Wednesday, October 28, 2009

Ella Enchanted - டைம் பாஸுக்கு ஒரு பாண்டஸி படம் !!


இந்த பதிவுல நான் எழுத போற படம் "Ella Enchanted"... இதுவும் ஒரு பாண்டஸி படம் தான்...1997 நாவலா வந்த கதைய தான் 2004 ல படம் எடுத்தாங்க...

இந்த படத்தோட கதை இப்டித்தான் ஆரமிக்கும்.. பிரேல்ங்கற ஒரு ஊருல பிறக்கிற குழந்தை எலா.. அந்த குழந்தைக்கு லுஸிண்டாங்கற தேவதை " கீழ்படிதல்" அப்டிங்கற வரத்தை கொடுத்துருவாங்க... ஆனா நாளாக நாளாக அது வரம் இல்ல சாபம் னு எலாவுக்கு புரியும்... யாரு என்ன சொன்னாலும் அத அப்டியே செய்வா... என்னதான் அது தப்பு னு நினைச்சாலும் அதபண்ணாம இருக்கமுடியாது அவளால...
உதரணத்துக்கு சொல்லணும் னா "stay there till i come" னு சொன்னா அந்த பொண்ணால அவங்க வரவரைக்கும் அந்த இடத்தைவிட்டு நகர முடியாதுனா பாத்துகோங்களேன்...!!!

கொஞ்ச நாள் கழிச்சு எலாவோட அம்மா செத்துபோயிருவாங்க... அவங்க அப்பா பண தேவைக்காக வசதியான இன்னொரு பொம்பளைய கட்டிப்பாரு..... அந்த பொம்பளைக்கு ரெண்டு பொண்ணுங்க இருப்பாங்க... வெயிட் வெயிட் கதை கொஞ்சம் சின்ட்ரலா மாதிரி போகுது னு பீல் பண்றீங்களா?? நானும் அப்படி தான் பீல் பண்ணேன்... புதுசா வர ரெண்டு பொண்ணுங்களும் எலாவுக்கு இந்த மாதிரி ஒரு சாபம் இருக்குனு வந்த கொஞ்ச நாளைலயே தெரிஞ்சுக்கும்... அதுனால அவங்க இஷ்டத்துக்கு எலாவ ஆட்டிப்படைக்க ஆரம்பிச்சுருவாங்க..

இப்ப தான் நம்ம ஹீரோ என்ட்ரி...அவரு தான் அந்த நாட்டுக்கு அடுத்த வாரிசு..... ரொம்ப சூப்பரா ஆகா ஓகோ னு அந்த ஊருல உள்ள எல்லா பொண்ணுங்களும் அலைவாங்க அவரு பின்னாடி ஆனா அந்த பையன் ஒன்னும் அம்புட்டு அழகாலாம் இல்லை... நம்ம ஏலாவும் அந்த இளவரசன் சார்மிங்கும் எதேட்சையா ஒரு நாள் சந்திப்பாங்க... அவங்களுக்கு ஒருதருக்குகொருதர் பிடிச்சுபோகும்.. அப்டியே பாட்டு டூயட் னு முடிஞ்சுரும்னு னு நினைக்காதிங்க... எலாவோட சித்தி பொண்ணுங்க ரெண்டும் சார்மிங்குக்கு ரூட் போடுங்க.. இதுக்கு நடுவுல எலாவ காமெடி பீஸ் ஆகுறதுக்கு ஒரு சீன் வேற வரும்...


இதுக்குமேலையும்இவங்க சொல்ரபடிலாம் ஆட முடியாது னு முடிவு பண்ற எலா தனக்கு இந்த சாபத்த கொடுத்த லுசிண்டாவ தேடி கிளம்பிருவா... ஏனாக்க வரம் கொடுத்தவங்க தான் அத மாத்தமுடியும்ல... அப்படி கெளம்பி போற எலா கூட slannen ங்கற ஒரு kulla மனிதன் கூட வருவான்... அவங்க காட்டுகுள்ள போகும்போது மனுசன சாப்டற கும்பல்கிட்ட மாட்டிக்குவாங்க.. அங்க திடீர் னு நம்ம ஹீரோ என்ட்ரி கொடுத்து அவங்க ரெண்டு பேரையும் காப்பாத்துவாரு. அப்புறம் அவங்களுக்கு தானும் துணையா வரேன்னு போவாரு. அப்புறம் ஒரு ஜயண்ட்ஸ் விருந்துல கலந்துகரவங்க அப்டியே ஒரு பாட்டு பாடி டூயட் ஆடி லவ்வ ஆரம்பிச்சுருவாங்க.

அப்பாலிகா அரண்மனைக்கு வருவாங்க. அங்க நம்ம இளவரசரோட மாமா எப்டினாச்சும் சார்மிங்க போட்டு தள்ளிட்டு தானே அரசராகனும் னு ரொம்ப பக்காவா பிளான் போட்டுக்கிட்டு இருப்பாரு. நம்ம எலா தான் என்ன சொன்னாலும் அத அப்டியே செஞ்சுடுவால அதுனால எலாவ கூப்பிட்டு நீ தான் அவன கொல்லனும் னு சொல்லிட்டு இந்த திட்டத்த வெளில யாருகிட்டயும் சொல்ல கூடாதுனும் சொல்லிருவாரு. நம்ம எலாவுக்கு இப்ப என்ன பன்றதுனே புரியாது. அவளோட கூட வந்த குள்ளன் ஒருத்தன் இருப்பான்ல அவன கூப்பிட்டு அவள ஊருக்கு வெளில இருக்க மரத்துல கட்டிவச்சிட சொல்லிருவா. விதி யார விட்டுச்சு சும்மங்காட்டிக்கு அந்த பக்கம் வர லுஸிண்டா இவ கட்ட அவுத்து விட்டுடுவாங்க.


அப்புறம் என்ன ஆச்சு னு நீங்க படம் பாத்தா தெரிஞ்சுகோங்க.

இது வழக்கம் போல டைம் பாஸுக்கு பாக்கிற படம் தான். படத்துல பெருசா கருத்துனுலாம் ஒன்னும் இருக்காது. அப்புறம் இந்த படத்துல பாட்டுலாம் எனக்கு பிடிச்சுருந்துச்சு... உங்களுக்கு எப்படி னு தெரியல... படம் கடைசில எல்லாரும் ஒரு டான்ஸ் ஆடுவாங்க அது ரொம்ப கலர்புல்லா இருக்கும்.

பி.கு:
யாருனாச்சும் நல்லவங்க இருந்தீங்கனா ஓட்டு போடுங்க பாஸு...!!
6 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:

சென்ஷி said...

vote pottachu!

வால்பையன் said...

நானும் நல்லவன் தான்!!

Oviyaツ said...

மூணூவது vote என்னோடது.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

நல்லா சொல்லியிருந்தீங்க
அஞ்சாவது ஓட்டு என்னுது

போவாஸ் said...

ஏழாவது ஒட்டு என்னோடதுங்கோ...ராசியானது.

ரசிக்கும் சீமாட்டி said...

இம்புட்டு நல்லவங்களா இருக்கீங்க....!!!!

வோட்டு போட்ட அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது கோடனுகோடி நன்றிகளை உரித்தாக்குகிறேன்...

தமிலிஷ் ல வோட்டு குத்துனவங்க :

சென்ஷே
பொன்வண்டு
அபினயாஆன்லைன்
கர்தோ௨க்
csKrishna
kutram

உலவுல குத்துனவங்க :

குட்டி
திருடன்

தமிழ்மணத்துல யாரு குத்திருகீங்கன்னு தெரியல [அநேகமா ஒன்னு வல்பையனோட ஒட்டு மத்தது தான் யாரு ன்னு தெரியல :(] ஆனா அந்த நாலு பேருக்கும் ரொம்ப நன்றி....

Post a Comment

வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin