Monday, December 7, 2009

குழந்தை <> பெரியவங்க (not equal to)

கலக்க போவது யாரு ஜூனியர்ஸ் இந்த நிகழ்ச்சி ரொம்ப காலமா வருது.. எத்தன மணிக்கு போடுறான் னு தெரியாத காரணத்தினால இவ்ளோ நாளா பார்க்கல... நேத்து என்னமோ எதிர்ச்சியா பார்க்க நேர்ந்துச்சு.....

நான் பார்க்கும் போது ஒரு சிறுமி நர்ஸ் வேஷம் போட்டுக்கிட்டு ஹாஸ்பிட்டல்ல நடக்கிற நகைச்சுவைகளை சொல்லிக்கிட்டு இருந்துச்சு...

அதுல ஒரு பிட்

"எங்க டாக்டர் எவனையோ வளச்சுப்போட்டு இந்த இடத்தை வாங்கினாரு... நான் அந்த டாக்டரையே வளச்சுப்போட்டுட்டேன்" னு அப்படி னு சொல்லுது...

எல்லாரும் கைதட்டி சிரிக்கிறாங்க.... இது மட்டும் இல்ல அந்த பொண்ணு சொன்னதுல பல விஷயம் இப்படி தான் இருக்கு... அப்பப்ப அவங்க பெற்றோர்கள வேற காமிக்கிறாங்க... பொண்ணு பாத்து ரொம்ப பூரிச்சு பொய் இருக்காங்க..

சத்தியமா அந்த பொண்ணு சொன்னதுக்கு அர்த்தம் அவளுக்கு தெரிஞ்சுருக்காது.... யாராவது பெரியவங்க தான் அந்த ஜோக்கெல்லாம் சொல்லுமா னு சொல்லிகொடுதுருக்கணும்... இந்த வயசுக்கு என்ன சொல்லமுடியுமோ அத சொல்லிகொடுக்கலாம் ல...

இந்த பொண்ணையோ, அவ பெற்றோர்களையோ குறிப்பிட்டு சொல்ல வரல பொதுவா வே எல்லாருக்கும் குழந்தைகள் பெரியவங்க மாதிரி நடந்துக்கணும் அப்டின்ற எண்ணம் இருக்க தான் செய்யுது....


இப்பவே பெரியவங்க மாதிரி நடந்தா அவங்க எப்ப தான் குழந்தைங்க மாதிரி நடந்துபாங்க??!! னு வெளங்கல...

ஒரு குழந்தை பெரியவங்க மாதிரி பேசினா "இல்லாம அப்டிலாம் பேசக்கூடாது" னு சொல்ற பெற்றோர்கள விட " என் பொண்ணு/பையன் எவ்ளோ அழகா பேசுறா " னு சொல்ற பெற்றோர்கள் நிறைய பேர பாத்துருக்கேன்...

ஏன் இப்படின்னு எனக்கு புரியவே இல்ல.... சமர்த்தா சுட்டித்தனமா பேசுறது வேற அதிக பிரசங்கி தனமா பேசுறது வேற... பொதுவா நம்ம அதிகப்ரசங்கி தனமா பேசினா ரசிக்கிறோமே ஒழிய அது தப்பு னு எடுத்து சொல்றது இல்ல...

நாம எப்டியோ அப்படி தான் நம்ம பிள்ளையும்... நம்ம யாருக்கு/எதுக்கு மரியாதையை கொடுக்கிறோமோ அதுக்கு கண்டிப்பா அவங்களும் மரியாத கொடுப்பாங்க...


எங்கயோ ஆரம்பிச்சு எங்க எங்கயோ போறேனோ... கோர்வையா என் மூளை யோசிக்க மாட்டேங்குது என்ன செய்ய ??!!!

சரி மீண்டும் நிகழ்ச்சிக்கே வரேன்... அந்தா பொண்ணு சொன்னதுக்குலம் கைதட்டி சிரிச்ச நடுவர்கள் என்ன சொல்லுவங்களோ னு பாத்தேன்

"வயசுக்கு மீறின வார்த்தைகளா இருந்தாலும் உங்க expressions மற்றும் body language உங்க பெர்போர்மன்சே அழகாக்கிருச்சு " னு பாண்டிய ராஜ் சொன்னாரு... அதுவரைக்கும் சந்தோசம்...

அந்த நிகழ்ச்சிலயே இன்னொரு போட்டியாளரா இரட்டையர்கள் வந்தாங்க.. அவங்க நகைச்சுவை கொஞ்சம் டீசென்டாவே... அவங்க வயசுக்கு சொல்றப்புலயே இருந்துச்சு...


பான்சி டிரஸ் காம்படிஷன் மாதிரி எல்லாரும் வேஷம் போட்டு வந்து காமெடி பண்ணாலும் இந்த பிள்ளைங்கள இப்பிடிலாம் ஜோக் னு சொல்லி பேச வைக்கற பெரியவங்கள பாத்த மனசுக்குள்ள வருத்தமா தாங்க இருக்கு !!!!


:(:(
வருத்ததுடன்,
ரசிக்கும் சீமாட்டி

34 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:

தியாவின் பேனா said...

நான்தான் முதலாவதா?

இப்ப விளம்பரம் முதல்
எல்லாம் குழந்தைகள் தான்

Sangkavi said...

குழந்தை என்ன பேசினாலும் பெற்றோருக்கு கவலையில்லை
காரணம் அவர்களுக்குத் தேவை பெருமை மட்டுமே.............

யோ வொய்ஸ் (யோகா) said...

எல்லாத்தையும் காசு பண்ணும் நம்ம சமூகம், இப்படியே போனால் குட்டி சுவராகதான் போகும்..

அடுத்த ஜெனரேஷன் எப்படி ஆகிடும் என்று நினைக்க முடியலை

சைவகொத்துப்பரோட்டா said...

"இப்பவே பெரியவங்க மாதிரி நடந்தா அவங்க எப்ப தான் குழந்தைங்க மாதிரி நடந்துபாங்க??!! னு வெளங்கல..."

இந்த மாதிரி குட்டீஸ்தான், வளர்ந்த பின்பு குழந்தைகள் ஆக இருக்கிறார்கள்.

ரசிக்கும் சீமாட்டி said...

//நான்தான் முதலாவதா?//

ஆமாங்க நீங்க தான் முதலாவது!!

//இப்ப விளம்பரம் முதல்
எல்லாம் குழந்தைகள் தான்//

அத தான் எல்லாரும் பிரியபடுறாங்க.....

ரசிக்கும் சீமாட்டி said...

@sangkavi
//குழந்தை என்ன பேசினாலும் பெற்றோருக்கு கவலையில்லை
காரணம் அவர்களுக்குத் தேவை பெருமை மட்டுமே.............//

அத சொல்லுங்க....

ரசிக்கும் சீமாட்டி said...

@யோ வாய்ஸ்
//எல்லாத்தையும் காசு பண்ணும் நம்ம சமூகம், இப்படியே போனால் குட்டி சுவராகதான் போகும்..

அடுத்த ஜெனரேஷன் எப்படி ஆகிடும் என்று நினைக்க முடியலை//

இந்த ஜெனரேஷன் மாறிட்டா அடுத்த ஜெனரேஷன் நல்ல இருக்கும்... ஆனா அதுக்கான வாய்ப்பு அமையாது ன்னு நினைக்கிறேன்...

ரசிக்கும் சீமாட்டி said...

@சைவகொத்துபரோட்டா

//இந்த மாதிரி குட்டீஸ்தான், வளர்ந்த பின்பு குழந்தைகள் ஆக இருக்கிறார்கள்.//

அப்டியா சொல்றீங்க??!! எனக்கு அப்டி ஒன்னும் தெரியல நண்பா..

உங்க பெயர தமிழ்ல வச்சுடீங்க போல... அது ஏன் இப்டி ஒரு பெயர் வச்சுருக்கீங்க ???!!

உங்கள் தோழி கிருத்திகா said...

இதெல்லாம் பாத்தா சிரிப்பை விட அதிகமா வேதனயா இருக்கு ராம்....இப்படி எல்லாம் ஒரு காமெடி தேவயா...இதெல்லாம் விட நம்ம வடிவேலு அண்ணனும் சந்தானம் அண்ணனும் குழந்தைங்களை டபுள் மீனிங்கா பேச சொல்லுராங்களே.....அவங்க சொல்லுராங்களோ இல்ல வேற யாரா வேணா இருக்கட்டும்...ஆனா சிரிப்பே வரல இந்த மாதிரி அபத்தங்களை பாக்கும்போது

ரசிக்கும் சீமாட்டி said...

//இதெல்லாம் விட நம்ம வடிவேலு அண்ணனும் சந்தானம் அண்ணனும் குழந்தைங்களை டபுள் மீனிங்கா பேச சொல்லுராங்களே.....அவங்க சொல்லுராங்களோ இல்ல வேற யாரா வேணா இருக்கட்டும்...//

:( நமக்கு வருத்தமா இருக்கு அவங்களுக்கு வருமானமா இருக்கே... என்ன செய்ய ??!!

சைவகொத்துப்பரோட்டா said...

