Saturday, October 31, 2009
ஜப் வி மெட் Vs கண்டேன் காதலை
பொதுவா தமிழ் படத்த பத்தி எழுதி ரிஸ்க் எடுக்க நான் விரும்புறது இல்ல... ஏன்னாக்க எப்டியும் நீங்க எல்லாரும் படம் பார்த்துருப்பீங்க இல்லனா ஏற்கனவே யாருனாச்சும் எழுதுன விமர்சனங்கள படிச்சி அந்த படம் எப்படி என்ன ஏது னு தெருஞ்சுருப்பீங்க... என்ன நான் சொல்றது?!! ( நோட் திஸ் பாயிண்ட் மிஸ்டர் சஞ்சய்காந்தி, போன பதிவுல குற்றம் கண்டுபிடிச்சிங்கள்ள!!)
அப்புறம் எதுக்கு இந்த வேண்டாத வேலை னு கேட்க்குறீங்களா..??!! சும்மா ஒரு ரிஸ்க்க ரஸ்க்கு மாதிரி சாப்பிடலாம்ன்னு தான்...
ஜப் வி மெட் படம் எனக்கு ரொம்ப பிடிச்ச படம்... ஹிந்தி தெரியலனாலும் நாலு பேர மொழிபெயர்ப்பு பண்ண சொல்லி ஒவ்வொரு சீனையும் நாப்பது தடவைக்கு மேல பாத்து ( ரொம்ப அதிகமா இருக்கோ ??!!) சரி சரி நாலு தடவைக்கு மேல பாத்து ஒரு வழியா படத்த புரிஞ்சுகிட்டேன்....!!
ஷாகித் கபூருக்கும் கரீனாவுக்கும் இருந்த கெமிஸ்ட்ரி என்னமோ சூப்பரா இருந்துச்சு... பரத்துக்கும் தம்மனாவுக்கும் அது கொஞ்சம் கம்மியா தான் இருந்துச்சுன்னு எனக்கு பட்டுச்சு...
ஹிந்தி படத்துல அவங்களுக்கு உள்ள சில சீனஎல்லாம் தமிழ்ல தேவைல்லை ன்னு டைரக்டர் நினைச்சுட்டாரு போல....
அப்பறம் கரீனா ரொம்ப துறுதுறுப்பான பொண்ணா வளம் வருவாங்க அதையே நம்ம தம்மன்னா தங்கச்சி ஓவர் அக்டிங் பண்ணி கொஞ்சம் லூசு மாதிரி சில சீன் ல பண்ணிருச்சு...
பரத் பத்தி என்ன சொல்றது.... அவரு பங்குக்கு ஷாகித்த கொஞ்சம் சீன்ஸ்ல காப்பி பண்ணிருக்காரு...அவரு திரும்பி வந்து கம்பெனி மீட்டிங்க்ல பேசுற சீன்ல ரொம்ப சாதரணமா பேசிட்டாரு... (கஜினி ல சூர்யா என்ன அழகா பேசுவாரு.... ச்சாச்சா சான்சே இல்ல..... சூர்யாவா பத்தி நினச்சது போதும்ங்கறீங்களா ... ரைட்டு விடுங்க ....)
ஹிந்தி படத்துல இல்லாம தமிழ்ல டைரக்டர் சேர்த்துருக்கது நம்ம சந்தானம் கதாபாத்திரம் தான்... படம் முழுக்க வராரு... வழக்கத்த விட கம்மியாவே ரெட்டை அர்த்த வசனங்கள்லாம் பேசாம வரது நல்ல இருக்கு... அவரு டயலாக்ஸ் ரெண்டு மூணு எடத்துல சென்சார் பண்ணிடாங்க.... அப்புறம் அந்த தியேட்டர் சீன் என்னத்துக்குன்னு தான் தெரியல!!!
தம்மன்னாவோட காதலனா வர அந்த கௌதம் பையன் யாருங்க...??!! எங்கயோ பாத்தமாதிரி இருக்கு ஆனா எங்கனு தான் தெரியல....
அப்புறம் நம்ம கேபிள் அண்ணன் சொன்ன மாதிரி ஹிந்தி படத்துல ஷாகித் கரீனா வீட்டுக்கு போனதும் ஒரு கலாச்சார மாற்றமே இருக்கும்... இங்கன அப்டிலாம் ஒன்னும் இல்லாதது பெரிய குறை தான்....
ஜப் வி மெட் ங்கற படத்த தான் ரீமேக் பண்ணிருக்காங்க னு நினச்சேன்... நடுவுல ஒரு பாட்டுக்கு நம்ம பரத் கஜினி ல ஆமீர் கான் ஆடுனாப்ல ஒரு பாட்டுக்கு வேற ஆடுறாரு....!!!
பாட்டும் அவ்ளோ சூப்பராலம் இல்ல.... ஆமா பாடலாசிரியர் னு பேர் போடுரச்ச கார்க்கி னு போட்டாங்களே..... அந்த கார்க்கி யாரு????!!!
சந்தானத்தோட காமெடி நல்லா இருந்துச்சு... "மூணு மில்லு முப்பதிரெண்டு பல்லு" ன்னு ரய்மிங்ங்கா பின்றாப்ள..... வடிவேலு கணக்கா இவரும் இந்த படத்துல சிங்கமுத்து கூட சேர்ந்துருக்காரு... மனோபாலா எதோ ரெண்டு மூணு சீனுக்கு வந்துட்டு போறாரு...
அப்புறம் தமன்னாவோட குடும்பமா வரவங்க யாரும் அவ்ளோ பெருசா கவனத்த ஈர்க்கலன்னு தான் சொல்லுவேன்... ஹிந்தி படத்துல தாத்தாவா வருகிரவர பாத்தாலே கொஞ்சம் டெரர் தாத்தா னு தோணும் இங்க ரவிச்சந்திரன்னா பாத்து அப்படி தெரியல....
ரெண்டு வரில சொல்லனும்னா ஹிந்தி ல இது ஒரு ரொமான்டிக் படம் தமிழ்ல காமெடிய மட்டுமே ரொம்ப நம்பி எடுத்துருக்காங்க....
என்னடா ஒரே மைனஸ் பயின்ட்டா சொல்றேன் னு பாக்குறீங்களா.... ஹிந்தி படம் மொதல்லயே பாத்துட்டுனால இப்படி இருக்கு.... புதுசா தமிழ்ல பாக்குறவங்களுக்கு இந்த படம் கண்டிப்பா பிடிக்கும்....
இதுக்கு மேலயும் என்னத்த சொல்றது... ஆளாளுக்கு அவங்கவங்க பங்குக்கு படத்த பத்தி எழுதுவாங்க... எல்லாத்தையும் படிச்சுட்டு படத்துக்கு போகலாமா வேணாவான்னு முடிவு பண்ணிக்கோங்க....
Subscribe to:
Post Comments (Atom)
18 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:
என்ன மேடம், நல்லா இருக்கிங்களா?
ஏங்க, “ நான் மொழி அறிந்தேன்” பாடல் கேட்பதற்கு ரொம்ப நல்லா இருக்குங்களே? நீங்களாவது ஜப் வீ மெட் படத்துக்கு மட்டும் விமர்சனம் எழுதியிருக்கலாம். எல்லாரும் ஒப்பீடுதான் செய்கிறார்கள்.
ஜப்வீ மெட் கதை 1000 வது முறையா ரீமேக் செய்யப்பட்ட கதை.. அதை இவங்க 1001 வத் தடவையா செய்யும்போது அது எப்படித்தான் இருந்தா என்ன? ஆனா எப்பவும் ரீமேக் செய்யும்போது பெட்டரா வந்ததா சரித்திரத்தில் குறிப்பிட்டு இருக்கா தேடிப்பாருங்க..
தம்ன்னா கேரக்டரை லூசு பெண்ணாய் காட்டியது அந்த கேரக்டர் மேல் பின்னாடி சீனில் வரக்கூடிய அனுதாபத்தை குறைக்கிறது..
//தம்மன்னாவோட காதலனா வர அந்த கௌதம் பையன் யாருங்க...??!! எங்கயோ பாத்தமாதிரி இருக்கு ஆனா எங்கனு தான் தெரியல....//
அவரோட பேரு முன்னா. பல்லவன் ங்கற படத்துல பாரதிராஜா மகன் மனோஜ் ஹீரோவா நடிச்ச படம். அதுல அவருக்கு தம்பியா சங்கர் ங்கற பேர்ல அறிமுகமானாரு. அப்புறம் லேட்டஸ்டா சிலந்திங்கற படத்துல முன்னா வா மாறிட்டாரு. இப்ப அவரோட பேரு முன்னா.
//பாட்டும் அவ்ளோ சூப்பராலம் இல்ல.... ஆமா பாடலாசிரியர் னு பேர் போடுரச்ச கார்க்கி னு போட்டாங்களே..... அந்த கார்க்கி யாரு????!!!//
கார்க்கி வேற யாரும் இல்ல வைரமுத்துவோட மகன்.
ரெண்டையும் ஒப்பிட்டு எழுதிய விதம் மிக அருமைங்க..
பிரபாகர்.
ஜாப்..வி..மெட்..பார்த்ததோட சரி..
அதோட தமிழாக்கம்னு இதுன்னு டிரையிலரிலேயெ தெரிஞ்சு போச்சு..
இன்னும் பார்க்கலை..கம்பேரும் பண்னலை..!!
தமிழில் இப்போது பல படங்கள் காமெடியை நம்பி மட்டும் தான் ஓடுது. ஒப்பிட்ட விதம் அருமை...
@ முத்துலட்சுமி
சரியா சொன்னீங்க போங்க .....!! நீங்க சொன்ன மாதிரி மாத்திட்டேங்க... இப்ப கமென்ட் போட வசதியா இருக்கா??!!
@கேபிள் சங்கர்
ஆமாங்க... என்னமோ தெரியல தம்மன்னாவுக்கு மட்டும் லூசு மாதிரி கதபாத்திரமாவே அமையுது.... இல்ல இல்ல அப்டி சொல்லக்கூடாது... ஆனந்த தாண்டவம் இப்ப கண்டேன் காதலை ன்னு இந்த பொண்ணு தான் எல்லாத்தையும் கொஞ்சம் ஓவர் ஆக்ட் பண்ணி லூசு மாதிரி ஆக்கிருச்சு....!!
@ கவி
கேட்ட கேள்விக்கு எல்லாம் பதில் சொன்னதுக்கு ரொம்ப நன்றி கவி.....!!!
@பிரபாகர்
அப்டியா சொல்றீங்க......???!!
@ரங்கன்
நீங்க வேற ஒப்பிட்டு எனர்ஜிய வேஸ்ட் பண்ணாதிங்க பாஸ்.....!!!
@புலவன் புலிகேசி
ஆமா ஆமா.... காமெடி இல்லைனா தமிழ் படமே இல்லைன்னு ஆகிப்போச்சு !!
உங்க ஓட்டுக்கு நன்றிங்க ...!!!
சஞ்ஜய் காந்திக்கு எல்லாம் பயந்த்து பதில் சொல்லிட்டு :))
படம் பாக்கலாமா வேனாமா?
100% ரைட். தமன்னா ரொம்பவே ஓவர் ஆக்டிங் பண்ணி லூசு மாதிரிதான் தெரியராங்க.
தமன்னாவுக்கு இரவல் குரல் குடுத்த சின்மயி யை பத்தி எழுதுவீங்கன்னு நெனச்சேன். ஜலதோஷம் பிடிச்சமாதிரி, உணர்ச்சியில்லாம பேசியிருக்காங்களே! ஒருவேளை சம்பளம் குடுக்கலையோ என்னமோ!
நல்லாத்தான் சொல்ல்லி இருக்கீக...
கூல் ஸ்பாட் பாத்து ஆடிப் போய்ட்டேன் தாயீ..
உங்கள் கலை சேவை தொடர வாழ்த்துக்கள்..
அப்புறம் அவர் கஜினி ஆமீர் மாதிரி டான்ஸ் ஆடுறத நான் படிச்ச எந்த விமர்சனத்துலயும் சொல்லல.. நீங்க சொன்னது நல்லா இருந்துச்சு :-)
@ Anonymous
//தமன்னாவுக்கு இரவல் குரல் குடுத்த சின்மயி யை பத்தி எழுதுவீங்கன்னு நெனச்சேன்.//
அட அத எழுதனும் னு தாங்க நினச்சேன்.. மறந்து போச்சு... நினைவூட்டுனதுக்கு நன்றி...
சின்மயி இன்னும் எத்தன படதுக்கு தான் இதே மாதிரி குரல் கொடுபாங்களோ...??!! தமன்னாவ தவிரவும் இன்னும் 2 கதாபாத்திரம் கூட அதே குரல் ல தான் இருந்துச்சு... என்ன ஃபினான்சியல் ப்ரெச்சனயோ...!!!
@கடைகுட்டி
முதல் முறையா வந்துருக்கீங்க னு நினைக்கிறேன்...
நன்றி...
//கூல் ஸ்பாட் பாத்து ஆடிப் போய்ட்டேன் தாயீ..//
இதுக்கே ஆடிபோய்ட்டா எப்புடி... இன்னும் நெறைய இருக்கு நண்பா.....
Post a Comment
வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க