Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Thursday, September 10, 2009

One Fine Day - மிக மோசமான நாளில் நடக்கும் சில சந்தோஷ தருணங்கள்



அட எவ்ளோ நாள் தன் கொரியன் படத்த பத்தியே எழுதுறது.. அதான் ஒரு சேன்ஜ் க்கு நாமளும் இங்கிலீஷ் படத்த பத்தி எழுதுவோம் னு டிசைட் பண்ணிட்டேன்... எத பத்தி எழுதுனாலும் அத படிக்க நமக்கு னு ஒரு நாலு பேரு கிடைக்காமலா போயிருவாங்க னு ஒரு குருட்டு தைரியம் தான்...

ஜார்ஜ் க்ளூனீ னு ஒரு நடிகர் இருக்காருங்கரதே எனக்கு ஒஷேன்ஸ் சீரிஸ் பாத்த பெறகு தான் தெரியும்... அதுக்கு அப்புறம் அவர் நடிச்ச படங்கள் சிலத தேடிப்பிடிச்சு பாத்தேன்.. அப்டி பாத்ததுல முதல் படம் தான் "One Fine Day ".


1996 ஆம் ஆண்டு இந்த படம் ரிலீஸ் ஆச்சு. நா பாத்தது போன வருஷம். அப்போ எனக்கு வலைப்பக்கம் பத்திலாம் தெரியாது. இப்போ தான் சமீபமா ஆரம்பிச்சேன் ( வீட்டுல வெட்டியா இருக்கதுனால ஆரம்பிச்சது , அதுக்கு முன்னாடி மட்டும் என்ன வெட்டி கிழிச்ச னு கமெண்ட் போட்டு யாரும் கிழிக்க வேணாம் )
இந்த படம் ஒரு ரொமான்டிக் காமெடி. இதுல்ல நடிச்சு இருக்கவங்க George Clooney and Michelle Pfeiffer. மெலனி பார்கெர் மற்றும் ஜாக் டயலர் ரெண்டு பேரும் தனி பெற்றோர்கள் (single parents க்கு இது சரியான தமிழ் படுத்தலா னு யாராச்சும் சொல்லுங்க பாஸ்) . இவங்க ரெண்டு பேரும் ஹெக்டிக்கான ஒரு வேலை நாள் லா அவங்க குழந்தைங்களும் அவங்க கூட இருக்க மாதிரி ஒரு சந்தர்பத்துல மாட்டிக்கிறாங்க.



அந்த ஒரு நாள்ல அதுக்கு முன்னாடி பழக்கமே இல்லாத அவங்க ரெண்டு பேரும் ஒருதருக்குஒருத்தர் எப்டி ஹெல்ப் பண்ணி அவங்க வேலைகள் பாதிக்காம என்ன என்ன பண்றாங்க ங்கறது தான் படத்தோட கதை.
இந்த படம் ஆஸ்கார் லயும் கோல்டன் க்ளோப் ல யும் பல நாமினேஷன்ஸ் ல இடம் பெற்றுச்சு. படத்துல க்ளூனீ யோட பொண்ணா நடிச்ச Mae Whitman YoungArtist Award மற்றும் YoungStar Award a இந்த படத்துக்காக வாங்கிருக்காங்க.




இந்த படத்துக்கு யூடியுப் லிங்க் கிடைக்கல. அதுனால டிவிடி வாங்கி படம் பாத்துகோங்க!!!









லவ் மீ நாட் - லவ் கிவ்வுலாம் ஒன்னும் தேவையில்ல பாஸ்

லவ் மீ நாட் படத்த பத்தி எழுதலாமா னு கேட்டதுக்கு லோகு சொன்னது அழகான ஹீரோயின் நடிச்ச படமா எழுது னு...

எனக்கு கொரியன் படத்துல ரொம்ப பிடிச்ச ஹீரோயின் Moon Geun-young.
சோ இந்த முறை அவங்க நடிச்ச படத்த பத்தி தான் எழுதபோறேன்.மை லிட்டில் ப்ரைட் படம் பாத்துட்டு இந்த பொண்ணு செம்ம கியூட் னு மட்டும் தான் நினச்சேன் .. ஆனா இந்த படம் பாத்ததும் தான் தெரிஞ்சது அந்த பொண்ணு அழகா நடிக்கவும் செய்யும் னு...