"உங்க பெயர தமிழ்ல வச்சுடீங்க போல... அது ஏன் இப்டி ஒரு பெயர் வச்சுருக்கீங்க ???!!"

ஸ்கூல் பாடத்தில ஒரு கருப்பொருள் கொடுத்து அதைப்பற்றி (உ.ம்.கால் பந்து விளையாட்டு) எழுத சொன்னால் "இன்று மழை பெய்ததால் ஆட்டம் ரத்து ஆகியது" இன்னு எழுதுற லிஸ்ட் நான். ஏதோ ஒரு ஆசையில எழுத தொடங்கிட்டேன், இப்படி பெயரிலாவது வித்தியாசம் காட்டலமேனுதன் இந்த பெயர் வைத்தேன்.

நன்றி.

ரசிக்கும் சீமாட்டி said...

நல்ல காட்டுறீங்க வித்தியாசத்த....!!

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்....!!!

Chitra said...

"இப்பவே பெரியவங்க மாதிரி நடந்தா அவங்க எப்ப தான் குழந்தைங்க மாதிரி நடந்துபாங்க??!! னு வெளங்கல...

ஒரு குழந்தை பெரியவங்க மாதிரி பேசினா "இல்லாம அப்டிலாம் பேசக்கூடாது" னு சொல்ற பெற்றோர்கள விட " என் பொண்ணு/பையன் எவ்ளோ அழகா பேசுறா " னு சொல்ற பெற்றோர்கள் நிறைய பேர பாத்துருக்கேன்..." ............. இந்த ஆதங்கம் எனக்கும் உண்டு. பல சமயங்களில், பெற்றோரே தங்கள் குழந்தைகளின் "திறமையாக" காட்ட சொல்லி, அவர்கள் குழந்தைகள் அர்த்தம் தெரியாமல், தமிழ் சினிமா பாடல்களை பாடி நெளிந்து ஆடும்போது, என்ன reaction எனக்கு காட்டுவது என்று தெரியாது.

கார்க்கி said...

சகா, என்ன வயசு ஆச்சுங்க உங்களுக்கு? ஏன் கேட்கறன்னா இதைத்தான் ஜெனரேஷன் கேப்ன்னு சொல்லுவாங்க. நமக்கு பகீர்ன்னு தோன்ற விஷயம் அவங்களுக்கு ஜஸ்ட் லைக் தட் இருக்கும். அதெல்லாம் ஒன்னும் ஆயிடாது. அவங்க லைஃப் அவங்களுக்கு நல்லா இருக்கும்.

tamiluthayam said...

"இப்பவே பெரியவங்க மாதிரி நடந்தா அவங்க எப்ப தான் குழந்தைங்க மாதிரி நடந்துபாங்க??!! காலத்தின் கோலம். வேறென்ன சொல்ல.

MALARVIZHI said...

ஆஹா ... நீங்க இதுக்கு முன்னாடி இந்த நிகழ்ச்சியை பார்த்ததில்லையா? கடவுளே!!! இது ரொம்ப நாளா நடக்குதே ! பிள்ளைகள் அர்த்தம் புரியாமல் பேசுவதும் , பெற்றோர் அதை ரசிப்பதும்.!

ரசிக்கும் சீமாட்டி said...

@சித்ரா
//அவர்கள் குழந்தைகள் அர்த்தம் தெரியாமல், தமிழ் சினிமா பாடல்களை பாடி நெளிந்து ஆடும்போது, என்ன reaction எனக்கு காட்டுவது என்று தெரியாது.//

ஒன்னும் சொல்றதுக்கு இல்ல....

ரசிக்கும் சீமாட்டி said...

@tamiluthayam
//காலத்தின் கோலம். வேறென்ன சொல்ல.//

வேற ஒன்னும் சொல்ல முடியல தான்.....

ரசிக்கும் சீமாட்டி said...

@கார்க்கி
//சகா, என்ன வயசு ஆச்சுங்க உங்களுக்கு? ஏன் கேட்கறன்னா இதைத்தான் ஜெனரேஷன் கேப்ன்னு சொல்லுவாங்க. நமக்கு பகீர்ன்னு தோன்ற விஷயம் அவங்களுக்கு ஜஸ்ட் லைக் தட் இருக்கும். அதெல்லாம் ஒன்னும் ஆயிடாது. அவங்க லைஃப் அவங்களுக்கு நல்லா இருக்கும்.//

ஒன்னும் பாட்டி ஆகிடல.... ஜெனரஷன் கேப்ன்னு லா இல்லைங்க... சுட்டி தனமா பேசுறதுக்கும் வயசுக்கு மீறி பேசுறதுக்கும் நெறையா வித்யாசம் இருக்கு சகா..
உதரணத்துக்கு சொல்லணும் னா
அந்த பொண்ணு சொன்னது இது தான்... நீங்க சொல்லுங்க இது ஜஸ்ட் லைக் தட் தானான்னு??

"ஊசி போடா போன இங்க தேச்சு விடு அங்க தேச்சு விடு ன்னு patients சொல்லுறாங்க "
"அப்பா தான் டுட்டி முடிஞ்சு வீட்டுக்கு போனா டாக்டர் உடனே போன் பண்ணி நீ இல்லன எனக்கு கையும் ஓடாது காலும் ஓடாது நே உடனே வாம ன்னு சொல்லுவரு "

என் வருத்தம்லாம் இப்டி சொல்லிக்கொடுக்குற பெற்றோர்கள் மேல தான் குழந்தைகள் மேல இல்ல சகா .....

ரசிக்கும் சீமாட்டி said...

@malarvizhi

//ஆஹா ... நீங்க இதுக்கு முன்னாடி இந்த நிகழ்ச்சியை பார்த்ததில்லையா? கடவுளே!!! இது ரொம்ப நாளா நடக்குதே ! பிள்ளைகள் அர்த்தம் புரியாமல் பேசுவதும் , பெற்றோர் அதை ரசிப்பதும்.!//

இல்லைங்க ஒரு நாள் பார்த்ததுலயே ரொம்ப வருத்தமா போய்டுச்சு !!!!

கார்க்கி said...

:((

கமலேஷ் said...

குழந்தை எப்படி வளரணும்னு ஆசை படறானோ அப்படியே அவனை வளர விடலாம் தோழி..
நீங்க கலக்க போவது யாருல பேசுன குழந்தைக்கு தவறான விசயங்களை சொல்லி தர்றதா நினைக்கிறிங்க.
But mean time, he is overcoming from his stage fear.from childhood itself,if he loose fear, he will become a good team leader in future and another hand obviously i agree that we should teach the good things for childrens. and i congrats you that you r taking good things for post.go on....

ரசிக்கும் சீமாட்டி said...

@கார்க்கி
//:((//

இதுக்கு என்ன அர்த்தம்???

ரசிக்கும் சீமாட்டி said...

//
he is overcoming from his stage fear.from childhood itself,if he loose fear, he will become a good team leader in future and another hand obviously i agree that we should teach the good things for childrens. and i congrats you that you r taking good things for post.go on....//

I agree with you.... overcomin stage fear is good for children... but tat shld be in the right path.. எதுவேனாலும் பேசலாம் ஸ்ட்டேஜ் பியர் போன போதும் னு நினைக்குறது கூடாதுன்னு தான் சொல்ல வரேன்....

என்னோட பதிவையும் படிக்கறதுக்கு முதல்ல நன்றி... உங்களுடைய வாழ்த்துக்கு ரெண்டாவது நன்றி...
இன்னும் உருப்படியா எதுனா எழுத முயற்சி பண்றேன்....

silentboy said...

வணக்கம்,நான் கார்த்திகேயன்.
இந்த விஷயத்தில் உங்கள் கருத்தில் முழுவதுவமாக நான் உடன் படுகிறேன்.நீங்கள் குறிப்பிட்ட அந்த குறிப்பிட்ட காட்சிகளையே அவர்கள் முன்னோட்டமாக காட்டினார்கள்.அதனாலேயே பார்ப்பதை நான் தவிர்த்து விட்டேன்.
இதில் பெற்றவர்களுடைய பங்கே பிரதானமானது.இரட்டை அர்த்த விஷயங்களைப் பற்றியெல்லாம் விஜய் டிவி எந்த காலத்திலும் கவலை பட்டதே கிடையாது.
குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை சொல்லித் தருவதும்,அதில் ஈடுபாடு உண்டாக்குவதும் பெற்றவர்களுடைய பொறுப்பே ஆகும்.

ஏர்டெல் ரோமிங் பற்றின விளம்பரத்தில் வரும் சிறுவனை பார்த்திருப்பீர்கள்.தன் நண்பர்களுக்கெல்லாம் அப்பாவின் தொலைபேசி எண்ணை தரும் சிறுவனை பர்த்திருப்பீர்கள்.
அந்த சிறுவனை அழகாக உபயோகபடுத்தி இருப்பார்கள்.

உங்களுடைய ரசனையும்,எண்ணங்களும் மற்றும் உங்களுடைய பதிவும் நன்றாக இருந்தது.
வாழ்த்துக்கள்.

ரங்கன் said...

இப்போ குழந்தைகள் எல்லாம் நம்ம வீட்டு கார் மாதிரி ஆகிப்போச்சு..

ஷோ காட்டவே அதிகம் பயன்படுகிறார்கள்,பயன்படுத்தபடுகிறார்கள்.

ப்ளீஸ்..அவங்க திறமைய எப்படி மெருகேத்துறதுன்னு யோசிங்க மக்களே..அதை விட்டுட்டு..இப்படி அவர்களை நகைச்சுவை சொல்லும் பார்ப்பி பொம்மை ஆக்கிப்பார்க்காதீர்கள்!!..

ஆழ்ந்த வருத்தத்துடன்,
ரங்கன்

ரசிக்கும் சீமாட்டி said...

@கார்த்திகேயன்
//ஏர்டெல் ரோமிங் பற்றின விளம்பரத்தில் வரும் சிறுவனை பார்த்திருப்பீர்கள்.//

அய்யோ அந்த பையன் செம்ம க்யுட்......!!
முதல் முறையா வந்துருக்கீங்க போல... ரொம்ப நன்றி... தொடர்ந்து படிங்க!!

ரசிக்கும் சீமாட்டி said...

@ரங்கன்
//ப்ளீஸ்..அவங்க திறமைய எப்படி மெருகேத்துறதுன்னு யோசிங்க மக்களே..அதை விட்டுட்டு..இப்படி அவர்களை நகைச்சுவை சொல்லும் பார்ப்பி பொம்மை ஆக்கிப்பார்க்காதீர்கள்!!..//

நகைச்சுவை சொல்றது தப்பு ன்னு நான் சொல்ல வரலைங்கனோவ்!!! நல்ல நகைச்சுவைய சொல்லி கொடுங்க அப்டின்றது தான் என் கருத்து!!!!

கிருபாநந்தினி said...

உங்க வலைப்பூ பார்க்கவே அம்பூட்டு அழகு! அதிகப்பிரசங்கித்தனமா பேசுற குழந்தைகளை அந்தக் காலத்துத் தமிழ்ப்படங்கள்லேர்ந்து பார்த்துப் பார்த்து நொந்துட்டேங்க. ரொம்ப கரெக்டா எழுதியிருக்கீங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பெரியவங்க மாதிரி பேசறதைக்கூட போய் தொலையுதுன்னு விட்டுரலாம்.. ஆனா பெரியவங்க பேசத்தயங்கற விசயத்தை பேசி இருக்காங்கன்னு சொல்றீங்களே..அத என்ன சொல்றது :(

jackiesekar said...

நானும் இந்த விஷயத்தை பத்தி யோசிச்ச விஷயத்தை எழுதி இருக்கிங்க...இப்போதெல்லாம் கள்ளமில்ல குழந்தைகள் அப்டின்னு ஒருவிஷயத்தை பார்க்க முடியறதில்லை கவனிச்சிங்களா?...

ரசிக்கும் சீமாட்டி said...

@கிருபாநந்தினி
//உங்க வலைப்பூ பார்க்கவே அம்பூட்டு அழகு! அதிகப்பிரசங்கித்தனமா பேசுற குழந்தைகளை அந்தக் காலத்துத் தமிழ்ப்படங்கள்லேர்ந்து பார்த்துப் பார்த்து நொந்துட்டேங்க. ரொம்ப கரெக்டா எழுதியிருக்கீங்க.//

முதல் முறையா வந்துருக்கீங்க ... ரொம்ப நன்றி... உங்க படித்துறை அளவுக்கு இல்லைனாலும் எதோ சுமாரா இருக்குங்களா ??!!

ரசிக்கும் சீமாட்டி said...

@முத்துலெட்சுமி
//பெரியவங்க மாதிரி பேசறதைக்கூட போய் தொலையுதுன்னு விட்டுரலாம்.. ஆனா பெரியவங்க பேசத்தயங்கற விசயத்தை பேசி இருக்காங்கன்னு சொல்றீங்களே..அத என்ன சொல்றது :(//

அதே அதே.... அது தாங்க என் வருத்தம்!!!!!

ரசிக்கும் சீமாட்டி said...

@jackiesekar
//இப்போதெல்லாம் கள்ளமில்ல குழந்தைகள் அப்டின்னு ஒருவிஷயத்தை பார்க்க முடியறதில்லை கவனிச்சிங்களா?...//

அப்படி லாம் இல்லைங்க.... திரைப்படங்களையும் டிவி நிகழ்ச்சிகள்ளையும் தான் கள்ளமில்லா குழந்தைகளை பாக்குறது கஷ்டமா இருக்கு!!!!

Post a Comment

வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin