Friday, December 4, 2009

"ஐயம் வெரி ஹாப்பி ஜனங்களே.....!!! "


அந்தா இந்தா னு இழுத்துகிட்டு இருந்த திருச்செல்வம் ஒரு வழியா கோலங்கள் தொடரை இன்னையோட முடிக்கிறாரு...
இதுனால யாருக்கு என்ன சந்தோசம் துக்கமோ தெரியல.....

"ஐயம் வெரி ஹாப்பி ஜனங்களே.....!!! "

போட்டாலும் போட்டான் கோலங்கள் னு... நான் பணிரண்டாவது படிச்ச காலத்துல இருந்து நிக்காம ஓடுது... நல்லவேல நாலு வருஷம் ஹாஸ்டல்ல இருந்ததுனால தினமும் இத நான் பாக்க வேண்டிய கொடுமை நேரல...

திருசெல்வத்த ஒரு காரணத்துக்காக பாராட்டியே ஆகணும் பா... என்னைக்கு கதை பாத்தாலும் நமக்கு விளங்கும்... ரெண்டு மாசத்துக்கு ஒரு தரவ வீட்டுக்கு வரும்போது மட்டும் சீரியல் பாத்ததுலயே எனக்கு கதை புரியுது அப்படின்னா பாத்துகோங்களேன்.. என்ன அந்த கதாபாத்திரத்துல நடிக்கிற நடிகர் நடிகைகள் வேணும்னா கொஞ்சம் மாறி இருப்பாங்க அம்புட்டு தான்.......

இவ்ளோ நாளா மொள்ளமா நகர்த்தின கதைய ஒரே வாரத்துல ட்விஸ்ட் அண்ட் டர்ன் வச்சு முடிக்கிறாங்க... என்ன கடைசில சம்சாரம் அது மின்சாரம் படத்துல வராப்புல " நான் இங்க இருந்து போறேன்.. அப்பப்ப உங்கள வந்து சந்திக்கிறேன்... சந்தோசங்கள பகிர்ந்துபோம்" னு அபி கதாபாத்திரம் சொல்லுறது ரொம்பவே பழைய பிட்டா இருக்கு னு பீல் பண்றேன்.....

இப்படி கதைய முடிக்கறதுக்கு ஆதி ஏன்தான் இம்புட்டு நாள் ஹி டெசிபெல்ல கத்தினாரோ... இன்னும் சுவாரசியமா முடிசுருக்கலாம்....

எது நடந்தா என்ன... முடிக்கிறாங்கலே அதுவே பெரிய சந்தோசம்... இனிமேல்ட்டு நிம்மதியா சேனல் மாத்துங்க அப்டின்னு அப்பா கூட சண்ட போடாம சூப்பர் சிங்கர் பாக்கலாம்...."ஐயம் வெரி ஹாப்பி ஜனங்களே.....!!! "


"ஐயம் வெரி ஹாப்பி ஜனங்களே.....!!! "


"ஐயம் வெரி ஹாப்பி ஜனங்களே.....!!! "


பதிவ படிச்சு மொக்கயானவங்களுக்கு ஒரு சின்ன குறுஞ்செய்தி

ஒரு சமயம் நியூட்டன் கிளாஸ் படிச்சுகிட்டு இருந்தாரு. அப்ப அவருக்கு வயசு 17 .படிச்சுகிட்டு இருக்கும்போது அவரு கால்ல ஒரு பாம்பு கொத்திருச்சு. அப்பவும் அவரு படிக்கிறத நிறுத்தாம தொடர்ந்து படிச்சுகிட்டே இருந்தாரு.இத பார்த்து ஆச்சிரிய பட்டுப்போன அவரோட டீச்சர் அவருகிட்டக கேக்குறாரு , அதுக்கு நியூட்டன் சொன்னாராம் " பாம்பு என் காலை தான் கொத்துச்சு மூளைய இல்லை. அதுனால எனக்கு கவனம் சிதறலைன்னு"
இதுக்கு நாம சொல்ற பேர் தான்"வெட்டி சீன் "


பி.கு: டிஸ்கி அப்டினா என்னனு யாராவது விலக்கி சொல்லவும்.

Wednesday, December 2, 2009

சார்மிங்க்கா இருக்கிறது எப்படி??!!!!
ஒரு சிலர எல்லாருக்கும் பிடிக்கும்... அவங்க எப்படி இருந்தாலும் ஏழையா,பணக்காரனா,அழகானவனா, சுமரானவனா இப்படி எப்படி இருந்தாலும் அவங்கள எல்லாருக்கும் பிடிக்கறதுக்கு காரணம் அவங்க கிட்ட உள்ள ஒரு விதமான காந்த சக்தி... சிலருக்கு இயற்கையாவே அது உண்டு நம்ம சூப்பர் ஸ்டார் மாதிரி... இன்னும் சிலர் தன்னோட செயல்களால அத கொண்டுவந்துருவாங்க...


அப்பிடி "Center Of Attraction" ஆகுறதுக்கு சில சாம்பிள் டிப்ஸ் இங்க

1. "நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் " னு பாரதியார் சொல்லிருக்குறது போல நடக்க ஆரம்பிங்க. அதுக்குன்னு வடிவேலு கணக்கா விரச்சுகிட்டு நடக்ககூடாது.

