Wednesday, December 23, 2009

உங்களுக்கு சாண்ட்டா கிளாஸ்ஸ பிடிக்குமா ??!!!



உங்களுக்கு சாண்ட்டா கிளாஸ்ஸ பிடிக்குமா ??!!!

"சாண்ட்டா கிளாஸ்" இப்பிடி ஒருத்தர் நிஜமாலுமே இருக்காரா?? சின்ன பிள்ளையா இருந்ததுல இருந்து இந்த சந்தேகம் எனக்கு உண்டு...


எவ்ளோ அழகா பப்லியா அந்த கதாபாத்திரத்த உருவாக்கி இருக்காங்க... பாத்தவுடனே ப்ரேன்ட்லியா தோனுற மாதிரி ஒரு உருவம், அவருக்குன்னு ஒரு தனி விதமான வாகனம், செவப்பு டிரஸ் , செவப்பு குல்லா, வெள்ளந்தியான சிரிப்பு இப்பிடினுலாம்...
அப்பிடி யாரையும் இதுவரைக்கும் பாக்கலைனாலும் எனக்கு என்னவோ அந்த முகம் தெரியாத கதாபாத்திரம் மேல ஈர்ப்பு இருக்கத்தான் செய்யுது...



எனக்கு வெவரம் தெரிஞ்ச வயசுல நாங்க இருந்த காலனி முழுக்க சின்ன பசங்களா தான் இருந்தோம்.. அப்பலாம் கிறிஸ்துமஸ் அப்பிடினா ரொம்ப கொண்டாட்டமா இருக்கும்...
காலனில உள்ள யாராவது ஒரு அண்ணனோ அங்கில்லோ கிறிஸ்துமஸ் தாத்தா
( சாண்ட்டா கிளாஸ்ன்னு சொல்லறத விட தாத்தான்னு சொன்னாதான் ஒரு ஒட்டுதல் கிடைக்குது என்ன செய்ய ???!!!) வேஷம் போட்டுக்கிட்டு அங்க உள்ள எல்லாருக்கும் ஏதாவது பரிசு கொடுப்பாங்க...



சின்னதோ பெருசோ, மிட்டாயோ பொம்மையோ எது பரிசா கிடைச்சாலும் அவ்ளோ சந்தோசமா இருக்கும்.. என்னதான் வீட்ல உள்ளவங்க பாத்து பாத்து நமக்கு எல்லாம் வாங்கிகொடுத்தாலும் நம்ம எதிர் பாக்காத ஒரு நேரத்துல யாரோ பரிசு கொடுக்கும்போது ஒரு தனி சந்தோசம் இருக்கத்தான் செஞ்சது!! நம்ம ப்ரெண்டுக்கு கொடுத்த பொம்ம நம்மழுத விட அழகா இருக்குன்னு நினைச்சப்போ லேசா பொறமை எட்டிபாக்கும் அப்புறம் வீட்டுல அழுது அடம்பிடிச்சு எனக்கும் அதே மாதிரி பொம்ம வாங்கினது தனிகதை....!!!

அதுக்கு அப்புறம் வேற ஊர் வேற ஸ்கூல்ன்னு என்னோட கிறிஸ்துமஸ் மாறிபோச்சு.. நான் படிச்ச கிறிஸ்டியன் ஸ்கூல்ல இயேசு பிறந்த அந்த மாட்டு தொழுவம் செட்ட போட்டு இயேசு எப்பிடி பொறந்தாரு, என்னலாம் சொன்னாரு எப்பிடி அவர சிலுவைல அரஞ்சாங்க அப்டினுலாம் ஒரே கதைய வருஷா வருஷம் வேற வேற பிள்ளைங்க நடிச்சு காமிப்பாங்க... அப்புறம் ஏதாவது ஒரு அக்கா கிறிஸ்துமஸ் தாத்தா வேஷம் போட்டுக்கிட்டு "ஜின்கிள் பெல்ஸ் ஜின்கிள் பெல்ஸ்" ன்னு பாடிகிட்டே மிட்டாய் கொடுப்பாங்க...



