கோவை பதிவர்கள் யாரவது குருந்தமலை முருகன பத்தி எழுதிருபங்க னு நினச்சேன்... இன்னும் யாரும் எழுதலைங்க...
நான் எனக்கு தெரிஞ்சத சொல்லிட்டுபோரேன்...
கோவை நகரத்தார் சங்கத்துல இருந்து வருஷாவருஷம் நெறைய பேர் குருந்தமலைக்கு பாதயாத்திரை போறாங்க... சுமார் ஒரு 35km நடைபயணம்...
இந்தவருஷம் 17 ஆம் ஆண்டு பாதயாத்திரை... இத ஒட்டி ஒரு புக் வெளியிட்டாங்க.... எனக்கு இது தாங்க முதல் வருஷம் ..
இந்த தரவை ௨௮ பேர் காவடி எடுத்தாங்க...
14.8.09 3.30 மணி அளவுல வேல் பூஜை ல ஆரம்பிச்சு நாலரை மணிக்கு லாம் எல்லாரும் நடக்கஆரம்பிச்சு ....
வேல் பூஜை
படங்கள்
படங்கள்
8 மணிக்கு பெரியநாயக்கன் பாளையம் லயன்ஸ் கிளப் ல எல்லாருக்கும் பலகாரம் கொடுத்து , சாமி ஊஞ்சல் நிகழ்ச்சி நடந்துச்சு...
இந்த நிகழ்ச்சிக்கு வந்து சிறபிச்சவங்க விப்ரோ வீரப்பன் அவர்களும் அவங்க துணைவியாரும் அப்பறம் சிடிஎஸ் சிதம்பரம்...
ஊஞ்சல் சேவை
ஊஞ்சல் சேவைய முடிச்சுட்டு நடக்க ஆரம்பிச்ச நாங்க 15 ஆட தேதி காலைல 7 மணிக்கு குருந்தமலை சந்நிதானத்த சேந்தாச்சு... ரொம்ப திருப்த்தியா சாமி தரிசனம் முடிச்சு ஊருக்கு வந்துடோம்...
குருந்தமலை முருகன்
காவடிகள்
நாங்க சீக்கிரமாவே கிளம்பிடனால மதியம் நடக்க இருந்த அபிஷேகத்தையும் உரையையும் மிஸ் பண்ணிடோம் னு ஒரு சின்ன வருத்தம் இருக்குங்க !!