Tuesday, September 8, 2009

A Millionaire's First Love காதல் + மென்சோகம் + கவிதை

Hi Hi Hi...

ஒரு வாரமா ஒரு பதிவும் போடல.... நம்ம பக்கத்த தான் யாரும் படிக்கலையே அப்புறம் எதுக்கு எழுதிகிட்டு னு ஒரு எண்ணம் வந்துச்சு... நேத்து திடிர்னு ஒரு நண்பன் மெசேஜ் அனுப்பினான்


சுரேஷ் : டேய் அந்த பொண்ணு தான் உன்ன பாக்கவே மடேங்குதே அப்புறம் ஏன் டா அவள பாத்து சிரிக்குற??
ரமேஷ் : மச்சான் கீதைலயே சொல்லிருக்கு "கடமையை செய் பலனை எதிர்பாராதே னு " ... நம்ம கடமை சிரிக்குறது சிரிச்சு தான் வைபோமே னு ..

இது என்ன ஒரு மொக்க மெசேஜ் னு நீங்க பொலம்புறது புரியுது ... அது என்ன தான் மரண மொக்கையா இருந்தாலும் அதுல உள்ள மெசேஜ் "கடமையை செய் பலனை எதிர்பாராதே னு " சட்டுன்னு மண்டைல யாரோ கொட்டுன மாதிரியே இருந்துச்சு...

உடனே எங்க குல சாமி மேல ஒரு சத்யத்த பண்ணிபுட்டேன்... நம்ம கிறுக்குரத கிறுக்குவோம் படிக்கறவங்க படிக்கட்டும் னு ... எல்லாருக்கும் ஒன்னு சொல்லிகுறேன் இந்த பதிவ முழுசா படிக்காதவங்க கண்ண சாமி குதிச்சுனா அதுக்கு நா பொறுப்பு இல்ல ... சொல்ல வேண்டியத சொல்லிட்டேன் அம்புடுதேன்...
சரி மேட்டர் கு வரேங்க ... வழக்கம் போல சொந்த சரக்கு எழுத வக்கிலாததால் இந்த தரவையும் ஒரு கொரியன் படத்த பத்தி தான் எழுதுறேன்.......

A Millionaire's First Love

இந்த படம் பாத்திங்க நா உங்களுக்கு நிச்சயமா ஒரு 3 (or) 4 தமிழ் படம் நினப்புக்கு வந்துரும்...


Hyun Bin (இவரு இந்த படத்தோட ஹீரோ- சாரி ங்க இந்த பேர தமிழ் ல தட்டச்ச முடில..!!) ரொம்ப முரட்டு பையன், ரொம்ப பெரிய கோடீஸ்வரன் , யாருக்கும் அடங்கமாட்டான். அவனுக்கு 19 வயசு ஆனதும் அவனோட தாத்தா சொத்து அவனுக்கு கெடைக்கும். ஆனா அங்க தான் அவனோட தாத்தா வச்சாரு ஒரு ட்விஸ்ட். நம்ம "தம்பிக்கு எந்த ஊரு " படத்துல வர மாதிரி இவன் இந்த சொத்தையெல்லாம் விட்டு அவன் தாத்தா பொறந்து வளந்த கிராமத்துல போய் அந்த பையன் ஹை ஸ்கூல் முடிக்கணும். இவன் பாதில விட்டுட்டு வந்தாலோ இல்ல ஸ்கூல் ல இருந்தே இவன துரதிடங்கனாலோ இவனுக்கு அந்த சொத்துல 0.1% தான் கெடைக்கும்.
வேற வழி இல்லாம இந்த பையனும் அந்த ஊருக்கு போறபடுவான். போன கிராமத்துல வழக்கம் போல ஹீரோயின் என்ட்ரி (Lee Yeon-hee). ஆரம்பத்துல ரெண்டு பேருக்கும் ஒத்துபோகலனாலும் ஸ்கூல் ப்ரோஜெக்ட்ஸ் அது இது னு ஒன்னா வேலை செஞ்சு ரெண்டு பேருக்கும் ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வந்துரும்... இவங்க ரெண்டு பேரும் சின்ன பிள்ளைல ஒன்னா விளையாடினவங்க . பப்பி ல்வ் இவங்களுக்கு இருந்துச்சு னு ஒரு சின்ன பிளாஷ் பாக் வரும்... ப்ரெசென்ட் ல யும் ரெண்டு பேரும் விரும்ப ஆரம்பிச்சுருவாங்க. அவளவுதான் ஹாப்பி எண்டிங் னு நாம நினச்சுற கூடாது. அந்த பொண்ணுக்கு ஹார்ட் டிசீஸ் இருக்கும். பழைய " நினைத்தாலே இனிக்கும் " ல வர மாதிரிஹீரோ கிட்ட சொல்லாமயே இருக்கும். அப்புறம் அத ஹீரோ கண்டிபிடிச்சு எவ்ளோ செலவானாலும் பரவால எனக்கு சொத்தெல்லாம் வேணாம் அந்த பொண்ண மட்டும் காப்பாத்துனா போதும் ல சொல்லுவாரு. ஆனா அந்த பொண்ணு கிரிடிகல் கண்டிஷன் ல இருக்கா காப்பாத்த முடியாது னு சொல்லிருவாங்க.அவ சாக போற னு தெரிஞ்சு அந்த ஹீரோ அந்த கடைசி ரெண்டு மாசம் அவள அப்டி கண்ணுக்குள்ள வச்சு தாங்குவான். அவளுக்காக ஒன்னுஒன்னும் பாத்து பாத்து செய்வான். அப்பா அவங்க பேசிகுற வசனம் லாம் சான்ஸ் ஏ இல்ல. அவ்ளோ அழகா இருக்கும். லவ் எ அதுக்கு மேல பொயடிக் ஆ யாரும் சொன்னது இல்ல...

கடைசில அந்த பொண்ணு இறந்து போய்டுவா. அவ வழக்கமா உக்கார இடத்துல அந்த ஹீரோ பூ வ வைப்பான்.(சும்மா செம்ம டச்சின் சீன்)மென்சோகம் னு சொல்லுவாங்க ல அந்த மாதிரி படம்.
படத்துக்கான லிங்க்

A walk to remember படம் பிடிச்சுருந்தவங்களுக்கு இந்த படமும் கண்டிபா பிடிக்கும் !!!லவ் மீ நாட் அடுத்த கொரியன் படம். இத பத்தி எழுதலாமா வேணாமா னு நீங்க சொல்ற கமெண்ட் எ வச்சு தான் டிசைட் பண்ணனும்.நீங்க என்ன சொல்றீங்க ??!!
எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க பாஸ்....

20 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:

லோகு said...

நாங்க பல பேரு பலனை எதிர்பார்க்காம கடமையை செஞ்சுட்டு இருக்கோம்.. அதனாலே தைரியமா நீங்களும் எழுதுங்க..

போட்டோஸ் ல இருக்கற பொண்ணு நல்லா இருக்கு.. இதே மாதிரி அழகான ஹீரோயின் உள்ள படமா விமர்சனம் எழுதுங்க.. :)

லோகு said...

இந்த படத்துக்கு யூடூப் லிங்க் இல்லையா..

கத்துக்குட்டி said...

http://www.youtube.com/watch?v=LeSKpCvRdOI

கத்துக்குட்டி said...

நீ கேட்டு லிங்க் கொடுக்காமய லோகு...
போஸ்ட் ல லிங்க் ஆட் பண்ணிட்டேன் ....
என்ஜாய் தி மூவி...

லோகு said...

லிங்க் கொடுத்ததற்கு நன்றி... தமிழ் மணம் மாதிரியே, 'தமிழிஸ்' ளையும் இணைச்சா இன்னும் நெறைய பேர் படிப்பாங்க...

கத்துக்குட்டி said...

தமிலிஷ் ல போட்டாச்சு நண்பா .....

லோகு said...

// கத்துக்குட்டி said...

தமிலிஷ் ல போட்டாச்சு நண்பா .....//அப்படினா ஓட்டு பட்டை வையுங்க நண்பி.. நாங்கெல்லாம் ஓட்டு போட்டே தீருவோம்..

ஆளுக்கு ஒரு கமென்ட் போட்டு விளையாடற இந்த விளையாட்டு நல்லா இருக்குல்ல.. :))

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

அருள்மொழியன் said...

Your review towards the movie is simply superb, especially comparisons with Tamil movies are nice (but we can take it is KUSUMUBU also) Any how you inspired me through your review keep it up.

கத்துக்குட்டி said...

வோட்டு பட்டையும் போட்டாச்சு... தமிழ் மனம் வோட்டு பட்டை ஏனோ வொர்க் ஆகல பா ... அது என்ன னு சீக்கிரமா பாக்குறேன்...

ஆமா இப்டி மாத்தி மாத்தி கமெண்ட் பண்றது நல்ல விளையாட்ட தான் இருக்கு...

கத்துக்குட்டி said...

முதல் தடவையா பின்னோட்டம் போட்டதுக்கு நன்றி அருள்மொழியன்...

ஏங்க சத்யமா குசும்புகாக லாம் தமிழ் படத்தோட ஒப்பிடலைங்க ... அந்த படம் பாக்கும்போது எனக்கு இதெல்லாம் நினைப்புக்கு வந்துச்சு னு தான் சொல்ல வந்தேன்...

இதே மாதிரி எல்லா பதிவுக்கும் பின்னோட்டம் போட ஆள் கெடைச்சா இன்னும் நெறைய எழுதலாம் னு இருக்கேன் பாஸ்...

Kiruthiga said...

akka enakku oru santhegam...Ninaithaale Inikkum puthusa palasa apdinu sollalaye :)
anyways good job machi :)
kalak kalak..ipothan namma coll touch varuthu

கத்துக்குட்டி said...

கண்ண தொறந்து பாத்தாச்சா மாமி அவர்களே ??!!
நாங்கலாம் வெவரமா தான் போட்டுருக்கோம்...

கத்துக்குட்டி said...

கண்ண தொறந்து பாத்தாச்சா மாமி அவர்களே ??!!
நாங்கலாம் வெவரமா தான் போட்டுருக்கோம்...

முரளிகுமார் பத்மநாபன் said...

வணக்கம் ரசனைக்காரி, முதல் நன்றி என்னை தொடர்ந்தமைக்கு. முன் அறிமுகமில்லா நண்பர்களால்தான் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆக அதற்காக எனது நன்றிகள்.

முரளிகுமார் பத்மநாபன் said...

இதே படத்தை பற்றிய பதிவெழுதிக்கோண்டிருக்கும்போதுதான் லோகு ஏற்கனவே நீங்கள் எழுதியிருப்பதாக சொன்னார். அருமையாக எழுதியிருக்கிறீர்கள், இனி நான் என்ன எழுதுவது என்று தெரியவில்லை:-)

ரசிக்கும் சீமாட்டி said...

//இனி நான் என்ன எழுதுவது என்று தெரியவில்லை:-)//
இப்படி சொல்லிட்டு ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க.... உங்க கிட்ட ட்ரைனிங் எடுத்துக்கணும்...
என் பதிவுல போட்டோ தான் ஜாஸ்தியா இருக்கும்... நீங்க நெறையா எழுதிருக்கீங்க...
நீங்களும் நெறையா கொரியன் படம் பார்பீங்களோ??!!

முரளிகுமார் பத்மநாபன் said...

கொரியபடம் என்றில்லை, அனைத்து உலக திரைப்படங்களும் விரும்பி பார்ப்பேன். murli03@gmail.com எனது இமெயில் முகவரி, ஏதாவது திரைப்பட தேவையிருப்பின் சொல்லுங்கள்.

butterfly Surya said...

முரளியின் பதிவை பார்த்து இங்கு வந்தேன்.

உங்கள் விவரிப்பும் அருமை.

வாழ்த்துகள்.

நானும் கொஞ்சம் உலக சினிமா பார்ப்பவன் தான். முரளிக்கு தெரியும்.

ரசிக்கும் சீமாட்டி said...

@butterfly surya
வந்ததுக்கும் வாழ்த்துக்கள் சொன்னதுக்கும் நன்றிங்க...
முரளி சொன்னாரு நேற்று உங்கள பத்தி.... உங்களையும் தொடர்கிறேன்....

Post a Comment

வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin