Sunday, October 25, 2009

மூணு வாரம் கழிச்சு மூணு படம்....!!!

எல்லாருக்கும் ஒரு பெரிய வணக்கம்... பதிவு எழுதி கிட்டத்தட்ட மூணு வாரம் ஆகிடுச்சு...
நடுவுல ஏன் பதிவு போட முடியல னு சொல்றதுக்கு பெரிய கதையே இருக்கு... பயபடாதிங்க உங்ககிட்ட கதை சொல்லி மொக்க போட போறது இல்ல...சுருக்கமா சொல்லணும் னா BSNL செஞ்ச சதி அவ்ளோ தான்...

சரி மேட்டருக்கு வரேன்... இந்த பதிவுல மூணு படத்த பத்தி எழுதலாம் னு இருக்கேன்... அந்த மூணு படத்துக்கும் சில ஒற்றுமைகள் உண்டு அது என்ன னு அப்பாலிக்கா சொல்றேன்...

மொத படம்

You've Got Mail

இந்த கதை நீங்க அடிக்கடி பாத்த மாதிரி தான் இருக்கும்... அதான் நம்ம ஊர் பக்கம் ரொம்ப நாள் அறைச்சங்கலே பாத்து காதல் பாக்காம காதல் னு டிசைன் டிசைனா அந்த மாதிரி இதுல ஹீரோவும் ஹீரோயினும் AOL Messenger ல சாட்டி( அதான் சாட் பண்ணி) விரும்ப ஆரம்பிப்பாங்க... ஆனா விதி னு ஒண்ணு இருக்கு ல... சாட் ல அவ்ளோ நெருக்கமா இருக்க இவங்க நிஜ வாழ்கை ல பிசினஸ் எதிரியா இருப்பாங்க...

நேர்ல பாக்கும் போது லாம் சண்ட போட்ற இவங்க எப்படி ஒத்து போறாங்க னு காமிக்கறது அவங்களுக்குள்ள நடக்குற வசனங்கள்ல தான்... இந்த படத்துல வசனம்லாம் ரொம்ப நல்லா இருந்துச்சு... சாம்பிள் கு கொஞ்சம் வசனம் இங்க...
"I started helping my mother here after school when I was six years old. I used to watch her, and it wasn't that she was selling books, it was that she was helping people become whoever they were going to turn out to be. When you read a book as a child it becomes part of your identity in a way that no other reading in your life does."

"Sometimes I wonder about my life. I lead a small life. Well, valuable, but small. And sometimes I wonder, do I do it because I like it, or because I haven't been brave? So much of what I see reminds me of something I read in a book, when shouldn't it be the other way around? I don’t really want an answer. I just want to send this cosmic question out into the void. So goodnight, dear void."

படத்தோட பாத்த வசனம்லாம் இன்னும் நல்லா இருக்கும்..... ஸோ பாருங்க....!!

அடுத்த படம்

Kate & Leopold

இது ஒரு பாண்டஸி படம்... அதாவது ஒருத்தன் ஒரு பார்முலாவ கண்டுபிடிச்சு இதுக்கு முன்னாடி உள்ள நூற்றாண்டுக்கு எப்படி போறதுன்னு தெரிஞ்சுப்பான்... அப்படி இவன் போகும்போது இவன் பின்னாடியே நம்ம ஹீரோ ட்யுக்கும் அவரு காலத்த விட்டு நம்ம நிகழ்காலத்துக்கு வந்துருவாரு... அப்படி வர ட்யுக் இங்க என்ன பண்றாரு னு தான் மிச்ச சாரி சாரி மொத்த கதை ;)

இங்க வந்த ட்யுக் கேட் அப்டிங்கற பொண்ணுகிட்ட மனச பரிகொடுக்குறாறு.. அந்த பொண்ணு ஒரு விளம்பர நிறுவனத்துல வேலை பாக்குது.. அவ ஒரு விளம்பரத்துக்கு நடிகறதுக்காக நம்ம ட்யுக் கிட்ட கேக்கும்... அவரும் சம்மதிப்பாரு. ஆனா பாருங்க அந்த விளம்பர பொருள் அவ்ளோ தரமானதா இல்ல காசுக்காக எதுக்கு வேணா விளம்பரம்பன்னுவீன்களோ ஆச்சாக்கும் பூச்சாக்கும் னு கத்திட்டு ட்யுக் அந்த எடாத விட்டே போய்டுவாரு.. அந்த பொண்ணும் சரி போறான் விடு னு நினைக்கும் .ஆனா முடியாது... அப்பளிக அந்த பொண்ணு ட்யுக்க தேடி அவரு வாழ்ந்த காலத்துக்கு போய்டும்... அவங்க ரெண்டு பேரும் சேருராங்களா இல்லையானு நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியனுமா???!!

நெக்ஸ்ட் படம்

Sleepless in Saettle


நம்ம ஹீரோ ஓர் Widower (இத எப்படி தமிழ்ல சொல்லணும் னு யாருனா சொல்லுங்களேன்) . அவரு தான் பையனோட சியாட்டல்ங்கற ஊருக்கு மனைவி இறந்த சோகத்த மறந்துட்டு புது வாழ்க்கை ஆரம்பிக்க போறாரு. ஒரு நாள் ரேடியோல நடக்குற ஒரு கௌன்சிலிங் நிகழ்ச்சி ல அந்த பையன் பேசுறான். தன்னோட அப்பா கவலையாவே இருக்காரு அவருக்கு நீங்க எதுனா சொல்லுங்க னு நிகழ்ச்சி நடத்துற ஆன்ட்டி கிட்ட கேக்குறான். அந்த ஆண்ட்டி உங்க அப்பாவ பேச சொல்லு னு சொல்றாங்க... நம்ம ஹீரோவும் பேசுறாரு.. தான் மனைவிய அவரு எப்படி எப்பிடி லாம் நேசிச்சாரு இப்ப எவ்ளோ மிஸ் பண்றேன் ( மிஸ் பண்றதுக்கும் தமிழ்ல யாருனா சொல்லுங்க பா) னு சொல்லுறாரு...

இவரு சொன்னத கேட்ட பொண்ணுங்க நெறையா பேரு அவருக்கு லெட்டர் போடுறாங்க. அத்தனையும் ஹீரோவா விரும்புறதா சொல்லி வருது. நம்ம ஹீரோயினும் லெட்டர் போட்டவங்க தான்.ஆனா அவங்க ஹீரோவா விரும்புறதா சொல்லிருக்கமாட்டங்க. ஹீரோவோட பையனுக்கு ஹீரோயின் எழுதிருந்த கடுதாசி ரொம்ப பிடிச்சிபோகும். ஆனா ஹீரோ அதுலாம் ஒதுக்காது டா நான் என் கூட வேலை பாக்குற பொண்ணயே கட்டிக்கலாம் னு இருக்கேன் னு சொல்லுவாரு. ஆனா அந்த பையனுக்கு ஹீரோ சொல்ற பொண்ண பிடிக்காது.ஹீரோயினுக்கு கூடிய சீக்கிரம் கல்யாணம் ஆனா அவங்களுக்கு அந்த கல்யாணத்துல எல்லாம் இருக்கு ஆனா எதோ இல்லை னு தொநிடே இருக்கும். அந்த குட்டி பையன் ஹீரோயினுக்கு ஒரு லெட்டர் எழுதும் அதாவது காதலர் தினதன்னைக்கு அவங்க தன்னோட அப்பாவ ஈபிள் டவர் ல சந்திக்கணும்னு. ஹீரோ ஹீரோயின் அன்னிக்கு சந்திச்சங்களா இல்லையா னு கிளைமாக்ஸ் பாத்துகோங்க.

சரி மூணு படத்துக்கும் உள்ள ஒத்துமை என்ன னா மூணு படத்துக்கும் ஹீரோயின் மெக் ரியான்.
என்னமோ போங்க இந்த ஹீரோயின் எதுலயும் ஹீரோயினாவே தெரியல.... அப்பிடியே கதாபாத்திரமா தான் தெரியுறாங்க னு சொல்லவந்தேன்...

அடுத்த ஒற்றுமை முதல் படமும் மூணாவது படமும் ஏற்கனவே வந்தா படத்தோட தழுவல்கள்...
You've Got Mail - A Shop Around the Corner
Sleepless in Seattle - An Affair to remember
(அங்கலாம் இந்த படம் இந்த படத்தோட தழுவல் னு சொல்லிகிறாங்க... இங்க தன் வித்தியாசமான கதை னு சொல்லி ஒரே கதையா பத்து பதினஞ்சு வாட்டி எடுக்குறாங்க)
இன்னொரு ஒத்துமை கூட இருக்கு... மூனும் ரொமான்ஸ் படம்... கொஞ்சம் பொதுவா தான் போகும்.. பொறுமை இருக்கவங்க பாருங்க...
மூணு படமும் வந்து எட்டு பத்து வருஷம் ஆச்சுங்க....


அப்பாலிக்கா மெயின் மேட்டர் ஒண்ணு இருக்குது... கே. எஸ். ரவிக்குமார் கிட்ட இருந்து எப்படி கலை படம் எதிர்பார்க்க கூடாதோ அதே மாதிரி என் கிட்டருந்தும் உலக சினிமாலாம் எதிர்பாக்காதிங்க... நா எதோ பொழுதுபோக்குக்கு படம் பாக்குரவ... எனது ரசணை னு பேர் வச்சுருக்கனால எனக்கு பிடிச்ச படம் தான் போட முடியும்.. உலக தரத்துக்கு லாம் இன்னும் படம் பாக்க ஆரம்பிக்கல... மொதல்ல என் தரத்துக்கு உள்ள எல்லா படத்தையும் பாக்குறதுனு முடிவுல இருக்கேன். நான் பாத்ததுல பிடிச்சத உங்க கூட பகிர்ந்துகுரேன் அம்புட்டுதான்!!

17 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:

Anonymous said...

change the photo ma:)

தேவன் மாயம் said...

ல...சுருக்கமா சொல்லணும் னா BSNL செஞ்ச சதி அவ்ளோ தான்...

கொடிய பி.எஸ்.என்.எல் ஒழிக!!

தேவன் மாயம் said...

படத்தில் இறங்கியாச்சா!!!
ஓகே ஓகே!!

தேவன் மாயம் said...

விருந்துச் சாப்பாடு எப்போ?

தேவன் மாயம் said...

ஏன் பெயர் மாற்றம்?

swizram said...

@ மயில்
என்ன போட்டோங்க வைக்கிறது???
நம்மூர் ஆளுங்கலாம் வேணாம்... வேற யாருனா சொல்லுங்க...

swizram said...

@தேவன் மாயம்

ஹலோ சார்... ரசனைக்காரி வேறவங்க பா... நான் புதுசு.... விருந்துலாம் அவங்ககிட்ட தான் கேக்கணும்.....!!!

சென்ஷி said...

:-)))))))))

லோகு said...

//என் கிட்டருந்தும் உலக சினிமாலாம் எதிர்பாக்காதிங்க...//

அப்படின்னா இதெல்லாம் உலக சினிமா இல்லையா... தமிழ் இல்லாத எல்லா படத்தையும் நாங்க உலக சினிமான்னு தான் சொல்வோம்.. :)

swizram said...

@சென்ஷி
:-))))))))))))
நாங்களும் சிரிப்போம் ல ....
எப்பூடி ???!!!

swizram said...

@லோகு

ரொம்ப நாள் கழிச்சு அட்டெண்டன்ஸ் போட்டுருக்கதுக்கு நன்றி...

அட உலகம் தரம் வாய்ந்த படங்கள் நு சொல்ல வந்தேன் வழக்கம் போல டயிப்பிங்ல விட்டுடேன்.... :(

தமிழ்ல தட்டச்ச எதுனா ஈஸி வழி சொல்லுங்க லோகு ....

தர்ஷன் said...

ம்ம் widower தபுதாரன் ன்னு நினைக்கிறேன்.
miss பண்றது இழப்பு ஆனால் ஆங்கிலம் போல அதை பயன்படுத்த முடியாது இல்லையா You've got mail ம்ம் பார்க்கலாம். tom hanks cool ஆகவும் meg ryan கொஞ்சம் பரபரப்பான ஆள் ஆகவும் நடித்திருப்பார்கள்.

swizram said...

@தர்ஷன்

தபுதாரன்.... அப்டியா சொல்றீங்க...??!! கேள்வி பட்டதே இல்லைங்க... சொன்னதுக்கு நன்றி..
மிஸ்ங்கற வார்த்தைய தமிழ்ல மொழிபெயர்க்க முடியல தான்...

படம் பாக்கலாம்னு தான் நானும் சொல்றேன்... ஆகா ஓகோனு பாராட்டுற அளவு இல்ல தான் ஆனா ஒரு தரம் மூணு படமுமே பாக்கலாம் தர்ஷன்..

நன்றி விளக்கம் சொன்னதுக்கு !!!

Toto said...

ந‌ல்ல ப‌திவு.. தேடித் தேடி மெக் ரேயான் ப‌ட‌ங்க‌ளா பாத்திருக்கீங்க‌.. ‍ When Harry met Sally - இந்த‌ ப‌ட‌மும் பாத்திடுங்க‌. Romantic comedy series.

Toto
www.pixmonk.com

swizram said...

@Toto
அந்த படமும் பாத்தேங்க.... என்னமோ மேக் ரயன் படங்கள்னு யோசிச்சப்ப எனக்கு அது பளிச்சுன்னு நினைவுக்கு வரல.... அதையும் எழுதிட்ட போச்சு..

என்ன நான் சொல்றது???!!!

Beski said...

இதுல ஒரு படம் கூட பாத்ததில்ல.

2வது படம் பாக்கலாம்னு தோனுது.

swizram said...

@எவனோ ஒருவன்

பாருங்க சார் பாருங்க... உங்க ரசனை எப்டினு தெரியல... இந்த படம் உங்களுக்கு பிடிச்சா சொல்லுங்க இந்தமாதிரி படவரிசைகளா சொல்றேன் உங்களுக்கு....!!!

Post a Comment

வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location