தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியின் நடுவே விளம்பர இடைவேளையின்போது ரீமோட்டை தேடுபவரா நீங்கள்... அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கானது இல்லை...
நம்ம மக்களுக்கு பொதுவே ரசனை ஜாஸ்தி... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விசயத்துல்ல ரசனை உண்டு.. சிலருக்கு புத்தகங்கள் பிடிக்கும்,சிலருக்கு சினிமா, சிலருக்கு ஓவியங்கள், சிலருக்கு புகைப்படங்கள் னு இந்த பட்டியல் ரொம்பவும் நீளமானது... இப்ப என்னையே எடுத்துகோங்க உருப்படியா ஒன்னும் ஆக்கத்தெரியலைனாலும் ஏதோ சுமாரான அளவு ரசனை உண்டு.. "ஆகாவோகோ" என்று எதையும் புகழவில்லை என்றாலும் பல நேரங்களில் சில விசயங்களை மனதுக்குள் ரசிப்பது உண்டு... ரசனையை வெளிபடுத்துவதும் கூட ஒரு கலை தான்... பலருக்கு அது கைவரப்பெறும், சிலருக்கு வராது..
சரி சரி சொல்ல வந்த விசயத்துக்கு வரேன்... நாமும் தான் ஒரு நாளின் பல மணி நேரங்களை தொலைக்காட்சியுடன் களிக்கிறோம்.. அதுல எத்தனையோ விஷயங்கள் ஒளிபரப்ப படுது...இப்ப நான் எழுதப்போவது "கமர்ஷியல்ஸ்" என்ற ஒரு வார்த்தைக்குள் அடக்கப்படும் விளம்பரங்களை பற்றித்தான்...
எனக்கு தெரிஞ்ச பல பேர் எதாவது தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இடைவேளையின் போது ரொம்ப சலித்துக்கொள்வார்கள் " இப்படி விளம்பரமா போட்டு கொல்றானே " என்று... ஆனா நீங்க நல்லா கவனிச்சு பாத்தீங்க நா தெரியும் சில விளம்பரங்கள் நீங்க பார்க்கும் நிகழ்ச்சியை விட சுவாரசியமாய் இருக்கும்..
உதாரணத்திற்கு சொல்லவேண்டும் என்றால்...
1. "N for நூடுல்ஸ்" னு ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் சொல்லும் சிறுவன் ( பழைய விளம்பரம் )
2. வோடபோன் விளம்பரத்தில் "என் தம்பிக்கு கல்யாணம்" என்று சொல்லுகிற பிரகாஷ்ராஜ்.
3. கரை நல்லது விளம்பரம்
முன்பு தன் தங்கையை விழவைத்ததற்க்காக சேறுடன் சண்டையிடும் சிறுவன்.
இன்று இறந்து போன செல்லப்ப்ரானியின் நினைவில் இருக்கும் ஆசிரியை மகிழ்வூட்டும் சிறுவன்.
4. "இன்னொரு கைலயும் அடிங்க அடுத்த பால் லையும் சிக்ஸர் அடிப்பேன்" என்று நம்பிக்கை மேலிட சொல்லும் சிறுவன்.
5. "ரேஸ் ல செகண்ட்.. நாட் பாட் நாட் பாட்... எத்தன பேரு ஓடினாங்க ?" "ரெண்டு !!!"
6. அலைவா கிராகர்ஸ் " கொஞ்சம் குறும்பு கொஞ்சம் -------" [மன்னிக்கணும் வார்த்த மறந்துபோச்சு. :( ]
7. "பின்ன என்னனு தான் சொல்லிதொலைங்க.." " ஐ லவ் யு" இந்த ஜோடி எல்லா விளம்பரத்திலும் ரொம்ப அன்யோநியமா நடிச்சுருப்பாங்க.
8. வங்கி விளம்பரத்தில் சுடக்கு போட முயற்சிக்கும் சிறுவன்.
9. தன்னுடைய உண்டியலை வங்கிக்கு பத்திரமாக எடுத்துசெல்லும் சிறுவன்.

10. மழைத்தண்ணீரில் காகித கப்பல் மூழ்கிவிடாமல் தடுக்கும் நண்பர்கள் ( ஸ்பெஷல் 5)
11. ப்யூர் இட் விளம்பரத்தில் வரும் பெண் ( சராசரி இந்திய மனைவியை பிரதிபலிக்கும் முகம் அவங்களுக்கு)
12.அன்பென்றால் ஆரோக்கியா விளம்பரத்தில் வரும் சின்ன சின்ன அன்பின் தருணங்கள்.
13. " உலகதுள்ளயே மிக நீண்ட பாலத்தை என்னால் கட்டமுடியுமென்றால் ,அதை திறந்து வைக்கவும் முடியும் " என்று சொல்லும் இன்ஜினியர்.
14. வாழ்க்கை சில நொடிகளிலேயே மாறிவிடும் என்று சொல்லுகிற கார் விபத்து நடக்கும் விளம்பரம் ( இந்த விளம்பரத்துடைய மற்ற பதிவுகளில் மனம் ஒட்டவில்லை)
15. சரியான தூக்கம் இன்மையால் அடுத்தவருடைய காரை சுத்தம் செய்து விட்டு முழிக்கும் நபர்.
இன்னும் சொல்லுவதற்கு நிறைய விளம்பரங்கள் உண்டு. பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
தொலைகாட்சியில் நீங்கள் இதை கவனித்தது உண்டா ?? இல்லை என்றால் இனிமேல் கவனியுங்கள்.நீங்கள் ரசித்த, ரசிக்கும் விளம்பரங்களை பின்னூட்டத்தில் சொல்லுவீர்கள் என்கிற நம்பிக்கையில்
- உங்கள் ரசனைக்காரி