Showing posts with label டைம் பாஸ். Show all posts
Showing posts with label டைம் பாஸ். Show all posts

Friday, September 18, 2009

வித்தியாசமான குரல்கள உங்களால கண்டுபிடிக்க முடியும் னா நீங்க ஒரு புத்திசாலி!!!!

எனக்கு பாட்டு கேக்குறது ரொம்ப பிடிக்கும்... நெறைய நேரம் பாட்டு கேக்குறது வழக்கம்... படிக்கும்போது, சமைக்கும்போது, தூங்கும்போது னு இப்டி பாரபட்சமே இல்லாம எல்லா நேரமமும் பாட்டு கேக்குறது பழக்கம்..

நான் கல்லூரி முதல் ஆண்டு படிக்கும் போது எங்க ஆங்கில ஆசிரியர் சொன்னாரு "வித்தியாசமான குரல்கள உங்களால கண்டுபிடிக்க முடியும் னா நீங்க ஒரு புத்திசாலி " னு... அதுல இருந்து எல்லா பாட்டையும் யாரு பாடினாங்க னு தெரிஞ்சுக்கணும் னு ஒரு ஆர்வம்...

ஏன்னா நம்ம புத்திசாலி னு நம்மளயே நம்பவைக்கறது ரொம்ப கஷ்டம் பாருங்க... அப்டி ஆரம்பிச்சு இன்னைக்கு ஓரளவு எல்லா பாட்டும் யாரு யாரு படுறாங்க னு தெரியுது...

ஆனா பாருங்க பாட்டு பாடுனவங்கள தெரிஞ்சுக்குற ஆர்வத்துல்ல பாதி கூட பாட்டு எழுதுனவங்க யாரு னு தெரிஞ்சுக்கறதுள்ள இல்ல... எத்தனையோ நல்ல பாட்டு கேட்க்குறேன் ஆனா அதலாம் யாரு எழுதினாங்க னு தெரியாது..... பாடல் எழுதுற கவிஞர்கள் பேர் தெரியும் ஆனா அவங்க என்ன என்ன பாட்டு எழுதிருக்காங்க னு தெரியாது... தாமரையோட பாடல்கள் மட்டும் தான் பாடல் ஆசிரியர் பேரோட தெரியும்.. ஏன்னா அவங்க பாட்டு மட்டும் தான் கான்ஸ்டன்ட் காம்பிநேஷின் ஹிட் ஆச்சு, சோ கவுதம் மேனன் படம் னா தாமரை தான் பாடல்கள் னு மனசுல பதிஞ்சு போச்சு...

உங்களுக்கு எல்லா பாடல் ஆசிரியர் பேரும் தெரியுமா??
அப்ப கீழ உள்ள பாடல் வரிகள் லாம் யாரு எழுதுனது னு சொல்லிட்டு போங்க...

"உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்
இந்த ஜன்மம் வீணென்று போவேனோ ??"
(பூவெல்லாம் உன் வாசம்)

" காதல் நெருப்பின் நகரம்
உயிரை உருக்கி தொடரும் பயணம்
காதல் நீரின் சலனம்
புயல்கள் உறங்கும் கடலின் மௌனம் "
காதல் மாய உலகம்
சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும்
புள்ளி மான்கள் புன்னகை செய்து வேடனை வீழ்த்தும்"
(வெயில்)

"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகு வர்த்தியும்
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ "
(சில்லுனு ஒரு காதல்)

"படுத்தும் பொசுக்குனு தூங்கும் பய
பித்துக்குளி போல இப்ப முழிக்குரானே
வெள்ளன எந்திருச்சு ஓடும் பய
சுள்ளுன்னு சூரியன பாக்குறேனே

அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்
அந்த ஒரு நொடியை நெஞ்சில் ஒளித்துக்கொண்டேன்
நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்
அவன் கண்களிலே என் வயதறிந்தேன்"
(காதல்)

" ஒரு நாளில் வாழ்கை இங்கே
எங்கும் ஓடி போகாது
மறுநாளும் வந்து விட்டால்
துன்பம் தேயும் தொடராது
எதனை கோடி கண்ணீர்
மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும்
பூமி இன்னும் பூ பூக்கும்"
(புதுப்பேட்டை)

"பேச எண்ணி சில நாள் அருகே வருவேன்
பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே நகர்வேன் ஏமாற்றி..

இரவும் அல்லாத
பகலும் அல்லாத
பொழுதுகள்
உன்னோடு கரையுமா??!!

கரைகள் அண்டாத
காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்த்திட்டாய்??!

தடையில்லை சாவிலும் உன்னோடு வர ..."
(சுப்பிரமணியபுரம்)

இதெல்லாம் சாம்பிள் க்கு கேட்டது... பதில் சொல்ல யாராச்சும் கிடைச்சா இன்னும் கேக்குறதுக்கு நிறைய பாடல் வரிகள் இருக்கு....
பதில் சொல்லுவிங்க தானே ??!!

Thursday, September 17, 2009

200 Pounds of Beauty - அழகா இருக்கிறது நல்லதா கெட்டதா??!!

இது லோகு க்கு ஸ்பெஷல் பதிவு... அதாங்க கொரியன் படம் ...

200 pounds of Beauty
கங் ஹன்னா ரொம்ப குண்டான போன் செக்ஸ் எம்ப்லோயீ... பிரபல பாப் சிங்கர் க்கு ரகசிய குரல் கூட இந்த பொண்ணோடது தான் (அந்த சிங்கர் வெறும் வாயசைப்பு மட்டும் தான்). ஒரு நாள் அந்த சிங்கர் ஹன்னா வ அந்த மியூசிக் கம்பெனி டைரக்டர் முன்னாடி ரொம்ப கேவல படுத்துற மாதிரி பேசிரும்.. அந்த டைரக்டர்- சாங் ஜுன் மேல ஹன்னா வுக்கு ஒரு தலை காதல்.. அவன் முன்னாடி அசிங்கபடுத்திட்டனால ஹன்னா வுக்கு ஒரே கவலையா போய்டும்..
எப்டியும் இந்த உடம்ப கொறச்சே ஆகணும் னு முடிவு பண்ற ஹன்னா அவளோட போன் செக்ஸ் ரெகுலர் கஸ்டமரான காஸ்மெடிக் சர்ஜன சந்திக்கிறா. உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆபரேஷன் பண்ணி ஒரு வருசத்துல்ல ஆள் அடையாளமே தெரியாம மாறிடுற ஹன்னா, ஜென்னி ங்கற பேர்ல திரும்ப அந்த மியூசிக் டைரக்டர் கிட்டவே போய் அந்த பாப் சிங்கர் க்கு சீக்ரெட் வாய்ஸ் ஆ ஜாயின் பண்ண ஆடிஷின் அட்டென்ட் பண்ற. இவ அழகுல மயங்குற அந்த டைரக்டர் பேசாம இவளையே பாப் சிங்கர் ஆகிடலாம் னு முடிவு பண்றான்.
ஹன்னா( ஜென்னி) பாப் சிங்கர் ஆகினாலா , அந்த டைரக்டர் உடனான காதல் நிறைவேறிச்சா னு லாம் படத்த பாத்து தெரிஞ்சுகோங்க....

படத்துக்கான லிங்க்

Freaky Friday - " என் இடத்துல இருந்து பாரு அப்ப தெரியும் உனக்கு "

