Wednesday, July 1, 2009

படித்ததில் பிடித்தது-II

” எங்கள்
வயிறு வெடித்தால் தான்
முதலாளியின் வயிறு நிறையும் “
கடற்கரையில்
துப்பாக்கிகளுக்கு எதிரே
அட்டையில்
அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்
பலூன்கள் சொல்கின்றன !

விருந்து
=======

வீட்டுக்கு விருந்தினர் வருகை
எதிர் வீட்டுக் கோழி
உயிர் தப்பி ஓட்டம்

*******************************************************
ஓடி விளையாடு பாப்பா
எனஉரக்க பாடுகிறார்கள்
போலியோ குழந்தைகள் ….
*******************************************************
மகளுக்கு வரன் தேடி
நெடும் காலமாய் அலைகிறார்
திருமண தரகர்…..
*******************************************************
பேண்ட் சர்ட் போட்ட
சோள போம்மையின் நிழலில்
வெற்றுடம்புடன் தொழிலாளி!
*******************************************************
கனமான கருத்துகளைச் சுமந்தும்
காற்றில் பறக்கிறதே
காகிதம்
********************************************************
கைநாட்டு போடுபவன்
கையில் கணினி பற்றிய
விளக்க ஏடு ……
(பேருந்து சிறு புத்தக வியாபாரி ).
*********************************************************
தன்னை மறந்து சல்யூட் அடித்தார்
போக்குவரத்து காவலர்
ஆம்புலன்சின் சுழல் விளக்கிற்கு
*********************************************************
உடன் கட்டை ஏறத்
தயாராக படுத்துக் கிடந்தது
சடலத்தின் நிழல்
**********************************************************
எண்ணைக் குழாய்கள்
மண்ணைப் புணர்ந்ததில்
கிழிந்ததென்னவோ
ஓசோன் திரைதான்
***********************************************************
பத்து காகிதப் பந்துகளுக்குப்பின்
‘மரங்களைக் கொல்லாதீர்‘
என்று துவங்கியது கவிதை
************************************************************
உடற்பயிற்சி மையம்.
உயர்ந்த கட்டணத்தில்
சொல்லிக் கொடுக்கிறார்கள்
எவ்வளவு ஓடினாலும்
புறப்பட்ட இடத்திலேயே
இருப்பதற்கு
*************************************************************
செங்கல் சுமப்பவளுக்கு
இடுப்பு பாரம் குறைவுதான்
குறைந்த எடை குழந்தையால்.
*************************************************************
குளிர்சாதன இயந்திரத்தைப்
பழுது பார்த்த தொழிலாளி
சட்டை முழுதும் வியர்வை
*************************************************************
சலனமின்றி ஓடும் நதி
கூட ஓட முடியாத
மரத்தின் நிழல்
*************************************************************
வெறும் நட்பென்று விலகியே இருந்த
தண்டவாளங்கள் சங்கமித்தன
காதலில் தொடுவானத்தில்
*************************************************************
விஷம் வாங்கியதில்
சில்லறைக்குப் பதில்
கிடைத்தது இரண்டு சாக்லேட்
*************************************************************
கருவாட்டுச் சந்தையிலே
உயிருள்ள இரு மீன்கள் !
அசைவம் பழகியது
அன்று முதல்தான்.
*************************************************************
தலைவனுக்காகக் காத்திருந்தான்
மாலை மரியாதையுடன்
கட்சிக்காகத் தீக்குளித்து
சடலமாய் படுத்தபின்னும்
*************************************************************
கண்ணாடியில் கீறல்கள்
என் முகத்திலும் கோடுகள்
முதுமை நிச்சயம்
தொற்றுவியாதிதான்.
*************************************************************
உற்சாகத்தில் பறந்து சிரிக்கின்றது
வாழ்வு முடிந்தது அறியாமல்,
கிளைவிட்டு பிரியும் இலை.
*************************************************************
பழக்கமில்லா புதியவன் என்பதால்
கடிக்கின்றதோ?!
செருப்பு.
*************************************************************
ஆற்றில் ஒருகால்
சேற்றில் ஒருகால்
அயல்நாட்டுத் தமிழர்
*************************************************************
கிடைக்கும் வரை உழைப்பு
கிடைத்தபின் பிழைப்பு
பதவி
*************************************************************

1 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:

Anonymous said...

நன்றாக இருந்தது உங்கள் கவிதை (பாயசம் & பிரியாணி போல் )
இப்படிக்கு
உங்கள் நண்பர்களில் ஒருவர்

Post a Comment

வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location