Friday, December 11, 2009

தலைப்பு பதிவின் இறுதியில் சொல்லப்படும்!!

இன்னைக்கு பதிவிட்ற எல்லா பதிவர்களும் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்றாங்க... அதுனால நானும் சொல்லி வைக்குறேன்

"பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரஜினி அங்கிள் "

ஒரிஜினல் டிவிடி வாங்கி படம் பாக்குற வழக்கம்லாம் எனக்கு இல்லைங்க... என் ப்ரென்ட் சொன்னானு சொல்லிட்டு ஒரு வெப்சைட் ல இருந்து ஒரு படத்த டவுன்லோட் பண்ணி பாக்கலாம்ன்னு முயற்சி பண்ணேன்... அந்த கொடுமையா ஏன் கேக்குறீங்க இந்தா அந்தான்னு ஒரு நாள் முழுக்க அந்த படம் டவுன்லோட் ஆச்சு...

சரி ஆனது ஆச்சு படத்த பாப்போம் ன்னு இயர் போன், பாப்கார்ன் சகிதத்தோட படம் படம் பாக்க உக்காந்தா அந்த படம் மகா மொக்கை (என்னை பொறுத்த வரைக்கும் தான் )...
டவுன்லோட் பண்ணி பாத்த படம் "லவ் ஹாபென்ஸ் " இந்த பேர்ல தாங்க விழுந்துட்டேன்....!!!

படத்தோட கதைன்னு பாத்த ஹீரோ ஒரு தன்னம்பிக்கை புத்தகத்தோட எழுத்தாளர்... அவரோட மனைவி இறந்து போன பிறகு அந்த துயரத்துல இருந்து எப்படி மீண்டு வரது அப்டிங்கற மாதிரி புத்தகம் எழுதுறாரு.... அப்பாலிக்கா ஒரு ப்லாரிஸ்ட் கிட்டக்க லவ் ஆகி... கடைசியில தன்னோட மனைவி இறந்ததுக்கு காரணமே நான் தான் அப்படின்னு பொது மேடையுல ஒப்புக்குராறு.....


இந்த கதைல உங்களுக்கு எதுனாச்சும் விளங்கிச்சா...??!! சத்தியமா எனக்கு ஒன்னும் விளங்கல....இதுக்கு நான் பேசாம ஸ்டார் மூவிசையோ ஹச்பியோவையோ பாத்துகிட்டு இருந்துருக்கலாம்......

இனிமேல்ட்டு டவுன்லோட் பண்ணி படம் பாக்குறது இல்லைன்னு முடிவுக்கு வந்துட்டேன்!!!

எதேர்ச்சியா நேத்திக்கு சேனல் மாத்தும்போது ஒரு சின்ன பொண்ணு நடிக்கிற சீன் வந்துச்சு... இந்த புள்ளைய எங்கயோ பாத்துருக்கொமேன்னு யோசிச்சுகிட்டே இருந்தேன்... இப்படி நான் யோசிக்கிற கேப் ல நாலு சீன் வந்துருச்சு...

அது ஒரு சின்ன பசங்க படம்... நான் பாத்த காட்சியில அந்த படத்தோட ஹீரோ (சின்ன பையன் தான்) அவங்க மிஸ் சொன்ன வேலைய செஞ்சுட்டு வராம எதோ பொய் சொல்லி சமாளிக்குறான்... அய் இந்த பயபுள்ள நம்ம வகையறா போலன்னு படத்துல ஒன்றி போய் நான் படம் பாக்க ஆரம்பிச்சுட்டேன்...


அவன் சொன்னது பொய்ன்னு கண்டுபிடிக்கிற அந்த மிஸ் சாயங்காலம் ஆறு மணிக்குள்ள 1000 வார்த்தைகள்ல ஒரு கதை எழுதிட்டு வந்தாலே ஆச்சு அப்டிங்கறாங்க... அந்த பையனும் பொய் சொல்ற அவன் டாலேன்ட்ட (!!!!) பயன்படுத்தி கதைய எழுதி முடிக்கிறான்.... கதைய எடுத்துகிட்டு போகும்போது ஒரு சின்ன விபத்துல மாட்டிக்கிறான்... அப்புறம் அந்த கார்ல வந்தவர மிரட்டி அவரு கார்லயே ஸ்கூலுக்கு போறான்...


அவசரமா போனவன் எழுதுன கதைய கார்லயே விட்டு போயிடுறான். அந்த காருக்கு சொந்தக்காரான ஹாலிவுட் ப்ரோட்யுசெர் அந்த பையன் விட்டுட்டு போன கதைய படமாக்க பாக்குறாரு... அந்த ட்ரையுலற பாக்குற அந்த பையன் இது தன்னோட கதைன்னு சொல்றான்... ஆனா அவனோட அப்பாவும் அம்மாவும் பொய் சொல்றதுக்கு உனக்கு அளவே இல்லாம போச்சு ன்னு சொலிட்டு அந்த பையன் சொல்றத நம்பமாட்டேன்றங்க...

"நான் பொய் சொல்லுறவன் தான், ஆனா இந்த விசயத்துல பொய் சொல்லல" அப்டின்னு நிரூபிக்கிரதுக்காக அவனும் அவனோட ப்ரென்ட் அந்த பொண்ணு ( அமன்டா ப்ய்ன்ஸ் ) உம் பண்ற கலாட்டா தான் மிச்ச படம்....

படத்தோட பெயர் "BIG FAT LIAR".....

இந்த ரெண்டு படத்தையும் பத்தி சொன்னதுக்கு காரணம்


"நான் முழு நேர வெட்டி ஆபீசரா இருக்கேன் "
அம்புட்டு தான்....
நான் கலர் கலரா எழுதி இருக்கிறது தான் தலைப்பு!!!




பி.கு:
டிவி ல போடுற படத்த பத்தி எழுத தான் இந்த பில்ட்அப்பான்னு யாரும் கேக்கக்கூடாது சொல்லிட்டேன் !!!

Monday, December 7, 2009

குழந்தை <> பெரியவங்க (not equal to)

கலக்க போவது யாரு ஜூனியர்ஸ் இந்த நிகழ்ச்சி ரொம்ப காலமா வருது.. எத்தன மணிக்கு போடுறான் னு தெரியாத காரணத்தினால இவ்ளோ நாளா பார்க்கல... நேத்து என்னமோ எதிர்ச்சியா பார்க்க நேர்ந்துச்சு.....

நான் பார்க்கும் போது ஒரு சிறுமி நர்ஸ் வேஷம் போட்டுக்கிட்டு ஹாஸ்பிட்டல்ல நடக்கிற நகைச்சுவைகளை சொல்லிக்கிட்டு இருந்துச்சு...

அதுல ஒரு பிட்

"எங்க டாக்டர் எவனையோ வளச்சுப்போட்டு இந்த இடத்தை வாங்கினாரு... நான் அந்த டாக்டரையே வளச்சுப்போட்டுட்டேன்" னு அப்படி னு சொல்லுது...

எல்லாரும் கைதட்டி சிரிக்கிறாங்க.... இது மட்டும் இல்ல அந்த பொண்ணு சொன்னதுல பல விஷயம் இப்படி தான் இருக்கு... அப்பப்ப அவங்க பெற்றோர்கள வேற காமிக்கிறாங்க... பொண்ணு பாத்து ரொம்ப பூரிச்சு பொய் இருக்காங்க..

சத்தியமா அந்த பொண்ணு சொன்னதுக்கு அர்த்தம் அவளுக்கு தெரிஞ்சுருக்காது.... யாராவது பெரியவங்க தான் அந்த ஜோக்கெல்லாம் சொல்லுமா னு சொல்லிகொடுதுருக்கணும்... இந்த வயசுக்கு என்ன சொல்லமுடியுமோ அத சொல்லிகொடுக்கலாம் ல...

இந்த பொண்ணையோ, அவ பெற்றோர்களையோ குறிப்பிட்டு சொல்ல வரல பொதுவா வே எல்லாருக்கும் குழந்தைகள் பெரியவங்க மாதிரி நடந்துக்கணும் அப்டின்ற எண்ணம் இருக்க தான் செய்யுது....


இப்பவே பெரியவங்க மாதிரி நடந்தா அவங்க எப்ப தான் குழந்தைங்க மாதிரி நடந்துபாங்க??!! னு வெளங்கல...

ஒரு குழந்தை பெரியவங்க மாதிரி பேசினா "இல்லாம அப்டிலாம் பேசக்கூடாது" னு சொல்ற பெற்றோர்கள விட " என் பொண்ணு/பையன் எவ்ளோ அழகா பேசுறா " னு சொல்ற பெற்றோர்கள் நிறைய பேர பாத்துருக்கேன்...

ஏன் இப்படின்னு எனக்கு புரியவே இல்ல.... சமர்த்தா சுட்டித்தனமா பேசுறது வேற அதிக பிரசங்கி தனமா பேசுறது வேற... பொதுவா நம்ம அதிகப்ரசங்கி தனமா பேசினா ரசிக்கிறோமே ஒழிய அது தப்பு னு எடுத்து சொல்றது இல்ல...

நாம எப்டியோ அப்படி தான் நம்ம பிள்ளையும்... நம்ம யாருக்கு/எதுக்கு மரியாதையை கொடுக்கிறோமோ அதுக்கு கண்டிப்பா அவங்களும் மரியாத கொடுப்பாங்க...


எங்கயோ ஆரம்பிச்சு எங்க எங்கயோ போறேனோ... கோர்வையா என் மூளை யோசிக்க மாட்டேங்குது என்ன செய்ய ??!!!

சரி மீண்டும் நிகழ்ச்சிக்கே வரேன்... அந்தா பொண்ணு சொன்னதுக்குலம் கைதட்டி சிரிச்ச நடுவர்கள் என்ன சொல்லுவங்களோ னு பாத்தேன்

"வயசுக்கு மீறின வார்த்தைகளா இருந்தாலும் உங்க expressions மற்றும் body language உங்க பெர்போர்மன்சே அழகாக்கிருச்சு " னு பாண்டிய ராஜ் சொன்னாரு... அதுவரைக்கும் சந்தோசம்...

அந்த நிகழ்ச்சிலயே இன்னொரு போட்டியாளரா இரட்டையர்கள் வந்தாங்க.. அவங்க நகைச்சுவை கொஞ்சம் டீசென்டாவே... அவங்க வயசுக்கு சொல்றப்புலயே இருந்துச்சு...


பான்சி டிரஸ் காம்படிஷன் மாதிரி எல்லாரும் வேஷம் போட்டு வந்து காமெடி பண்ணாலும் இந்த பிள்ளைங்கள இப்பிடிலாம் ஜோக் னு சொல்லி பேச வைக்கற பெரியவங்கள பாத்த மனசுக்குள்ள வருத்தமா தாங்க இருக்கு !!!!


:(:(
வருத்ததுடன்,
ரசிக்கும் சீமாட்டி
உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location