"என் எடத்துல இருந்து பாத்தாதான் உனக்கு நான் ஏன் இப்டி சொல்றேன் னு தெரியும் " னு பல பேர் பல சந்தர்பத்துல சொல்லி நாம கேட்டுருபோம்... அப்படி ஒரு கருத்த வச்சு 2003 ரிலீஸ் ஆனா படம் தான் "Freaky Friday" ..
லிண்டசே லோகன் எல்லாரையும் போல அம்மா போடற கண்டிஷின் கு அடங்கி போகம, தம்பி கூட எப்ப பாத்தாலும் சண்ட போட்ற வழக்கமான டீனஜெர். தன்னோட அம்மா ரெண்டாவது கல்யாணம் பண்ணிகரத ஏத்துகுற மனநிலை இவளுக்கு இல்ல. ஒரு சைனீஸ் உணவு விடுதியில் சாப்டும்போது அம்மாவும் பொண்ணும் சண்ட போட்டுக்குறாங்க. இதபாத்த விடுதில இருக்க ஒரு சைனா கார அம்மா அவங்க ரெண்டு பேருக்கும் fortune குக்கி கொடுத்துடுறாங்க. அது தெரியாம அத சாப்டுற அம்மாவும் பொண்ணும் அவங்க மட்டும் ஒரு நில நடுக்கத்தை உணராங்க.
மறுநாள் காலைல எழுந்துரிகுற டெஸ் (அதான் அம்மா ) தான் தன்னோட பொண்ணு உடம்புல இருக்கோம் னு தெரிஞ்சு அதிர்ச்சி ஆகுறாங்க. அதே மாதிரி பொண்ணும் அம்மா உடம்புல இருக்கத நினச்சு அதிர்ச்சி அடையுறாங்க. அந்த உணவு விடுதில தான் எதோ நடந்துருக்கணும் னு முடிவு பண்ணி அங்க போய் கேக்கும்போது அங்க உள்ளவங்க சொல்றாங்க , நீங்க சாப்பிட்ட குக்கி ல போட்டுருந்த fortune நிறைவேருனா தான் அவங்களுக்கு அவங்க உடம்பு திரும்ப கிடைக்கும் னு...
அவங்க இப்டி மாறுன அன்னிக்கு அவங்க அம்மாவுக்கு இரண்டாவது கல்யாணம், பொண்ணுக்கோ அவ வாழ்கை லட்சியமா இருக்க மியூசிக் காம்படிஷின்.. ரெண்டு பேரும் மத்தவங்களோட வேலைய எப்டி பண்றாங்க ங்கறத ரொம்ப நகைச்சுவையா சொல்லிருபாங்க...

அந்த வெள்ளிகிழமைல அவங்க பண்ற கூத்து தான் மிச்ச படம்...
பாத்து சிரிச்சுகோங்க....!!!

இந்த படம் பாக்க இங்க கிளிக்குங்கோ

ரயில் பயணங்களில்...


நீண்ட தூரம் ரயில் பயணம் பிடிக்காதுன்னு சொல்றவங்க யாராச்சும் இருக்காங்களா என்ன...??!!

எனக்கு ரயில் பயணம் ரொம்ப பிடிக்கும்.. சின்ன பிள்ளையா இருக்கும்போது குடும்பத்தோட எங்க போனாலும் எங்க அப்பா விரும்புறது ரயில்ல போகத்தான்.... அப்டி போன நிறையா பயணங்கள் இன்னும் நினைவுகள்ள ரொம்ப பசுமையா இருக்கு....

தெரிஞ்சவங்க தெரியாதவங்க னு லாம் வித்யாசம் இல்லாம சேர்ந்து போற 5 மணி நேரமோ 6 மணி நேரமோ எல்லாரும் சிரிச்சு பேசிட்டு போற அழகே தனி..
எனக்கு ரயில்ல போகும்போது நிறைய நண்பர்கள் கிடச்சுருக்கங்க.. என் வயசு நண்பர்கள் னு சொல்றத விட எல்லா வயசுலயும் நண்பர்கள் கிடச்சுருக்காங்க னு சொல்றது தான் சரியா இருக்கும்..

சுமார் பத்து வருசத்துக்கு முன்னாடி இப்டி ரயில் பயணத்துல நண்பரா கிடச்சவங்க ரவி அண்ணா மற்றும் அருண் அண்ணா... ரெண்டு பேரும் இப்ப என்ன பண்றாங்க னு தெரியாது.. அவங்க இன்னும் மனசுல இருக்கதுக்கு முக்கியமான காரணம் அவங்க ரெண்டு பேரும் அவ்ளோ நல்லா பேசுனாங்க.. எவ்ளோ கதை சொன்னாங்க.. பொதுவா வளந்துட்டாலே குழந்தைதனத்த நாம எல்லாரும் மறந்துடுவோம்.. ஒரு குழந்தைகிட்ட எப்டி பேசனும் னு கூட பலருக்கு தெரியாது... அவங்கள பாத்துதான் குழந்தைத்தனம் வாழ்கைல ரொம்ப முக்கியம் னு புரிஞ்சது... ( இப்ப எதுக்கு இத்தன பில்ட் அப் னு நீங்க கேக்குறது தெரியுது)


போன வாரத்துல சேலத்துல இருந்து சென்னை போனேன்.. ரயில்ல தான்.. மக்கள் ரொம்ப மாறிட்டாங்க... அதிக வேலை களைப்பா என்ன னு தெரியல நான் ஏறுன கம்பார்ட்மென்டுள்ள எல்லாரும் ரயில் பொறப்பட்டு கொஞ்ச நேரத்துலயே தூங்க ஆரம்பிச்சுட்டாங்க.. அப்டி தூங்காத சிலரும் காதுல ஒரு மொபைலயோ எம்பி3 பிளேயரயோ மாட்டிகிட்டு அவங்க இஷ்டப்பட்ட பாட்டுகள கேக்க ஆரம்பிச்சுடாங்க... இன்னும் கொஞ்சம் டீன்ஸ் மெசேஜ் மற்றும் கால்ஸ் ( அது கடலையா னு கடவுளுக்கு தான் தெரியும் ) லா பிசியா இருந்தாங்க..

எனக்கு ரொம்ப போர் அடிச்சு கொஞ்சம் நேரம் வேடிக்க பாத்தேன்... பஸ் போறத விட ரயில்ல போறதுல்ல சின்ன சந்தோசம் என்ன னா போற வழி எல்லாம் இயற்கை காட்சிகளா பாத்துட்டு போகலாம்..


வேடிக்க பாத்துட்டே இருக்கும்போது தான் ஒரு எண்ணம் வந்துச்சு இப்டி வெட்டியா போறதுக்கு பேசாம எழுதுறதுக்கு எதையாச்சும் யோசிக்கலாம் னு நினைக்க தான் ங்க செஞ்சேன் எங்கேர்ந்து தான் தூக்கம் வந்துச்சோ அப்டியே தூங்கிட்டேன் :( ..


முழிச்சு பாக்குறப்ப ரயில் எங்க போகுது னே தெரியல.. பக்கத்து சீட்ல இருந்த அங்கிள் சொன்னாங்க ஜோலார்பேட்டை தாண்டிவந்துருச்சு னு.... ஜன்னல்ல பாத்த அரை கிலோமீட்டர் தள்ளி இருக்குற வீடு கூட பளிச்சு னு தெரியுது... வாஸ்து கலராம்... அப்பா சாமி கண்ணு போச்சு போங்க...

கண்ட கலர அடிச்சது கூட பரவால அதுக்கு பார்டெர் ப்ரைட் கலர் அடிச்சு (அதாவது ஆரஞ்சு கலர் கு கிளிபச்ச பார்டெர், வயலெட் கலர் கு பஞ்சு மிட்டாய் கலர் பார்டெர் னு ) ரொம்ப கொடுமையா பெயிண்ட் அடிச்சுருக்காங்க... அழகா வீட கட்டி இப்டி ஏன் தான் பெயிண்ட் அடிக்கிறாங்களோ ?!!

அப்டி இப்படி னு ஒரு வழியா சென்னை வந்து சேந்துட்டேன்.. கடைசிவர எத பத்தி எழுதுறது னு யோசிக்கவே இல்ல போங்க ....!!!




