அந்தா இந்தா னு இழுத்துகிட்டு இருந்த திருச்செல்வம் ஒரு வழியா கோலங்கள் தொடரை இன்னையோட முடிக்கிறாரு...
இதுனால யாருக்கு என்ன சந்தோசம் துக்கமோ தெரியல.....
"ஐயம் வெரி ஹாப்பி ஜனங்களே.....!!! "
போட்டாலும் போட்டான் கோலங்கள் னு... நான் பணிரண்டாவது படிச்ச காலத்துல இருந்து நிக்காம ஓடுது... நல்லவேல நாலு வருஷம் ஹாஸ்டல்ல இருந்ததுனால தினமும் இத நான் பாக்க வேண்டிய கொடுமை நேரல...
திருசெல்வத்த ஒரு காரணத்துக்காக பாராட்டியே ஆகணும் பா... என்னைக்கு கதை பாத்தாலும் நமக்கு விளங்கும்... ரெண்டு மாசத்துக்கு ஒரு தரவ வீட்டுக்கு வரும்போது மட்டும் சீரியல் பாத்ததுலயே எனக்கு கதை புரியுது அப்படின்னா பாத்துகோங்களேன்.. என்ன அந்த கதாபாத்திரத்துல நடிக்கிற நடிகர் நடிகைகள் வேணும்னா கொஞ்சம் மாறி இருப்பாங்க அம்புட்டு தான்.......
இவ்ளோ நாளா மொள்ளமா நகர்த்தின கதைய ஒரே வாரத்துல ட்விஸ்ட் அண்ட் டர்ன் வச்சு முடிக்கிறாங்க... என்ன கடைசில சம்சாரம் அது மின்சாரம் படத்துல வராப்புல " நான் இங்க இருந்து போறேன்.. அப்பப்ப உங்கள வந்து சந்திக்கிறேன்... சந்தோசங்கள பகிர்ந்துபோம்" னு அபி கதாபாத்திரம் சொல்லுறது ரொம்பவே பழைய பிட்டா இருக்கு னு பீல் பண்றேன்.....
இப்படி கதைய முடிக்கறதுக்கு ஆதி ஏன்தான் இம்புட்டு நாள் ஹி டெசிபெல்ல கத்தினாரோ... இன்னும் சுவாரசியமா முடிசுருக்கலாம்....
எது நடந்தா என்ன... முடிக்கிறாங்கலே அதுவே பெரிய சந்தோசம்... இனிமேல்ட்டு நிம்மதியா சேனல் மாத்துங்க அப்டின்னு அப்பா கூட சண்ட போடாம சூப்பர் சிங்கர் பாக்கலாம்....
"ஐயம் வெரி ஹாப்பி ஜனங்களே.....!!! "
"ஐயம் வெரி ஹாப்பி ஜனங்களே.....!!! "
"ஐயம் வெரி ஹாப்பி ஜனங்களே.....!!! "
பதிவ படிச்சு மொக்கயானவங்களுக்கு ஒரு சின்ன குறுஞ்செய்தி
ஒரு சமயம் நியூட்டன் கிளாஸ் ல படிச்சுகிட்டு இருந்தாரு. அப்ப அவருக்கு வயசு 17 .
படிச்சுகிட்டு இருக்கும்போது அவரு கால்ல ஒரு பாம்பு கொத்திருச்சு. அப்பவும் அவரு படிக்கிறத நிறுத்தாம தொடர்ந்து படிச்சுகிட்டே இருந்தாரு.
இத பார்த்து ஆச்சிரிய பட்டுப்போன அவரோட டீச்சர் அவருகிட்டக கேக்குறாரு , அதுக்கு நியூட்டன் சொன்னாராம் " பாம்பு என் காலை தான் கொத்துச்சு மூளைய இல்லை. அதுனால எனக்கு கவனம் சிதறலைன்னு"
இதுக்கு நாம சொல்ற பேர் தான்
"வெட்டி சீன் "
பி.கு: டிஸ்கி அப்டினா என்னனு யாராவது விலக்கி சொல்லவும்.
