Thursday, October 29, 2009

நாலு பேருகிட்ட நல்ல பேர் வாங்குறது எப்பிடி ?!!!


" நான் நிறைய நல்ல காரியம்லாம் பண்ணிக்கிட்டுருக்கேன். இருந்தாலும் எனக்கு ஒரு பெரிய குறை !" அப்பிடின்னு என் நண்பர் சொன்னாரு.

"என்ன குறை ?" ன்னு நானும் கேட்டேன்.

" என்னை யாரும் நல்லவன்னு சொல்றதில்லே! அதுதான் குறை !" ன்னார் அவர்.

நல்ல செயல்களை செய்யுறதுங்கறது வேறே! நல்லவன்னு பேர் எடுக்கறது வேறே !

நல்ல பேர் வாங்குறதுன்னா சும்மாவா ?

அதுசரி... எல்லாருகிட்டயும் நல்ல பேர் வாங்கறது எப்படி?

இதுக்கு ஒரு அனுபவசாலி (டேல் கார்னர்) சில வழிகளைச் சொல்கிறார்.

அப்டியாவது நல்ல பேர் வாங்க முடியுதான்னு பார்ப்போமே! என்ன சொல்றீங்க ?

அவரு முக்கியமா இதுக்கு ஒரு எட்டு வழிகளைச் சொல்றாரு! எது எது நம்மாலே முடியுதோ அந்த வழியில்லேயெல்லாம் போய் பார்கலாமே!

அவரு சொல்ற முதல் வழி : மற்றவங்களை உண்மையாவே பாராட்டுறதுக்குப் பழகணும்ங்கறார்.

நம்மள்ல பல பேர் எப்பிடின்னா, அடுத்தவங்க ஏதாவது ஒரு நல்ல காரியம் பண்ணினா, அவங்களை பாராட்டுறதுக்கு பதிலா அவங்க மேலே பொறாமைப்பட ஆரம்பிச்சுடுறோம்! அல்லது அவங்க கிட்ட பேசுறதை நிறுதிக்கிறோம்.

அதனாலே நம்ம பேரும் கெட்டுப் போவுது; உடம்பும் கெட்டுப் போவுது.

பிறர் மேலே உண்மையாவே அக்கறை கொள்ளனும்ங்கறது ரெண்டாவது வழி.

உங்க பக்கத்துல இருக்குறவருக்கு லேசா தலைவலி. அதுக்கு உங்ககிட்டக்க மாத்திரை இருக்கு. அப்பிடி இருந்தா அதுலே ஒண்ணை கொடுத்து உதவுங்களேன். என்ன கொறைஞ்சிட போவுது இப்ப.

ஒருக்கால் அந்தத் தலைவலியே நீங்க பக்கத்துலே இருக்கறதுனாலே கூட அவருக்கு வந்துருக்கலாம்!!!

அடுத்தவங்க ஒரு தவறு பண்ணிபுட்டாங்கன்னா அதை மறைமுகமா சுட்டிகாட்டணும்.

"அய்யய்யோ, இப்படி பண்ணிப்புட்டீங்களே !" ன்னு ஆரம்பிகப்புடாது! தவருங்கறது திருத்திக் கொள்ளக்கூடியதுதான் ங்கறதை அவருக்கு உணர்த்தி ஊக்கம் அளிக்கணும்.

"பரவாயில்லே இனிமே இதுமாதிரி நடக்காமே பார்த்துக்கலாம் !" ன்னு சொல்லணும்.

உங்களுக்கு எதிர்லே இருகரவங்களை அலட்சியப் படுத்தப்புடாது! அவரும் முக்கியமானவர்தான் ங்கறதை அவரே உணர்ற அளவுக்கு நீங்க நடந்துக்கணும்.

அதுக்கு என்ன பண்ணலாம்.

அவருடைய ஆலோசனைகளையும் அடிக்கடி கேளுங்க;

"இதை பத்தி நீங்க என்ன நினைகறீங்க ?" ன்னு கேளுங்க! "என்னங்க... நாணன் சொல்றது சரிதானா ?" ன்னு கேளுங்க.

அவரையும் பேசுறதுக்கு ஊக்கப்படுத்துங்க. நீங்க மட்டுமே பேசிக்கிட்டுருக்காதீங்க. அவர் பேசுறதையும் பொறுமையா கேளுங்க. அப்பதான் உங்க பேர்லயும் அவருக்கு ஒரு நல்ல அபிப்பராயம் வரும்!