இத படிக்கறவங்களுக்கு ஒன்னு புரிஞ்சுருக்கும்... இவ என்ன சொல்ல வரானே புரியல தானே உங்களுக்கு... எனக்கே அது புரியலங்க... எதோ எழுதனும் னு கஷ்டப்பட்டு இவ்ளோ டைப் பண்ணிட்டேன், வெட்டியா ட்ராப்ட் போட்டு வைக்க மனசு வரல அதன் பப்ளிஷ் பண்ணிட்டேன்... மன்னிச்சுக்கங்க எசமான் மன்னிச்சுக்குங்க....

அது என்னமோ போங்க நா சொந்தமா எது எழுதுனாலும் அது எனக்கே புரிய மாட்டேங்குது !!!

Thursday, September 10, 2009

லவ் மீ நாட் - லவ் கிவ்வுலாம் ஒன்னும் தேவையில்ல பாஸ்

லவ் மீ நாட் படத்த பத்தி எழுதலாமா னு கேட்டதுக்கு லோகு சொன்னது அழகான ஹீரோயின் நடிச்ச படமா எழுது னு...

எனக்கு கொரியன் படத்துல ரொம்ப பிடிச்ச ஹீரோயின் Moon Geun-young.
சோ இந்த முறை அவங்க நடிச்ச படத்த பத்தி தான் எழுதபோறேன்.மை லிட்டில் ப்ரைட் படம் பாத்துட்டு இந்த பொண்ணு செம்ம கியூட் னு மட்டும் தான் நினச்சேன் .. ஆனா இந்த படம் பாத்ததும் தான் தெரிஞ்சது அந்த பொண்ணு அழகா நடிக்கவும் செய்யும் னு...



இந்த படத்தோட கதை இது தான்...


ஜுலியன் ங்கறவன் ரொம்ப சந்தோசமா அடுத்தவங்கள ஏமாத்தி பொழப்பு நடத்துறவன். எதிர்பாராத விதமா பிசினஸ் லாஸ் காரணமா அவனுக்கு நெறைய கடனா போய்டுது. ஒரு மாசத்துல கடன கட்டலனா அவன கொலை பண்ணிருவோம் னு வழக்கம் போல மிரடிட்டு போகுது. அவன் அவன காப்பாத்திக்க இருக்க ஒரே வழி பெரிய சொத்துக்கு வாரிசா இருக்க ஹீரோ யினோட அண்ணனா (சின்ன வயசுலயே வீட்ட விட்டு ஓடி போன) நடிச்சு அப்புறம் அந்த பொண்ணையும் கொன்னுட்டு அவ சொத்த தன்னோடது ஆக்கிக்கறது தான்.
மின் ங்கற அந்த ஹீரோயினுக்கு எதோ ஒரு காரணமா சின்ன வயசுலயே கண் பார்வை இல்லாம போய்டுது. அந்த பொண்ணுக்கு அவன் தன்னோட அண்ணன் இல்ல னு ஒரு இன்ஸ்டிங் சொல்லுது. ஆனா கொஞ்ச கொஞ்சமா அவன் மேல ஒரு லவ் வும் வருது. அவள ஏமாத்தனும் னு நினச்சு வந்த ஜுலியன் உம் கொஞ்ச கொஞ்சமா அவள விரும்ப ஆரம்பிக்கிறான்.

இந்த ஸ்டோரி திருப்பம் னா ஜுலியன் குற்ற உணர்ச்சியோட குற்றவாளி யா தனக்கு தானே தெரிஞ்சே தண்டனை கொடுதுக்கறது. இந்த படத்தோட தீம் னு பாத்த இன்னொசென்ட் லவ் மற்றும் நம்பிக்கை துரோகம்.
இந்த படத்த பத்தி படத்தோட டைரக்டர்(Lee Cheol-ha) இப்டி சொல்கிறார்:

"The moment when two people desperately long for one another, the moment when love cannot possess but subsists - that’s what I tried to put on screen. Julian and Min are not your regular melodrama characters. When love unexpectedly comes to the two very people mistrusting love, it becomes more ardent than ever.”




படத்த பாக்க விருப்ப படறவங்க

இங்க கிளிக்குங்க








Wednesday, September 9, 2009

குழந்தைகளை பார்த்துகொள்ளும் கணவர்கள் உஷார் !!!!!!

வீட்ல ஒரு ரெண்டு நாள் மனைவி இல்லைனா கணவர்கள் பாடு ரொம்ப திண்டாட்டமா போயிரும்...

குழந்தைய வேற வீட்லயே விட்டுட்டு போய்ட்டாங்க னா அவங்க பாடு கேக்கவே வேணாம்..

அப்டி விட்டுட்டு போனதுனால நடந்த சில விபரீத படங்கள்...

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.






















என்ன என்ன விபரீதம் லாம் இருக்கு னு புரிஞ்சுசுச்சா ?? இதெல்லாம் சாம்பிள் பீஸ் தாங்க இன்னும் நெறைய இருக்கு...



பி.கு:
=====
இந்த போட்டோ லா போட்டுருக்கது எல்லாம் வெளி நாட்டு பாப்பா இங்க அப்டி லாம் இல்ல னு பின்னோட்டம் போட ரெடி யா இருக்கவங்களுக்கு ஒன்னு சொல்லிக்க ஆசை படறேன்...

" நீங்க நல்ல அப்பா னு நினைச்சுக்க உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டுங்க "

Tuesday, September 8, 2009

A Millionaire's First Love காதல் + மென்சோகம் + கவிதை

Hi Hi Hi...

ஒரு வாரமா ஒரு பதிவும் போடல.... நம்ம பக்கத்த தான் யாரும் படிக்கலையே அப்புறம் எதுக்கு எழுதிகிட்டு னு ஒரு எண்ணம் வந்துச்சு... நேத்து திடிர்னு ஒரு நண்பன் மெசேஜ் அனுப்பினான்


சுரேஷ் : டேய் அந்த பொண்ணு தான் உன்ன பாக்கவே மடேங்குதே அப்புறம் ஏன் டா அவள பாத்து சிரிக்குற??
ரமேஷ் : மச்சான் கீதைலயே சொல்லிருக்கு "கடமையை செய் பலனை எதிர்பாராதே னு " ... நம்ம கடமை சிரிக்குறது சிரிச்சு தான் வைபோமே னு ..

இது என்ன ஒரு மொக்க மெசேஜ் னு நீங்க பொலம்புறது புரியுது ... அது என்ன தான் மரண மொக்கையா இருந்தாலும் அதுல உள்ள மெசேஜ் "கடமையை செய் பலனை எதிர்பாராதே னு " சட்டுன்னு மண்டைல யாரோ கொட்டுன மாதிரியே இருந்துச்சு...

உடனே எங்க குல சாமி மேல ஒரு சத்யத்த பண்ணிபுட்டேன்... நம்ம கிறுக்குரத கிறுக்குவோம் படிக்கறவங்க படிக்கட்டும் னு ... எல்லாருக்கும் ஒன்னு சொல்லிகுறேன் இந்த பதிவ முழுசா படிக்காதவங்க கண்ண சாமி குதிச்சுனா அதுக்கு நா பொறுப்பு இல்ல ... சொல்ல வேண்டியத சொல்லிட்டேன் அம்புடுதேன்...
சரி மேட்டர் கு வரேங்க ... வழக்கம் போல சொந்த சரக்கு எழுத வக்கிலாததால் இந்த தரவையும் ஒரு கொரியன் படத்த பத்தி தான் எழுதுறேன்.......

A Millionaire's First Love

இந்த படம் பாத்திங்க நா உங்களுக்கு நிச்சயமா ஒரு 3 (or) 4 தமிழ் படம் நினப்புக்கு வந்துரும்...


Hyun Bin (இவரு இந்த படத்தோட ஹீரோ- சாரி ங்க இந்த பேர தமிழ் ல தட்டச்ச முடில..!!) ரொம்ப முரட்டு பையன், ரொம்ப பெரிய கோடீஸ்வரன் , யாருக்கும் அடங்கமாட்டான். அவனுக்கு 19 வயசு ஆனதும் அவனோட தாத்தா சொத்து அவனுக்கு கெடைக்கும். ஆனா அங்க தான் அவனோட தாத்தா வச்சாரு ஒரு ட்விஸ்ட். நம்ம "தம்பிக்கு எந்த ஊரு " படத்துல வர மாதிரி இவன் இந்த சொத்தையெல்லாம் விட்டு அவன் தாத்தா பொறந்து வளந்த கிராமத்துல போய் அந்த பையன் ஹை ஸ்கூல் முடிக்கணும். இவன் பாதில விட்டுட்டு வந்தாலோ இல்ல ஸ்கூல் ல இருந்தே இவன துரதிடங்கனாலோ இவனுக்கு அந்த சொத்துல 0.1% தான் கெடைக்கும்.




வேற வழி இல்லாம இந்த பையனும் அந்த ஊருக்கு போறபடுவான். போன கிராமத்துல வழக்கம் போல ஹீரோயின் என்ட்ரி (Lee Yeon-hee). ஆரம்பத்துல ரெண்டு பேருக்கும் ஒத்துபோகலனாலும் ஸ்கூல் ப்ரோஜெக்ட்ஸ் அது இது னு ஒன்னா வேலை செஞ்சு ரெண்டு பேருக்கும் ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வந்துரும்... இவங்க ரெண்டு பேரும் சின்ன பிள்ளைல ஒன்னா விளையாடினவங்க . பப்பி ல்வ் இவங்களுக்கு இருந்துச்சு னு ஒரு சின்ன பிளாஷ் பாக் வரும்... ப்ரெசென்ட் ல யும் ரெண்டு பேரும் விரும்ப ஆரம்பிச்சுருவாங்க. அவளவுதான் ஹாப்பி எண்டிங் னு நாம நினச்சுற கூடாது. அந்த பொண்ணுக்கு ஹார்ட் டிசீஸ் இருக்கும். பழைய " நினைத்தாலே இனிக்கும் " ல வர மாதிரிஹீரோ கிட்ட சொல்லாமயே இருக்கும். அப்புறம் அத ஹீரோ கண்டிபிடிச்சு எவ்ளோ செலவானாலும் பரவால எனக்கு சொத்தெல்லாம் வேணாம் அந்த பொண்ண மட்டும் காப்பாத்துனா போதும் ல சொல்லுவாரு. ஆனா அந்த பொண்ணு கிரிடிகல் கண்டிஷன் ல இருக்கா காப்பாத்த முடியாது னு சொல்லிருவாங்க.



அவ சாக போற னு தெரிஞ்சு அந்த ஹீரோ அந்த கடைசி ரெண்டு மாசம் அவள அப்டி கண்ணுக்குள்ள வச்சு தாங்குவான். அவளுக்காக ஒன்னுஒன்னும் பாத்து பாத்து செய்வான். அப்பா அவங்க பேசிகுற வசனம் லாம் சான்ஸ் ஏ இல்ல. அவ்ளோ அழகா இருக்கும். லவ் எ அதுக்கு மேல பொயடிக் ஆ யாரும் சொன்னது இல்ல...

கடைசில அந்த பொண்ணு இறந்து போய்டுவா. அவ வழக்கமா உக்கார இடத்துல அந்த ஹீரோ பூ வ வைப்பான்.(சும்மா செம்ம டச்சின் சீன்)



மென்சோகம் னு சொல்லுவாங்க ல அந்த மாதிரி படம்.
படத்துக்கான லிங்க்

A walk to remember படம் பிடிச்சுருந்தவங்களுக்கு இந்த படமும் கண்டிபா பிடிக்கும் !!!



லவ் மீ நாட் அடுத்த கொரியன் படம். இத பத்தி எழுதலாமா வேணாமா னு நீங்க சொல்ற கமெண்ட் எ வச்சு தான் டிசைட் பண்ணனும்.



நீங்க என்ன சொல்றீங்க ??!!
எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க பாஸ்....
உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location