2 . முடிஞ்ச அளவுக்கு சிரிச்ச முகத்தோடவே இருக்க முயற்சி பண்ணுங்க. உம்முன்னு வச்சுக்க கூடாது. எதுவந்தாலும் சமாளிப்போம் னு முகத்துலயே தெரியனும் .

3 . ஒருத்தர சந்திக்கும்போது சின்ன தலை அசைப்போட சிரிங்க. கண்களை பார்த்து பேசனும். அதே சமயம் ஓவரா சிரிச்சு வச்சுடாதிங்க . அவரும் இதயே திருப்பி பண்ணனும் னு எதிர்பார்க்காதிங்க .

4 . நீங்க சந்திக்கிற எல்லா மனிதர்களையும் பெயரோட நினைவுல வச்சுகோங்க. பேச்ச தொடங்கும்போதும் முடிக்கும்போதும் பேர சொல்லுங்க. இப்படி சொல்றது மூலமா உங்களுக்கு பெயர் நினைவுல இருக்கதோட நீங்க பேசிகிட்டு இருக்குறவருக்கும் ஒரு சந்தோசம் கிடைக்கும் அதாவது உங்களுக்கு அவர பிடிச்சுருக்குதுன்னு .

5 . மனிதர்கள சந்திக்கிறதுல ஆர்வம் காட்டுங்க. நீங்க சந்திக்கிற எல்லாருகிட்டயும் பேச்சு கொடுங்க. பல சமயங்களுல அது உங்களுக்கு உதவி பண்ணும். அதுக்குன்னு தொன தொன பேசிகிட்டே இருக்கபடாது.

6 . இப்ப நீங்க ஒரு நண்பர்கள் கூட்டத்துல இருக்கீங்க அப்டினா அவங்களுக்கு என்ன பிடிக்குமோ அத பத்தி பேசனும். சும்மா உங்களுக்கு தெரியும் அப்டிங்கரதுகாக எதையாவது பேசக்கூடாது.

7 . யாரவது உங்ககிட்டக யாரைப்பதியாவது எதுனா பேசினா நீங்களும் நாலு பிட்ட சேத்து போடக்கூடாது. அவங்கள பத்தின நல்லா விசயங்கள மட்டும் தான் நாலு பேர்கிட்ட சொல்லணும். இப்படி நீங்க சொல்றது மூலமா எல்லாருகிட்டயும் நீங்க ரொம்ப நல்லவரு அப்டின்னு பெயர் வாங்கிடலாம் :)

8 . பொய் சொல்லாம இருக்கனும் . அப்டியே சொன்னாலும் அத எல்லாருகிட்டயும் மெயின்டைன் பண்ணனும். உதரணத்துக்கு ராணி கிட்ட எனக்கு கமலை பிடிக்கும் னு சொல்லிட்டு ராஜி கிட்ட எனக்கு கமலை பிடிக்காது னு சொன்னா ராணியும் ராஜியும் பேசிக்கும்போதும் உங்க குட்டு வெளிபடுரதுக்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கு. எதுக்கு இந்த ரிஸ்க் னு பொய் சொல்லாம இருக்க பழகிக்கோங்க.

9 . மனசார பாராட்டுங்க. ஒருத்தர் எதையாவது சிறப்பா செய்யும்போது உடனே வாய்விட்டு பாரட்டிடனும். கொஞ்சம் லேட் ஆனாலும் அது சின்ன பொறாமைய கிளப்பிவிட்டுரும்.

10 . அதே மாதிரி அடுத்தவங்க உங்கள பாராட்டினா வெறுமன நன்றியோட நிப்பாட்டிக்காம நீங்க இத கவனிச்சு சொல்றது எனக்கு ரொம்ப சந்தோசம் அப்படி இப்படி னு ரெண்டு வரி சேத்து சொல்லுங்க.

11 .உங்க குரல்ல உங்க சந்தோசம் தெரியனும். ஒருத்தர பாராட்டும்போது கத்தி பேசக்கூடாது. எதுலயும் ஒரு நிதானம் ஜென்டில்னஸ் இருக்கமாதிரி பாத்துக்கோங்க.

பி.கு: charishma அப்டிங்கறது உள்ள இருந்து வரணும். மேல சொல்லிருகறது எல்லாம் அத கொஞ்சம் பாலிஷ் பண்ற சமாச்சாரங்கள் தான்.

தயவு செஞ்சு அடுத்தவங்கள இமிடேட் பண்ணாதிங்க. உங்களுக்கு னு ஒரிஜினாலிட்டி இருக்கனும்.இதெல்லாம் என்னங்க பெரிய விஷயம் நடுவுல நாற்காலிய போட்டு சுத்தி பத்து பேர உட்காரவச்சா ஆடோமடிக்கா "Center of Attraction" ஆகிடலாம் னு மொக்க போடுறவங்க உங்க காமேன்ட்டுகள பின்னூடத்துல சொல்லிட்டு போங்க...

அப்டியே போற போக்குல ஓட்டையும் மறக்காம போட்டுடுங்க மகராசனுங்கலே!!!!
உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin