Wednesday, October 7, 2009

மிஸ்டர் பெர்பெக்ட் ஐ கவுப்பது எப்படி?!!!

இது படத்தோட பேருங்க....ஹே நான் மறுபடியும் கொரியன் படத்த பத்தி எழுத போறேன்...

இந்த தரம் நான் எழுத போறது செட்யுசிங் மிஸ்டர் பெர்பெக்ட் படத்த பத்தி...


இந்த படத்தோட கதாநாயகி மின்ஜூனா(Uhm Jung-hwa) காதல்ல ரொம்ப நம்பிக்கை உள்ளவங்க. தன்னோட பாய் பிரென்ட் கிட்ட உண்மையா இருக்கணும் எப்பவுமே னு நினைபாங்க. ஆனா என்னமோ இவங்களுக்கு யாருமே ரொம்ப நாள் பாய் பிரெண்டா நிலைக்கமாட்டாங்க. இப்படி தான் ஒரு நாள் அவங்க லவ் பிரேக் அப் ஆனா விரக்தில கார் ஓட்டிட்டு வரும்போது இன்னொரு கார் மேல மோதிடுவாங்க. அந்த கார் இருந்து இறங்குறவர் ராபின் ஹேடன்(Daniel Henney) தான் மின்ஜூனா வோட புது பாஸ்.

ராபின் ஹேடன் எல்லாத்துலயும் பெர்பெக்ட். அவரு எல்லாத்தையும் பிளான் பண்ணி தான் பண்ணுவாரு ( வடிவேலு மாதிரி காமெடி பீஸ் இல்லைங்க... மெய்யாலுமே எல்லாத்தையும் கரெக்டா பண்ணுவாரு).
அவர் மின்ஜூனா கிட்ட லவ் , உறவு எல்லாமே ஒரு கேம் மாதிரி னு சொல்லுவாரு. மின்ஜூனா அவருகிட்ட லவ் விசயத்துல தனக்கு உதவி செய்யமுடியுமா னு கேப்பாங்க. ராபினும் ஒத்துபாரு.

ராபின் சொல்ல சொல்ல அந்த பொண்ணு அது மாதிரியே நடந்துக்கும். ஆனா மின்ஜூனுக்கு இப்படி லவ் மைன்ட் கேம் விளையாடுறது பிடிக்காது. இப்படி பண்றதுக்கு முன்ன மாதிரியே இருந்துட்டு போலாம் னு தோணிடும். ராபின் காதல கேம் பாக்குறதுக்கு ஒரு காரணம் அவரோட முன்னால் கசப்பான காதல் அனுபவம்.

மின்ஜூனா வோட நடவடிக்கைகளால ராபினுக்கு கொஞ்சம் கொஞ்சமா அவ மேல காதல் வந்துடும். அவங்க ரெண்டு பேருக்கும் ஒத்து போய் எப்புடி ஒண்ணா சேருவாங்க னு தான் மிச்ச கதை.

இந்த படத்துல உள்ள தனித்துவம் என்ன னா... இந்த படம் முழுக்க ராபின் ஆங்கிலத்துல தான் பேசுவாரு.. மின்ஜூனா கொரியா மொழி தான் பேசுவாங்க.... இந்த மாதிரி டயலொக் கொரியன் படங்கள்ல புதுசு...


ஏற்கனவே இந்த படத்த பாத்தவங்க உங்க கருத்தை சொல்லிட்டு போங்க... இல்லைனா போய் இந்த படத்த பாருங்க...

ட்ரைலர் இங்க பாருங்க.......

என்ன தான் சொன்னாலும் கொரியன் நடிகருங்க நடிகைங்க எல்லாரும் சும்மா செம க்யூட்... ஹி ஹி ... :):)

21 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:

உங்கள் தோழி கிருத்திகா said...

kalakkura machi.....sema padam...nan 10 thadavaikku mela paathutten :)

நையாண்டி நைனா said...

nallaa irukku...

கலையரசன் said...

பாத்தாச்சு! நல்ல படம்...

swizram said...

@கிருத்திகா
நன்றி கண்ணு..... இன்னும் பத்து தரவ பாத்துடு டா...

swizram said...

@ நையாண்டி நைனா

உங்க கமெண்ட்டும் நல்ல இருக்கு... நன்றி பின்னூட்டம் இட்டதுக்கு....

swizram said...

@கலையரசன்

நன்றி உங்க கருத்துக்கு......

Sanjai Gandhi said...

