Thursday, November 18, 2010

இன்னைக்கு ரசிச்சது

ஹலோ மக்களே...
எல்லாரும் எப்படி இருக்கீங்க ?? (பதிவ படிக்கிறது நாலு பேரு , இதுல எல்லாரும் எப்படி இருக்கீங்க ன்னு கேள்வி வேரயான்னு யாரும் திட்டக்கூடாது ....!!!)

கடைய அஃபிசியலா தொறக்குறேன் ன்னு அக்டோபர்ல ஒரு பதிவு போட்டேன்... இதெல்லாம் பதிவு எழுதினா என்ன ஆவுறது ன்னு என் லேப்டாப் டர்ர் ஆகிருச்சு போல.... OS அ மாத்துறேன்னு கையவச்சுகிட்டு சும்மா இல்லாம என்னத்தையோ டெலீட் பண்ணிவிட்டுடேன்... அது என்ன கண்றாவியோ தெரில...

என் லேப்டாப் அ மீட்டு கொண்டுவறதுக்கு ஒன்ற மாசம் ஆகிருச்சு :( சேட்டு கடைல இருந்து மீட்டுட்டு வந்தேன் ன்னு யாரும் நினச்சுரலயே??!!! ....

சரி ஒரு வழியா லேப்டாப் வந்தாச்சு என்னத்தயாவது(??!!!) எழுதலாம் னா எதபத்தி எழுதுறதுன்னு ஒரே கண்ப்யுஷன் .... இம்புட்டு நாளா இதெல்லாம் யோசிச்சியாக்கும் நீங்க கேக்க வர கேள்வி நியாயம் தான்... பட் அதாங்க உண்மை...

படத்த பத்தி எழுதலாம்னா ஒரு படம் பார்க்ககூட நேரம் இல்ல... :( அதுக்குன்னு அம்புட்டு உழைக்குரேன் ன்னு தப்பா எடுதுக்கவேணாம்... தியேட்டர் போய் பார்க்கவோ டவுன்லோட் செய்யவோ நேரம் பொது அறிவு சொல்ல வந்தேன்...

ஆனாலும் தமிழ் படங்கள் மட்டும் பாக்குறேன், பார்பேன்... தமிழ் படத்துக்கு எழுதுறதுக்கு நெறைய நெறைய நல்ல விமர்சர்கள் இருக்கதுனால நான் அந்த பக்கம் போவல...

பொது அறிவு , செய்தி இதபத்திலாம் எழுதலாம்னா மொதல்ல நமக்கு அத பத்தி கொஞ்சநாச்சும் தெரிஞ்சுருக்கனும் ..... உம்ம்மம்ஹ்ம்ம்.... சுத்தமா பூஜ்யம் தான் ....

கதை கிதை எழுதலாம்னா இதெல்லாம் ஒரு கதையான்னு யாருனாச்சும் கேட்டுட்டா என்ன பண்றதுன்னு யோசனையாவே இருக்கு....

அட்லீஸ்ட் கவித??!! ஏற்கனவே நா எழுதின இத கவித இல்ல கவித மாதிரி பதிவ படிச்சவங்க மீண்டும் இந்த வலைபூவுக்கு வந்ததா எந்த சுவடையும் காணோம் ...

ரைட்டு எல்லாத்தையும் சேத்து ஒரு கலவையா எழுதலாம்னா சரியான "தலைப்பு" சிக்கல....

நீங்களே சொல்லுங்க.. அடுத்து நா எதபத்தி எழுதலாம்ன்னு ....


இன்னைக்கு ரசிச்சது :

இத பாத்ததும் ஒரே யோசனை... பத்து மாசம் பிள்ளை என்னலாம் பண்ணும்ன்னு... அறிவியல் பூர்வமா தெரிஞ்சாலும்(??!!!!!!) கற்பனைக்கு அளவு இல்லைல...
என்ன வேணாம் பண்ணலாம்....

பதிவு பிடிச்சுருந்தா பின்னூட்டமும் ஓட்டும் போடுங்க மகா ஜனங்களே........
Sunday, November 14, 2010

படத்த நல்லா பாருங்க பா......

ஹலோ மக்களே...


நான் பன்னெண்டாவதுக்கு அப்புறம் கிராப் வரையற வேலைய விட்டுடேன்... ஆனா இன்னைக்கு காத்தால என் நண்பி(நண்பனுக்கு பெண் பால் ஆக்கும் !!!!) அனுப்பின இந்த கிராப் அ பாருங்களேன்.... உக்காந்து யோசிப்பாயுங்க போல .....


1) இது வழக்கமா எல்லாரும் பண்றது தான்..... நீங்க எப்டியோ தெரில ஆனா நா இப்படி தான்... ஒழுங்கா எதையாச்சும் படிச்சுருந்தா ஒரு வேலை மிஸ்கின் சொன்னாப்ல நா கூட டாரடக்கரா போய் இருப்பேனோ என்னவோ.... ப்ரீயா விடுங்க....

௨) இப்ப பாப் சாங் ன்னு இல்ல ... எல்லாம் இப்படி தான்thaan போவுது..... ஆ வூ ன்னு எதோ கத்தினாதான் பாட்டு nnu ஆகிருச்சு....


3) இது பிரட் சாப்பிடுரவைங்களுக்கு ... எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல ... ( குக்கர் ல ஆவி போறவரைக்கும் விசில் லயே பாக்குற கேசு நானு ;) )

4) நம்ம எல்லாரும் இத தான்பிடிச்சுருந்தா
பண்ணிட்டு இருக்கோம் இப்ப...


) நமக்கு ன்னு வரப்ப கையும் ஓடாது காலும் ஓடாது ... ஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்
௬) இந்த தீர்வ மொதல்ல பண்ணினவன் யாரு ன்னு உங்களுக்கு யாருக்காச்சும் தெரியுமாங்க??!!!என்ன எல்லா படத்தையும் பாத்தீங்களா?? கடைசி படம் தான் என்னோட ப்பேவரைட்... உங்களுக்கு எதுனாச்சு பிடிச்சுருந்தா கமெண்ட் போடுங்க இல்லைனா அடுத்த பதிவுக்கு காத்திருங்கோ !!!

வரட்டா........Sunday, August 15, 2010

பெயர் அளவில் செல்ல பிராணிகள்...வணக்கம் மக்களே ..

உங்கள் ல எத்தன பேர் வீட்ல செல்ல பிராணி வளர்க்குறீங்க??!!
அந்த ஜீவன வாக்கிங் கூட்டிட்டு போற பழக்கம் இருக்கா??...
எனக்கு சமயத்துல இப்படி வாக்கிங் கூட்டிட்டு போற அனிமல்ஸ் அ பாத்த பாவமா இருக்கும்..

தொப்ப கொரயனும்ன்னு மனுஷங்க நடக்குறாங்க.. நாய் க்கு என்ன வந்துச்சு....
இவரு நடக்குறதுக்காக காலங்காத்தால அந்த நாயையும் எழுப்பி விட்டு மாங்கு மாங்கு ன்னு நடக்க விடறபாத்த ஏன் இப்படி ன்னு கூட தோணும்...

அதுவும் சும்மா கூட்டிட்டு போவ மாட்டாங்க.. அதுக்கு கழுத்துல ஒரு பெல்ட் அதோட செயின் இவர் கைல !!
கூட்டிட்டு போறவங்க எந்த வழி ல போறாங்களோ அதே வழில வேற சாய்சே
இல்லாம போவனும்...
காலாற நடக்க கூட முடியாது... கூட்டிட்டு போறவங்க வேகமா நடந்தா அதுவும் வேகமா நடக்கணும்..
மெல்லாம நடந்தா அதும் மெல்லாம நடக்கணும்....

நீங்க வேணா யாருகிட்டயாச்சும் கேட்டு பாருங்களேன் "ஏன்யா பெல்ட் கட்டி நாய வாக்கிங் கூட்டிட்டு போற" ன்னு ...
அப்படி கூட்டிட்டு போவலன்னா அது எங்கனயாச்சும் ஓடிடும்ன்னு சொல்லுவாங்க...
தொப்ப கொறைய சரி சரி ஒடம்ப மெயின்டைன் பண்ண தானே வாக்கிங் போறாப்புல ..
அந்த ஜீவன கொஞ்ச தூரம் ஓட விட்டு பிடிகட்டுமே.. நாயும் சுதந்திரமா சுத்துன மாதிரி இருக்கும் இவரும் நல்லா ஓடி வேர்வ சிந்தட்டும்,..
என்ன நான் சொல்றது??!! இத சொன்னா நம்மள லூசுன்னுவாங்க...


