Friday, November 13, 2009

கார்ட்டூன் ரசிகர்கள் ஸ்பெஷல்


நீங்க கார்ட்டூன் பார்த்து இருக்கீங்களா... ???!!
அப்பிடினா இந்த பதிவ படிங்க... இல்லைனாலும் பரவால படிங்க ஏன்னாக்க நான் கார்ட்டூன் கதைய பத்தி எழுதபோறது இல்ல... ஏதோ நான் பார்த்து ரசிச்ச சில கார்ட்டூன் கதாபாத்திரங்கள் பத்தி தான் சொல்லபோறேன்...

நான் ஸ்கூல் படிக்கும்போது ( ஹலோ ரொம்ப லாங்க ல திங்க் பண்ணாதிங்க ஒரு நாலு வருஷம் முன்னாடி ) சாயந்தரம் ஆனாக்க கார்ட்டூன் நெட்வொர்க் பாக்குறது என் வழக்கம்... (எங்க வீட்டுல யாருக்கும் சீரியல் பார்கற வழக்கம் இல்லாம இருந்தது நான் எந்த ஜென்மத்துல செஞ்ச புண்ணியமோ!!!)

ஆறு மணிக்கு டாம் அண்ட் ஜெர்ரி ல ஆரம்பிச்சு வரிசையா பாபாய் , ஸ்கூபி டூ , டெக்ஸ்டர்ஸ் லபோரட்டோரி , பிளின்ஸ்டோன்ஸ் , ட்வீட்டி னு வர கார்ட்டூன் அம்புட்டையும் பாப்பேன்.. இன்னும் சிலதுக்கெல்லாம் பேர் மறந்து போச்சு...

அப்பலாம் கார்ட்டூன் பாக்குறதே கொண்டாட்டமா இருக்கும்... அப்புறம் காலேஜ் போயிட்டு இந்த கார்டூனலாம் கொஞ்சம் நாள் பார்கவே இல்ல... அப்பிடி பார்க்காததுக்கு ரெண்டு முக்கிய காரணம் இருக்கு... ஒண்ணு இந்த பொண்ணு இன்னும் வளரவே இல்லைன்னு பாதி விசயத்துக்கு வெட்டி விட்டுருவாளுக.. ரெண்டாவது காலேஜ் ஹாஸ்டல்ல டிவி கிடையாது அப்டியே இருந்தாலும் நம்ம ஒருத்தி கார்ட்டூன் நெட்வொர்க் வை னு சொன்னா அங்க உள்ள அத்தன பேரும் நம்மள ஏலியன் ரேஞ்க்கு லுக்கு விடுவாளுக... அதுனால என்னத்துக்கு இந்த ப்ரெச்சனை னு விட்டாச்சு...

இப்ப காலேஜ் முடிஞ்சு வெட்டியா தானே வீட்டுல இருக்கேன் ( கம்பெனி இன்னும் கூப்பிடல பா ;( ) அதுனால பழைய படி கார்ட்டூன் பார்க்க ஆரம்பிச்சுட்டேன்!!! ( வெட்டியா இருக்கதுக்கு இதையாச்சும் பண்ணலாம்னு தான்..) அப்பலாம் கார்ட்டூன் நெட்வொர்க் மட்டும் தான் இருக்கும்.. இப்ப எத்தன சேனல் வந்துருச்சு... தமிழ் ல வேற பேசுதுங்க எல்லா கதாபாத்திரமும்.. ஒரு பக்கம் டோரா புஜ்ஜி னு குழந்தைங்களுக்கு கதை சொல்லி வருது... இன்னொரு பக்கம் ஜெடிக்ஸ் னு அடிக்கவும் சொல்லிதருது!! ( என் கஸின் கிட்ட ரொம்ப அடி வாங்கிட்டேங்க!!!)


டாம் அண்ட் ஜெர்ரி யும் பாபாய்யும் இன்னும் வந்துகிட்டு தான் இருக்கு ஆனா அதே பழைய எபிசொட்ஸ்... ஆனாலும் எனகென்னமோ சலிக்கல இன்னும் எத்தனை முறை போட்டாலும் பாப்பேன் நானு...

புதுசா நெறையா கார்டூன்ஸ் வந்துருக்கு பென் 10, ஸ்டார் வார்ஸ், சோட்டா பீம் அண்ட் கிருஷ்ணா , ஜாக்கி சாண், ஸ்டுஅர்ட் லிட்டில், செட்ரிக் , காட்ஜிள்ள , அண்ணா'ஸ் ஸ்டோரிஎஸ் னு நெறைய வந்துருச்சு...


சோட்டா பீம் அண்ட் கிருஷ்ணா நல்லா இருக்கு.. மத்ததுல லாம் பாண்டஸி , ஏலியன்ஸ் அப்டினே இருக்கு... ஜாக்கி சாண் கார்ட்டூன் நல்லா இருக்கு.. படம் பார்குறாப்புலையே இருக்கு... ஜாக்கி கு குரல் கொடுக்குரவரு பேர் தெரியல ஆனா அந்த குரல் ரொம்ப பொருத்தமா இருக்கு...!!


அப்புறம் இந்த போகோ சேனல் ல MAD ( Music Art Dance ) அதுல பண்ணிகாமிக்கறதும் இன்டரஸ்டிங்கா இருக்கு...

இந்த மாதிரியே கார்டூனா கலர் கலரா வரதுனாலயே ஃபேஸ் புக் ல ஃபார்ம்வில்லி,கஃபே வொர்ல்ட்,ஃபிஷ் வில்லி, யோ வில்லி னு எல்லா விளையாட்டும் பிடிச்சு போச்சு.. வேலை வெட்டிக்கு கூப்பிடுற வரைக்கும் இப்பிடி விளையாண்டே என் காலம் போயிரும் போல...


என்னடா இந்த புள்ள இன்னும் வளரவே இல்லைன்னு நீங்களும் நினைக்குறீங்களா....??!! நினைச்சுட்டு போங்க பாஸு...


ஒண்ணு கவனிச்சு பாத்தீங்களா..??!! டாம் அண்ட் ஜெர்ரி , பாபாய் , ட்வீட்டி னு நான் சொன்ன அத்தன கார்ட்டூன் லையும் தனிமனித வன்முறை தான்...ஒருத்தர மாத்தி ஒருத்தர் அடிச்சுகிட்டே தான் இருக்காங்க பல வருஷமா!!( டாம்,ஜெர்ரி , ட்வீட்டி லாம் எப்பிடி மனிதனாகும் னு கேக்க கூடாது )


கார்டூன கார்டூனா மட்டும் பாக்குறவங்க ஜாஸ்தி தான்.... இருந்தாலும் நான் என்ன சொல்ல வரேன்னா கார்டூன ஸ்ட்ரெஸ் ரிலீசா மட்டும் பாத்த நல்லது

( ஸப்ப்ப்ப்பா கடைசி வரில ஒரு கருத்து சொல்லியாச்சு !!!!)
உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location