24 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:
உங்களுக்கு மட்டுமல்ல
நம்ம ஊர்ல 80 சதவீதம் பேருக்கு
ரொம்ப சந்தோஷம்.........
Don't worry........ Be Happy...........
முடிச்சி கிளிச்சனுங்க அடுத்த பார்ட் உடனே வருதாம்.
நான் நினச்சேன், நீங்க சொல்லிடீங்க(எழுதி விட்டீர்கள்) மெகா சீரியல் எடுக்க கூடாதுன்னு ரூல்ஸ் கொண்டு வந்தா நல்லா இருக்கும்.
discliner என்பதின் சுருக்கமே "டிஸ்கி"
:))))
@Sangkavi
யா யா ... ஹாப்பி ஹாப்பி.....!!!
@ Anonymous
//முடிச்சி கிளிச்சனுங்க அடுத்த பார்ட் உடனே வருதாம்.//
என்னது அடுத்த பார்ட்டா??? எது அந்த தினகரன் பேப்பர கைல வச்சுக்கிட்டு ஒரு பொண்ணு வந்து பேசுதே அத சொல்றீங்களா???
என்னாது கோலங்கள் முடியப் போகுதா. என் பேரன் காலம் வரைக்கும் தொடரும் என்றல்லவா நினைத்திருந்தேன்.... இது வரை ஒரு 4 அல்லது 5 அங்கம் பார்த்திருப்பேன்..
ஐயம் சோ சேட்
@மயில்
:)
இந்த கூல் ஸ்போட் ஒகேய்ங்களா????
@ யோ வாய்ஸ்
//என்னாது கோலங்கள் முடியப் போகுதா. என் பேரன் காலம் வரைக்கும் தொடரும் என்றல்லவா நினைத்திருந்தேன்.... இது வரை ஒரு 4 அல்லது 5 அங்கம் பார்த்திருப்பேன்..///
நானும் அப்பிடி தான் நினச்சேன் பா....
//ஐயம் சோ சேட்//
இது சந்தோஷ படவேண்டிய விஷயம் சகா.... உங்க பேரன் காலத்துல சூரியா பொண்ணு தியா சீரியல்ல நடிக்கும் கவலை படாதீங்க....!!!
சீமாட்டி தப்பா சொல்லிட்டிங்க. இருக்கிற அறுவைகளில் கோலங்கள் எவ்வள்வோ தேவலாம். அடுத்த வாரம் மட்டும் என்ன புது நிகழ்ச்சியா போடப் போகிறார்கள்? ஒரு ஆண்டி சிரித்துக் கொண்டே அழுவும் இன்னொரு நாடகம்தான். அப்புறம் ஹேப்பி ?
:))))
முதலில் உங்களுக்கு ஒரு பாராட்டு.
ஆனாலும் நீங்க சூப்பர் போங்க, சீரியல் கூட பார்த்து இருக்கீங்க :-)
இந்த கோலங்கள் முடிஞ்சதால..
நேத்து நான் கைத்தட்டி விசிலடிச்சி சந்தோஷப்பட்ட காட்சியை..பார்த்த கடுப்பான எங்க அம்மா..இன்னும் ஒரு வாரத்துக்கு காலையில் டிபன் கட்-னு சொல்லிட்டாங்க..அவ்வ்வ்வ்!!
//சீமாட்டி தப்பா சொல்லிட்டிங்க. இருக்கிற அறுவைகளில் கோலங்கள் எவ்வள்வோ தேவலாம். அடுத்த வாரம் மட்டும் என்ன புது நிகழ்ச்சியா போடப் போகிறார்கள்? ஒரு ஆண்டி சிரித்துக் கொண்டே அழுவும் இன்னொரு நாடகம்தான். அப்புறம் ஹேப்பி ?//
ஹலோ சகா... அடுத்த சீரியல எங்க வீட்ல உள்ளவங்கள பாக்க விடமாட்டோம்ல..... !!!
@சிங்கக்குட்டி
//ஆனாலும் நீங்க சூப்பர் போங்க, சீரியல் கூட பார்த்து இருக்கீங்க :-)//
அந்த கொடுமைய ஏன் கேக்குறீங்க...
வேற வழி இல்லாம பாத்தேங்க ....!!!
@ரங்கன்
//நேத்து நான் கைத்தட்டி விசிலடிச்சி சந்தோஷப்பட்ட காட்சியை..பார்த்த கடுப்பான எங்க அம்மா..இன்னும் ஒரு வாரத்துக்கு காலையில் டிபன் கட்-னு சொல்லிட்டாங்க..அவ்வ்வ்வ்!!//
அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ் ...... அடுத்த சீரியலே போட்டுட்டான் ன்னு அம்மாகிட்ட சொல்லுங்க.....
என்னது கோலங்கள் முடியுதா???
எங்க அம்மா அத பத்தி ஒண்ணுமே சொல்லலயே??
எப்படியோ.. நல்ல விஷயம் தான்....
சகான்னு கூப்பிட்டது ரொம்ப சந்தோஷம் :))
அப்புறம் அந்த கூல் ஸ்பாட் டீல் என்ன ஆச்சுங்க?
//அப்புறம் அந்த கூல் ஸ்பாட் டீல் என்ன ஆச்சுங்க?//
உங்க போட்டோ கிடைக்கலையே இன்னும் ???!!
டீல் ஓக்கேவான்னு முதல்ல சொல்லுங்க. ஃபோட்டோ கொடுத்த பிறகு, என் பிளாக் கண்ணு படக்கூடாதுன்னு வச்சிருக்கேன். என்னை பார் யோகம் வரும் அப்படின்னு ஏதாவது டைட்டில் கொடுத்த்டுட்டா என்ன செய்ய? :)))
உங்களுடைய வலை பூவிற்கு இப்போதுதான் வருகிறேன்..
மிகவும் வித்தியாசமாக , அதே நேரத்தில் ரசிக்கும் படி இருக்கிறது...
தொடர்ந்து கலக்குங்க...வாழ்த்துக்கள்..
உங்களுடைய பிளாக்கர் நேம் செலக்சன்
சும்மா பின்னுது....
//என் பிளாக் கண்ணு படக்கூடாதுன்னு வச்சிருக்கேன். என்னை பார் யோகம் வரும் அப்படின்னு ஏதாவது டைட்டில் கொடுத்த்டுட்டா என்ன செய்ய? :)))//
சகா... இப்படி ஒரு தலைப்பு தான் தேடிகிட்டு இருந்தேன்... நீங்களே சொன்னதுக்கு ரொம்ப நன்றி...
ஆமா எப்ப உங்க போட்டோ கிடைக்கும்???
என் ப்ளாகுக்கு "திருஷ்டி" கழிக்கணும்....
@கமலேஷ்
//உங்களுடைய வலை பூவிற்கு இப்போதுதான் வருகிறேன்..//
வந்ததுக்கு ரொம்ப நன்றி... தொடர்ந்து படிச்சு நிறை குறைகளை சொல்லுங்க...
நீங்க ரொம்ப நல்லா கவிதை எழுதுறீங்க... பின்னூட்டம் போட்டுடேன்...
//உங்களுடைய பிளாக்கர் நேம் செலக்சன்
சும்மா பின்னுது....///
ரொம்ப ரொம்ப நன்றிங்க...
ஆமா எப்ப உங்க போட்டோ கிடைக்கும்???
என் ப்ளாகுக்கு "திருஷ்டி" கழிக்கணு//
ஆவ்வ்.. உங்களுக்கு ஃபோட்டோ கிடையாது.. ஆட்டோதான்
//ஆவ்வ்.. உங்களுக்கு ஃபோட்டோ கிடையாது.. ஆட்டோதான்//
ஆட்டோகுல்லாம் பயப்படற ஆள் நாங்க இல்ல!!!!
(ஆமா இந்த ஆட்டோ மேட்டர் "ல்லுலாயுக்கு" தானே....?? !! பயந்து வருது சகா..)
Post a Comment
வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க