Tuesday, October 6, 2009

நீங்கள் ரசித்ததுண்டா??!!

என்னோட ஒரு பதிவுக்கு மக்கள்கிட்ட இருந்து பயங்கர ரெஸ்பான்ஸ் ( நானா சொல்லிகுரதுதான்... நீங்க டென்ஷன் ஆகாதிங்க...) டாப் போஸ்ட் ல அதுதான் மொதல்ல இருக்குன்னா பாத்துகோங்க....விளம்பரம் பற்றிய பதிவில் , ஒரு சொந்த விளம்பரம்!!! நோ நோ அழக்கூடாது ..... கன்ட்ரோல் யுவெர்ஸெல்ப்...

அந்த பதிவ படிக்க இங்க கிளிக்கவும்....

அதுல நா கேட்டுகிட்ட மாதிரியே பல பேர் தன்னோட ரசனைக்குரிய விளம்பரங்கள பகிர்ந்து கிட்டாங்க... அவங்க எல்லாருக்கும் நன்றி... என்னோட

இவங்க பின்னூட்டத்துல போட்ட விளம்பரங்கள் சிலது அவங்க சொன்னதுக்கு அப்புறம் தான் நினைவுக்கு வந்தது... என்ன பண்றது நம்ம புத்தி கொஞ்சம் லேட் பிக்கப் தான்... அவங்களும் சொல்ல விட்ட சில விளம்பரங்கள் இன்னும் இருக்கு... அதெல்லாம் இந்த பதிவுல போடலாம் னு ஒரு எண்ணம்... ( பதிவு போடுறதுக்கு வேற எதுவும் கிடைக்கல னு இப்படி ஒரு பில்ட் அப்போட ஆரம்பிக்குறேன் னு நினைக்குறீங்களா... நினைச்சுக்கோங்க... அதான் நிஜம் !!!)

அந்த பதிவுல சொல்ல விட்டதும் பின்னூட்டத்துல சொல்ல மறந்தும்....

ஹார்லிக்ஸ் பிஸ்கட் விளம்பரத்துல, பிஸ்கட் பால்ல விழுந்ததும் அத மிக்ஸ் பண்ணுவான் அண்ணன்காரன்... மிக்ஸ் பண்ணதும் உஷாரா அத எடுத்து குடிக்கிற தம்பி செம்ம க்யூட்...

"அம்மா நீங்களும் எதையோ மறந்தாப்புல இருக்கு " னு சானியா மிர்சா சொல்லுற விளம்பரத்துல வர குழந்தையும் செம்ம க்யூட்...

"உங்களை பார்த்தே டிசைன் செய்தோம் " னு இப்ப வர ஒனிடா விளம்பரமும் பெர்பெக்ட்... " நா டிவி ல வரேன்... அ ஒனிடா டிவி ல !!!"

ஸ்வீட் எடு கொண்டாடு " வீட்டுல பாத்து கல்யாணம் பண்ணியிருந்தா இந்த தீபாவளி இப்படியா இருக்கும் ? " "ஆமா நானும் கொஞ்சம் மாப்ள முறுக்க காமிச்சுருப்பேன்!!"

ஸ்வீட் எடு கொண்டாடு இதோட பழைய விளம்பரம் "கென்யா எங்க இருக்கு ?" "அட அது எங்க இருந்தா என்ன பா.. அதான் ஜெயுச்சுட்டாங்கள்ள ?!!!"

ஆர். எம். கே. வி பெஸ்டிவ் FUN விளம்பரதுள்ள அந்த குழந்தைங்க பண்ற கலாட்டா...

" நான் உங்க கிட்ட ஒண்ணு சொல்லணும் " னு சொல்லிட்டு கண்ணாடிய மாட்டிக்கிற பொண்ணு ஹை ஹீல்ஸ் அ கழட்டிட்டு முழிப்பா... அவளுக்கு மோதிரம் போட வந்த பையன் " நானும் உன்கிட்ட ஒண்ணு சொல்லணும் " னு சொல்லி அவனோட விக்க்க கழட்டுவான்... இது எந்த விஷயத்துக்கான விளம்பரம் னு நினைவுல இல்ல.... ( உன்னைப்போல் ஒருவன் படம் பார்க்கும்போது தியேட்டருல போட்டாங்க!!)

விர்ஜின் மொபைல் " மாத்தி யோசி " இதுலயும் எல்லா விளம்பரமும் நல்லா இருக்கும்... ரொம்ப கலை உணர்வோட இருக்கும் னு சொல்ல வரல... ஆனா வித்தியாசமா இருக்கும்...

மென்டோஸ் கு ஒரு விளம்பரம் முன்னாடி வந்தது உங்களுக்கு நினைப்பிருக்கா?? ஒரு பையன் கிளாஸ் க்கு லேட்டா வருவான் ப்ரொபஸ்ஸர் திட்டுவாரு... அதுனால கிளாஸ் ல இருந்து எஸ்கேப் ஆகுற மாதிரி பின்னாடி நடந்து வருவான் "எங்க போற போய் உட்க்காரு " னு அதே ப்ரொபஸ்ஸர் சொல்லுவாரு...

ஹார்லிக்ஸ் அகாடமி விளம்பரத்துல அப்பா பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் பண்ணனும் னு நினச்சு குழந்தைங்க கேக் கொண்டுவருவாங்க... கண்ண பொத்துன சின்ன கேப் ல தூங்கி அசடு வழியுற அப்பா சான்ஸ் ஏ இல்ல....

ஒரு பிளாட்டினம் டிசைனர் விளம்பரத்துல வரும் " அவங்களா பாத்து நிச்சயிச்சாங்க , தேதி குறிச்சாங்க , கல்யாணம் பண்ணி வச்சாங்க... இன்னையோட ஒரு வருஷம் சொச்ச நாள் ஆகுது னு " அதுக்கு அப்புறம் அவங்க ரெண்டு பேரும் ரயில்ல ஏறனும்.. கூட்டதுல்ல மாட்டிகிட்டு ஆளுக்கு ஒரு பக்கமா போய்ட்டாலும் ரெண்டு பேரும் ட்ரைன்ல ஏறாம அடுத்தவங்கள தேடுவாங்க... ரெண்டு பேரும் பாத்துகிட்டதுக்கு அப்புறம் ஒரு டயலாக் வரும் " எங்களோட காதல் அந்த தருணத்துல தான் புரிஞ்சது" ங்கற மாதிரி... இந்த கான்செப்ட் அ வச்சு ஒரு படமே எடுக்கலாம்.. ஆனா தமிழ் ரசிக பெருமக்களுக்கு இந்த கதை பிடிக்குமா னு தெரியல...

அப்புறம் " ஏஜ் மிராக்கில்" விளம்பரத்துல அந்த கணவன் காதல சொல்றது அழகுதான்... ஆனா இந்த கிரீம் போட்டதுக்கு அப்புறம் தான் அவன் அப்டி சொல்லுவான் னு சொல்றதுலாம் த்ரீ மச்சுங்க....!!


ஹார்லிக்ஸ் விளம்பரத்துல வரும்... ஒவ்வொரு நாளும் ஒண்ணு கத்துக்கணும்.."தானே பிரஷ் செய்ய, பெடல் பண்ண....." இப்படி சொல்லுற எல்லா பசங்களும் க்யூட்...

என்னடா இவ விளம்பரத்த சொல்றாளா அதுல நடிச்சவங்கல சொல்லுறாளா னு டவுட் ஆகுதா...??!! சில விளம்பரம் அதுல நடிகறவங்க காரணமா க்யூட்டா இருக்கு இன்னும் சிலதுல கான்செப்ட் காரணமா அதுல நடிச்சவங்க அழகா தெரியுறாங்க.... எதுனா புரிஞ்சுச்சா ???!! கஷ்ட்டப்பட்டு எதோ சொல்லவரேன் ஒழுங்கா ஒரு தரத்துக்கு நாலு தரம் படிச்சு புரிஞ்சுக்கோங்க... என்ன புரிஞ்சது னு " நினைக்குறத சொல்லிட்டு போங்க" பகுதில மறக்காம சொல்லிட்டு செல்லவும்...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்பா கலர்புல்லா ஒரு பதிவு போட்டாச்சு....
இதுக்காக யாரும் திட்ட வரதுக்கு முன்னாடி மீ எஸ்கேப்....!!

நெக்ஸ்ட் மீட் பண்றேன்....!!!

16 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:

முரளிகுமார் பத்மநாபன் said...

இன்னும் படிக்கலை, படிச்சிட்டு வரேன். அப்படியே இதையும் பாருங்க...http://eniyoruvithiseivom.blogspot.com/2009/10/blog-post.html

ஜீவன் said...

விளம்பரங்கள பத்தி ஒரு பதிவு போட்டு ....அந்த பதிவையே இந்த பதிவுக்கு விளம்பரமாக்கி .....!!! அசத்துறீங்க போங்க...!

ரசிக்கும் சீமாட்டி said...

@முரளிகுமார்
என்னங்க இம்புட்டு நேரமாவா இந்த பதிவ படிக்கிறீங்க ???
நான் உங்க பதிவ படிச்சு,பின்னூட்டம் போட்டு,வோட்டும் போட்டுட்டு வந்துட்டேன் நீங்க என்னடா னா படிச்சுட்டு வரேன் னு சொல்லிட்டு போனவரு இன்னும் ஆள காணோம்....

ரசிக்கும் சீமாட்டி said...

@ஜீவன்
என்ன பண்றது... நமக்கு நாமே விளம்பரம் போட்டுகிட்ட தான் உண்டு ....!!!

லோகு said...

வீட்ல டிவி பாக்கிறதை தவிர வேற வேலையே இல்லையா..... :)
வித்தியாசமான பதிவு..

♠ ராஜு ♠ said...

நல்லாருக்குங்க.. நல்லாத்தான் ரசிக்கிறீங்க..!

உங்கள் தோழி கிருத்திகா said...

ரெண்டாவது முறையாக.. சூப்பரு.....
இன்னும் நெரய்ய ஆட் இருக்கு.அடுத்த பதிவ ரெடி பண்ணு...

ரசிக்கும் சீமாட்டி said...

@லோகு
//வீட்ல டிவி பாக்கிறதை தவிர வேற வேலையே இல்லையா..... :)//

ஹலோ நெட் ல உலாவறது, படம் பாக்குறது னு இப்படி நெறையா வேலை இருக்கு பா..

//வித்தியாசமான பதிவு..//

இத மாதரியே முன்னாடி எழுதுனத படிக்காததுனால இப்படி சொல்றீங்க னு நினைக்குறேன்.....

ஆமா ஏன் இம்புட்டு நாளா ஒரு பின்னூட்டமும் போடல... பிசியோ??!!

ரசிக்கும் சீமாட்டி said...

@ராஜு
நன்றிங்க... இன்னும் நெறையா இருக்கு ரசிக்க..
அப்பப்ப இப்படி பிட் பிட்டா எழுதுறேன்...

ரசிக்கும் சீமாட்டி said...

@ என் தோழி கிருத்திகா
ஆட் நெறையா இருக்கதான் செய்யுது... திரும்பவும் இத பத்தி பதிவு எழுதுன எத்தன பேர் தேடி வந்து உதைபாங்க னு தான் தெரியல :(
வேற ஒன்னும் கிடைக்கலனா மீண்டும் ஒண்ணு இல்ல ஒம்போது பதிவு இதே தலைப்புல வரலாம்..... பீ கேர்புல்...!!

kanagu said...

ithula paadhi vilambaram enaku theriyala...

mentos vilambaram enaku romba pidikkum... athe maari airtel vilambarangalum...

ipa champions league kaaga oru vilambaram poduranga.... kalakal :))

enga than ivlo arumaya yosikiraangalo..

பாலா said...

nalla irukunga unga rasanai
athodu ungal ezhuththu nadai nalla irukku rasiththen

கார்க்கி said...

எனக்கும் விளம்பரம்ன்னா ரொம்ப புடிக்கும். ஏர்டெல், வோடோவோன் விள்மபரம் பத்தி போன வருஷம் பதிவு கூட எழுதினேன். நல்லா ரசிக்கிறீங்க சீமாட்டி :))

வாழ்த்துகள்

ரசிக்கும் சீமாட்டி said...

@கனகு
பாதி விளம்பரம் தெரியலையா... என்னங்க இப்படி சொல்றீங்க... டிவி பாக்கமாட்டீன்களோ??!!
ஆமா சாம்பியன்ஸ் லீக் விளம்பரம் நல்லா இருக்கு....

ரசிக்கும் சீமாட்டி said...

@பாலா
//nalla irukunga unga rasanai
athodu ungal ezhuththu nadai nalla irukku rasiththen//

ரசிச்சதுக்கு நன்றி... ஆமா என்னமோ எழுத்து நடை னு சொல்றீங்களே அப்படி னா என்ன??!!!

ரசிக்கும் சீமாட்டி said...

@ கார்க்கி
நன்றி உங்க வாழ்த்துக்கு...
உங்க பதிவ படிச்சேங்க... அருமையான விளம்பரங்கள்!!

Post a Comment

வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin