நெறைய பேருக்கு டான்ஸ் பிடிக்கும்..
எனக்கும் டான்ஸ் பிடிக்கும்... அதுல பல வரைட்டி இருந்தாலும் எனக்கு ரொம்ப பிடிக்கற டான்ஸ் டைப்ன்னு பாத்தா அது சல்சாவும் டான்கோவும் தான்... ஆடத்தேறியுதோ இல்லையோ அந்த வகை நடனம் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு...
ஏன் நம்ம நாட்டுல இல்லாத நடனமான்னு நீங்க கேக்கலாம்.... நான் என்ன நினைக்குரேன்னா நம்ம ஊர் டான்ஸ்லலாம் ஒண்ணு தனியா ஆடுறாங்க இல்லைனா நாலு பேருக்கு மேல சேர்ந்து குளுநடனமா ஆடுராப்புல தான் இருக்கு...
அதுனால
எனக்கு என்னமோ நம்ம ஊர் டான்ஸ் ல ஒரு பிடிப்பு வரல...
அதுவும் இல்லாம இந்த சல்சாவும் டான்கோவுக்கும் கொடுக்குற மியூசிக்கே ரொம்ப துள்ளலா இருக்குறாப்புல எனக்கு ஒரு பீலிங்... இந்த வகை டான்ஸ் பிடிக்குறதுக்கு இன்னொரு காரணம் இது ரெண்டும் பார்ட்னெர் டான்ஸ்!!!
சரி மேட்டருக்கு வரேன்.... டான்ஸ் பத்தி பல மொழிகள்ல படங்கள் வந்துருக்கு... நான் இப்ப சொல்ல போறது "
இன்னொசென்ட் ஸ்டெப்ஸ் " அப்டிங்கற கொரியன் படத்த பத்தி...

இந்த படத்தோட கதைன்னு பாத்தாக்க ஹீரோ ஒரு டான்ஸ் மாஸ்டர்... டான்ஸ்ன்னா என்னனே தெரியாத ஒரு பொண்ணுக்கு டான்ஸ் சொல்லிகொடுக்குராறு...
அவரு ஹீரோயின் பொண்ணுக்கு சொல்லிக்கொடுக்குற டான்ஸ் சல்சா!! (நான் என்னத்துக்கு மூணு பத்திக்கு இன்ட்ரோ கொடுத்தேன்ன்னு தெரிஞ்சுடுச்சா...!!)
எதோ ஒரு காரணமா வீட்ட விட்டு ஓடி வராங்க நம்ம ஹீரோயின். ஹீரோ அடுத்து வர டான்ஸ் போட்டிக்கு தன்னோட ஜோடியா ஆடுறதுக்காக வர பொண்ண இன்வைட் பண்ண ஏர்போர்ட்டுக்கு வராரு. அப்படி வந்தவரு வேற பொண்ண (அதாவது ஹீரோயின்ன) வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருராறு..
வீட்டுக்கு வந்ததும் தான் தெரியுது தப்பான பொண்ண கூட்டிட்டு வந்துட்டோம்ன்னு... வீட்ட விட்டு வெளிய போ அப்டின்னு அந்த பொண்ண தொரத்திவிட்டுருவாறு.. இன்னொரு நாள் அந்த பொண்ணு எங்கயோ வேலை செஞ்சு கஷ்டபடுரத பாத்து பீல் ஆகி தன்னோட வீட்டுக்கே கூட்டிட்டு வந்துருவாரு...

"ஒரு டான்ஸ் மாஸ்டர் அப்டினா எப்பேர்ப்பட்ட ஆளுக்கும் டான்ஸ் ஆட சொல்லித்தர தெரியனும்" யோசிக்கிற அந்த ஹீரோ அந்த பொண்ணுக்கே டான்ஸ் ஆட சொல்லி தந்து அவகூடவே போட்டில கலந்துகுவோம்ன்னு முடிவு பண்ணி அந்த பொண்ணுக்கு டான்ஸ் சொல்லிதர ஆரம்பிப்பாரு...
அவரு அந்த பொண்ணுக்கு டான்ஸ் சொல்லிகொடுக்குற காட்சி எல்லாம் அவ்ளோ அழகா இருக்கும்... அவரோட முரட்டுதனத்த பாத்து மொதல்ல அந்த பொண்ணு பயப்படும்.. அப்புறம் அவரே அந்த பொண்ணுக்காக ஸ்டெப்ஸ் லாம் தரைல வரைஞ்சு அதுல ப்ராக்டிஸ் பண்ண சொல்லுவாரு... இப்டியே அந்த பொண்ணு டான்ஸ் கத்துக்குற நேரத்துல அவங்களுக்குள்ள ஒரு புரிதல் வந்துரும்....!!

இங்க தான் ட்விஸ்ட்... படம் ன்னு இருந்தா வில்லன்ன்னு ஒருத்தன் இருந்து தானே ஆகணும்... இங்கயும் வில்லன் உண்டு... அவன் எப்பிடினா நம்ம ஹீரோ கஷ்ட்டப்பட்டு ஒரு புள்ளைக்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்தா அந்த பிள்ளைய இவரு நோகாம கூட்டிகிட்டு போய் போட்டில கலந்து ஜெயுச்சுருவாறு.... இப்படி ஹீரோ ட்ரைன் பண்ண பல பொண்ணுங்கள கூட்டிட்டு போயிருப்பாரு...
அதே மாதிரி ஹீரோயின்னையும் வில்லன் கூட்டிக்கிட்டு போறாரு இல்லையா அப்பிடின்னு யூட்யுப்ல தேடி படத்த பாத்து தெரிஞ்சுக்கோங்க....
இந்த படத்துல வர ரெண்டு டான்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்...
ஹீரோவும் ஹீரோயினும் அவங்க ப்ரெண்ட்ஸ் கிட்ட ஆடிக்காமிக்குற டான்ஸ் அப்புறம் எண்டு கார்டு போட்டதும் ஹீரோவும் ஹீரோயினும் ஆடுற டான்ஸ்...

அப்புறம் அந்த ஹீரோயின்ன பத்தி சொல்ல மறந்துட்டேனே.... கொரியன் ஹீரோயின்ஸ் லயே எனக்கு ரொம்ப பிடிச்சது இந்த பொண்ணு ( மூன் ஜீனா யங் ) தான்... நல்லா நடிப்பாங்க அப்டின்னு தெரியும்.. அழகா ஆடவும் செய்வாங்க அப்பிடின்னு இந்த படம் பாத்ததும் தான் தெரிஞ்சுகிட்டேன்......
உங்களுக்கு டான்ஸ் பிடிக்கும்னா இந்த படமும் பிடிக்கும்....!!!
கண்டிப்பா பாருங்க....
ஓட்டு போடுங்க மக்களே!!!