Sunday, August 15, 2010
பெயர் அளவில் செல்ல பிராணிகள்...
வணக்கம் மக்களே ..
உங்கள் ல எத்தன பேர் வீட்ல செல்ல பிராணி வளர்க்குறீங்க??!!
அந்த ஜீவன வாக்கிங் கூட்டிட்டு போற பழக்கம் இருக்கா??...
எனக்கு சமயத்துல இப்படி வாக்கிங் கூட்டிட்டு போற அனிமல்ஸ் அ பாத்த பாவமா இருக்கும்..
தொப்ப கொரயனும்ன்னு மனுஷங்க நடக்குறாங்க.. நாய் க்கு என்ன வந்துச்சு....
இவரு நடக்குறதுக்காக காலங்காத்தால அந்த நாயையும் எழுப்பி விட்டு மாங்கு மாங்கு ன்னு நடக்க விடறபாத்த ஏன் இப்படி ன்னு கூட தோணும்...
அதுவும் சும்மா கூட்டிட்டு போவ மாட்டாங்க.. அதுக்கு கழுத்துல ஒரு பெல்ட் அதோட செயின் இவர் கைல !!
கூட்டிட்டு போறவங்க எந்த வழி ல போறாங்களோ அதே வழில வேற சாய்சே
இல்லாம போவனும்...
காலாற நடக்க கூட முடியாது... கூட்டிட்டு போறவங்க வேகமா நடந்தா அதுவும் வேகமா நடக்கணும்..
மெல்லாம நடந்தா அதும் மெல்லாம நடக்கணும்....
நீங்க வேணா யாருகிட்டயாச்சும் கேட்டு பாருங்களேன் "ஏன்யா பெல்ட் கட்டி நாய வாக்கிங் கூட்டிட்டு போற" ன்னு ...
அப்படி கூட்டிட்டு போவலன்னா அது எங்கனயாச்சும் ஓடிடும்ன்னு சொல்லுவாங்க...
தொப்ப கொறைய சரி சரி ஒடம்ப மெயின்டைன் பண்ண தானே வாக்கிங் போறாப்புல ..
அந்த ஜீவன கொஞ்ச தூரம் ஓட விட்டு பிடிகட்டுமே.. நாயும் சுதந்திரமா சுத்துன மாதிரி இருக்கும் இவரும் நல்லா ஓடி வேர்வ சிந்தட்டும்,..
என்ன நான் சொல்றது??!! இத சொன்னா நம்மள லூசுன்னுவாங்க...
பேர் தான் செல்ல பிராணி... அந்த பிராணிட்ட கேட்டாத்தான் இவங்க கூட அது என்ன பாடு படுதுன்னு தெரியும்..
(நாய் கூட இவ்ளோ பீல் பண்ணிருக்காது ன்னு நீங்க சொல்றது கேக்குது!!! )
எதுக்கு இந்த வெட்டி பேச்சு... நம்ம ஊர்லனாச்சும் நாய்க்கு தான் இந்த நிலைமை...
இந்த கொடுமைய எங்க போய் சொல்லுவீங்க??
நம்ம ஊர்ல இந்த நிலைமை இன்னும் வரல ன்னு சந்தோஷ பட்டுக்க வேண்டியதுதான்... வேற என்ன செய்றது...
குழந்தை நா அங்க இங்க ஓட தான் செய்யும்.. இப்ப ஓடாம எப்ப ஓடறது..
குழந்தைய அது இஷ்டத்துக்கு இருக்க விடாம இப்படி கயத்த கட்டிவிட்றாங்க..
கேட்டா டெக்னாலஜி ன்னு சொல்லுவாங்க.. அப்படி இல்லைன கிருஷ்ண பகவானையே அவங்க அம்மா இப்படி தான் கட்டி வச்சுருந்தாங்க ன்னு சொல்லுவாங்க...
என்ன சொல்லுங்க மக்களுக்கு எல்லாத்துக்கும் ஒரு காரணம் ரொம்ப சுலபமா கெடச்சுடுது...
Subscribe to:
Posts (Atom)