Wednesday, December 2, 2009

சார்மிங்க்கா இருக்கிறது எப்படி??!!!!




ஒரு சிலர எல்லாருக்கும் பிடிக்கும்... அவங்க எப்படி இருந்தாலும் ஏழையா,பணக்காரனா,அழகானவனா, சுமரானவனா இப்படி எப்படி இருந்தாலும் அவங்கள எல்லாருக்கும் பிடிக்கறதுக்கு காரணம் அவங்க கிட்ட உள்ள ஒரு விதமான காந்த சக்தி... சிலருக்கு இயற்கையாவே அது உண்டு நம்ம சூப்பர் ஸ்டார் மாதிரி... இன்னும் சிலர் தன்னோட செயல்களால அத கொண்டுவந்துருவாங்க...


அப்பிடி "Center Of Attraction" ஆகுறதுக்கு சில சாம்பிள் டிப்ஸ் இங்க

1. "நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் " னு பாரதியார் சொல்லிருக்குறது போல நடக்க ஆரம்பிங்க. அதுக்குன்னு வடிவேலு கணக்கா விரச்சுகிட்டு நடக்ககூடாது.

2 . முடிஞ்ச அளவுக்கு சிரிச்ச முகத்தோடவே இருக்க முயற்சி பண்ணுங்க. உம்முன்னு வச்சுக்க கூடாது. எதுவந்தாலும் சமாளிப்போம் னு முகத்துலயே தெரியனும் .

3 . ஒருத்தர சந்திக்கும்போது சின்ன தலை அசைப்போட சிரிங்க. கண்களை பார்த்து பேசனும். அதே சமயம் ஓவரா சிரிச்சு வச்சுடாதிங்க . அவரும் இதயே திருப்பி பண்ணனும் னு எதிர்பார்க்காதிங்க .

4 . நீங்க சந்திக்கிற எல்லா மனிதர்களையும் பெயரோட நினைவுல வச்சுகோங்க. பேச்ச தொடங்கும்போதும் முடிக்கும்போதும் பேர சொல்லுங்க. இப்படி சொல்றது மூலமா உங்களுக்கு பெயர் நினைவுல இருக்கதோட நீங்க பேசிகிட்டு இருக்குறவருக்கும் ஒரு சந்தோசம் கிடைக்கும் அதாவது உங்களுக்கு அவர பிடிச்சுருக்குதுன்னு .

5 . மனிதர்கள சந்திக்கிறதுல ஆர்வம் காட்டுங்க. நீங்க சந்திக்கிற எல்லாருகிட்டயும் பேச்சு கொடுங்க. பல சமயங்களுல அது உங்களுக்கு உதவி பண்ணும். அதுக்குன்னு தொன தொன பேசிகிட்டே இருக்கபடாது.

6 . இப்ப நீங்க ஒரு நண்பர்கள் கூட்டத்துல இருக்கீங்க அப்டினா அவங்களுக்கு என்ன பிடிக்குமோ அத பத்தி பேசனும். சும்மா உங்களுக்கு தெரியும் அப்டிங்கரதுகாக எதையாவது பேசக்கூடாது.

7 . யாரவது உங்ககிட்டக யாரைப்பதியாவது எதுனா பேசினா நீங்களும் நாலு பிட்ட சேத்து போடக்கூடாது. அவங்கள பத்தின நல்லா விசயங்கள மட்டும் தான் நாலு பேர்கிட்ட சொல்லணும். இப்படி நீங்க சொல்றது மூலமா எல்லாருகிட்டயும் நீங்க ரொம்ப நல்லவரு அப்டின்னு பெயர் வாங்கிடலாம் :)

8 . பொய் சொல்லாம இருக்கனும் . அப்டியே சொன்னாலும் அத எல்லாருகிட்டயும் மெயின்டைன் பண்ணனும். உதரணத்துக்கு ராணி கிட்ட எனக்கு கமலை பிடிக்கும் னு சொல்லிட்டு ராஜி கிட்ட எனக்கு கமலை பிடிக்காது னு சொன்னா ராணியும் ராஜியும் பேசிக்கும்போதும் உங்க குட்டு வெளிபடுரதுக்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கு. எதுக்கு இந்த ரிஸ்க் னு பொய் சொல்லாம இருக்க பழகிக்கோங்க.

9 . மனசார பாராட்டுங்க. ஒருத்தர் எதையாவது சிறப்பா செய்யும்போது உடனே வாய்விட்டு பாரட்டிடனும். கொஞ்சம் லேட் ஆனாலும் அது சின்ன பொறாமைய கிளப்பிவிட்டுரும்.

10 . அதே மாதிரி அடுத்தவங்க உங்கள பாராட்டினா வெறுமன நன்றியோட நிப்பாட்டிக்காம நீங்க இத கவனிச்சு சொல்றது எனக்கு ரொம்ப சந்தோசம் அப்படி இப்படி னு ரெண்டு வரி சேத்து சொல்லுங்க.

11 .உங்க குரல்ல உங்க சந்தோசம் தெரியனும். ஒருத்தர பாராட்டும்போது கத்தி பேசக்கூடாது. எதுலயும் ஒரு நிதானம் ஜென்டில்னஸ் இருக்கமாதிரி பாத்துக்கோங்க.

பி.கு: charishma அப்டிங்கறது உள்ள இருந்து வரணும். மேல சொல்லிருகறது எல்லாம் அத கொஞ்சம் பாலிஷ் பண்ற சமாச்சாரங்கள் தான்.

தயவு செஞ்சு அடுத்தவங்கள இமிடேட் பண்ணாதிங்க. உங்களுக்கு னு ஒரிஜினாலிட்டி இருக்கனும்.



இதெல்லாம் என்னங்க பெரிய விஷயம் நடுவுல நாற்காலிய போட்டு சுத்தி பத்து பேர உட்காரவச்சா ஆடோமடிக்கா "Center of Attraction" ஆகிடலாம் னு மொக்க போடுறவங்க உங்க காமேன்ட்டுகள பின்னூடத்துல சொல்லிட்டு போங்க...

அப்டியே போற போக்குல ஓட்டையும் மறக்காம போட்டுடுங்க மகராசனுங்கலே!!!!

12 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:

அகல்விளக்கு said...

ஆஹா...

இதப்படிச்ச பின்னாடி நான்கூட இனி சார்ம்மிங்குதான்...

ரொம்ப யூஸ்புல்லான மேட்டரு..

நன்றிங்க

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹ்ம் பலவிதமான எப்படி பதிவுகள் வந்துட்டிருக்கு போல வரிசயா.. ;)

சைவகொத்துப்பரோட்டா said...

Intresting matters. Thankyou

கார்க்கிபவா said...

பதிவோட கடைசி வார்த்தையை ரொம்ப லைக் பண்ணிட்டேன்.. அதான் இன்ஹ்ட பின்னூட்டம்.. என்னதான் முயற்சி செய்தாலும் இந்த charishma என்ற விஷயம் அதுவா வருவது..

swizram said...

@அகல்விளக்கு

உங்க கவிதை எல்லாம் ரொம்ப அருமைங்க.... எனக்கும் கவித எழுத சொல்லிக்கொடுங்களேன்....

swizram said...

@முத்துலெட்சுமி

இப்டி ஒரு நாலஞ்சு டாபிக் ல எழுதிவச்சுடேங்க... ஒரு மேட்டரும் கிடைகலயேன்னு இத பப்ளிஷ் பண்ணிட்டேன்...

நல்லா இருக்கா இல்லையா ??!!!

swizram said...

@ SAIVAKOTHUPAROTTA

:) நன்றி....

swizram said...

@ கார்க்கி

அதான் தல கடைசி வரில சொல்லிட்டேன்... பின்னூடத்துக்கு நன்றி....

Ungalranga said...

மீ லைக்கிங் த போஸ்டு!!

swizram said...

@ ரங்கா

மீ டான்கிங் யு...

யோ வொய்ஸ் (யோகா) said...

////நாற்காலிய போட்டு சுத்தி பத்து பேர உட்காரவச்சா ஆடோமடிக்கா "Center of Attraction" ஆகிடலாம்////

நம்ம இப்படிதான் ட்ரை பண்ணுவோம்... வராத தானே செய்யலாம். நாம் என்னா வச்சிகிட்டா வஞ்சகம் பண்ணுறோம்..

swizram said...

@ யோ வாய்ஸ்

//நம்ம இப்படிதான் ட்ரை பண்ணுவோம்... வராத தானே செய்யலாம். நாம் என்னா வச்சிகிட்டா வஞ்சகம் பண்ணுறோம்..//

சரியா தான் சொல்றீங்க...வரத தான் பண்ண முடியும்.... பட் ஒரு முயற்சி பண்ணலாம்ல.. அதுக்கு தான் இந்த பதிவு...

பேசிகல்லி இந்த பதிவு போட முதல் காரணம் கைவசம் வேற ஸ்டாக் இல்ல.... !!!

Post a Comment

வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location