
எல்லாரும் சினிமா பத்தி எழுதுறாங்க ... சரி நம்மளும் எழுதுவோம் னு தான் இந்த பதிவு ... தமிழ் சினிமா பத்தியோ ஆங்கில சினிமா பத்தியோ எழுதலாம் தான் ... ஆனா அத எழுதுறதுக்கு நெறைய பேர் இருக்காங்க ... நான் ஒரு கொரியன் படத்த பத்தி எழுதலாம் னு இருக்கேன் ...

படத்தோட கதை இதுதான் - ஒரு பதினஞ்சு வயசு பொண்ணுக்கு சாகக்கிடக்கிற தாத்தாவ காரணம் காட்டி குடும்ப நண்பரோட பையனுக்கு கல்யாணம் பண்ணிவச்சுடுறாங்க.. அந்த பையனும் பொண்ணும் சின்ன வயசுல இருந்தே நண்பர்களா இருந்தாலும் கல்யாணம் பண்ணிக்குரதுல ஈடுபாடு இல்ல இருந்தாலும் பெரியவங்களுகாக வேற வழி இல்லாம கல்யாணத்துக்கு ஒத்துக்குறாங்க...
அவங்க ரெண்டு பேரும் தனி வீட்ல அடிக்கிற லூட்டிஸ் லா சான்ஸ் ஏ இல்ல ...
ஸ்கூல் ல படிக்கிற ஒரு பையன அந்த பொண்ணுக்கு ரொம்ப பிடிக்கும் அத தெரிஞ்ச ஹீரோ அவன கூப்ட்டு அவன திட்டவும் முடியாம ஏத்துக்கவும் முடியாம முழிப்பான்...

* ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேரும் செம கியுட்...
* அந்த பொண்ணோட ஸ்கூல் கே ஆர்ட் டீச்சர் ஆ வரப்போறதா ஹீரோயின்
கிட்ட எப்டி சொல்றதுன்னு ஹீரோ ட்ரை பண்ற காட்சி
* ஒரு தலையா காதலிக்குரத ஹீரோ சொல்லாமயே அந்த பொண்ணு தெரிஞ்சுகறது ( அதுக்கு ஒரு லெட்டர் சீன் வரும் .. நல்லா இருந்துச்சு )
* ஒரு வாரமா நைட் ல கஷ்டப்பட்டு காதலிக்காக ஹீரோ வரையிற stage decoration ஓவியம்...
* இன்னும் நிறையா இருக்குங்க எனக்கு தான் கோர்வையா சொல்ல வரல ... நீங்களே படம் பாருங்களேன் ....!!
verdict - டைம் பாஸ்க்கு படம் பாக்குறவங்களுக்கு இந்த படம் நிச்சயமா பிடிக்கும் !!
பி. கு ::
நானும் சினிமா பத்தி எழுதிட்டேன்... எழுதிட்டேன் ...
பாத்துகோங்க நானும் ரௌடிதான்..நானும் ரௌடிதான்..நானும் ரௌடிதான்
இந்த படத்த பாக்கணும் னு பிரியபட்ரவங்க youtube ல பாக்கலாம் ...(with subtitles nu search பண்ணுங்க இல்லனாபேஜாராபூடும் ...)
அந்த வேளை லாம் எங்களுக்கு ஒத்துவராது னு சலிச்சுக்குறவங்க இங்ககிளிக்குங்கோ
வர்ட்டா .......
முக்கியமான குறிப்பு ::
தமிழ் படம் பாத்து நொந்து நூடுல்ஸ் ஆனவங்க இத பாருங்க ஏன்னா இதுல பறந்து பறந்து அடிக்கிற பைட் கிடையாது ... ஓவர் செண்டிமெண்ட் சீன்ஸ் கிடையாது முக்கியமா பன்ச் டயலாக் கிடையாது !!!