இந்த படத்தோட கதை இது தான்...


ஜுலியன் ங்கறவன் ரொம்ப சந்தோசமா அடுத்தவங்கள ஏமாத்தி பொழப்பு நடத்துறவன். எதிர்பாராத விதமா பிசினஸ் லாஸ் காரணமா அவனுக்கு நெறைய கடனா போய்டுது. ஒரு மாசத்துல கடன கட்டலனா அவன கொலை பண்ணிருவோம் னு வழக்கம் போல மிரடிட்டு போகுது. அவன் அவன காப்பாத்திக்க இருக்க ஒரே வழி பெரிய சொத்துக்கு வாரிசா இருக்க ஹீரோ யினோட அண்ணனா (சின்ன வயசுலயே வீட்ட விட்டு ஓடி போன) நடிச்சு அப்புறம் அந்த பொண்ணையும் கொன்னுட்டு அவ சொத்த தன்னோடது ஆக்கிக்கறது தான்.
மின் ங்கற அந்த ஹீரோயினுக்கு எதோ ஒரு காரணமா சின்ன வயசுலயே கண் பார்வை இல்லாம போய்டுது. அந்த பொண்ணுக்கு அவன் தன்னோட அண்ணன் இல்ல னு ஒரு இன்ஸ்டிங் சொல்லுது. ஆனா கொஞ்ச கொஞ்சமா அவன் மேல ஒரு லவ் வும் வருது. அவள ஏமாத்தனும் னு நினச்சு வந்த ஜுலியன் உம் கொஞ்ச கொஞ்சமா அவள விரும்ப ஆரம்பிக்கிறான்.

இந்த ஸ்டோரி ல திருப்பம் னா ஜுலியன் குற்ற உணர்ச்சியோட குற்றவாளி யா தனக்கு தானே தெரிஞ்சே தண்டனை கொடுதுக்கறது. இந்த படத்தோட தீம் னு பாத்த இன்னொசென்ட் லவ் மற்றும் நம்பிக்கை துரோகம்.
இந்த படத்த பத்தி படத்தோட டைரக்டர்(Lee Cheol-ha) இப்டி சொல்கிறார்:

"The moment when two people desperately long for one another, the moment when love cannot possess but subsists - that’s what I tried to put on screen. Julian and Min are not your regular melodrama characters. When love unexpectedly comes to the two very people mistrusting love, it becomes more ardent than ever.”




படத்த பாக்க விருப்ப படறவங்க

இங்க கிளிக்குங்க








Tuesday, September 8, 2009

A Millionaire's First Love காதல் + மென்சோகம் + கவிதை

Hi Hi Hi...

ஒரு வாரமா ஒரு பதிவும் போடல.... நம்ம பக்கத்த தான் யாரும் படிக்கலையே அப்புறம் எதுக்கு எழுதிகிட்டு னு ஒரு எண்ணம் வந்துச்சு... நேத்து திடிர்னு ஒரு நண்பன் மெசேஜ் அனுப்பினான்


சுரேஷ் : டேய் அந்த பொண்ணு தான் உன்ன பாக்கவே மடேங்குதே அப்புறம் ஏன் டா அவள பாத்து சிரிக்குற??
ரமேஷ் : மச்சான் கீதைலயே சொல்லிருக்கு "கடமையை செய் பலனை எதிர்பாராதே னு " ... நம்ம கடமை சிரிக்குறது சிரிச்சு தான் வைபோமே னு ..

இது என்ன ஒரு மொக்க மெசேஜ் னு நீங்க பொலம்புறது புரியுது ... அது என்ன தான் மரண மொக்கையா இருந்தாலும் அதுல உள்ள மெசேஜ் "கடமையை செய் பலனை எதிர்பாராதே னு " சட்டுன்னு மண்டைல யாரோ கொட்டுன மாதிரியே இருந்துச்சு...

உடனே எங்க குல சாமி மேல ஒரு சத்யத்த பண்ணிபுட்டேன்... நம்ம கிறுக்குரத கிறுக்குவோம் படிக்கறவங்க படிக்கட்டும் னு ... எல்லாருக்கும் ஒன்னு சொல்லிகுறேன் இந்த பதிவ முழுசா படிக்காதவங்க கண்ண சாமி குதிச்சுனா அதுக்கு நா பொறுப்பு இல்ல ... சொல்ல வேண்டியத சொல்லிட்டேன் அம்புடுதேன்...
சரி மேட்டர் கு வரேங்க ... வழக்கம் போல சொந்த சரக்கு எழுத வக்கிலாததால் இந்த தரவையும் ஒரு கொரியன் படத்த பத்தி தான் எழுதுறேன்.......

A Millionaire's First Love

இந்த படம் பாத்திங்க நா உங்களுக்கு நிச்சயமா ஒரு 3 (or) 4 தமிழ் படம் நினப்புக்கு வந்துரும்...


Hyun Bin (இவரு இந்த படத்தோட ஹீரோ- சாரி ங்க இந்த பேர தமிழ் ல தட்டச்ச முடில..!!) ரொம்ப முரட்டு பையன், ரொம்ப பெரிய கோடீஸ்வரன் , யாருக்கும் அடங்கமாட்டான். அவனுக்கு 19 வயசு ஆனதும் அவனோட தாத்தா சொத்து அவனுக்கு கெடைக்கும். ஆனா அங்க தான் அவனோட தாத்தா வச்சாரு ஒரு ட்விஸ்ட். நம்ம "தம்பிக்கு எந்த ஊரு " படத்துல வர மாதிரி இவன் இந்த சொத்தையெல்லாம் விட்டு அவன் தாத்தா பொறந்து வளந்த கிராமத்துல போய் அந்த பையன் ஹை ஸ்கூல் முடிக்கணும். இவன் பாதில விட்டுட்டு வந்தாலோ இல்ல ஸ்கூல் ல இருந்தே இவன துரதிடங்கனாலோ இவனுக்கு அந்த சொத்துல 0.1% தான் கெடைக்கும்.




வேற வழி இல்லாம இந்த பையனும் அந்த ஊருக்கு போறபடுவான். போன கிராமத்துல வழக்கம் போல ஹீரோயின் என்ட்ரி (Lee Yeon-hee). ஆரம்பத்துல ரெண்டு பேருக்கும் ஒத்துபோகலனாலும் ஸ்கூல் ப்ரோஜெக்ட்ஸ் அது இது னு ஒன்னா வேலை செஞ்சு ரெண்டு பேருக்கும் ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வந்துரும்... இவங்க ரெண்டு பேரும் சின்ன பிள்ளைல ஒன்னா விளையாடினவங்க . பப்பி ல்வ் இவங்களுக்கு இருந்துச்சு னு ஒரு சின்ன பிளாஷ் பாக் வரும்... ப்ரெசென்ட் ல யும் ரெண்டு பேரும் விரும்ப ஆரம்பிச்சுருவாங்க. அவளவுதான் ஹாப்பி எண்டிங் னு நாம நினச்சுற கூடாது. அந்த பொண்ணுக்கு ஹார்ட் டிசீஸ் இருக்கும். பழைய " நினைத்தாலே இனிக்கும் " ல வர மாதிரிஹீரோ கிட்ட சொல்லாமயே இருக்கும். அப்புறம் அத ஹீரோ கண்டிபிடிச்சு எவ்ளோ செலவானாலும் பரவால எனக்கு சொத்தெல்லாம் வேணாம் அந்த பொண்ண மட்டும் காப்பாத்துனா போதும் ல சொல்லுவாரு. ஆனா அந்த பொண்ணு கிரிடிகல் கண்டிஷன் ல இருக்கா காப்பாத்த முடியாது னு சொல்லிருவாங்க.



அவ சாக போற னு தெரிஞ்சு அந்த ஹீரோ அந்த கடைசி ரெண்டு மாசம் அவள அப்டி கண்ணுக்குள்ள வச்சு தாங்குவான். அவளுக்காக ஒன்னுஒன்னும் பாத்து பாத்து செய்வான். அப்பா அவங்க பேசிகுற வசனம் லாம் சான்ஸ் ஏ இல்ல. அவ்ளோ அழகா இருக்கும். லவ் எ அதுக்கு மேல பொயடிக் ஆ யாரும் சொன்னது இல்ல...

கடைசில அந்த பொண்ணு இறந்து போய்டுவா. அவ வழக்கமா உக்கார இடத்துல அந்த ஹீரோ பூ வ வைப்பான்.(சும்மா செம்ம டச்சின் சீன்)



மென்சோகம் னு சொல்லுவாங்க ல அந்த மாதிரி படம்.
படத்துக்கான லிங்க்

A walk to remember படம் பிடிச்சுருந்தவங்களுக்கு இந்த படமும் கண்டிபா பிடிக்கும் !!!



லவ் மீ நாட் அடுத்த கொரியன் படம். இத பத்தி எழுதலாமா வேணாமா னு நீங்க சொல்ற கமெண்ட் எ வச்சு தான் டிசைட் பண்ணனும்.



நீங்க என்ன சொல்றீங்க ??!!
எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க பாஸ்....

Friday, August 21, 2009

My litte Bride... சுவாரசியமான படம்


எல்லாரும் சினிமா பத்தி எழுதுறாங்க ... சரி நம்மளும் எழுதுவோம் னு தான் இந்த பதிவு ... தமிழ் சினிமா பத்தியோ ஆங்கில சினிமா பத்தியோ எழுதலாம் தான் ... ஆனா அத எழுதுறதுக்கு நெறைய பேர் இருக்காங்க ... நான் ஒரு கொரியன் படத்த பத்தி எழுதலாம் னு இருக்கேன் ...
மை லிட்டில் ப்ரைட்-

பாய் ப்ரென்ட் கூட இருக்கிற போது
அட இது ஹஸ்பெண்டு ங்க


படத்தோட கதை இதுதான் - ஒரு பதினஞ்சு வயசு பொண்ணுக்கு சாகக்கிடக்கிற தாத்தாவ காரணம் காட்டி குடும்ப நண்பரோட பையனுக்கு கல்யாணம் பண்ணிவச்சுடுறாங்க.. அந்த பையனும் பொண்ணும் சின்ன வயசுல இருந்தே நண்பர்களா இருந்தாலும் கல்யாணம் பண்ணிக்குரதுல ஈடுபாடு இல்ல இருந்தாலும் பெரியவங்களுகாக வேற வழி இல்லாம கல்யாணத்துக்கு ஒத்துக்குறாங்க...

அவங்க ரெண்டு பேரும் தனி வீட்ல அடிக்கிற லூட்டிஸ் லா சான்ஸ் ஏ இல்ல ...
ஸ்கூல் ல படிக்கிற ஒரு பையன அந்த பொண்ணுக்கு ரொம்ப பிடிக்கும் அத தெரிஞ்ச ஹீரோ அவன கூப்ட்டு அவன திட்டவும் முடியாம ஏத்துக்கவும் முடியாம முழிப்பான்...

படத்தோட சுவாரஸ்யங்கள் சில ::

* ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேரும் செம கியுட்...

*
அந்த பொண்ணோட ஸ்கூல் கே ஆர்ட் டீச்சர் ஆ வரப்போறதா ஹீரோயின்
கிட்ட எப்டி சொல்றதுன்னு ஹீரோ ட்ரை பண்ற காட்சி

* ஒரு தலையா காதலிக்குரத ஹீரோ சொல்லாமயே அந்த பொண்ணு தெரிஞ்சுகறது ( அதுக்கு ஒரு லெட்டர் சீன் வரும் .. நல்லா இருந்துச்சு )

* ஒரு வாரமா நைட் ல கஷ்டப்பட்டு காதலிக்காக ஹீரோ வரையிற stage decoration ஓவியம்...

* இன்னும் நிறையா இருக்குங்க எனக்கு தான் கோர்வையா சொல்ல வரல ... நீங்களே படம் பாருங்களேன் ....!!

verdict - டைம் பாஸ்க்கு படம் பாக்குறவங்களுக்கு இந்த படம் நிச்சயமா பிடிக்கும் !!



