Sunday, September 20, 2009

தொலைகாட்சியில் நீங்கள் இதை கவனித்தது உண்டா ??

தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியின் நடுவே விளம்பர இடைவேளையின்போது ரீமோட்டை தேடுபவரா நீங்கள்... அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கானது இல்லை...

நம்ம மக்களுக்கு பொதுவே ரசனை ஜாஸ்தி... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விசயத்துல்ல ரசனை உண்டு.. சிலருக்கு புத்தகங்கள் பிடிக்கும்,சிலருக்கு சினிமா, சிலருக்கு ஓவியங்கள், சிலருக்கு புகைப்படங்கள் னு இந்த பட்டியல் ரொம்பவும் நீளமானது... இப்ப என்னையே எடுத்துகோங்க உருப்படியா ஒன்னும் ஆக்கத்தெரியலைனாலும் ஏதோ சுமாரான அளவு ரசனை உண்டு.. "ஆகாவோகோ" என்று எதையும் புகழவில்லை என்றாலும் பல நேரங்களில் சில விசயங்களை மனதுக்குள் ரசிப்பது உண்டு... ரசனையை வெளிபடுத்துவதும் கூட ஒரு கலை தான்... பலருக்கு அது கைவரப்பெறும், சிலருக்கு வராது..

சரி சரி சொல்ல வந்த விசயத்துக்கு வரேன்... நாமும் தான் ஒரு நாளின் பல மணி நேரங்களை தொலைக்காட்சியுடன் களிக்கிறோம்.. அதுல எத்தனையோ விஷயங்கள் ஒளிபரப்ப படுது...இப்ப நான் எழுதப்போவது "கமர்ஷியல்ஸ்" என்ற ஒரு வார்த்தைக்குள் அடக்கப்படும் விளம்பரங்களை பற்றித்தான்...

எனக்கு தெரிஞ்ச பல பேர் எதாவது தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இடைவேளையின் போது ரொம்ப சலித்துக்கொள்வார்கள் " இப்படி விளம்பரமா போட்டு கொல்றானே " என்று... ஆனா நீங்க நல்லா கவனிச்சு பாத்தீங்க நா தெரியும் சில விளம்பரங்கள் நீங்க பார்க்கும் நிகழ்ச்சியை விட சுவாரசியமாய் இருக்கும்..

உதாரணத்திற்கு சொல்லவேண்டும் என்றால்...

1. "N for நூடுல்ஸ்" னு ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் சொல்லும் சிறுவன் ( பழைய விளம்பரம் )

2. வோடபோன் விளம்பரத்தில் "என் தம்பிக்கு கல்யாணம்" என்று சொல்லுகிற பிரகாஷ்ராஜ்.

3. கரை நல்லது விளம்பரம்
முன்பு தன் தங்கையை விழவைத்ததற்க்காக சேறுடன் சண்டையிடும் சிறுவன்.
இன்று இறந்து போன செல்லப்ப்ரானியின் நினைவில் இருக்கும் ஆசிரியை மகிழ்வூட்டும் சிறுவன்.

4. "இன்னொரு கைலயும் அடிங்க அடுத்த பால் லையும் சிக்ஸர் அடிப்பேன்" என்று நம்பிக்கை மேலிட சொல்லும் சிறுவன்.

5. "ரேஸ் ல செகண்ட்.. நாட் பாட் நாட் பாட்... எத்தன பேரு ஓடினாங்க ?" "ரெண்டு !!!"

6. அலைவா கிராகர்ஸ் " கொஞ்சம் குறும்பு கொஞ்சம் -------" [மன்னிக்கணும் வார்த்த மறந்துபோச்சு. :( ]

7. "பின்ன என்னனு தான் சொல்லிதொலைங்க.." " ஐ லவ் யு" இந்த ஜோடி எல்லா விளம்பரத்திலும் ரொம்ப அன்யோநியமா நடிச்சுருப்பாங்க.

8. வங்கி விளம்பரத்தில் சுடக்கு போட முயற்சிக்கும் சிறுவன்.

9. தன்னுடைய உண்டியலை வங்கிக்கு பத்திரமாக எடுத்துசெல்லும் சிறுவன்.


10. மழைத்தண்ணீரில் காகித கப்பல் மூழ்கிவிடாமல் தடுக்கும் நண்பர்கள் ( ஸ்பெஷல் 5)

11. ப்யூர் இட் விளம்பரத்தில் வரும் பெண் ( சராசரி இந்திய மனைவியை பிரதிபலிக்கும் முகம் அவங்களுக்கு)

12.அன்பென்றால் ஆரோக்கியா விளம்பரத்தில் வரும் சின்ன சின்ன அன்பின் தருணங்கள்.

13. " உலகதுள்ளயே மிக நீண்ட பாலத்தை என்னால் கட்டமுடியுமென்றால் ,அதை திறந்து வைக்கவும் முடியும் " என்று சொல்லும் இன்ஜினியர்.

14. வாழ்க்கை சில நொடிகளிலேயே மாறிவிடும் என்று சொல்லுகிற கார் விபத்து நடக்கும் விளம்பரம் ( இந்த விளம்பரத்துடைய மற்ற பதிவுகளில் மனம் ஒட்டவில்லை)

15. சரியான தூக்கம் இன்மையால் அடுத்தவருடைய காரை சுத்தம் செய்து விட்டு முழிக்கும் நபர்.


இன்னும் சொல்லுவதற்கு நிறைய விளம்பரங்கள் உண்டு. பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

தொலைகாட்சியில் நீங்கள் இதை கவனித்தது உண்டா ?? இல்லை என்றால் இனிமேல் கவனியுங்கள்.

நீங்கள் ரசித்த, ரசிக்கும் விளம்பரங்களை பின்னூட்டத்தில் சொல்லுவீர்கள் என்கிற நம்பிக்கையில்
- உங்கள் ரசனைக்காரி

25 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:

♠ ராஜு ♠ said...

Pepsodent விளம்பரத்தில் ஒரு பையன் "ஆமாண்டா" ன்னு சொல்றது ரொம்ப Cute ஆ இருக்கும்.

ரசனைக்காரி said...

பெப்சொடேன்ட் விளம்பரம் னு சொன்னதும் இன்னொனும் நினைவுக்கு வருகிறது..
" நீ பொய் சொல்லுவியா உங்க அம்மாகிட்ட?" னு கேக்குற அந்த ஐஸ் கிரீம் சாப்டுற சிறுவன் வரும் விளம்பரமும் நல்லா இருக்கும்!!

ரசனை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ராஜு...

மருதமூரான். said...

////3. கரை நல்லது விளம்பரம்
முன்பு தன் தங்கையை விழவைத்ததற்க்காக சேறுடன் சண்டையிடும் சிறுவன்.
இன்று இறந்து போன செல்லப்ப்ரானியின் நினைவில் இருக்கும் ஆசிரியை மகிழ்வூட்டும் சிறுவன்.

4. "இன்னொரு கைலயும் அடிங்க அடுத்த பால் லையும் சிக்ஸர் அடிப்பேன்" என்று நம்பிக்கை மேலிட சொல்லும் சிறுவன்.////

முப்பது செக்கன்களுக்குள் தங்களின் வியாபார பொருளை மக்களின் மனங்களில் நச்சசென்று பதியவைப்பதற்கு எத்தனை முயற்சிகள் செய்யவேண்டியிருக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட இந்த இரண்டு விளம்பரங்களிலும், அந்த விளம்பரங்களை எடுத்த இயக்குனரின் திறமை அச்சொட்டாக தெரிகிறது. அந்த மனிதனின் இரசையும், புதிய பார்வையும் என்னையும் வியக்க வைத்தவை.

ரசனைக்காரி said...

//அந்த மனிதனின் இரசையும், புதிய பார்வையும் என்னையும் வியக்க வைத்தவை.//

திரைப்படங்களை போன்று விளம்பரத்திற்கு வேலை செய்யும் தொழில்நுட்ப கலைஞர்களை தெரிந்து கொள்வதில் யாரும் பெரிதும் ஈடுபாடு காட்டுவதில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம்.. இத்தனை விளம்பரங்களை பட்டியலிட்ட எனக்கு , ஒரு விளம்பரத்திற்கு கூட இயக்குனர் யார் என்று தெரியாது என்பது வெட்கத்திற்கு உரிய உண்மை.

மருதமூரான். said...

நான் அறிந்தளவில் விளம்பரத்துறையில் ஈடுபடும் பிரபலங்கள் சிலர் ராஜீவ் மேனன்(சென்னை சுப்பர் கிங்ஸின் விளம்பரம் உள்ளிட்ட பல) பிரதாப் போத்தன்( எம். ஆர். ஏப் விளம்பரங்கள் பல), வசந்த் உள்ளிட்டவர்களைக் குறிப்பிடலாம். இன்னும் பல புதிய இளம் இயக்குனர்களும் விளம்பர உலகில் கொடிகட்டிப் பறக்கிறார்கள்.

ரசனைக்காரி said...

இயக்குனர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி பல விளம்பரங்களை எடுத்துள்ளனர்...
எனக்கும் நீங்க சொல்லுகிற இயக்குனகர்கள் பெயர்கள் தெரியும்...
விளம்பரத்துறையில் இருப்பவர்களுக்கும் சினிமாவிற்கு உள்ளது போன்று விருதுகள் எல்லாம் உண்டா.. தெரிந்தால் சொல்லுங்கள்...

Kamal said...

//இயக்குனர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி பல விளம்பரங்களை எடுத்துள்ளனர்...
எனக்கும் நீங்க சொல்லுகிற இயக்குனகர்கள் பெயர்கள் தெரியும்...
விளம்பரத்துறையில் இருப்பவர்களுக்கும் சினிமாவிற்கு உள்ளது போன்று விருதுகள் எல்லாம் உண்டா.. தெரிந்தால் சொல்லுங்கள்...//

எஸ், சிறந்த விளம்பரத்திற்கு விருது உண்டு....கடந்த ஆண்டு டைம்ஸ் ஆப் இந்தியா சென்னை எடிஷன் "நாக்க முக்க" விளம்பரம் தான் அவரது வாங்கியது..அதற்கு முன் வோடபோன் விளம்பரங்கள் வாங்கின...
இந்த சீரியல் கருமத்திற்கு விளம்பரங்கள் எவளவோ நல்லாருக்கும்....
இப்போ எனக்கு பிடிச்ச விளம்பரம் த்ரீ ரோசெஸ் டீ விளம்பரங்கள்...அந்த மாடல் செம அழகு + காமெடி ன்னு கலக்கலா இருக்கும்...

க.பாலாஜி said...

//வாழ்க்கை சில நொடிகளிலேயே மாறிவிடும் என்று சொல்லுகிற கார் விபத்து நடக்கும் விளம்பரம் ( இந்த விளம்பரத்துடைய மற்ற பதிவுகளில் மனம் ஒட்டவில்லை)//

இந்த விளம்பரம் உண்மையிலேயே அருமையான விளம்பரம்... பலமுறை ரசித்திருக்கிறேன்..

ரங்கன் said...

ரெண்டு வீல் தான் அங்கிள் அதுவும் சீக்கிரம் வந்துடும்..

நம்பிக்கை வார்த்தையில் பிராசிக்கும் போது உடையில் பிரகாசிக்க கூடாதா?

இது என்னோட ஃபேவரைட்..!!

ரங்கன் said...

அடடா...சொல்ல மறந்துட்டேன்..

ஒரு குட்டி பொண்ணு ஒரு புக்கை பார்த்து நோட்ஸ் எடுத்துட்டு இருக்கும்..
ஆனா.. புக்கோட பக்கங்கள் காத்துல ஆடிக்கிட்டே இருக்கும்.. அதை பார்த்த அவளோட செல்ல நாய் அவளுக்காக அந்த புக் மேல ரெண்டு காலை வெச்சு பக்கங்கள் திரும்பாம பார்த்துக்கும்..

இதே போல அந்த பொண்ணு ஒரு காலில் ஸாக்ஸ் போட்டுகிட்டு இன்னொரு ஸாக்ஸ் கிடைக்காம தேடும்.. இந்த நாய் எடுத்துகொண்டுவந்து தரும்..

வொடாபோன் விளம்பரங்கள் இது.. நான்
மிகவும் ரசித்தது..

ரங்கன் said...

ரொமாண்டிக் விளம்பரம் ஒண்ணு இருக்கு..

சன்ரைஸ் கம்பெனி காரங்களுக்கு பண்ணினது..

காதலி ஓவியம் வரைஞ்சிகிட்டு இருப்பா..
அப்போ அவளின் முடி முகத்தில் விழுந்து தொந்தரவா இருக்கும்..

அருகில் காதலன் போன் பேசிகிட்டு இருப்பான்.. திடீர்னு அருகில் வந்து அவளுடைய முடியை காதில் செருகி ஒரு ஸ்மைல் பண்ணிட்டு அந்த பக்கம் போய்டுவான்..

என்னை தொட்ட ரொமாண்டிக் விளம்பரம் இது..

Cable Sankar said...

நீஙக் ரசனைக்காரிதான்.

ரசனைக்காரி said...

@கமல்

தகவலுக்கு நன்றி கமல்... ரசணையை பகிர்ந்து கொண்டதற்கும்...

@க.பாலாஜி

சேம் பின்ச்!!!

@ரங்கன்

ரசனயை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி நண்பா...!!
வோடபோன் விளம்பரங்கள் எல்லாமே கவிதையா தான் இருக்கும்.

அந்த சன்ரைஸ் விளம்பரம் சரியாக நினைவுக்கு வரவில்லை :(

ரசனைக்காரி said...

@கேபிள் சங்கர்

நன்றிங்க அண்ணோவ் !!

kiruthiga said...

ஐயோ 104ஆ....டீ இன்னும் சூட இருந்தா 108கே போயிருக்கும் அப்டினு சொல்ர 3 ரோசெஸ் விளம்பர வைப் ரொம்ப கியூட் :)
அதோட என்றென்றும் மறக்க முடியாதது
"எல்லா கலர் பட்டும் RMKV ல மட்டும்"

ரசனைக்காரி said...

@கிருத்திகா
அந்த ஜோடி வருகிற அணைத்து விளம்பரங்களுமே ரசிக்கத்தகதாக இருக்கும்.

புலவன் புலிகேசி said...

முக்கியமான விளம்பரத்தை விட்டு விட்டீர்களே!!! வோடபோனில் (முன்னர் Hutch) அந்த அழகான நாயின் சேட்டைகள்.

ரசனைக்காரி said...

@புலவன் புலிகேசி

அந்த விளம்பரங்களுக்கு தனி பதிவே போடலாம் தான்... நன்றி நினைவூட்டியதிற்கு.....

kiruthiga said...

இன்னொரு விளம்பரத்தை மறந்துட்டேன் நண்பி
நம்ம திரிஷா ==மனூ
மனூ=நா ரொம்ப பிசி...
எதுனு சொல்லு??
பழய கொககோலா விளம்பரங்களும் அழகு..

உங்கள் தோழி கிருத்திகா said...

மிச்சமான 3 ரூபாய்ல நான் ஐஸ் க்ரீம் சாப்டேன்...
3 ரூபாய்ல 3 சாக்லேட் வாங்கினென்..1 நன் சாப்டென்...ஒன்னு இவ சாப்ட்டா...இன்னொன்னு உங்களுக்கு...

அரசூரான் said...

அருமையான பதிவு, நான் கிரியேட்டிவிட்டி என்று தலைப்பிட்டு இது பற்றி முன்பு வளையேற்றி இருந்தேன். நான் குறிப்பிட ஒரு விளம்பரம்...

புரூ காஃப்பி. தான் தாய்மை அடைந்திருப்பதை அழகாக சொல்லும் விதம்... அருமை.

ஹாட் ஸ்பாட் போல கூல் ஸ்பாட்... உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

ரசனைக்காரி said...

@ கிருத்திகா

இப்படி ஒவ்வொரு விளம்பரமா போட்டு என்னோட அடுத்த பதிவுக்கு மேட்டர் இல்லாம பண்ணிடாத டா...
அடுத்த பதிவுல எழுத இன்னொரு பதினஞ்சு விளம்பரம் ரெடி பண்ணிருக்கேன்... நீ பின்னூட்டத்தில் போடுறதுக்குள்ள அத பதிவா போடணும் !!! யூ சி ஐ அம் பிஸி !!! இந்த வாரதுக்குள்ள போட்டுடுறேன்டி மா....

ரசனைக்காரி said...

@ அரசூரான்

அது ரொம்ப நல்ல விளம்பரம்ங்க...
உங்க பதிவ படிக்கலாம் னு ரொம்ப தேடினேன்... கண்ணுக்கு அகப்படல...

வெற்றி வெற்றி வெற்றி !!! படம் போட்டு ஒரு வாரதுக்குள்ள முதல்முறையா அதபத்தி நீங்க சொல்லிடீங்க...
ஐ அம் வெரி ஹாப்பி !!!!

பின்னோக்கி said...

நல்ல விளம்பரங்கள்.

//இறந்து போன செல்லப்ப்ரானியின் நினைவில் இருக்கும் ஆசிரியை மகிழ்வூட்டும் சிறுவன்

என்னவோ தெரியலை..இந்த விளம்பரம் எனக்கு புடிக்கலை.

ரசனைக்காரி said...

@ பின்னோக்கி

அந்த விளம்பரத்துல முதல் பகுதி எனக்கும் பிடிக்காதுங்க..

"இன்னைக்கு ரோஸி மிஸ் ஏன் வரல ?!!"
"அவங்க நாய் செத்து போச்சு .."
"ஊஊ ஊ ......."

இது எனக்கும் பிடிக்காது....

Post a Comment

வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin