Wednesday, August 19, 2009

மேகத்தை துரத்தினவன்

இன்னைக்கு சுஜாதாவோட புத்தகம் ஒன்றை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.... 1979 வருஷத்துல வந்த கதைதான்... ஆனா அத படிக்கும்போது பழைய புக் னு தோணவே இல்ல...அதுதான் சுஜாதாவோட சிறப்பு...

மேகத்தை துரத்தினவன்

நெறைய பேர் இந்த கதைய படிச்சுருப்பிங்க ... படிக்காதவங்களுக்காக ஒரு சின்ன
கதைச் சுருக்கம்...

அன்பழகன் என்கிற சாதரண மனுஷன் வாழ்கைல நடக்கிற சம்பவங்கள்... அவனுக்கே தெரியாமல் அவன் ஒரு பேங்க் கொள்ளையில் ஈடுபடுகிறான் .. போலீஸில் மாட்டிக்கொள்கிறான் ... அவனுக்கு எதிராக வாதாடும் வசந்த் அவனுக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தருகிறான்... அதுக்கு அப்புறம் வசந்த் மற்றும் ரத்னா அன்பழகனுக்கும் அந்த கொல்லைக்கும் தொடர்பு இல்ல னு கண்டுபிடிக்கறது மிச்ச கதை.....


இதுல வசந்த் பேசுற வசனம் ரொம்ப நடைமுறைத்தனமா( பிராக்டிக்கலா இத அப்டி சொல்லலாமா னு தெரில தப்பு சொல்லுங்க திருத்திக்கிறேன் ) இருக்கு...

"ஒரு வக்கீலுக்கு அவனுடைய கட்சிக்காரன்தான் முக்கியம். நான் கூட ஆரம்ப காலத்தில் ஜஸ்டிஸ், நியாயம் அது இதுன்னு கலர் கலரா கண்கள் பாத்துக்கிட்டுத்தான் இருந்தேன். ' சமூக நியாயம்'கிறதுக்கும் ' சட்டப்படி நியாயம்' கிறதுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்குன்னு கேள்விப்பட்டேன். எதோ ஒரு தீபாவளி மலர்லே படிச்சேன். ' நியாயங்கள்' னு ஒரு சிறுகதை. படிச்சுப் பாருங்க ! ஒரு வக்கீலுக்கு மனசாட்சிங்கறது ஒத்து வராது. கூடாது. அவனுக்கு ஒரே ஒரு வழக்கு ! அவன் தேர்ந்தெடுத்தது ஒரு கட்சியை. அந்த கட்சிக்கு அவன் வாதடியாகனும். பிராஸிக்யூன், டிபென்ஸ் இரண்டு பேருக்கும் சட்டப் புஸ்தகம் ஒண்ணுதான். ஒரு புட்பால் மேட்ச் மாதிரி. ரத்னாவின் காட்சிக்கும் வசந்த் காட்சிக்கும் சில விதிகள் உண்டு. அதில் முக்கியமானது சேம் சைடு கோல் போடக் கூடாது. "


இதுல யாருக்கும் ( எந்த வக்கீலுக்கும் ) மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பு இல்லன்னு எனக்குத் தோனுது. உங்களுக்கு??!!!

0 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:

Post a Comment

வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location