பி. கு ::

நானும் சினிமா பத்தி எழுதிட்டேன்... எழுதிட்டேன் ...
பாத்துகோங்க நானும் ரௌடிதான்..நானும் ரௌடிதான்..நானும் ரௌடிதான்


இந்த படத்த பாக்கணும் னு பிரியபட்ரவங்க youtube ல பாக்கலாம் ...(with subtitles nu search பண்ணுங்க இல்லனாபேஜாராபூடும் ...)


அந்த வேளை லாம் எங்களுக்கு ஒத்துவராது னு சலிச்சுக்குறவங்க இங்ககிளிக்குங்கோ


வர்ட்டா .......





முக்கியமான குறிப்பு ::
தமிழ் படம் பாத்து நொந்து நூடுல்ஸ் ஆனவங்க இத பாருங்க ஏன்னா இதுல பறந்து பறந்து அடிக்கிற பைட் கிடையாது ... ஓவர் செண்டிமெண்ட் சீன்ஸ் கிடையாது முக்கியமா பன்ச் டயலாக் கிடையாது !!!

Wednesday, August 19, 2009

மேகத்தை துரத்தினவன்

இன்னைக்கு சுஜாதாவோட புத்தகம் ஒன்றை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.... 1979 வருஷத்துல வந்த கதைதான்... ஆனா அத படிக்கும்போது பழைய புக் னு தோணவே இல்ல...அதுதான் சுஜாதாவோட சிறப்பு...

மேகத்தை துரத்தினவன்

நெறைய பேர் இந்த கதைய படிச்சுருப்பிங்க ... படிக்காதவங்களுக்காக ஒரு சின்ன
கதைச் சுருக்கம்...

அன்பழகன் என்கிற சாதரண மனுஷன் வாழ்கைல நடக்கிற சம்பவங்கள்... அவனுக்கே தெரியாமல் அவன் ஒரு பேங்க் கொள்ளையில் ஈடுபடுகிறான் .. போலீஸில் மாட்டிக்கொள்கிறான் ... அவனுக்கு எதிராக வாதாடும் வசந்த் அவனுக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தருகிறான்... அதுக்கு அப்புறம் வசந்த் மற்றும் ரத்னா அன்பழகனுக்கும் அந்த கொல்லைக்கும் தொடர்பு இல்ல னு கண்டுபிடிக்கறது மிச்ச கதை.....


இதுல வசந்த் பேசுற வசனம் ரொம்ப நடைமுறைத்தனமா( பிராக்டிக்கலா இத அப்டி சொல்லலாமா னு தெரில தப்பு ன சொல்லுங்க திருத்திக்கிறேன் ) இருக்கு...

"ஒரு வக்கீலுக்கு அவனுடைய கட்சிக்காரன்தான் முக்கியம். நான் கூட ஆரம்ப காலத்தில் ஜஸ்டிஸ், நியாயம் அது இதுன்னு கலர் கலரா கண்கள் பாத்துக்கிட்டுத்தான் இருந்தேன். ' சமூக நியாயம்'கிறதுக்கும் ' சட்டப்படி நியாயம்' கிறதுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்குன்னு கேள்விப்பட்டேன். எதோ ஒரு தீபாவளி மலர்லே படிச்சேன். ' நியாயங்கள்' னு ஒரு சிறுகதை. படிச்சுப் பாருங்க ! ஒரு வக்கீலுக்கு மனசாட்சிங்கறது ஒத்து வராது. கூடாது. அவனுக்கு ஒரே ஒரு வழக்கு ! அவன் தேர்ந்தெடுத்தது ஒரு கட்சியை. அந்த கட்சிக்கு அவன் வாதடியாகனும். பிராஸிக்யூஷன், டிபென்ஸ் இரண்டு பேருக்கும் சட்டப் புஸ்தகம் ஒண்ணுதான். ஒரு புட்பால் மேட்ச் மாதிரி. ரத்னாவின் காட்சிக்கும் வசந்த் காட்சிக்கும் சில விதிகள் உண்டு. அதில் முக்கியமானது சேம் சைடு கோல் போடக் கூடாது. "


இதுல யாருக்கும் ( எந்த வக்கீலுக்கும் ) மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பு இல்லன்னு எனக்குத் தோனுது. உங்களுக்கு??!!!

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location