அப்புறம் காலேஜ்ல கிறிஸ்துமஸ்க்கு லீவ் கூட விட்டது கிடையாது.... எதோ போன போவட்டும்ன்னு கிறிஸ்டியன் பொண்ணுங்க பசங்களுக்கு மட்டும் "OD" கொடுப்பாங்க... கிறிஸ்துமஸ் கேக்ன்னு அவங்க கொடுக்குற தம்மாதுண்டு பீஸ்க்கு கிளாஸ் மொத்தமும் சண்டைபோட்டு ஆளுக்கு ஒரு வாய் கிடைச்சாலும் அந்த கேக்கோட டேஸ்ட் ச்ச சான்சே இல்ல போங்க!!!!


எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ வந்துட்டேன்ல... அதாங்க என் பிரெச்சனை..
இந்த பதிவ போடுறதுக்கு ஒரு காரணம்... எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாவனும்!!

உண்மைலயே சாண்ட்டா கிளாஸ்ன்னு ஒருத்தர் இருகாப்புலய??!! அப்பிடி இருந்து அவரு எங்க இருப்பாரு??... கிறிஸ்டியன்ஸ்க்கு மட்டும் பரிசு கொடுப்பாரா??? இப்பிடி பரிசு கொடுகுறதுக்காகவே வேற ஏதாவது கதாபாத்திரம் இருக்கா உலகத்துல???!!

மேல உள்ள எல்லா கேள்விக்கும் இல்லைங்கறது பதிலா இருந்தாலும் சாண்ட்டா கிளாஸ்ஸ எனக்கு ரொம்ப பிடிக்கத்தான் செய்யுது...



இத படிச்சு ஓட்டு போடுற எல்லாருக்கும் இன்னைக்கு யாராவது சாண்ட்டா கிளாஸ் மாதிரி ஏதாவது பரிசு கொடுப்பாங்க...!! :)

என்ன இந்த பொண்ணு கிறிஸ்துமஸ்ஸ பத்தி பேசாம சாண்ட்டா கிளாஸ்ஸ பத்தியே பேசிருக்கு அப்டின்னு லாம் யோசிக்காதிங்க.... எனக்கு எது பிடிக்குதோ அவங்கள பத்தி தான் பேசமுடியும்.....

எல்லாருக்கும் என்னோட கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள் !!!!

Tuesday, December 22, 2009

நச் கமென்ட்டர் அவார்ட் விண்ணர்கள்!!

அவார்ட் கொடுக்குறதுன்னு முடிவாகிப்போச்சு... யாருக்குக் கொடுக்குறதுனு தான் ஒரே கொழப்பமா இருக்கு...
எதிர்பாத்த படியே நாலு பேருக்கு ஒருத்தர் வேட்டைக்காரண பத்தி எழுதிருக்காங்க...

எல்லா கம்மன்ட்டையும் படிச்சு பாத்ததுல இப்ப சொல்ர்ரவாங்களுக்குலாம் அவார்ட் கொடுக்குறத கமிட்டீல முடிவு பண்ணிருக்கோம்...

அவார்ட் கொடுக்குற என் வேலை முடிஞ்சுச்சு.... எல்லாரும் இந்த அவார்ட ஏத்துக்கோங்க பா....
அவார்ட் வின்னர்ஸ் எல்லாருக்கும் எனது வாழ்த்துக்கள்... வழக்கம் போல இந்த அவார்டையும் எல்லாருக்கும் பகிர்ந்துகொடுங்க அப்பிடின்னு அன்போட கேட்டுக்குறேன்....

ஸ்ரீராம். கம்மென்ட்டினது

"நான் அழுதா தாங்க மாட்டே...இவன் அழுதா தூங்க மாட்டே..."

உங்களில் ஒருவன்... கம்மென்ட்டினது

"வேட்டைக்காரன் பார்க்க போக வேண்டாம் வேண்டாம்னு சொன்னேன்...கேட்டியா பாவி பயலே....இப்போ இப்படி திடீர் திடீருன்னு அழுது என்னயுமில்ல பயமுறுத்தி அழ வைக்கிற...."

உருப்புடாதது_அணிமா கம்மென்ட்டினது

"எவ்ளோ சொல்லியும் எதுக்கு எங்களை வேட்டைக்காரன் படம் பார்க்க தியேட்டருக்கு கூட்டிக்கிட்டு வந்தீங்க???"

ஜீவன் கம்மென்ட்டினது

"எனக்கு நச் கமண்டர் அவார்ட் கொடுக்காட்டி நானும் இப்படித்தான் அழுவேன்...!"

க‌ரிச‌ல்கார‌ன் கம்மென்ட்டினது

"அவ்ளோ தாண்டா ம்பி டாக்டர் ஊசி போட்டு முடிச்சுட்டாரு
அழுகாதே நீ அழுகபாத்து அண்னணுக்கும் அழுகையா ருது"

Romeoboy கம்மென்ட்டினது

"இந்த மொக்கை பதிவுக்கு எங்கள போஸ் குடுக்க சொல்லுறிங்களே .."

கிருபாநந்தினி கம்மென்ட்டினது

“யம்மா... இவன் நான் அழுவுற மாதிரியே அழுது காட்டி என்னைப் பழிக்கிறான்..!”



அவங்க எல்லாரும் கம்மென்ட்டினது இந்த படத்த பாத்துதான்.....



அவார்ட் வாங்காதா எல்லாரும் பீல் பண்ணாதிங்க... அடுத்த அவார்ட் உங்களுக்கு கிடைக்கலாம்!!!

அன்புடன்,
ரசிக்கும் சீமாட்டி :)

Monday, December 21, 2009

ஜஸ்ட் லைக் ஹெவன் - ரொமாண்டிக் படம்



ரீஸ் விதேர்ஸ்பூன் தான் இந்த படத்தோட கதாநாயகி. என்னமோ தெரியல இவங்கள எனக்கு பாத்த உடனே பிடிச்சுபோச்சு. இவங்க நடிச்ச படங்களா தேடி பிடிச்சு பாத்தகாலம் உண்டு.



அப்படி நான் பாத்ததுல முதல் படம் தான் "ஜஸ்ட் லைக் ஹெவென்".



இந்த படத்தோட கதைன்னு பாத்தாக்க ஹீரோயின் ஒரு டாக்டர். சதா சர்வ காலமும் கடமையே கண்ணா இருக்குறவங்க. வேலை முடிஞ்சு ஒரு நாள் அவங்க ப்ளைண்ட் டேட்ட பாக்க போற சமயத்துல எதிர்பாராத விதமா ஒரு விபத்துல மாட்டிக்கிறாங்க.


அப்டியே கட் பண்ணி அடுத்த சீன். மூணு மாசம் கழிச்சுன்னு போடுறாங்க. ஒருத்தர் வீடு தேடி அலைஞ்சுட்டு இருக்காரு. இவரு தான் ஹீரோன்னு சொல்லவும் வேணுவா??!! மார்க் ருபல்லோ அப்டின்னு ஒருத்தர். பாத்தவுடனே பிடிக்குற டைப் இல்ல. பட் இந்த படத்துல அந்த கதாபாத்திரத்த நல்லா செஞ்சுருக்காரு.

