Friday, November 13, 2009

கார்ட்டூன் ரசிகர்கள் ஸ்பெஷல்


நீங்க கார்ட்டூன் பார்த்து இருக்கீங்களா... ???!!
அப்பிடினா இந்த பதிவ படிங்க... இல்லைனாலும் பரவால படிங்க ஏன்னாக்க நான் கார்ட்டூன் கதைய பத்தி எழுதபோறது இல்ல... ஏதோ நான் பார்த்து ரசிச்ச சில கார்ட்டூன் கதாபாத்திரங்கள் பத்தி தான் சொல்லபோறேன்...

நான் ஸ்கூல் படிக்கும்போது ( ஹலோ ரொம்ப லாங்க ல திங்க் பண்ணாதிங்க ஒரு நாலு வருஷம் முன்னாடி ) சாயந்தரம் ஆனாக்க கார்ட்டூன் நெட்வொர்க் பாக்குறது என் வழக்கம்... (எங்க வீட்டுல யாருக்கும் சீரியல் பார்கற வழக்கம் இல்லாம இருந்தது நான் எந்த ஜென்மத்துல செஞ்ச புண்ணியமோ!!!)

ஆறு மணிக்கு டாம் அண்ட் ஜெர்ரி ல ஆரம்பிச்சு வரிசையா பாபாய் , ஸ்கூபி டூ , டெக்ஸ்டர்ஸ் லபோரட்டோரி , பிளின்ஸ்டோன்ஸ் , ட்வீட்டி னு வர கார்ட்டூன் அம்புட்டையும் பாப்பேன்.. இன்னும் சிலதுக்கெல்லாம் பேர் மறந்து போச்சு...

அப்பலாம் கார்ட்டூன் பாக்குறதே கொண்டாட்டமா இருக்கும்... அப்புறம் காலேஜ் போயிட்டு இந்த கார்டூனலாம் கொஞ்சம் நாள் பார்கவே இல்ல... அப்பிடி பார்க்காததுக்கு ரெண்டு முக்கிய காரணம் இருக்கு... ஒண்ணு இந்த பொண்ணு இன்னும் வளரவே இல்லைன்னு பாதி விசயத்துக்கு வெட்டி விட்டுருவாளுக.. ரெண்டாவது காலேஜ் ஹாஸ்டல்ல டிவி கிடையாது அப்டியே இருந்தாலும் நம்ம ஒருத்தி கார்ட்டூன் நெட்வொர்க் வை னு சொன்னா அங்க உள்ள அத்தன பேரும் நம்மள ஏலியன் ரேஞ்க்கு லுக்கு விடுவாளுக... அதுனால என்னத்துக்கு இந்த ப்ரெச்சனை னு விட்டாச்சு...

இப்ப காலேஜ் முடிஞ்சு வெட்டியா தானே வீட்டுல இருக்கேன் ( கம்பெனி இன்னும் கூப்பிடல பா ;( ) அதுனால பழைய படி கார்ட்டூன் பார்க்க ஆரம்பிச்சுட்டேன்!!! ( வெட்டியா இருக்கதுக்கு இதையாச்சும் பண்ணலாம்னு தான்..) அப்பலாம் கார்ட்டூன் நெட்வொர்க் மட்டும் தான் இருக்கும்.. இப்ப எத்தன சேனல் வந்துருச்சு... தமிழ் ல வேற பேசுதுங்க எல்லா கதாபாத்திரமும்.. ஒரு பக்கம் டோரா புஜ்ஜி னு குழந்தைங்களுக்கு கதை சொல்லி வருது... இன்னொரு பக்கம் ஜெடிக்ஸ் னு அடிக்கவும் சொல்லிதருது!! ( என் கஸின் கிட்ட ரொம்ப அடி வாங்கிட்டேங்க!!!)


டாம் அண்ட் ஜெர்ரி யும் பாபாய்யும் இன்னும் வந்துகிட்டு தான் இருக்கு ஆனா அதே பழைய எபிசொட்ஸ்... ஆனாலும் எனகென்னமோ சலிக்கல இன்னும் எத்தனை முறை போட்டாலும் பாப்பேன் நானு...

புதுசா நெறையா கார்டூன்ஸ் வந்துருக்கு பென் 10, ஸ்டார் வார்ஸ், சோட்டா பீம் அண்ட் கிருஷ்ணா , ஜாக்கி சாண், ஸ்டுஅர்ட் லிட்டில், செட்ரிக் , காட்ஜிள்ள , அண்ணா'ஸ் ஸ்டோரிஎஸ் னு நெறைய வந்துருச்சு...


சோட்டா பீம் அண்ட் கிருஷ்ணா நல்லா இருக்கு.. மத்ததுல லாம் பாண்டஸி , ஏலியன்ஸ் அப்டினே இருக்கு... ஜாக்கி சாண் கார்ட்டூன் நல்லா இருக்கு.. படம் பார்குறாப்புலையே இருக்கு... ஜாக்கி கு குரல் கொடுக்குரவரு பேர் தெரியல ஆனா அந்த குரல் ரொம்ப பொருத்தமா இருக்கு...!!


அப்புறம் இந்த போகோ சேனல் ல MAD ( Music Art Dance ) அதுல பண்ணிகாமிக்கறதும் இன்டரஸ்டிங்கா இருக்கு...

இந்த மாதிரியே கார்டூனா கலர் கலரா வரதுனாலயே ஃபேஸ் புக் ல ஃபார்ம்வில்லி,கஃபே வொர்ல்ட்,ஃபிஷ் வில்லி, யோ வில்லி னு எல்லா விளையாட்டும் பிடிச்சு போச்சு.. வேலை வெட்டிக்கு கூப்பிடுற வரைக்கும் இப்பிடி விளையாண்டே என் காலம் போயிரும் போல...


என்னடா இந்த புள்ள இன்னும் வளரவே இல்லைன்னு நீங்களும் நினைக்குறீங்களா....??!! நினைச்சுட்டு போங்க பாஸு...


ஒண்ணு கவனிச்சு பாத்தீங்களா..??!! டாம் அண்ட் ஜெர்ரி , பாபாய் , ட்வீட்டி னு நான் சொன்ன அத்தன கார்ட்டூன் லையும் தனிமனித வன்முறை தான்...ஒருத்தர மாத்தி ஒருத்தர் அடிச்சுகிட்டே தான் இருக்காங்க பல வருஷமா!!( டாம்,ஜெர்ரி , ட்வீட்டி லாம் எப்பிடி மனிதனாகும் னு கேக்க கூடாது )


கார்டூன கார்டூனா மட்டும் பாக்குறவங்க ஜாஸ்தி தான்.... இருந்தாலும் நான் என்ன சொல்ல வரேன்னா கார்டூன ஸ்ட்ரெஸ் ரிலீசா மட்டும் பாத்த நல்லது

( ஸப்ப்ப்ப்பா கடைசி வரில ஒரு கருத்து சொல்லியாச்சு !!!!)

21 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:

யோ வொய்ஸ் (யோகா) said...

நானெல்லாம் இன்னும் கார்டூன் பாக்கிற ஜாதி. வுடி வுட்பெக்கர், டொம் அண்ட் ஜெரி, கெஸ்பர் இதெல்லாம் நான் விடாது பார்த்த கார்ட்டூன்கள்...

யோ வொய்ஸ் (யோகா) said...

ஓட்டும் போட்டுட்டேன்

தமிழ் அமுதன் said...

ஓட்டு போட்டுட்டேன்..!

சைவகொத்துப்பரோட்டா said...

yakka nanum Tom&jerry parpen. Nam kavalai maranthu sirika nalla cartoon.

swizram said...

@ யோ வாய்ஸ்
//நானெல்லாம் இன்னும் கார்டூன் பாக்கிற ஜாதி. வுடி வுட்பெக்கர், டொம் அண்ட் ஜெரி, கெஸ்பர் இதெல்லாம் நான் விடாது பார்த்த கார்ட்டூன்கள்...//

என்னங்க இன்னும் கார்ட்டூன் பாக்கிற ஜாதி னு சொல்லிட்டு " நான் விடாது பார்த்த கார்டூன்கள்" னு சொல்லுறீங்க... " விடாது பார்க்கிற" னு ல சொல்லணும்....!!

வோட்டுக்கு நன்றி நன்றி நன்றி...!!!

swizram said...

@ ஜீவன்

வோட்டுக்கு நன்றி பாஸு........!!!

உங்களுக்கு எந்த கார்ட்டூன் பிடிக்கும் னு சொல்லவே இல்லையே ???!!!

swizram said...

@சைவகொத்துபரோட்டா

புதுசா கடை திறந்துருக்கீங்க போல ??!!.
வாழ்த்துக்கள்...

//yakka nanum Tom&jerry parpen. Nam kavalai maranthu sirika nalla cartoon.//

யக்கா னு சொல்லி யூத் பீல் கொடுக்குறீங்களோ ??!!!

சிம்பா said...

karuthu sonna kadaise line la eluthu pilai kandupidichutom la...

சிம்பா said...

T&J தாங்க நம்ம ஆல் டைம் பாவரைட். இப்போ அதிகமா ஸ்கூபி வர்றதில்லை. ஆனா செட்ரிக் இப்போ கொஞ்சம் நல்லா இருக்கு.

மிஸ்டர் பீன் இப்போ அடிக்கடி.

ஆனாலும் படங்கள் அதிகமா பார்பேன். Robotics, ice age, chicken run,Finding Nemon, casper, இன்னும் நிறைய சொல்லலாம்.

swizram said...

@ சிம்பா

என்னபா சொல்றீங்க??? எனக்கு ஒன்னும் எழுத்துப் பிழை தெரியலயே....!!!!

நீங்க சொன்னாப்புல கார்ட்டூன் படங்களும் அதிகம் பார்க்கிறது உண்டு... ரசித்ததுன்னு சொல்லணும்னா ஐஸ் ஏஜ், ராட்டடோலி, tinker bell,bolt,monsters,kung fu panda...


யெப்பா.... லிஸ்ட் பெருசா போவுது...

அடுத்த பதிவுக்கு மேட்டர் ரெடி பண்ணி கொடுத்த நீங்க வாழ்க பல்லாண்டு....!!!
வளர்க நின் சேவை !!!

சிம்பா said...

thaa vukku kaal illaingo....

Truth said...

ஹி ஹி ஹி... நல்லாருந்தது, ரசித்து படித்தேன். நான் இன்னைக்கும் கார்ட்டூன் பாத்துக்கிட்டு தான் இருக்கேன். :-)
Mr Bean அனிமேட்டட் மூவீஸ் கூட ஒன்னு விடாம பாப்பேன் :-)

coolzkarthi said...

அடடே...,நம்ம கட்சி..!!!..ஆமாங்க கார்ட்டூன் பார்த்தா,இன்னும் வளரவே இல்லைன்னு எல்லா வீட்டுலையும் சொல்லுவாங்க போல......
அப்புறம் ஏங்க எந்த கம்பெனி கூப்பிட வெயிட் பண்ணுரிங்க?

coolzkarthi said...

நானும் கம்பெனி கூப்பிடாததால தான் வெட்டியா,இது மாதிரி கார்ட்டூன் பாத்துட்டு திட்டு வாங்கிட்டு இருக்கேன்... அநேகமா நீங்களும் cognizant ஆ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பாஸ் பார்ம்வில்லி, கபெ வேர்ல்ட், யோவில்லி ல எத்தனாவது லெவல்

Unknown said...

appuram naangka mattum ennavaaM inkayum appadiththAn vaazhuthu .

கார்க்கிபவா said...

cool spot ல என் ஃபோட்டோ போடனும்னா எவ்ளோ ஆவுங்க?

swizram said...

ஒரு வாரம் ஊருக்கு போய்ட்டேன்.... லேட் ரிப்ளைக்கு மன்னிச்சுக்கோங்க...

@ சிம்பா
ஸ்ஸப்ப்ப்பாஆ .... தெரியாம கால் போட விட்டுடேங்க... மன்னிச்சுடுங்க ....

@ truth

பதிவ படிச்சு கம்மேன்ட்டும் போட்டதுக்கு நன்றி...
உங்க பெயர் காரணம் தெரிஞ்சுக்கலாமா??

@coolkarthi
இல்லைங்க... நானு விப்ரோ !!


@ ரமேஷ் ரொம்ப நல்லவன்

farmville cafevillie ரெண்டதிளையும் லெவல் 25 அ தாண்டியாச்சு.... யோ வில்லி அவ்ளோ பிடிக்கல பா !!! :(

@ பஹுருதீன்

same பிஞ்ச்!!

@ கார்க்கி

பெருசா ஒன்னும் செலவு ஆகாது அண்ணா... உங்க நல்லா போட்டோ கெடைச்சா இப்பவே போட்டுற வேண்டியது தான்!!!

கார்க்கிபவா said...

//உங்க நல்லா போட்டோ கெடைச்சா இப்பவே போட்டுற வேண்டியது தான்!//

என் ஃபோட்டோன்னு சொல்ல்லிட்டு, நல்ல ஃபோட்டோ கேட்டா நான் என்ன செய்வேன்?

ஐ மீன், என்னுடைய எல்லா ஃபோடோவுமே நல்லாதானே இருக்கும்? அப்புறம் எதைன்னு நான் அனுப்ப? :))

யோ வொய்ஸ் (யோகா) said...

////கார்க்கி said...

என் ஃபோட்டோன்னு சொல்ல்லிட்டு, நல்ல ஃபோட்டோ கேட்டா நான் என்ன செய்வேன்?

ஐ மீன், என்னுடைய எல்லா ஃபோடோவுமே நல்லாதானே இருக்கும்? அப்புறம் எதைன்னு நான் அனுப்ப? :))////

நாங்க நம்பிட்டம் சகா, நீங்க தான் இணைய தளபதியே... உங்க படம் போட்டாதான் நல்லா ஹிட் ஆகுமே??

swizram said...

@ கார்க்கி

நான் சொல்லணும் னு நினச்சேன் யோ வாய்ஸ் சொல்லிட்டாப்புல ....!!!

Post a Comment

வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location