ஒரு கடுமையான வாக்குவாதம் பண்ணிக் கிட்டுருக்கீங்க; அதுமாதிரி வாக்குவாதங்கள்லேயிருந்து சிறந்த பலன் பெறனும்னா அதுலேயிருந்து ஒதுங்குறதுதான் நல்ல வழியாம்.

நழுவறதுக்கு நமக்கு சொல்லியா கொடுக்கணும்? அதுதான் நமக்கு கைவந்த கலையாச்சே!

இன்னொரு விஷயம் என்னன்னா.... அடுத்தவங்களை மகிழ்ச்சியடைய வைக்கிறது மூலமா நாமளும் மகிழ்ச்சியடையுறோம் ங்கறதை நல்ல புரிஞ்சுக்கணும்.

சில பேருக்கு அடுத்தவங்களை அதிர்ச்சியடயவச்சி வேடிக்கைப் பார்க்குறதுலேயே ஒரு தனி சுவாரஸ்யம்! அதுலாம் ரொம்ப தப்பு!

அப்புறம் இன்னொரு முக்கியமான பாயிண்ட்.

ஒருத்தருக்கு அவரோட பேர் மட்டும்தான் அவரைப் பொருத்தவரைக்கும் மிக இனிமையான வார்த்தை அப்படிங்கறதை ஞாபகத்திலே வச்சிக்கணுமாம்.

அதனாலே அவங்க பேரை எழுதுறப்போவும் சொல்றப்போவும் சரியா எழுதணும்- சரியா சொல்லணும்! அது அவங்களுக்கு சந்தோஷமா இருக்கும்.

நல்ல பேர் வாங்குறது எப்படிங்கறதுக்கு ஒரு வெளி நாட்டு நிபுணர் சொல்லியிருக்குற யோசனைகள் இவ்வளவும்.

இதெல்லாம் உங்களால முடிஞ்ச அளவு முயற்சி பண்ணிபாருங்க அப்பனாச்சும் நல்ல பேர் கிடைக்குதான்னு பாப்போம். !!!

இப்டித்தான் இந்த வழிகள எல்லாம் என் தோழி கிட்டக்க சொன்னேன். அவ எல்லாத்தையும் முயற்சி செய்யமுடியலனாலும் கடைசி பாயின்ட்ட மட்டும் முயற்சி பண்றேன் னு சொல்லிருக்கா. அதாவது எல்லாரையும் பேர் சொல்லி கூப்பிடறது. ஆனா பாருங்க அதுக்கு அவங்க வீட்டுல உள்ளவங்க எல்லாம் ரொம்ப கோவமாகிட்டாங்க. ஏன்னு கேளுங்களேன் அவங்க அப்பா பேர் மாடசாமி அத இந்த பிள்ள சுருக்கி செல்லமா கூப்பிட ட்ரை பண்ணிருக்கா வீட்ல உள்ளவங்க சும்மா விடுவாங்களா சொல்லுங்க ??!!!

------------------------------------------------------------------------------------------------------

பி.கு:
இந்த பதிவ போடுறதுக்கு மிக முக்கியக்காரணமா இருந்தவங்க போன பதிவுல நான் எழுதின
" யாருனாச்சும் நல்லவங்க இருந்தா ஒரு ஒட்டு போடுங்க" ங்கற ஒத்த வரிக்காக ஒட்டு போட்ட
ரொம்ப நல்லவங்க.

அவங்க இந்த பதிவுக்கும் நல்லவங்களாவே நடந்துக்குவாங்க னு நம்பிக்கையுடன் விடைபெரும் உங்கள்
ரசிக்கும் சீமாட்டி.

18 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:

பிரபாகர் said...

//அவங்க அப்பா பேர் மாடசாமி அத இந்த பிள்ள சுருக்கி செல்லமா கூப்பிட ட்ரை பண்ணிருக்கா வீட்ல உள்ளவங்க சும்மா விடுவாங்களா சொல்லுங்க//

லொல்?

நல்லாருக்குங்க. ஓட்டுக்கள போட்டுட்டேன். தமிழ்மணத்துல உங்க ஓட்டையும் போடுங்க...

பிரபாகர்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நிஜம்மாவே உங்கள பாராட்டனும்போல இருந்தது இந்த பதிவுக்காக.. நல்ல பதிவுங்க..
எதோ விளம்பரம் பாப் அப் ஆகுது , கவுண்ட்டர் எதும் விளம்பரம் தருதான்னு பாருங்க..
இந்த பின்னூட்டப்பெட்டியையும் பாப் அப் ஆ இல்லாம பேஜ்லயே திறக்கறமாதிரி செய்யுங்க் நிறைய நல்லவங்க வந்து கமெண்ட் போட இதெல்லாம் ஒரு தடை தானே.. அதுக்குத்தான் சொல்றேன்..

சரியா சீமாட்டி :)

Prasanna said...

எவ்ளோ அடி வாங்குனாலும், அதை தாங்கிட்டா கூட நம்பள நல்லவன்னு சொல்வாங்க - எங்க தலைவர் சொன்னது :))

ஒட்டு போட்டாச்...

swizram said...

@ பிரபாகர்
இந்த லொள்ளு கூட இல்லைனா எப்பிடிங்க??!!!....
நன்றி வோட்டுக்கு..

swizram said...

@முத்துலட்சுமி
உண்மையா பாராட்டுனதுக்கு நன்றிங்க...
நீங்க சொன்னத எல்லாம் கூடிய விரைவுல சரி பண்ணிடுறேங்க..
அப்பப்ப வந்து இது மாதிரி எதுனா சொல்லிட்டுப் போங்க...

swizram said...

@ பிரசன்ன குமார்

உங்க தலைவர் சொன்னதுக்காக அடியெல்லாம் வாங்கமுடியாதுங்க.....!! ஐ அம் பாவம் !!!

அடி வாங்காம நல்லபேர் எடுக்குறதுக்கு தான் அவரு வழிகள் சொல்லிருக்காரு...

☀நான் ஆதவன்☀ said...

சைடுல இருக்குற “கூல் ஸ்பார்ட்’ கலக்கல் :)

swizram said...

@ நீங்க ஆதவன் ;)

அப்ப பதிவு நல்லா இல்லையா???!!!

ஆஅவ்வ்வ்வ்வ்.... :( :( :(

Sanjai Gandhi said...

சீமாட்டி இப்டி பெரிய பாட்டி ஆய்ட்டாங்களே..

அப்டியே 5 பேர்கிட்ட நல்ல பேர் வாங்கறது எப்டின்னும் சொல்லிக் குடுங்க. :))

//என்னங்க... நாணன் சொல்றது சரிதானா ?" ன்னு கேளுங்க.//

கேக்கலாம் தான்.. அனால் நாணன் யார்னு கேட்டா என்ன சொல்றது?

//சில பேருக்கு அடுத்தவங்களை அதிர்ச்சியடயவச்சி வேடிக்கைப் பார்க்குறதுலேயே ஒரு தனி சுவாரஸ்யம்! அதுலாம் ரொம்ப தப்பு!//

ஆமாங்க.. நானும் இனி எழுத்துப் பிழை எல்லாம் சொல்லி விளையாட மாட்டேங்க.. சமத்தா நடந்துக்கிறேன். :)

உங்கள் தோழி கிருத்திகா said...

மற்றவங்களை உண்மையாவே பாராட்டுறதுக்குப் பழகணும்ங்கறார்.
//////
pathivu sooppaarrr raam :)
step 1 follow paniten :)

swizram said...

@சஞ்சய் காந்தி
//கேக்கலாம் தான்.. அனால் நாணன் யார்னு கேட்டா என்ன சொல்றது?//

நா கூட அனால் ன்னா என்னன்னு கேட்க மாட்டேங்க...!!!!

swizram said...

@ கிருத்திகா

இத இத இத தான் எதிர்பார்த்தேன்!!!

புலவன் புலிகேசி said...

வோட்டுப் போட்டுட்டேன். நானும் நல்லவன் தானே???

swizram said...

@புலவன் புலிகேசி

ஆமா ஆமா... நல்லவங்க லிஸ்டுல உங்களையும் சேர்த்தாச்சு.....!!!

யோ வொய்ஸ் (யோகா) said...

நாலு பேர் நம்ம பதிவ பாராட்டணும் என்றால் என்ன பண்ணனும்?

swizram said...

@ யோ வாய்ஸ்

நம்ம நாலு பேரு பதிவ பாராட்டனும் !!!!

Ungalranga said...

ஹப்பா..திருப்தியா ஒரு பதிவு..!!

நல்லா அடுவைஸு!!

பின்பற்றிக்க முயற்சி பண்றேன்...

நன்றி!

Anonymous said...

unga pathivu romba nalla irukku

Lawrence.

Post a Comment

வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location