சரி கதைக்கு வருவோம். அப்படி வீடு தேடி வரவரு நம்ம ஹீரோயின் இருந்த வீட்டுல குடியிருக்க நேரிடுது. அங்க திடீர்னு ஹீரோயின் இவரு முன்னாடி வந்து நின்னு கண்டபடி திட்டுறாங்க. இது என் வீடு யார கேட்டு நீ வந்த?? ஏன் பொருள எல்லாம் எடம் மாத்தி மாத்தி வச்சுருக்க அப்பிடினுலாம். கொஞ்ச நேரம் ஹீரோவுக்கு ஒன்னுமே புரியாம குழம்பிபோய் நிக்கிறாரு.

அந்த பொண்ணு சாதாரண பொண்ணா தெரியல. திடீர் திடீர் ன்னு வருது போவுது. செவத்துலலாம் நடக்குது.பாத்து பயங்கரமா டெரர் ஆவுற நம்ம ஹீரோ அவரு நண்பர் ஒருத்தர் கிட்ட போய் கேக்குறாரு ஏன் இப்பிடிலாம் நடக்குதுன்னு. அது பேய் இல்ல ஒரு பொண்ணோட ஆன்மா அப்பிடின்னு சொல்ற நண்பர் அவ உன் கண்ணுக்கு மட்டும் தான் தெரியுறா அதுனால அவளுக்கு என்ன வேணும்ன்னு நீ தான் கேக்கணும் லாம் சொல்றாரு.



கொஞ்ச கொஞ்சமா அந்த பொண்ணுகிட்ட பேசி அவ யாரு என்னன்னுலாம் தெரிஞ்சுக்க முயற்சி பண்றாரு. பழசு எதுவும் ஞாபகம் வராத அந்த பொண்ணு கொஞ்சம் லேட்டா தான் தெரியுது இது வெறும் ஆன்மா மட்டும் தான் அப்பிடின்னு.

உயிரை கைல பிடிச்சுகிட்டு அப்பிடின்னு சொல்லுவாங்கல்ல அந்த மாதிரி அடி பட்டு எப்பிடியும் பொழச்சுடனும் ன்னு ஒரு நம்பிக்கைல ஹீரோயினோட உடம்பு ஹாஸ்பிட்டல்ல இருக்கும். இந்த ஹீரோ என்ன பண்ணாரு அந்த பொண்ண பொழைக்க வச்சாரா அப்பிடிலாம் யோசிக்கறவங்களுக்கு அவரு அந்த பொண்ண ரிஸ்க் எடுத்து பொழைக்க வச்சுடுவாறு. ஆனா பொழைக்குற அந்த பொண்ணுக்கு தான் இவரு மறந்து போயிரும் நம்ம மூன்றாம் பிறை ஸ்ரீதேவி மாதிரி. அப்புறம் என்ன ஆச்சுன்னு டிவிடியோ டோற்றேன்ட்டோ கெடச்சா பாருங்க.

அந்த பொண்ணு அவருக்கு மட்டும் தெரியுரதுக்கு காரணம் அவரு தான் அந்த பொண்ணு சந்திக்க போறதா இருந்த ப்ளைண்ட் டேட்.!!!!


அப்பறம் படத்தோட டெக்னிகல் ஆஸ்பெக்ட்லாம் பேசுறா அளவுக்கு எனக்கு அறிவு பத்தாது. ஸோ விட்டுடேன்.இந்த படம் முழுக்க அவங்க ஒரே காஸ்ட்யும்ல தான் வருவாங்க ஆனா அது போர் அடிக்கல. சில இடங்கள்ல வசனம் நல்லா இருந்துச்சு உதாரணத்துக்கு ஹீரோவும் ஹீரோயினும் படுக்கைல கைகோர்த்துபேசுற காட்சி அப்புறம் கடைசி சீன் இப்படி சில.


மொத்ததுல இது ஒரு ரொமாண்டிக்கான படம். அந்த வகை படங்கள் பிடிக்கும்னா தாராளமா பாருங்க. அப்டியே போறபோக்குல ஒரு ஓட்டையும் போட்டுட்டு போங்க மக்களே!!!

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location