும்தான் அவரைப் பொருத்தவரைக்கும் மிக இனிமையான வார்த்தை அப்படிங்கறதை ஞாபகத்திலே வச்சிக்கணுமாம்.

அதனாலே அவங்க பேரை எழுதுறப்போவும் சொல்றப்போவும் சரியா எழுதணும்- சரியா சொல்லணும்! அது அவங்களுக்கு சந்தோஷமா இருக்கும்.

நல்ல பேர் வாங்குறது எப்படிங்கறதுக்கு ஒரு வெளி நாட்டு நிபுணர் சொல்லியிருக்குற யோசனைகள் இவ்வளவும்.

இதெல்லாம் உங்களால முடிஞ்ச அளவு முயற்சி பண்ணிபாருங்க அப்பனாச்சும் நல்ல பேர் கிடைக்குதான்னு பாப்போம். !!!

இப்டித்தான் இந்த வழிகள எல்லாம் என் தோழி கிட்டக்க சொன்னேன். அவ எல்லாத்தையும் முயற்சி செய்யமுடியலனாலும் கடைசி பாயின்ட்ட மட்டும் முயற்சி பண்றேன் னு சொல்லிருக்கா. அதாவது எல்லாரையும் பேர் சொல்லி கூப்பிடறது. ஆனா பாருங்க அதுக்கு அவங்க வீட்டுல உள்ளவங்க எல்லாம் ரொம்ப கோவமாகிட்டாங்க. ஏன்னு கேளுங்களேன் அவங்க அப்பா பேர் மாடசாமி அத இந்த பிள்ள சுருக்கி செல்லமா கூப்பிட ட்ரை பண்ணிருக்கா வீட்ல உள்ளவங்க சும்மா விடுவாங்களா சொல்லுங்க ??!!!

------------------------------------------------------------------------------------------------------

பி.கு:
இந்த பதிவ போடுறதுக்கு மிக முக்கியக்காரணமா இருந்தவங்க போன பதிவுல நான் எழுதின
" யாருனாச்சும் நல்லவங்க இருந்தா ஒரு ஒட்டு போடுங்க" ங்கற ஒத்த வரிக்காக ஒட்டு போட்ட
ரொம்ப நல்லவங்க.

அவங்க இந்த பதிவுக்கும் நல்லவங்களாவே நடந்துக்குவாங்க னு நம்பிக்கையுடன் விடைபெரும் உங்கள்
ரசிக்கும் சீமாட்டி.

Wednesday, September 23, 2009

"ஒரிஜினல்" திருட்டு விசிடி - உன்னைப்போல் ஒருவன்

வலை உலக பெருமக்கள் எல்லாரும் உன்னைப்போல் ஒருவன் படத்த பத்தி பல கோணங்கள்ள சொல்லிருக்காங்களே, சரி அந்த படத்தையும் தான் திரையரங்கத்துக்கு போய் பாப்போம் னு முடிவு பண்ணிட்டேன்...

ரொம்ப பிஸியா இருந்த எங்க அம்மாவையும் கூட்டிட்டு எங்க ஊருல இருக்க ஒரே ஒரு தியேட்டருக்கு மாட்டினி ஷோ பாக்க கெளம்பினோம்... எல்லா ஊருலயும் படம் ரிலீஸ் ஆகி முதல் வாரத்துல கூட்டம் கும்மியடிக்கும்... ஆனா நாங்க போன தியேட்டருல பாருங்க எண்ணி இருவது பேர் தான் இருந்துருப்பாங்க...

அவங்களும் யாருன்னு சொல்லிருரேன்..

கணவன்,மனைவி அவங்க குழந்தைங்க ரெண்டு பேர் -4
பென்ஷன் வாங்குற ஒரு தம்பதி -2
மூன்று டி-ஷர்ட் வாலிபர்கள் -3
பத்து வயசுலயே தம்மடிக்கிற பசங்க -4
லாரி டிரைவர்ஸ் -5
அப்புறம் நானும் எங்க அம்மாவும் -2

மொத்தம் இருவது வந்துருச்சா??!! அவ்ளோ பேரு தாங்க வந்திருந்தாங்க படத்த தியேட்டருல பாக்க... ரொம்ப கவலைய போச்சு...

படம் ரிலீஸ் ஆகி நாலு நாள்ல "ஒரிஜினல்" திருட்டு விசிடி யோ இல்ல watch ஆன்லைன் லிங்க் ஒ கிடச்சுருது... அப்புறம் யாருங்க படம் பாக்க தியேட்டருகேல்லாம் வருவா?? ஒரு மனுஷன் தியேட்டருக்கு ஒரு டிக்கெட்டுக்கு கொடுக்குற காசுல நாலு படம் குடும்பத்தோட பாத்துரலாம்ங்கற எண்ணம் நெறைய பேருக்கு வந்துருச்சுல்ல... என்ன தான் திருட்டு விசிடி ல பாக்காதிங்க னு எல்லாரும் மைக் வச்சு சொன்னாலும் படம் பாக்குறது அவன் அவன் காசுலதானே.. தான் சொந்த காச எவனோ நடிகறதுக்கு எதுக்கு கொடுக்கணும்... அதே படம் இருவது முப்பது ரூபாய்க்கே கிடைக்கும்போது நூறு இருநூறு னு எதுக்கு செலவளிக்கணும்??!! இப்படி லாம் பல கேள்வி வருது...
இந்த காரணத்துக்காகவே எங்க ஊருல மூணு நாலு தியேட்டர இழுத்து மூடிட்டாங்க... இருக்கிற ஒரு தியேட்டரையும் எப்ப மூடுவாங்க னு தெரியல...
இங்க என்னோட நண்பர்கள் கிட்டவே ஏன்டா தியேட்டருல படம் பாக்குறது இல்ல னு கேள்வி கேட்டா அவங்களோட பதில் என்ன தெரியுமா ?? "இதெல்லாம் ஒரு தியேட்டரு, இங்க லாம் மனுஷன் படம் பாப்பானா? " அப்படி னு என்னவோ இவிங்க பொறந்ததுல இருந்தே சத்யம் மாயாஜால் இந்த மாதிரி இடத்துல தான் படம் பாக்குற மாதிரி பேசுவாங்க... சின்ன வயசுல இந்த தியேட்டருக்கு ஆடிக்கு ஒரு தரம் அம்மாவசைக்கு ஒரு தரம் எதோ படத்துக்கு கூட்டிட்டு போக சொல்லி கெஞ்சுனது எல்லாம் இவங்களுக்கு மறந்து போச்சு...

எனக்கு மறக்கலைங்க.. தியேட்டருல படம் பாக்குறது சந்தோசம்... விசில் சத்ததோட படம் பாக்குறது, இண்டேர்வல்ல சாப்பிடுற ஐஸ் கிரீம் , சமோசா , பாப் கார்ன் , அடிச்சு பிடிச்சு டிக்கெட் வாங்குறது இப்படி எல்லாம் நினப்புல இருக்கு... எல்லா படத்தையும் தியேட்டருல பாக்க வாய்ப்பு இல்லனாலும் ஒண்ணு ரெண்டு படத்தையாவது கண்டிப்பா தியேட்டருல தான் பாக்கணும் னு தோனுது... போக போக தியேட்டரு னு ஒண்ணு எங்க ஊருல இல்லாமயே போயிருமோ னு கவலையா இருக்கு......!!!

சன் டிவி டாப் 10 மூவிஸ் லா வரமாதிரி " இந்த படத்த பத்தி வலை உலக நண்பர்கள் ஏற்கனவே தேவையான அளவு அலசிட்டனால " இந்த படத்த பத்தி புதுசா சொல்றதுக்கு என்கிட்டே ஒன்னும் இல்லைங்க...

இருந்தாலும் ஒண்ணு சொல்லிக்குறேன் படம் முழுக்க இறுக்கமான முகத்தோட வர கமல் கடைசி கட்சியில போலீஸ் வண்டி வேணாமா னு மோகன் லால் கேக்குறப்போ "வேண்டாம்" னு சொல்லி சிரிப்பாரே... கமல் அழகுங்க....!!!

பி. கு: இன்னும் இந்த ஊருல உன்னைப்போல் ஒருவன் விசிடி வரலைங்க !!!

Monday, September 21, 2009

தினமும் இதைப்பார்த்து நீ எந்த நிலையில் இருக்கிறாய் என அறிந்து கொள்



சிந்தனை பெருகப்பெருக, எண்ணம் உயரும் !
எண்ணம் உயர உயர, பேச்சு சுருங்கும் !
பேச்சு சுருங்கச் சுருங்க, செயல் சிறக்கும் !
செயல் சிறக்கச் சிறக்க, புகழ் கூடும் !
புகழ் கூடக்கூட, பொருள் சேரும் !
பொருள் சேரச்சேர, மகிழ்வு நிறையும் !
மகிழ்வு நிறைய நிறைய, வாழ்வு மலரும் !
வாழ்வு மலர மலர, மமதை ஏறும் !
மமதை ஏற ஏற, பேச்சு விரியும் !
பேச்சு விரிய விரிய, செயல் சுருங்கும் !
செயல் சுருங்கச் சுருங்க, புகழ் குறையும் !
புகழ் குறையக் குறைய, செல்வம் கரையும் !
செல்வம் கரையக்கரைய, வாழ்வு இருளும் !
வாழ்வு இருள இருள, சிந்தனை பெருகும் !
மீண்டும் சிந்தனை பெருகப் பெறுக ,,,

இதை யாரு எப்போ சொன்னதுன்னு லாம் எனக்கு தெரியாது...
ஆனா எனக்கு ரொம்ப பிடிச்சது அதான் உங்க கூட பகிர்ந்துக்கலாம் னு பதிவா போட்டுடேன்..

(மொக்க கவிதைய பிரபல பதிவாக்குன நீங்க இத என்ன பண்ணுறீங்க னு பார்க்க ஆவலோட இருக்கும்
- உங்கள் ரசனைக்காரி)

Sunday, September 20, 2009

தொலைகாட்சியில் நீங்கள் இதை கவனித்தது உண்டா ??

தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியின் நடுவே விளம்பர இடைவேளையின்போது ரீமோட்டை தேடுபவரா நீங்கள்... அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கானது இல்லை...

நம்ம மக்களுக்கு பொதுவே ரசனை ஜாஸ்தி... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விசயத்துல்ல ரசனை உண்டு.. சிலருக்கு புத்தகங்கள் பிடிக்கும்,சிலருக்கு சினிமா, சிலருக்கு ஓவியங்கள், சிலருக்கு புகைப்படங்கள் னு இந்த பட்டியல் ரொம்பவும் நீளமானது... இப்ப என்னையே எடுத்துகோங்க உருப்படியா ஒன்னும் ஆக்கத்தெரியலைனாலும் ஏதோ சுமாரான அளவு ரசனை உண்டு.. "ஆகாவோகோ" என்று எதையும் புகழவில்லை என்றாலும் பல நேரங்களில் சில விசயங்களை மனதுக்குள் ரசிப்பது உண்டு... ரசனையை வெளிபடுத்துவதும் கூட ஒரு கலை தான்... பலருக்கு அது கைவரப்பெறும், சிலருக்கு வராது..

சரி சரி சொல்ல வந்த விசயத்துக்கு வரேன்... நாமும் தான் ஒரு நாளின் பல மணி நேரங்களை தொலைக்காட்சியுடன் களிக்கிறோம்.. அதுல எத்தனையோ விஷயங்கள் ஒளிபரப்ப படுது...இப்ப நான் எழுதப்போவது "கமர்ஷியல்ஸ்" என்ற ஒரு வார்த்தைக்குள் அடக்கப்படும் விளம்பரங்களை பற்றித்தான்...

எனக்கு தெரிஞ்ச பல பேர் எதாவது தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இடைவேளையின் போது ரொம்ப சலித்துக்கொள்வார்கள் " இப்படி விளம்பரமா போட்டு கொல்றானே " என்று... ஆனா நீங்க நல்லா கவனிச்சு பாத்தீங்க நா தெரியும் சில விளம்பரங்கள் நீங்க பார்க்கும் நிகழ்ச்சியை விட சுவாரசியமாய் இருக்கும்..

உதாரணத்திற்கு சொல்லவேண்டும் என்றால்...

1. "N for நூடுல்ஸ்" னு ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் சொல்லும் சிறுவன் ( பழைய விளம்பரம் )

2. வோடபோன் விளம்பரத்தில் "என் தம்பிக்கு கல்யாணம்" என்று சொல்லுகிற பிரகாஷ்ராஜ்.

3. கரை நல்லது விளம்பரம்
முன்பு தன் தங்கையை விழவைத்ததற்க்காக சேறுடன் சண்டையிடும் சிறுவன்.
இன்று இறந்து போன செல்லப்ப்ரானியின் நினைவில் இருக்கும் ஆசிரியை மகிழ்வூட்டும் சிறுவன்.

4. "இன்னொரு கைலயும் அடிங்க அடுத்த பால் லையும் சிக்ஸர் அடிப்பேன்" என்று நம்பிக்கை மேலிட சொல்லும் சிறுவன்.

5. "ரேஸ் ல செகண்ட்.. நாட் பாட் நாட் பாட்... எத்தன பேரு ஓடினாங்க ?" "ரெண்டு !!!"

6. அலைவா கிராகர்ஸ் " கொஞ்சம் குறும்பு கொஞ்சம் -------" [மன்னிக்கணும் வார்த்த மறந்துபோச்சு. :( ]

7. "பின்ன என்னனு தான் சொல்லிதொலைங்க.." " ஐ லவ் யு" இந்த ஜோடி எல்லா விளம்பரத்திலும் ரொம்ப அன்யோநியமா நடிச்சுருப்பாங்க.

8. வங்கி விளம்பரத்தில் சுடக்கு போட முயற்சிக்கும் சிறுவன்.

9. தன்னுடைய உண்டியலை வங்கிக்கு பத்திரமாக எடுத்துசெல்லும் சிறுவன்.


10. மழைத்தண்ணீரில் காகித கப்பல் மூழ்கிவிடாமல் தடுக்கும் நண்பர்கள் ( ஸ்பெஷல் 5)

11. ப்யூர் இட் விளம்பரத்தில் வரும் பெண் ( சராசரி இந்திய மனைவியை பிரதிபலிக்கும் முகம் அவங்களுக்கு)

12.அன்பென்றால் ஆரோக்கியா விளம்பரத்தில் வரும் சின்ன சின்ன அன்பின் தருணங்கள்.

13. " உலகதுள்ளயே மிக நீண்ட பாலத்தை என்னால் கட்டமுடியுமென்றால் ,அதை திறந்து வைக்கவும் முடியும் " என்று சொல்லும் இன்ஜினியர்.

14. வாழ்க்கை சில நொடிகளிலேயே மாறிவிடும் என்று சொல்லுகிற கார் விபத்து நடக்கும் விளம்பரம் ( இந்த விளம்பரத்துடைய மற்ற பதிவுகளில் மனம் ஒட்டவில்லை)

15. சரியான தூக்கம் இன்மையால் அடுத்தவருடைய காரை சுத்தம் செய்து விட்டு முழிக்கும் நபர்.


இன்னும் சொல்லுவதற்கு நிறைய விளம்பரங்கள் உண்டு. பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

தொலைகாட்சியில் நீங்கள் இதை கவனித்தது உண்டா ?? இல்லை என்றால் இனிமேல் கவனியுங்கள்.

நீங்கள் ரசித்த, ரசிக்கும் விளம்பரங்களை பின்னூட்டத்தில் சொல்லுவீர்கள் என்கிற நம்பிக்கையில்
- உங்கள் ரசனைக்காரி

Saturday, September 19, 2009

உங்களுக்கு சில பொதுவான விஷயங்கள்....

1.உங்க கிட்ட எதிர்பாக்குரத விட அதிகமா பண்ணுங்க... சந்தோஷமா பண்ணுங்க.

2.உங்களுக்கு பேச பிடிச்சுருக்கவங்கள கல்யாணம் பண்ணிகோங்க. உங்களுக்கு வயசானப்புறம் அந்த பேச்சு தான் உங்களுக்கு தெம்ப கொடுக்கும்.

3.கேக்குறது எல்லாத்தையும் நம்பாதிங்க, இருக்கிறது எல்லாத்தையும் செலவளிக்காதிங்க, நினைக்குறப்பலாம் தூங்காதிங்க.

4."ஐ லவ் யூ" சொன்னா உணர்ந்து சொல்லுங்க.

5."ஐ யம் சாரி" னு சொல்றப்ப கண்ண பாத்து சொல்லுங்க.

6.கல்யாணத்துக்கு ஒரு ஆறு மாசம் முன்னாடியே உங்க பார்ட்னெர் கூட பேசுங்க.

7.கண்டதும் காதல் ல நம்பிக்கை வைங்க.

8.யாரு கனவையும் பாத்து சிரிக்காதிங்க. ஏன்னா கனவு காணதவங்க எதையும் பண்ண மாட்டாங்க.

9.முழுசா விரும்பி காதலிங்க. வாழ்கைய முழுசா வாழ அது தான் பெஸ்ட்.

10.யாரையும் அவங்க உறவினர்கள வச்சு ஜட்ஜ் பண்ணாதிங்க.

11.பொதுவா பேசுங்க ஆனா சீக்கிரமா சிந்தியுங்கள்.

12.உங்களுக்கு பதில் சொல்ல பிடிக்காத கேள்விய யாரவது கேட்டா
"நீங்க எதுக்கு அத தெரிஞ்சுக்க பிரியப்படுறிங்க?" னு சிரிப்பு மாறாம கேளுங்க.

13.யாராச்சும் தும்மினாலோ இருமினாலோ " bless you" னு சொல்லுங்க.

14.தோற்று போகும்போது தோல்வி கத்து கொடுத்த பாடத்த மறந்துடாதிங்க.

16.எப்பவும் மூன்று விஷயங்கள் மனசுல வச்சுகோங்க
சுய மரியாதை
பிறருக்கான மரியாதை
தன் செயலுக்கான பொறுப்பு.

17.சின்ன விஷயங்கள் நட்பை பாதிக்காம பாத்துகோங்க.

18.எப்பயாச்சும் நீங்க தப்பு பண்ணிட்டிங்க னு தோன்றினால் உடனே அத சரி செய்வதற்கான வழிகளில் ஈடுபடுங்க.

19.தொலைபேசியில் பேசும்போது சிரிங்க. உங்கள் சிரிப்பு மறுமுனையில் இருப்பவருக்கு உற்சாகத்தை கொடுக்கும்.

20.தனியாவும் கொஞ்சம் நேரம் இருந்து பாருங்க.


என்னடா பொதுவான விஷயங்கள் னு சொல்லிட்டு இப்படி கருத்தா சொல்லிட்டேனே னு பாக்குறிங்களா.... என்ன பண்றது தலைப்புக்கும் பதிவுக்கும் எப்படி யோசிச்சாலும் சம்பந்தம் இருக்கவே மாட்டேங்குது என்னோட பதிவுகளுக்கு மட்டும்!!!


ஹலோ.. யாரவது நான் சொல்லாம விட்ட 15 வது பாயின்ட்ட கவனிச்சிங்களா ??
இந்த பதிவ படிச்சதே பெரிய விஷயம்னு சொல்லவரிங்களா... ரைட்டு விடுங்க...!!

Friday, September 18, 2009

வித்தியாசமான குரல்கள உங்களால கண்டுபிடிக்க முடியும் னா நீங்க ஒரு புத்திசாலி!!!!

எனக்கு பாட்டு கேக்குறது ரொம்ப பிடிக்கும்... நெறைய நேரம் பாட்டு கேக்குறது வழக்கம்... படிக்கும்போது, சமைக்கும்போது, தூங்கும்போது னு இப்டி பாரபட்சமே இல்லாம எல்லா நேரமமும் பாட்டு கேக்குறது பழக்கம்..

நான் கல்லூரி முதல் ஆண்டு படிக்கும் போது எங்க ஆங்கில ஆசிரியர் சொன்னாரு "வித்தியாசமான குரல்கள உங்களால கண்டுபிடிக்க முடியும் னா நீங்க ஒரு புத்திசாலி " னு... அதுல இருந்து எல்லா பாட்டையும் யாரு பாடினாங்க னு தெரிஞ்சுக்கணும் னு ஒரு ஆர்வம்...

ஏன்னா நம்ம புத்திசாலி னு நம்மளயே நம்பவைக்கறது ரொம்ப கஷ்டம் பாருங்க... அப்டி ஆரம்பிச்சு இன்னைக்கு ஓரளவு எல்லா பாட்டும் யாரு யாரு படுறாங்க னு தெரியுது...

ஆனா பாருங்க பாட்டு பாடுனவங்கள தெரிஞ்சுக்குற ஆர்வத்துல்ல பாதி கூட பாட்டு எழுதுனவங்க யாரு னு தெரிஞ்சுக்கறதுள்ள இல்ல... எத்தனையோ நல்ல பாட்டு கேட்க்குறேன் ஆனா அதலாம் யாரு எழுதினாங்க னு தெரியாது..... பாடல் எழுதுற கவிஞர்கள் பேர் தெரியும் ஆனா அவங்க என்ன என்ன பாட்டு எழுதிருக்காங்க னு தெரியாது... தாமரையோட பாடல்கள் மட்டும் தான் பாடல் ஆசிரியர் பேரோட தெரியும்.. ஏன்னா அவங்க பாட்டு மட்டும் தான் கான்ஸ்டன்ட் காம்பிநேஷின் ஹிட் ஆச்சு, சோ கவுதம் மேனன் படம் னா தாமரை தான் பாடல்கள் னு மனசுல பதிஞ்சு போச்சு...

உங்களுக்கு எல்லா பாடல் ஆசிரியர் பேரும் தெரியுமா??
அப்ப கீழ உள்ள பாடல் வரிகள் லாம் யாரு எழுதுனது னு சொல்லிட்டு போங்க...

"உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்
இந்த ஜன்மம் வீணென்று போவேனோ ??"
(பூவெல்லாம் உன் வாசம்)

" காதல் நெருப்பின் நகரம்
உயிரை உருக்கி தொடரும் பயணம்
காதல் நீரின் சலனம்
புயல்கள் உறங்கும் கடலின் மௌனம் "
காதல் மாய உலகம்
சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும்
புள்ளி மான்கள் புன்னகை செய்து வேடனை வீழ்த்தும்"
(வெயில்)

"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகு வர்த்தியும்
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ "
(சில்லுனு ஒரு காதல்)

"படுத்தும் பொசுக்குனு தூங்கும் பய
பித்துக்குளி போல இப்ப முழிக்குரானே
வெள்ளன எந்திருச்சு ஓடும் பய
சுள்ளுன்னு சூரியன பாக்குறேனே

அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்
அந்த ஒரு நொடியை நெஞ்சில் ஒளித்துக்கொண்டேன்
நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்
அவன் கண்களிலே என் வயதறிந்தேன்"
(காதல்)

" ஒரு நாளில் வாழ்கை இங்கே
எங்கும் ஓடி போகாது
மறுநாளும் வந்து விட்டால்
துன்பம் தேயும் தொடராது
எதனை கோடி கண்ணீர்
மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும்
பூமி இன்னும் பூ பூக்கும்"
(புதுப்பேட்டை)

"பேச எண்ணி சில நாள் அருகே வருவேன்
பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே நகர்வேன் ஏமாற்றி..

இரவும் அல்லாத
பகலும் அல்லாத
பொழுதுகள்
உன்னோடு கரையுமா??!!

கரைகள் அண்டாத
காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்த்திட்டாய்??!

தடையில்லை சாவிலும் உன்னோடு வர ..."
(சுப்பிரமணியபுரம்)

இதெல்லாம் சாம்பிள் க்கு கேட்டது... பதில் சொல்ல யாராச்சும் கிடைச்சா இன்னும் கேக்குறதுக்கு நிறைய பாடல் வரிகள் இருக்கு....
பதில் சொல்லுவிங்க தானே ??!!

Thursday, September 10, 2009

One Fine Day - மிக மோசமான நாளில் நடக்கும் சில சந்தோஷ தருணங்கள்



அட எவ்ளோ நாள் தன் கொரியன் படத்த பத்தியே எழுதுறது.. அதான் ஒரு சேன்ஜ் க்கு நாமளும் இங்கிலீஷ் படத்த பத்தி எழுதுவோம் னு டிசைட் பண்ணிட்டேன்... எத பத்தி எழுதுனாலும் அத படிக்க நமக்கு னு ஒரு நாலு பேரு கிடைக்காமலா போயிருவாங்க னு ஒரு குருட்டு தைரியம் தான்...

ஜார்ஜ் க்ளூனீ னு ஒரு நடிகர் இருக்காருங்கரதே எனக்கு ஒஷேன்ஸ் சீரிஸ் பாத்த பெறகு தான் தெரியும்... அதுக்கு அப்புறம் அவர் நடிச்ச படங்கள் சிலத தேடிப்பிடிச்சு பாத்தேன்.. அப்டி பாத்ததுல முதல் படம் தான் "One Fine Day ".


1996 ஆம் ஆண்டு இந்த படம் ரிலீஸ் ஆச்சு. நா பாத்தது போன வருஷம். அப்போ எனக்கு வலைப்பக்கம் பத்திலாம் தெரியாது. இப்போ தான் சமீபமா ஆரம்பிச்சேன் ( வீட்டுல வெட்டியா இருக்கதுனால ஆரம்பிச்சது , அதுக்கு முன்னாடி மட்டும் என்ன வெட்டி கிழிச்ச னு கமெண்ட் போட்டு யாரும் கிழிக்க வேணாம் )
இந்த படம் ஒரு ரொமான்டிக் காமெடி. இதுல்ல நடிச்சு இருக்கவங்க George Clooney and Michelle Pfeiffer. மெலனி பார்கெர் மற்றும் ஜாக் டயலர் ரெண்டு பேரும் தனி பெற்றோர்கள் (single parents க்கு இது சரியான தமிழ் படுத்தலா னு யாராச்சும் சொல்லுங்க பாஸ்) . இவங்க ரெண்டு பேரும் ஹெக்டிக்கான ஒரு வேலை நாள் லா அவங்க குழந்தைங்களும் அவங்க கூட இருக்க மாதிரி ஒரு சந்தர்பத்துல மாட்டிக்கிறாங்க.



அந்த ஒரு நாள்ல அதுக்கு முன்னாடி பழக்கமே இல்லாத அவங்க ரெண்டு பேரும் ஒருதருக்குஒருத்தர் எப்டி ஹெல்ப் பண்ணி அவங்க வேலைகள் பாதிக்காம என்ன என்ன பண்றாங்க ங்கறது தான் படத்தோட கதை.
இந்த படம் ஆஸ்கார் லயும் கோல்டன் க்ளோப் யும் பல நாமினேஷன்ஸ் இடம் பெற்றுச்சு. படத்துல க்ளூனீ யோட பொண்ணா நடிச்ச Mae Whitman YoungArtist Award மற்றும் YoungStar Award a இந்த படத்துக்காக வாங்கிருக்காங்க.




இந்த படத்துக்கு யூடியுப் லிங்க் கிடைக்கல. அதுனால டிவிடி வாங்கி படம் பாத்துகோங்க!!!









உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location