Saturday, September 19, 2009

உங்களுக்கு சில பொதுவான விஷயங்கள்....

1.உங்க கிட்ட எதிர்பாக்குரத விட அதிகமா பண்ணுங்க... சந்தோஷமா பண்ணுங்க.

2.உங்களுக்கு பேச பிடிச்சுருக்கவங்கள கல்யாணம் பண்ணிகோங்க. உங்களுக்கு வயசானப்புறம் அந்த பேச்சு தான் உங்களுக்கு தெம்ப கொடுக்கும்.

3.கேக்குறது எல்லாத்தையும் நம்பாதிங்க, இருக்கிறது எல்லாத்தையும் செலவளிக்காதிங்க, நினைக்குறப்பலாம் தூங்காதிங்க.

4."ஐ லவ் யூ" சொன்னா உணர்ந்து சொல்லுங்க.

5."ஐ யம் சாரி" னு சொல்றப்ப கண்ண பாத்து சொல்லுங்க.

6.கல்யாணத்துக்கு ஒரு ஆறு மாசம் முன்னாடியே உங்க பார்ட்னெர் கூட பேசுங்க.

7.கண்டதும் காதல் ல நம்பிக்கை வைங்க.

8.யாரு கனவையும் பாத்து சிரிக்காதிங்க. ஏன்னா கனவு காணதவங்க எதையும் பண்ண மாட்டாங்க.

9.முழுசா விரும்பி காதலிங்க. வாழ்கைய முழுசா வாழ அது தான் பெஸ்ட்.

10.யாரையும் அவங்க உறவினர்கள வச்சு ஜட்ஜ் பண்ணாதிங்க.

11.பொதுவா பேசுங்க ஆனா சீக்கிரமா சிந்தியுங்கள்.

12.உங்களுக்கு பதில் சொல்ல பிடிக்காத கேள்விய யாரவது கேட்டா
"நீங்க எதுக்கு அத தெரிஞ்சுக்க பிரியப்படுறிங்க?" னு சிரிப்பு மாறாம கேளுங்க.

13.யாராச்சும் தும்மினாலோ இருமினாலோ " bless you" னு சொல்லுங்க.

14.தோற்று போகும்போது தோல்வி கத்து கொடுத்த பாடத்த மறந்துடாதிங்க.

16.எப்பவும் மூன்று விஷயங்கள் மனசுல வச்சுகோங்க
சுய மரியாதை
பிறருக்கான மரியாதை
தன் செயலுக்கான பொறுப்பு.

17.சின்ன விஷயங்கள் நட்பை பாதிக்காம பாத்துகோங்க.

18.எப்பயாச்சும் நீங்க தப்பு பண்ணிட்டிங்க னு தோன்றினால் உடனே அத சரி செய்வதற்கான வழிகளில் ஈடுபடுங்க.

19.தொலைபேசியில் பேசும்போது சிரிங்க. உங்கள் சிரிப்பு மறுமுனையில் இருப்பவருக்கு உற்சாகத்தை கொடுக்கும்.

20.தனியாவும் கொஞ்சம் நேரம் இருந்து பாருங்க.


என்னடா பொதுவான விஷயங்கள் னு சொல்லிட்டு இப்படி கருத்தா சொல்லிட்டேனே னு பாக்குறிங்களா.... என்ன பண்றது தலைப்புக்கும் பதிவுக்கும் எப்படி யோசிச்சாலும் சம்பந்தம் இருக்கவே மாட்டேங்குது என்னோட பதிவுகளுக்கு மட்டும்!!!


ஹலோ.. யாரவது நான் சொல்லாம விட்ட 15 வது பாயின்ட்ட கவனிச்சிங்களா ??
இந்த பதிவ படிச்சதே பெரிய விஷயம்னு சொல்லவரிங்களா... ரைட்டு விடுங்க...!!

இது கவிதை இல்ல.... கவிதை மாதிரி....

இந்த பதிவுக்கு என்ன பெயர் வைக்கலாம் னு ரொம்ப நேர யோசைனைக்கு பின்னாடி இந்த தலைப்ப வச்சுருக்கேன்...

பொதுவா எல்லா பதிவர்களும் கவிதை எழுதுறாங்க , அட்லீஸ்ட் கவிதை முயற்சினாச்சும் எதையாச்சும் எழுதுறாங்க... நமக்கு தான் இந்த கற்பனை சக்தி லாம் இல்ல போல னு பல நாள் வருத்தபட்டுருக்கேன்(!!!)...

உக்காந்து உக்காந்து யோசிச்சாலும் அடுத்து என்ன பதிவு போடலாம் னு முடிவு பண்ண முழுசா மூணு நாள் ஆகிடும் எனக்கு.. ஆனா பாருங்க நேத்து ராத்திரி தீடிர்னு எதோ வார்த்தைல யோசிச்ச மனசு அங்கயே சுத்திசுத்தி வருது... அட இது என்ன என்னமோ கவித தோனுற மாதிரில சிம்ப்டம்ஸ் லா இருக்கு னு நானும் அடம் பிடிச்சு அந்த வார்த்தயயே முன்னாடி பின்னாடி மாத்தி மாத்தி போட்டு எப்பிடியோ நாலு வரிக்கு கவித ரேஞ்க்கு கொண்டுவந்துடோம் ல...

அந்த கொடுமைய உங்களுக்கும் சொல்றேன்...
படிச்சுட்டு கவிதையா இல்ல கவித மாதிரி னு நா போட்டுருக்க தலைப்புக்கு சரியா இருக்க னு சொல்லிட்டு போங்க...

உன்னுடனான என் நிமிடங்கள்
வாழ்கையின் சுவையை கூட்டுங்கின்றன
அண்டா பாயசத்தில் ஆங்காங்கே
மிதக்கும் முந்திரி போன்று.....

என்னடா இப்டி திங்கருதுலயே நம்ம கற்பனை குதுர நின்னிருச்சேனு மண்டைய இன்னும் கொஞ்சம் காயவச்சு யோசிச்சப்ப தோணுனது....





உன்னுடனான என் நிமிடங்கள்
வாழ்கையின் சுவையை கூட்டுங்கின்றன
பிரியாணியில் போடப்படும்
பிரிஞ்சி இலை போன்று....

சுவை னு ரெண்டாவது வரில போட்டுடனாலயோ என்னவோ அடுத்த ரெண்டு வரியும் கிட்ச்சென விட்டு தாண்டவே இல்ல....

ஸ்ஸ்ஸப்பா... ஒரு வழியா நாமளும் கவிதைங்கற பேர்ல ஒரு பதிவ போட்டாச்சு...!!!


பி.கு:

படங்கள் கூகிள் உபயம்.

Friday, September 18, 2009

சின்ன கற்பனை கதை....


நியூட்டன் கண்ணாமூச்சி ஆடினா என்ன பண்ணிருப்பாரு..

ஒரு நாள் எல்லா சைண்டிஸ்டும் கண்ணாமூச்சி விளையாடலாம் னு முடிவு பண்ணாங்க.

அவங்க நாக்க மூக்க போட்டு பாத்ததுல அயின்ஸ்டீன் தான் முதல்ல கண்ண கட்டணும். அவரு கண்ண மூடிட்டு 100 வரைக்கும் எண்ண ஆரம்பிச்சாரு.

நியூட்டனா தவற , எல்லாரும் ஆளுக்கு ஒரு பக்கமா போய் ஒளிஞ்சுகிட்டாங்க.

நியூட்டன் மட்டும் ஒரு மீட்டர் அளவுக்கு தன்ன சுத்தி சதுரம் வரைஞ்சுட்டு அயின்ஸ்டீன் க்கு முன்னாடியே நின்னுட்டாரு.

1,2,3....97,98,99,100 னு எண்ணி முடிச்ச கண்ண தொறந்து பாத்த அயின்ஸ்டீன், எதுதாப்புலயே நியூட்டன் நிக்கறத பாத்துட்டு "நியூட்டன் அவுட் அவுட்" னு குஷியாகிட்டாரு.

அசராம நின்ன நியூட்டன் " நா அவுட் இல்ல... நா நியூட்டனே இல்ல " னு சாதிச்சாறு.

இத பாத்து குழப்பமான எல்லா சைண்டிஸ்டும் இவரு எண்ண சொல்லவராறு னு பாக்க வந்தாங்க.

அப்ப நியூட்டன் சொன்னராம் " நா ஒரு மீட்டர் சதுர ஏரியா இருக்கேன்..... அதாவது நியூட்டன் பெர் மீட்டர் ஸ்கொயர்...

நியூட்டன் பெர் மீட்டர் ஸ்கொயர் = ஒன் பாஸ்கல் , சோ நான் பாஸ்கல் , இப்ப சொல்லுங்க பாஸ்கல் தானே அவுட் ??!!"

எல்லா சைண்டிஸ்டும் இப்டி தான் உங்கள மாதிரியே தலைல கைய வச்சுட்டு உக்கந்துட்டாங்க!!!

ஹா... வாழ்க்கைல இது மாதிரியே எப்பவும் சிரிச்சுகிட்டே இருங்க.... நம்ம சிரிப்பு தான் மத்தவங்க மனசுல நம்ம அடையாளமா இருக்கும்...( இது சொந்த தத்துவம் பா ... அட நம்புங்க !!)

[ரசிக்கவேண்டிய படம்] Enchanted - நிஜமும் கற்பனையும் கலந்தா இப்டி தான் இருக்கும்


நீங்க எப்பவாச்சும் யோசிச்சு பாத்துருக்கிங்களா கார்டூன் கதாப்பாத்திரம் லாம் நிகழ்காலத்துக்கு வந்தா எப்டி இருக்கும் னு?? அப்டி ஒரு கார்டூன் ஹீரோயின் உலகத்துக்கு வந்து நிஜ கதாநாயகன கை பிடிக்கிற கதை தான் "Enchanted".


ஜிசேல் ( Amy Adams ) கார்ட்டூன் உலகமான ஆண்டலேசியாவுள்ள வாழுகிற பொண்ணு. அது ஒரு டிபிகல் பாண்டஸி உலகம். அங்க மிருகங்கள் பேசும், எல்லாத்துக்கும் இசை இருக்கும். அங்க வாழுற ஜிசேல் தன்னோட காதலன் எப்டிலாம் இருக்கனும் னு தன்னோட நண்பர்களான பிப் ங்கற சிப்மங் கிட்டயும் மத்த காட்டு விலங்குகள் கிட்டயும் பாட்டுலயே சொல்லுரா... அந்த பாட்ட கேட்டு மயங்குன அந்த நாட்டோட இளவரசன் அவள கல்யாணம் பண்ணிக்க விருப்ப படுறான்... இத பிடிக்காத இளவரசனோட சித்தி(வில்லி) ஜிசேல் ஒரு மாஜிக்கல் போர்ட் தந்திரமா தள்ளி விட்டுடுறாங்க...


மாஜிக்கல் போர்ட் விழுகிற ஜிசேல் நியூ யார்க் நகர டைம்ஸ் சதுரம் வழியா நிகழ்காலத்துக்கு வராங்க. சில பல சந்தர்பத்துக்கு அப்புறம் ஜிசேல் ராபர்ட் ங்கற ஒரு லாயர மீட் பண்ணுது. அந்த பொண்ணுக்கு ஹெல்ப் பண்ணனும் னு நினைக்கிற அந்த வக்கீல் அவள தான் வீட்டுல தங்க அனுமதிக்கிராறு. ஆனா காட்டுல இருக்க மாதிரியே இங்கயும் பாட்டு பாடி எலி,புறா னு லாம் வீட்டுக்குள்ள வர வைக்குற ஜிசேல் பாத்து கடுப்பாகுராறு.



இதுக்கு நடுவில கார்டூன் உலகத்துல இருந்து ஜிசேல் தேடி அந்த இளவரசனும் பிப் உம் நிகழ்காலத்துக்கு வராங்க. இத தெரிஞ்சுகிட்டு அவனோட சித்தியும் ஜிசேல் கொல்ல ஆள் அனுப்புறாங்க.


ஜிசேல் என்ன ஆனா, அவ அந்த இளவரசனோட சேர்ந்தாளா இல்ல வில்லி கிட்ட மாட்டிகிட்டு கஷ்டபட்டாலா,நிகழ்காலதுள்ளயே தங்கினாலா இல்ல கார்டூன் உலகத்துக்குபோனாளா னு லாம் தெரிஞ்சுக்க படத்த பாருங்க.


இது ஒரு ரொமான்ஸ், காமெடி, ம்யூசிகல் படம்.
பொழுதுபோக்குக்கு படம் பாக்குறவங்களுக்கு இந்த படம் என் பரிந்துரை. இந்த படம் பாக்கும்போது ஒரு குழந்தை மாதிரி அட்லீஸ்ட் நாலு சீன்லயாச்சும் கண்டிப்பா பீல் பண்ணுவிங்க.


படத்துக்கான லிங்க்


வித்தியாசமான குரல்கள உங்களால கண்டுபிடிக்க முடியும் னா நீங்க ஒரு புத்திசாலி!!!!

எனக்கு பாட்டு கேக்குறது ரொம்ப பிடிக்கும்... நெறைய நேரம் பாட்டு கேக்குறது வழக்கம்... படிக்கும்போது, சமைக்கும்போது, தூங்கும்போது னு இப்டி பாரபட்சமே இல்லாம எல்லா நேரமமும் பாட்டு கேக்குறது பழக்கம்..

நான் கல்லூரி முதல் ஆண்டு படிக்கும் போது எங்க ஆங்கில ஆசிரியர் சொன்னாரு "வித்தியாசமான குரல்கள உங்களால கண்டுபிடிக்க முடியும் னா நீங்க ஒரு புத்திசாலி " னு... அதுல இருந்து எல்லா பாட்டையும் யாரு பாடினாங்க னு தெரிஞ்சுக்கணும் னு ஒரு ஆர்வம்...

ஏன்னா நம்ம புத்திசாலி னு நம்மளயே நம்பவைக்கறது ரொம்ப கஷ்டம் பாருங்க... அப்டி ஆரம்பிச்சு இன்னைக்கு ஓரளவு எல்லா பாட்டும் யாரு யாரு படுறாங்க னு தெரியுது...

ஆனா பாருங்க பாட்டு பாடுனவங்கள தெரிஞ்சுக்குற ஆர்வத்துல்ல பாதி கூட பாட்டு எழுதுனவங்க யாரு னு தெரிஞ்சுக்கறதுள்ள இல்ல... எத்தனையோ நல்ல பாட்டு கேட்க்குறேன் ஆனா அதலாம் யாரு எழுதினாங்க னு தெரியாது..... பாடல் எழுதுற கவிஞர்கள் பேர் தெரியும் ஆனா அவங்க என்ன என்ன பாட்டு எழுதிருக்காங்க னு தெரியாது... தாமரையோட பாடல்கள் மட்டும் தான் பாடல் ஆசிரியர் பேரோட தெரியும்.. ஏன்னா அவங்க பாட்டு மட்டும் தான் கான்ஸ்டன்ட் காம்பிநேஷின் ஹிட் ஆச்சு, சோ கவுதம் மேனன் படம் னா தாமரை தான் பாடல்கள் னு மனசுல பதிஞ்சு போச்சு...

உங்களுக்கு எல்லா பாடல் ஆசிரியர் பேரும் தெரியுமா??
அப்ப கீழ உள்ள பாடல் வரிகள் லாம் யாரு எழுதுனது னு சொல்லிட்டு போங்க...

"உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்
இந்த ஜன்மம் வீணென்று போவேனோ ??"
(பூவெல்லாம் உன் வாசம்)

" காதல் நெருப்பின் நகரம்
உயிரை உருக்கி தொடரும் பயணம்
காதல் நீரின் சலனம்
புயல்கள் உறங்கும் கடலின் மௌனம் "
காதல் மாய உலகம்
சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும்
புள்ளி மான்கள் புன்னகை செய்து வேடனை வீழ்த்தும்"
(வெயில்)

"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகு வர்த்தியும்
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ "
(சில்லுனு ஒரு காதல்)

"படுத்தும் பொசுக்குனு தூங்கும் பய
பித்துக்குளி போல இப்ப முழிக்குரானே
வெள்ளன எந்திருச்சு ஓடும் பய
சுள்ளுன்னு சூரியன பாக்குறேனே

அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்
அந்த ஒரு நொடியை நெஞ்சில் ஒளித்துக்கொண்டேன்
நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்
அவன் கண்களிலே என் வயதறிந்தேன்"
(காதல்)

" ஒரு நாளில் வாழ்கை இங்கே
எங்கும் ஓடி போகாது
மறுநாளும் வந்து விட்டால்
துன்பம் தேயும் தொடராது
எதனை கோடி கண்ணீர்
மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும்
பூமி இன்னும் பூ பூக்கும்"
(புதுப்பேட்டை)

"பேச எண்ணி சில நாள் அருகே வருவேன்
பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே நகர்வேன் ஏமாற்றி..

இரவும் அல்லாத
பகலும் அல்லாத
பொழுதுகள்
உன்னோடு கரையுமா??!!

கரைகள் அண்டாத
காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்த்திட்டாய்??!

தடையில்லை சாவிலும் உன்னோடு வர ..."
(சுப்பிரமணியபுரம்)

இதெல்லாம் சாம்பிள் க்கு கேட்டது... பதில் சொல்ல யாராச்சும் கிடைச்சா இன்னும் கேக்குறதுக்கு நிறைய பாடல் வரிகள் இருக்கு....
பதில் சொல்லுவிங்க தானே ??!!

Thursday, September 17, 2009

200 Pounds of Beauty - அழகா இருக்கிறது நல்லதா கெட்டதா??!!

இது லோகு க்கு ஸ்பெஷல் பதிவு... அதாங்க கொரியன் படம் ...

200 pounds of Beauty
கங் ஹன்னா ரொம்ப குண்டான போன் செக்ஸ் எம்ப்லோயீ... பிரபல பாப் சிங்கர் க்கு ரகசிய குரல் கூட இந்த பொண்ணோடது தான் (அந்த சிங்கர் வெறும் வாயசைப்பு மட்டும் தான்). ஒரு நாள் அந்த சிங்கர் ஹன்னா வ அந்த மியூசிக் கம்பெனி டைரக்டர் முன்னாடி ரொம்ப கேவல படுத்துற மாதிரி பேசிரும்.. அந்த டைரக்டர்- சாங் ஜுன் மேல ஹன்னா வுக்கு ஒரு தலை காதல்.. அவன் முன்னாடி அசிங்கபடுத்திட்டனால ஹன்னா வுக்கு ஒரே கவலையா போய்டும்..
எப்டியும் இந்த உடம்ப கொறச்சே ஆகணும் னு முடிவு பண்ற ஹன்னா அவளோட போன் செக்ஸ் ரெகுலர் கஸ்டமரான காஸ்மெடிக் சர்ஜன சந்திக்கிறா. உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆபரேஷன் பண்ணி ஒரு வருசத்துல்ல ஆள் அடையாளமே தெரியாம மாறிடுற ஹன்னா, ஜென்னி ங்கற பேர்ல திரும்ப அந்த மியூசிக் டைரக்டர் கிட்டவே போய் அந்த பாப் சிங்கர் க்கு சீக்ரெட் வாய்ஸ் ஆ ஜாயின் பண்ண ஆடிஷின் அட்டென்ட் பண்ற. இவ அழகுல மயங்குற அந்த டைரக்டர் பேசாம இவளையே பாப் சிங்கர் ஆகிடலாம் னு முடிவு பண்றான்.
ஹன்னா( ஜென்னி) பாப் சிங்கர் ஆகினாலா , அந்த டைரக்டர் உடனான காதல் நிறைவேறிச்சா னு லாம் படத்த பாத்து தெரிஞ்சுகோங்க....

படத்துக்கான லிங்க்

Freaky Friday - " என் இடத்துல இருந்து பாரு அப்ப தெரியும் உனக்கு "

"என் எடத்துல இருந்து பாத்தாதான் உனக்கு நான் ஏன் இப்டி சொல்றேன் னு தெரியும் " னு பல பேர் பல சந்தர்பத்துல சொல்லி நாம கேட்டுருபோம்... அப்படி ஒரு கருத்த வச்சு 2003 ரிலீஸ் ஆனா படம் தான் "Freaky Friday" ..
லிண்டசே லோகன் எல்லாரையும் போல அம்மா போடற கண்டிஷின் கு அடங்கி போகம, தம்பி கூட எப்ப பாத்தாலும் சண்ட போட்ற வழக்கமான டீனஜெர். தன்னோட அம்மா ரெண்டாவது கல்யாணம் பண்ணிகரத ஏத்துகுற மனநிலை இவளுக்கு இல்ல. ஒரு சைனீஸ் உணவு விடுதியில் சாப்டும்போது அம்மாவும் பொண்ணும் சண்ட போட்டுக்குறாங்க. இதபாத்த விடுதில இருக்க ஒரு சைனா கார அம்மா அவங்க ரெண்டு பேருக்கும் fortune குக்கி கொடுத்துடுறாங்க. அது தெரியாம அத சாப்டுற அம்மாவும் பொண்ணும் அவங்க மட்டும் ஒரு நில நடுக்கத்தை உணராங்க.
மறுநாள் காலைல எழுந்துரிகுற டெஸ் (அதான் அம்மா ) தான் தன்னோட பொண்ணு உடம்புல இருக்கோம் னு தெரிஞ்சு அதிர்ச்சி ஆகுறாங்க. அதே மாதிரி பொண்ணும் அம்மா உடம்புல இருக்கத நினச்சு அதிர்ச்சி அடையுறாங்க. அந்த உணவு விடுதில தான் எதோ நடந்துருக்கணும் னு முடிவு பண்ணி அங்க போய் கேக்கும்போது அங்க உள்ளவங்க சொல்றாங்க , நீங்க சாப்பிட்ட குக்கி ல போட்டுருந்த fortune நிறைவேருனா தான் அவங்களுக்கு அவங்க உடம்பு திரும்ப கிடைக்கும் னு...
அவங்க இப்டி மாறுன அன்னிக்கு அவங்க அம்மாவுக்கு இரண்டாவது கல்யாணம், பொண்ணுக்கோ அவ வாழ்கை லட்சியமா இருக்க மியூசிக் காம்படிஷின்.. ரெண்டு பேரும் மத்தவங்களோட வேலைய எப்டி பண்றாங்க ங்கறத ரொம்ப நகைச்சுவையா சொல்லிருபாங்க...

அந்த வெள்ளிகிழமைல அவங்க பண்ற கூத்து தான் மிச்ச படம்...
பாத்து சிரிச்சுகோங்க....!!!

இந்த படம் பாக்க இங்க கிளிக்குங்கோ

ரயில் பயணங்களில்...


நீண்ட தூரம் ரயில் பயணம் பிடிக்காதுன்னு சொல்றவங்க யாராச்சும் இருக்காங்களா என்ன...??!!

எனக்கு ரயில் பயணம் ரொம்ப பிடிக்கும்.. சின்ன பிள்ளையா இருக்கும்போது குடும்பத்தோட எங்க போனாலும் எங்க அப்பா விரும்புறது ரயில்ல போகத்தான்.... அப்டி போன நிறையா பயணங்கள் இன்னும் நினைவுகள்ள ரொம்ப பசுமையா இருக்கு....

தெரிஞ்சவங்க தெரியாதவங்க னு லாம் வித்யாசம் இல்லாம சேர்ந்து போற 5 மணி நேரமோ 6 மணி நேரமோ எல்லாரும் சிரிச்சு பேசிட்டு போற அழகே தனி..
எனக்கு ரயில்ல போகும்போது நிறைய நண்பர்கள் கிடச்சுருக்கங்க.. என் வயசு நண்பர்கள் னு சொல்றத விட எல்லா வயசுலயும் நண்பர்கள் கிடச்சுருக்காங்க னு சொல்றது தான் சரியா இருக்கும்..

சுமார் பத்து வருசத்துக்கு முன்னாடி இப்டி ரயில் பயணத்துல நண்பரா கிடச்சவங்க ரவி அண்ணா மற்றும் அருண் அண்ணா... ரெண்டு பேரும் இப்ப என்ன பண்றாங்க னு தெரியாது.. அவங்க இன்னும் மனசுல இருக்கதுக்கு முக்கியமான காரணம் அவங்க ரெண்டு பேரும் அவ்ளோ நல்லா பேசுனாங்க.. எவ்ளோ கதை சொன்னாங்க.. பொதுவா வளந்துட்டாலே குழந்தைதனத்த நாம எல்லாரும் மறந்துடுவோம்.. ஒரு குழந்தைகிட்ட எப்டி பேசனும் னு கூட பலருக்கு தெரியாது... அவங்கள பாத்துதான் குழந்தைத்தனம் வாழ்கைல ரொம்ப முக்கியம் னு புரிஞ்சது... ( இப்ப எதுக்கு இத்தன பில்ட் அப் னு நீங்க கேக்குறது தெரியுது)


போன வாரத்துல சேலத்துல இருந்து சென்னை போனேன்.. ரயில்ல தான்.. மக்கள் ரொம்ப மாறிட்டாங்க... அதிக வேலை களைப்பா என்ன னு தெரியல நான் ஏறுன கம்பார்ட்மென்டுள்ள எல்லாரும் ரயில் பொறப்பட்டு கொஞ்ச நேரத்துலயே தூங்க ஆரம்பிச்சுட்டாங்க.. அப்டி தூங்காத சிலரும் காதுல ஒரு மொபைலயோ எம்பி3 பிளேயரயோ மாட்டிகிட்டு அவங்க இஷ்டப்பட்ட பாட்டுகள கேக்க ஆரம்பிச்சுடாங்க... இன்னும் கொஞ்சம் டீன்ஸ் மெசேஜ் மற்றும் கால்ஸ் ( அது கடலையா னு கடவுளுக்கு தான் தெரியும் ) லா பிசியா இருந்தாங்க..

எனக்கு ரொம்ப போர் அடிச்சு கொஞ்சம் நேரம் வேடிக்க பாத்தேன்... பஸ் போறத விட ரயில்ல போறதுல்ல சின்ன சந்தோசம் என்ன னா போற வழி எல்லாம் இயற்கை காட்சிகளா பாத்துட்டு போகலாம்..


வேடிக்க பாத்துட்டே இருக்கும்போது தான் ஒரு எண்ணம் வந்துச்சு இப்டி வெட்டியா போறதுக்கு பேசாம எழுதுறதுக்கு எதையாச்சும் யோசிக்கலாம் னு நினைக்க தான் ங்க செஞ்சேன் எங்கேர்ந்து தான் தூக்கம் வந்துச்சோ அப்டியே தூங்கிட்டேன் :( ..


முழிச்சு பாக்குறப்ப ரயில் எங்க போகுது னே தெரியல.. பக்கத்து சீட்ல இருந்த அங்கிள் சொன்னாங்க ஜோலார்பேட்டை தாண்டிவந்துருச்சு னு.... ஜன்னல்ல பாத்த அரை கிலோமீட்டர் தள்ளி இருக்குற வீடு கூட பளிச்சு னு தெரியுது... வாஸ்து கலராம்... அப்பா சாமி கண்ணு போச்சு போங்க...

கண்ட கலர அடிச்சது கூட பரவால அதுக்கு பார்டெர் ப்ரைட் கலர் அடிச்சு (அதாவது ஆரஞ்சு கலர் கு கிளிபச்ச பார்டெர், வயலெட் கலர் கு பஞ்சு மிட்டாய் கலர் பார்டெர் னு ) ரொம்ப கொடுமையா பெயிண்ட் அடிச்சுருக்காங்க... அழகா வீட கட்டி இப்டி ஏன் தான் பெயிண்ட் அடிக்கிறாங்களோ ?!!

அப்டி இப்படி னு ஒரு வழியா சென்னை வந்து சேந்துட்டேன்.. கடைசிவர எத பத்தி எழுதுறது னு யோசிக்கவே இல்ல போங்க ....!!!




இத படிக்கறவங்களுக்கு ஒன்னு புரிஞ்சுருக்கும்... இவ என்ன சொல்ல வரானே புரியல தானே உங்களுக்கு... எனக்கே அது புரியலங்க... எதோ எழுதனும் னு கஷ்டப்பட்டு இவ்ளோ டைப் பண்ணிட்டேன், வெட்டியா ட்ராப்ட் போட்டு வைக்க மனசு வரல அதன் பப்ளிஷ் பண்ணிட்டேன்... மன்னிச்சுக்கங்க எசமான் மன்னிச்சுக்குங்க....

அது என்னமோ போங்க நா சொந்தமா எது எழுதுனாலும் அது எனக்கே புரிய மாட்டேங்குது !!!

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location