அட.. இவ்ளோ சின்னதா கூட விமர்சனம் எழுதலாமா? அப்டியே படம் பார்க்கவும் ஒரு லின்க் தந்திருந்தா புண்ணியம் கூடி இருக்குமே.. :)

swizram said...

@ சஞ்சய் காந்தி

முழு கதையையும் சீன் பை சீன் சொல்றதுல விருப்பம் இல்ல... அதுனால தன இவ்ளோ சின்ன விமர்சனம்..

படம் யூடியுப் ல இருக்குங்க.....

பாலா said...

உங்க எழுத்துக்கள் அதிமேதாவித்தனமற்ற தன்மையே உங்கள் எழுத்துக்களை ரசிக்கவைக்கிறது தோழி
அதோடு குழந்தைமை. இதையே கொஞ்ச நாளைக்கு கடை பிடியுங்கள் உங்களுக்கு இந்த வடிவம் போரடிக்கும் வரை

swizram said...

@பாலா
//உங்க எழுத்துக்கள் அதிமேதாவித்தனமற்ற தன்மையே உங்கள் எழுத்துக்களை ரசிக்கவைக்கிறது தோழி
அதோடு குழந்தைமை. இதையே கொஞ்ச நாளைக்கு கடை பிடியுங்கள் உங்களுக்கு இந்த வடிவம் போரடிக்கும் வரை//

அதிமேதாவி தனமாலாம் சுட்டு போட்டாலும் எழுத வராதுங்க.... எனக்கு இப்டி தான் எழுத வருது... இத ரசிகிரதுக்கு நன்றி... இதயே தான் தொடரவும் இருக்கேன்... தொடர்ந்து ரசிங்க....

தேவன் மாயம் said...

சின்னதா இருந்தாலும் நல்லா எழுதியிருக்கீங்க!!

தேவன் மாயம் said...

வாட் நான்சென்ஸ்... எம்பூட்டு நாள் தான் ஹாட் ஸ்பாட் னு பொண்ணுங்க போட்டோவயே போடுவாங்களோ ??!!! அதான் ஒரு சேஞ் க்கு... எப்பூடி??!!.../

வெளையாடுங்க!! சூப்பருல்ல!!

swizram said...

@ தேவன் மாயம்

//சின்னதா இருந்தாலும் நல்லா எழுதியிருக்கீங்க!!//

நன்றிங்க....

//வாட் நான்சென்ஸ்... எம்பூட்டு நாள் தான் ஹாட் ஸ்பாட் னு பொண்ணுங்க போட்டோவயே போடுவாங்களோ ??!!! அதான் ஒரு சேஞ் க்கு... எப்பூடி??!!.../

வெளையாடுங்க!! சூப்பருல்ல!!//

ஸ்ஸ்ஸப்பா இப்பயாச்சும் நோட் பண்ணீங்களே !!!... ரொம்ப சந்தோசம்.....

ப்ரியமுடன் வசந்த் said...

hihihi

ஆள் மாத்துன மாதிரி பேரையும் மாத்திட்டே இருக்கீங்களே பிரதர்.....

ப்ரியமுடன் வசந்த் said...

சாரி சிஸ்டர்

Anonymous said...

குட்... எனக்கும் கொரியன் ஹெரோஇன்ஸ் ரொம்ப பிடிக்கும்..பப்ளி ..



அன்புடன்,

அம்மு.

kanagu said...

naan inimel than paakanum... seekram paathudren :))

swizram said...

@பிரியமுடன் வசந்த்
//ஆள் மாத்துன மாதிரி பேரையும் மாத்திட்டே இருக்கீங்களே பிரதர்.....//
//சாரி சிஸ்டர்//

என்னங்க பண்றது... அந்த பேர்ல ஏற்கனவே ஒருத்தவங்க இருக்காங்க னு ரொம்ப லேட்டா தான் தெரிஞ்சுச்சு... அது தான் சேரி கொழப்பம் வேணாமே னு பேர மாத்திகிட்டேன்....

swizram said...

@அம்மு
//குட்... எனக்கும் கொரியன் ஹெரோஇன்ஸ் ரொம்ப பிடிக்கும்..பப்ளி ..
//

ஹீரோஸ் கூட அழகு தாங்க.... ஹி ஹி ஹி :)

swizram said...

@கனகு
//naan inimel than paakanum... seekram paathudren :))//

பாருங்க பாருங்க......

புலவன் புலிகேசி said...

நல்லா இருக்கு....

Post a Comment

வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location