Wednesday, October 7, 2009

மிஸ்டர் பெர்பெக்ட் ஐ கவுப்பது எப்படி?!!!

இது படத்தோட பேருங்க....ஹே நான் மறுபடியும் கொரியன் படத்த பத்தி எழுத போறேன்...

இந்த தரம் நான் எழுத போறது செட்யுசிங் மிஸ்டர் பெர்பெக்ட் படத்த பத்தி...


இந்த படத்தோட கதாநாயகி மின்ஜூனா(Uhm Jung-hwa) காதல்ல ரொம்ப நம்பிக்கை உள்ளவங்க. தன்னோட பாய் பிரென்ட் கிட்ட உண்மையா இருக்கணும் எப்பவுமே னு நினைபாங்க. ஆனா என்னமோ இவங்களுக்கு யாருமே ரொம்ப நாள் பாய் பிரெண்டா நிலைக்கமாட்டாங்க. இப்படி தான் ஒரு நாள் அவங்க லவ் பிரேக் அப் ஆனா விரக்தில கார் ஓட்டிட்டு வரும்போது இன்னொரு கார் மேல மோதிடுவாங்க. அந்த கார் இருந்து இறங்குறவர் ராபின் ஹேடன்(Daniel Henney) தான் மின்ஜூனா வோட புது பாஸ்.

ராபின் ஹேடன் எல்லாத்துலயும் பெர்பெக்ட். அவரு எல்லாத்தையும் பிளான் பண்ணி தான் பண்ணுவாரு ( வடிவேலு மாதிரி காமெடி பீஸ் இல்லைங்க... மெய்யாலுமே எல்லாத்தையும் கரெக்டா பண்ணுவாரு).
அவர் மின்ஜூனா கிட்ட லவ் , உறவு எல்லாமே ஒரு கேம் மாதிரி னு சொல்லுவாரு. மின்ஜூனா அவருகிட்ட லவ் விசயத்துல தனக்கு உதவி செய்யமுடியுமா னு கேப்பாங்க. ராபினும் ஒத்துபாரு.

ராபின் சொல்ல சொல்ல அந்த பொண்ணு அது மாதிரியே நடந்துக்கும். ஆனா மின்ஜூனுக்கு இப்படி லவ் மைன்ட் கேம் விளையாடுறது பிடிக்காது. இப்படி பண்றதுக்கு முன்ன மாதிரியே இருந்துட்டு போலாம் னு தோணிடும். ராபின் காதல கேம் பாக்குறதுக்கு ஒரு காரணம் அவரோட முன்னால் கசப்பான காதல் அனுபவம்.

மின்ஜூனா வோட நடவடிக்கைகளால ராபினுக்கு கொஞ்சம் கொஞ்சமா அவ மேல காதல் வந்துடும். அவங்க ரெண்டு பேருக்கும் ஒத்து போய் எப்புடி ஒண்ணா சேருவாங்க னு தான் மிச்ச கதை.

இந்த படத்துல உள்ள தனித்துவம் என்ன னா... இந்த படம் முழுக்க ராபின் ஆங்கிலத்துல தான் பேசுவாரு.. மின்ஜூனா கொரியா மொழி தான் பேசுவாங்க.... இந்த மாதிரி டயலொக் கொரியன் படங்கள்ல புதுசு...


ஏற்கனவே இந்த படத்த பாத்தவங்க உங்க கருத்தை சொல்லிட்டு போங்க... இல்லைனா போய் இந்த படத்த பாருங்க...

ட்ரைலர் இங்க பாருங்க.......

என்ன தான் சொன்னாலும் கொரியன் நடிகருங்க நடிகைங்க எல்லாரும் சும்மா செம க்யூட்... ஹி ஹி ... :):)

Tuesday, October 6, 2009

நீங்கள் ரசித்ததுண்டா??!!

என்னோட ஒரு பதிவுக்கு மக்கள்கிட்ட இருந்து பயங்கர ரெஸ்பான்ஸ் ( நானா சொல்லிகுரதுதான்... நீங்க டென்ஷன் ஆகாதிங்க...) டாப் போஸ்ட் ல அதுதான் மொதல்ல இருக்குன்னா பாத்துகோங்க....விளம்பரம் பற்றிய பதிவில் , ஒரு சொந்த விளம்பரம்!!! நோ நோ அழக்கூடாது ..... கன்ட்ரோல் யுவெர்ஸெல்ப்...

அந்த பதிவ படிக்க இங்க கிளிக்கவும்....

அதுல நா கேட்டுகிட்ட மாதிரியே பல பேர் தன்னோட ரசனைக்குரிய விளம்பரங்கள பகிர்ந்து கிட்டாங்க... அவங்க எல்லாருக்கும் நன்றி... என்னோட

இவங்க பின்னூட்டத்துல போட்ட விளம்பரங்கள் சிலது அவங்க சொன்னதுக்கு அப்புறம் தான் நினைவுக்கு வந்தது... என்ன பண்றது நம்ம புத்தி கொஞ்சம் லேட் பிக்கப் தான்... அவங்களும் சொல்ல விட்ட சில விளம்பரங்கள் இன்னும் இருக்கு... அதெல்லாம் இந்த பதிவுல போடலாம் னு ஒரு எண்ணம்... ( பதிவு போடுறதுக்கு வேற எதுவும் கிடைக்கல னு இப்படி ஒரு பில்ட் அப்போட ஆரம்பிக்குறேன் னு நினைக்குறீங்களா... நினைச்சுக்கோங்க... அதான் நிஜம் !!!)

அந்த பதிவுல சொல்ல விட்டதும் பின்னூட்டத்துல சொல்ல மறந்தும்....

ஹார்லிக்ஸ் பிஸ்கட் விளம்பரத்துல, பிஸ்கட் பால்ல விழுந்ததும் அத மிக்ஸ் பண்ணுவான் அண்ணன்காரன்... மிக்ஸ் பண்ணதும் உஷாரா அத எடுத்து குடிக்கிற தம்பி செம்ம க்யூட்...

"அம்மா நீங்களும் எதையோ மறந்தாப்புல இருக்கு " னு சானியா மிர்சா சொல்லுற விளம்பரத்துல வர குழந்தையும் செம்ம க்யூட்...

"உங்களை பார்த்தே டிசைன் செய்தோம் " னு இப்ப வர ஒனிடா விளம்பரமும் பெர்பெக்ட்... " நா டிவி ல வரேன்... அ ஒனிடா டிவி ல !!!"

ஸ்வீட் எடு கொண்டாடு " வீட்டுல பாத்து கல்யாணம் பண்ணியிருந்தா இந்த தீபாவளி இப்படியா இருக்கும் ? " "ஆமா நானும் கொஞ்சம் மாப்ள முறுக்க காமிச்சுருப்பேன்!!"

ஸ்வீட் எடு கொண்டாடு இதோட பழைய விளம்பரம் "கென்யா எங்க இருக்கு ?" "அட அது எங்க இருந்தா என்ன பா.. அதான் ஜெயுச்சுட்டாங்கள்ள ?!!!"

ஆர். எம். கே. வி பெஸ்டிவ் FUN விளம்பரதுள்ள அந்த குழந்தைங்க பண்ற கலாட்டா...

" நான் உங்க கிட்ட ஒண்ணு சொல்லணும் " னு சொல்லிட்டு கண்ணாடிய மாட்டிக்கிற பொண்ணு ஹை ஹீல்ஸ் அ கழட்டிட்டு முழிப்பா... அவளுக்கு மோதிரம் போட வந்த பையன் " நானும் உன்கிட்ட ஒண்ணு சொல்லணும் " னு சொல்லி அவனோட விக்க்க கழட்டுவான்... இது எந்த விஷயத்துக்கான விளம்பரம் னு நினைவுல இல்ல.... ( உன்னைப்போல் ஒருவன் படம் பார்க்கும்போது தியேட்டருல போட்டாங்க!!)

விர்ஜின் மொபைல் " மாத்தி யோசி " இதுலயும் எல்லா விளம்பரமும் நல்லா இருக்கும்... ரொம்ப கலை உணர்வோட இருக்கும் னு சொல்ல வரல... ஆனா வித்தியாசமா இருக்கும்...

மென்டோஸ் கு ஒரு விளம்பரம் முன்னாடி வந்தது உங்களுக்கு நினைப்பிருக்கா?? ஒரு பையன் கிளாஸ் க்கு லேட்டா வருவான் ப்ரொபஸ்ஸர் திட்டுவாரு... அதுனால கிளாஸ் ல இருந்து எஸ்கேப் ஆகுற மாதிரி பின்னாடி நடந்து வருவான் "எங்க போற போய் உட்க்காரு " னு அதே ப்ரொபஸ்ஸர் சொல்லுவாரு...

ஹார்லிக்ஸ் அகாடமி விளம்பரத்துல அப்பா பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் பண்ணனும் னு நினச்சு குழந்தைங்க கேக் கொண்டுவருவாங்க... கண்ண பொத்துன சின்ன கேப் ல தூங்கி அசடு வழியுற அப்பா சான்ஸ் ஏ இல்ல....

ஒரு பிளாட்டினம் டிசைனர் விளம்பரத்துல வரும் " அவங்களா பாத்து நிச்சயிச்சாங்க , தேதி குறிச்சாங்க , கல்யாணம் பண்ணி வச்சாங்க... இன்னையோட ஒரு வருஷம் சொச்ச நாள் ஆகுது னு " அதுக்கு அப்புறம் அவங்க ரெண்டு பேரும் ரயில்ல ஏறனும்.. கூட்டதுல்ல மாட்டிகிட்டு ஆளுக்கு ஒரு பக்கமா போய்ட்டாலும் ரெண்டு பேரும் ட்ரைன்ல ஏறாம அடுத்தவங்கள தேடுவாங்க... ரெண்டு பேரும் பாத்துகிட்டதுக்கு அப்புறம் ஒரு டயலாக் வரும் " எங்களோட காதல் அந்த தருணத்துல தான் புரிஞ்சது" ங்கற மாதிரி... இந்த கான்செப்ட் அ வச்சு ஒரு படமே எடுக்கலாம்.. ஆனா தமிழ் ரசிக பெருமக்களுக்கு இந்த கதை பிடிக்குமா னு தெரியல...

அப்புறம் " ஏஜ் மிராக்கில்" விளம்பரத்துல அந்த கணவன் காதல சொல்றது அழகுதான்... ஆனா இந்த கிரீம் போட்டதுக்கு அப்புறம் தான் அவன் அப்டி சொல்லுவான் னு சொல்றதுலாம் த்ரீ மச்சுங்க....!!


ஹார்லிக்ஸ் விளம்பரத்துல வரும்... ஒவ்வொரு நாளும் ஒண்ணு கத்துக்கணும்.."தானே பிரஷ் செய்ய, பெடல் பண்ண....." இப்படி சொல்லுற எல்லா பசங்களும் க்யூட்...

என்னடா இவ விளம்பரத்த சொல்றாளா அதுல நடிச்சவங்கல சொல்லுறாளா னு டவுட் ஆகுதா...??!! சில விளம்பரம் அதுல நடிகறவங்க காரணமா க்யூட்டா இருக்கு இன்னும் சிலதுல கான்செப்ட் காரணமா அதுல நடிச்சவங்க அழகா தெரியுறாங்க.... எதுனா புரிஞ்சுச்சா ???!! கஷ்ட்டப்பட்டு எதோ சொல்லவரேன் ஒழுங்கா ஒரு தரத்துக்கு நாலு தரம் படிச்சு புரிஞ்சுக்கோங்க... என்ன புரிஞ்சது னு " நினைக்குறத சொல்லிட்டு போங்க" பகுதில மறக்காம சொல்லிட்டு செல்லவும்...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்பா கலர்புல்லா ஒரு பதிவு போட்டாச்சு....
இதுக்காக யாரும் திட்ட வரதுக்கு முன்னாடி மீ எஸ்கேப்....!!

நெக்ஸ்ட் மீட் பண்றேன்....!!!
உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin