Thursday, July 16, 2009

குறுஞ்செய்தி கவிதைகள்!!

ஏனோ !
என்னை விரும்ப
அவளுக்கு
விருப்பமில்லை...

பிடிக்காதலால் அல்ல..
நான் அவளிடம்
"நல்லவன்" போல்
நடிக்காதலால்...

*****************************************************************************************************

உன் நட்பை
பெறவேண்டுமென்று
கடவுளிடம்
வரம் கேட்க சென்றேன்
கடவுளை காணவில்லை
பின்புதான் தெரிந்தது
அவரும்
உன் நட்பைபெற
தவம் செய்கிறார் என்று!!!

******************************************************************************************************

விக்கல் எடுக்கிறது...!
தண்ணீர்
குடிக்க
மனமில்லை...
ஏனேன்றால்
நினைப்பது
நீயாக இருந்தால்..?
நீடிக்கட்டும்
சில நிமிடங்கள்...

***************************************************************************************************

உனக்கு என்ன வருத்தம்
காதல் தோல்வியா..!!
இல்லை
வாழ்க்கைத் தோல்வியா..!!

பிறகு ஏன்
இவ்வளவு உயரமான
மலையில் இருந்து
குதிக்கிறாய்..

"அருவியே!!"

********************************************************************************************************

நீ , நான் , நட்பு
மூவரும்
ஓடிக் கொண்டிருந்தோம் ...
உனக்காக நானும்...
எனக்காக நீயும்,
விட்டுக்கொடுத்து
ஓடும்போது
" நட்பு "
நம்மை வென்று விட்டது..!!

படித்ததில் பிடித்தது - III

காதல்!
======

காதலுக்குத் தான்
மதிப்பு அதிகம்
வள்ளி திருமணம்
அளவுக்கு
பிரபலமடையவில்லை
தெய்வானையின்
திருமணம்!!
**************************************************************


தூங்க வேண்டுமாம்
கண்கள் அழுகின்றன
நான் என்ன செய்ய?
முறையிட வேண்டியது
உன்டமல்லவா!!

****************************************************************

எங்கே!!
=======

குழந்தைகளிடம்
சொல்வதற்கு
நிறையக் கதைகள்
காத்துக் கிடக்கிறது
தாத்தாகளைத்தான்
காணோம்....!!


***************************************************************

செய்யும்
தெய்வமே
தொழில்

சிற்பிக்கு!!


***************************************************************

முகவரி!!
=========

ஜன்னலிலும்
கதவிடுக்கிலும்
கத்திக் கத்தி
ஓய்ந்த குருவிக்கு
கடைசி வரை
சொல்லப்படவேயில்லை
நேற்றுவரை அந்த
வீட்டில்
குடியிருந்த
குழந்தைகளின்
புதிய வீட்டு முகவரி!

***************************************************************
உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location