பேர் தான் செல்ல பிராணி... அந்த பிராணிட்ட கேட்டாத்தான் இவங்க கூட அது என்ன பாடு படுதுன்னு தெரியும்..
(நாய் கூட இவ்ளோ பீல் பண்ணிருக்காது ன்னு நீங்க சொல்றது கேக்குது!!! )

எதுக்கு இந்த வெட்டி பேச்சு... நம்ம ஊர்லனாச்சும் நாய்க்கு தான் இந்த நிலைமை...


இந்த கொடுமைய எங்க போய் சொல்லுவீங்க??
நம்ம ஊர்ல இந்த நிலைமை இன்னும் வரல ன்னு சந்தோஷ பட்டுக்க வேண்டியதுதான்... வேற என்ன செய்றது...


குழந்தை நா அங்க இங்க ஓட தான் செய்யும்.. இப்ப ஓடாம எப்ப ஓடறது..
குழந்தைய அது இஷ்டத்துக்கு இருக்க விடாம இப்படி கயத்த கட்டிவிட்றாங்க..
கேட்டா டெக்னாலஜி ன்னு சொல்லுவாங்க.. அப்படி இல்லைன கிருஷ்ண பகவானையே அவங்க அம்மா இப்படி தான் கட்டி வச்சுருந்தாங்க ன்னு சொல்லுவாங்க...என்ன சொல்லுங்க மக்களுக்கு எல்லாத்துக்கும் ஒரு காரணம் ரொம்ப சுலபமா கெடச்சுடுது...

Friday, August 13, 2010

ஹலோ மக்களே...!!!


ஹலோ மக்களே...!!!

எல்லாரும் எப்பிடி இருக்கீங்க?? ரொம்ப நாள் சாரி சாரி ரொம்ப மாசம் ஆச்சு கடைப்பக்கம் வந்தே.... இடைல மூணு நாலு பேர் விசாரிச்சாங்க ஒன்னும் எழுதக்கானோமேன்னு.. பழைய பதிவுகள படிச்சுட்டும் இப்ப்டிக்கேக்குறாங்களேன்னு தான் நம்ப முடியல..!! ஆவ்வ்வ்வவ்..... ;(

இடைப்பட்ட ஏழு மாசத்துல பதிவுலகத்துல நெறைய விஷயங்கள் நடந்து போச்சு போல...
"தமிலிஷ்" "இன்டலி" ன்னு மாறிருச்சு.. இன்னும் நெறைய திரட்டிகள் வந்துருக்கு போல.. ஒரு வெவரமும் தெரில... கொஞ்சம் அப்டேட் பண்ணுங்க பா....

ஒன்னும் எழுததான் செய்யலையே தவிர உங்க எல்லார் பதிவையும் படிச்சுட்டு தான் இருக்கேன் கூகுள் ரீடர் ல (ஆபீஸ் ல அது மட்டும் தான் பா வருது !!! :( ) பதிவ படிச்சாலும் பின்னூட்டம் கூட போட வரல ...
என்ன கொடும சரவணன் இது!!!

நாலஞ்சு பேர் பின்தொடர வேற ஆரம்பிச்சுருக்காங்க... எந்த நம்பிக்கைல அவங்கலாம் இப்படி பண்றாங்க ன்னு தெரியல... ஒரு வேலை நா எதாச்சும் உருப்படியா எழுதுவேன்னு அவங்களுக்கு மனசுல எதோ ஒரே ஓரத்துல சின்னதா ஒரு எண்ணம் இருக்கும் போல.... (இவங்களுக்குகாகவாச்சு எதாச்சும் நல்லதா எழுதணும் பாஸ்)

என்னால அப்படி நினைக்க மட்டும் தான் முடியும்... இதுக்கு முன்னாடி என்னத்த எழுதி கிழிச்சேனோ அத தான் இனிமேல்ட்டும் பண்ணுவேன்... ஒரு நாலு பேராச்சும் படிப்பாங்க அப்டின்ற நம்பிக்க தான்.. திரட்டிகள் இருக்க பயமேன்!!!!

இன்னைல இருந்து என் கடைய அதிகார்வபூர்வமா மறுபடியும் தொறக்குறேன்...!!!!
எல்லாரும் வாங்க வாங்க வாங்க.....
உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin