Wednesday, December 23, 2009

உங்களுக்கு சாண்ட்டா கிளாஸ்ஸ பிடிக்குமா ??!!!உங்களுக்கு சாண்ட்டா கிளாஸ்ஸ பிடிக்குமா ??!!!

"சாண்ட்டா கிளாஸ்" இப்பிடி ஒருத்தர் நிஜமாலுமே இருக்காரா?? சின்ன பிள்ளையா இருந்ததுல இருந்து இந்த சந்தேகம் எனக்கு உண்டு...


எவ்ளோ அழகா பப்லியா அந்த கதாபாத்திரத்த உருவாக்கி இருக்காங்க... பாத்தவுடனே ப்ரேன்ட்லியா தோனுற மாதிரி ஒரு உருவம், அவருக்குன்னு ஒரு தனி விதமான வாகனம், செவப்பு டிரஸ் , செவப்பு குல்லா, வெள்ளந்தியான சிரிப்பு இப்பிடினுலாம்...
அப்பிடி யாரையும் இதுவரைக்கும் பாக்கலைனாலும் எனக்கு என்னவோ அந்த முகம் தெரியாத கதாபாத்திரம் மேல ஈர்ப்பு இருக்கத்தான் செய்யுது...எனக்கு வெவரம் தெரிஞ்ச வயசுல நாங்க இருந்த காலனி முழுக்க சின்ன பசங்களா தான் இருந்தோம்.. அப்பலாம் கிறிஸ்துமஸ் அப்பிடினா ரொம்ப கொண்டாட்டமா இருக்கும்...
காலனில உள்ள யாராவது ஒரு அண்ணனோ அங்கில்லோ கிறிஸ்துமஸ் தாத்தா
( சாண்ட்டா கிளாஸ்ன்னு சொல்லறத விட தாத்தான்னு சொன்னாதான் ஒரு ஒட்டுதல் கிடைக்குது என்ன செய்ய ???!!!) வேஷம் போட்டுக்கிட்டு அங்க உள்ள எல்லாருக்கும் ஏதாவது பரிசு கொடுப்பாங்க...சின்னதோ பெருசோ, மிட்டாயோ பொம்மையோ எது பரிசா கிடைச்சாலும் அவ்ளோ சந்தோசமா இருக்கும்.. என்னதான் வீட்ல உள்ளவங்க பாத்து பாத்து நமக்கு எல்லாம் வாங்கிகொடுத்தாலும் நம்ம எதிர் பாக்காத ஒரு நேரத்துல யாரோ பரிசு கொடுக்கும்போது ஒரு தனி சந்தோசம் இருக்கத்தான் செஞ்சது!! நம்ம ப்ரெண்டுக்கு கொடுத்த பொம்ம நம்மழுத விட அழகா இருக்குன்னு நினைச்சப்போ லேசா பொறமை எட்டிபாக்கும் அப்புறம் வீட்டுல அழுது அடம்பிடிச்சு எனக்கும் அதே மாதிரி பொம்ம வாங்கினது தனிகதை....!!!

அதுக்கு அப்புறம் வேற ஊர் வேற ஸ்கூல்ன்னு என்னோட கிறிஸ்துமஸ் மாறிபோச்சு.. நான் படிச்ச கிறிஸ்டியன் ஸ்கூல்ல இயேசு பிறந்த அந்த மாட்டு தொழுவம் செட்ட போட்டு இயேசு எப்பிடி பொறந்தாரு, என்னலாம் சொன்னாரு எப்பிடி அவர சிலுவைல அரஞ்சாங்க அப்டினுலாம் ஒரே கதைய வருஷா வருஷம் வேற வேற பிள்ளைங்க நடிச்சு காமிப்பாங்க... அப்புறம் ஏதாவது ஒரு அக்கா கிறிஸ்துமஸ் தாத்தா வேஷம் போட்டுக்கிட்டு "ஜின்கிள் பெல்ஸ் ஜின்கிள் பெல்ஸ்" ன்னு பாடிகிட்டே மிட்டாய் கொடுப்பாங்க...அப்புறம் காலேஜ்ல கிறிஸ்துமஸ்க்கு லீவ் கூட விட்டது கிடையாது.... எதோ போன போவட்டும்ன்னு கிறிஸ்டியன் பொண்ணுங்க பசங்களுக்கு மட்டும் "OD" கொடுப்பாங்க... கிறிஸ்துமஸ் கேக்ன்னு அவங்க கொடுக்குற தம்மாதுண்டு பீஸ்க்கு கிளாஸ் மொத்தமும் சண்டைபோட்டு ஆளுக்கு ஒரு வாய் கிடைச்சாலும் அந்த கேக்கோட டேஸ்ட் ச்ச சான்சே இல்ல போங்க!!!!


எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ வந்துட்டேன்ல... அதாங்க என் பிரெச்சனை..
இந்த பதிவ போடுறதுக்கு ஒரு காரணம்... எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாவனும்!!

உண்மைலயே சாண்ட்டா கிளாஸ்ன்னு ஒருத்தர் இருகாப்புலய??!! அப்பிடி இருந்து அவரு எங்க இருப்பாரு??... கிறிஸ்டியன்ஸ்க்கு மட்டும் பரிசு கொடுப்பாரா??? இப்பிடி பரிசு கொடுகுறதுக்காகவே வேற ஏதாவது கதாபாத்திரம் இருக்கா உலகத்துல???!!

மேல உள்ள எல்லா கேள்விக்கும் இல்லைங்கறது பதிலா இருந்தாலும் சாண்ட்டா கிளாஸ்ஸ எனக்கு ரொம்ப பிடிக்கத்தான் செய்யுது...இத படிச்சு ஓட்டு போடுற எல்லாருக்கும் இன்னைக்கு யாராவது சாண்ட்டா கிளாஸ் மாதிரி ஏதாவது பரிசு கொடுப்பாங்க...!! :)

என்ன இந்த பொண்ணு கிறிஸ்துமஸ்ஸ பத்தி பேசாம சாண்ட்டா கிளாஸ்ஸ பத்தியே பேசிருக்கு அப்டின்னு லாம் யோசிக்காதிங்க.... எனக்கு எது பிடிக்குதோ அவங்கள பத்தி தான் பேசமுடியும்.....

எல்லாருக்கும் என்னோட கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள் !!!!

24 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:

Sangkavi said...

படங்கள் அனைத்தும் கொள்ளை அழகு.....

நாஞ்சில் பிரதாப் said...

//எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ வந்துட்டேன்ல... அதாங்க என் பிரெச்சனை..//
அதாங்க எங்களுக்கும் பிரச்சனை...:-)

உங்களுக்கும் புனித கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

கார்க்கி said...

எனக்கு கிளாஸ்ஸ பிடிக்கனும்.

இல்லைன்னா கீழே விழுந்து உடைஞ்சு சரக்.. ஆவ்வ்வ் காபியெல்லாம் கொட்டிடுமே

பூங்குன்றன்.வே said...

//இத படிச்சு ஓட்டு போடுற எல்லாருக்கும் இன்னைக்கு யாராவது சாண்ட்டா கிளாஸ் மாதிரி ஏதாவது பரிசு கொடுப்பாங்க...!! :)//

சரிங்க..சொன்னதை நம்பி நானும் ஓட்டு போடாச்சு..பரிசு கிடைக்கல..அப்புறம்.கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

உங்களுக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தின வாழ்த்துகள்!!!

ரசிக்கும் சீமாட்டி said...

@Sangkavi
//படங்கள் அனைத்தும் கொள்ளை அழகு.....//

எல்லாம் கூகுள்ல சுட்டதுதான்.....

ரசிக்கும் சீமாட்டி said...

@நாஞ்சில் பிரதாப்

நன்றி... உங்களுக்கும் வாழ்த்துக்கள் !

ரசிக்கும் சீமாட்டி said...

@கார்க்கி
//எனக்கு கிளாஸ்ஸ பிடிக்கனும்.

இல்லைன்னா கீழே விழுந்து உடைஞ்சு சரக்.. ஆவ்வ்வ் காபியெல்லாம் கொட்டிடுமே//

விவகாரமானவரா தான் இருக்கீங்க சகா.....!!

ரசிக்கும் சீமாட்டி said...

@பூங்குன்றன்

//சரிங்க..சொன்னதை நம்பி நானும் ஓட்டு போடாச்சு..பரிசு கிடைக்கல..அப்புறம்.கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...///

இந்த கிர்ர்ரர்ர்ர்ர் எனக்கா உங்களுக்கா???!!!

வானம்பாடிகள் said...

:). கிருஸ்துமஸ் வாழ்த்துகள்.

கார்க்கி said...

சென்னை சிக்னலில் சாண்ட்டா தொப்பி விற்பனை கலக்குகிறது. கூடிய விரைவில் இந்தியாவிலும் கிறிஸ்துமஸ் முதல் நியூர் வரை விடுமுறை தினமானாலும் ஆச்சரியப்பட தேவையில்லை.

ஸ்ரீராம். said...

எனக்கு தண்ணி க்ளாஸ்தான் பிடிக்கும்..

ஸ்ரீராம். said...

MERRY CHRISTMAS

Romeoboy said...

\\இத படிச்சு ஓட்டு போடுற எல்லாருக்கும் இன்னைக்கு யாராவது சாண்ட்டா கிளாஸ் மாதிரி ஏதாவது பரிசு கொடுப்பாங்க...!! :)//

நல்ல தான் இருக்கு இந்த டெக்னிக் ..

அன்புடன்-மணிகண்டன் said...

//இப்பிடி பரிசு கொடுகுறதுக்காகவே வேற ஏதாவது கதாபாத்திரம் இருக்கா உலகத்துல//
பரிசு கொடுக்கறதுக்கு கதாபாத்திரம் இருக்கா தெரியாது.. USA, UK போன்ற நாடுகள்ல ஹாலோவீன் பண்டிகையன்று.. குழந்தைகள் வித்தியாசமான உடைகளணிந்து வீடு வீடா போய் "ட்ரிக்'ஒ'ட்ரீட்" என்று சொல்லி நிறைய பரிசுகள் வாங்கி செல்வார்களாம்.. யாரு வந்தாலும் இனிப்பு, பொம்மை, என்று பரிசுகள் நிச்சயமாம்..

மாதேவி said...

உங்களுக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்!

பரிசு கொடுப்பாங்க!!:))))

Anonymous said...

engalukku FANTA CLASS THAN PIDIKKUM

கிருபாநந்தினி said...

எனக்கு சாண்டா கிளாஸையும் பிடிக்கும்; எங்க சாந்தா கிளாஸ் டீச்சரையும் பிடிக்கும்! :)) ‘தவப்புதல்வன்’னு ஒரு படத்துல சிவாஜி சார் கிறிஸ்துமஸ் தாத்தா வேஷம் போட்டுக்கிட்டு ஆடுவாரு. அதைப் பார்த்து ரொம்ப ரசிச்சிருக்கேன். உங்க பதிவையும் அதே போலவே ரொம்ப ரசிச்சேன்!

Kumar PR said...

வணக்கம் தங்கச்சி,
நம்ம ஊருல கிருஷ்ணன் என்று ஒருவர், நம்ம தாத்தா மாதிரி. இவங்க ரெண்டுபேரையும் எனக்கு பிடிக்கும். ஆனா இருவருமே கற்பனை நாயகர்கள்தான்.
வலயத்தில் சுடுவது நமக்கு கை வந்த கலையாச்சே

புலவன் புலிகேசி said...

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

கிருபாநந்தினி said...

பொங்கல் வாழ்த்துக்கள். ஆமா... எங்கே ரொம்ப நாளா ஆளையே காணோம்?

பிரியமுடன் பிரபு said...

வாட் நான்சென்ஸ்... எம்பூட்டு நாள் தான் ஹாட் ஸ்பாட் னு பொண்ணுங்க போட்டோவயே போடுவாங்களோ ??!!! அதான் ஒரு சேஞ் க்கு... எப்பூடி??!!....
///

இதுக்குதான் பின்னூட்டம்
கலக்கலா இருக்கு

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

கிருபாநந்தினி said...

ஜனவரி, பிப்ரவரி முடிஞ்சு மார்ச்சும் நடக்குது. எங்கேக்கா உங்களை ஆளையே காணோம்? எனக்கு சிறந்த கமெண்ட் குயின் அவார்டு கொடுத்த அக்காவே! மறுபடியும் வலைப்பூவுக்கு வந்து ஏதாச்சும் எழுதுங்க!

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Post a Comment

வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin