Friday, December 11, 2009

தலைப்பு பதிவின் இறுதியில் சொல்லப்படும்!!

இன்னைக்கு பதிவிட்ற எல்லா பதிவர்களும் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்றாங்க... அதுனால நானும் சொல்லி வைக்குறேன்

"பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரஜினி அங்கிள் "

ஒரிஜினல் டிவிடி வாங்கி படம் பாக்குற வழக்கம்லாம் எனக்கு இல்லைங்க... என் ப்ரென்ட் சொன்னானு சொல்லிட்டு ஒரு வெப்சைட் ல இருந்து ஒரு படத்த டவுன்லோட் பண்ணி பாக்கலாம்ன்னு முயற்சி பண்ணேன்... அந்த கொடுமையா ஏன் கேக்குறீங்க இந்தா அந்தான்னு ஒரு நாள் முழுக்க அந்த படம் டவுன்லோட் ஆச்சு...

சரி ஆனது ஆச்சு படத்த பாப்போம் ன்னு இயர் போன், பாப்கார்ன் சகிதத்தோட படம் படம் பாக்க உக்காந்தா அந்த படம் மகா மொக்கை (என்னை பொறுத்த வரைக்கும் தான் )...
டவுன்லோட் பண்ணி பாத்த படம் "லவ் ஹாபென்ஸ் " இந்த பேர்ல தாங்க விழுந்துட்டேன்....!!!

படத்தோட கதைன்னு பாத்த ஹீரோ ஒரு தன்னம்பிக்கை புத்தகத்தோட எழுத்தாளர்... அவரோட மனைவி இறந்து போன பிறகு அந்த துயரத்துல இருந்து எப்படி மீண்டு வரது அப்டிங்கற மாதிரி புத்தகம் எழுதுறாரு.... அப்பாலிக்கா ஒரு ப்லாரிஸ்ட் கிட்டக்க லவ் ஆகி... கடைசியில தன்னோட மனைவி இறந்ததுக்கு காரணமே நான் தான் அப்படின்னு பொது மேடையுல ஒப்புக்குராறு.....


இந்த கதைல உங்களுக்கு எதுனாச்சும் விளங்கிச்சா...??!! சத்தியமா எனக்கு ஒன்னும் விளங்கல....இதுக்கு நான் பேசாம ஸ்டார் மூவிசையோ ஹச்பியோவையோ பாத்துகிட்டு இருந்துருக்கலாம்......

இனிமேல்ட்டு டவுன்லோட் பண்ணி படம் பாக்குறது இல்லைன்னு முடிவுக்கு வந்துட்டேன்!!!

எதேர்ச்சியா நேத்திக்கு சேனல் மாத்தும்போது ஒரு சின்ன பொண்ணு நடிக்கிற சீன் வந்துச்சு... இந்த புள்ளைய எங்கயோ பாத்துருக்கொமேன்னு யோசிச்சுகிட்டே இருந்தேன்... இப்படி நான் யோசிக்கிற கேப் ல நாலு சீன் வந்துருச்சு...

அது ஒரு சின்ன பசங்க படம்... நான் பாத்த காட்சியில அந்த படத்தோட ஹீரோ (சின்ன பையன் தான்) அவங்க மிஸ் சொன்ன வேலைய செஞ்சுட்டு வராம எதோ பொய் சொல்லி சமாளிக்குறான்... அய் இந்த பயபுள்ள நம்ம வகையறா போலன்னு படத்துல ஒன்றி போய் நான் படம் பாக்க ஆரம்பிச்சுட்டேன்...


அவன் சொன்னது பொய்ன்னு கண்டுபிடிக்கிற அந்த மிஸ் சாயங்காலம் ஆறு மணிக்குள்ள 1000 வார்த்தைகள்ல ஒரு கதை எழுதிட்டு வந்தாலே ஆச்சு அப்டிங்கறாங்க... அந்த பையனும் பொய் சொல்ற அவன் டாலேன்ட்ட (!!!!) பயன்படுத்தி கதைய எழுதி முடிக்கிறான்.... கதைய எடுத்துகிட்டு போகும்போது ஒரு சின்ன விபத்துல மாட்டிக்கிறான்... அப்புறம் அந்த கார்ல வந்தவர மிரட்டி அவரு கார்லயே ஸ்கூலுக்கு போறான்...


அவசரமா போனவன் எழுதுன கதைய கார்லயே விட்டு போயிடுறான். அந்த காருக்கு சொந்தக்காரான ஹாலிவுட் ப்ரோட்யுசெர் அந்த பையன் விட்டுட்டு போன கதைய படமாக்க பாக்குறாரு... அந்த ட்ரையுலற பாக்குற அந்த பையன் இது தன்னோட கதைன்னு சொல்றான்... ஆனா அவனோட அப்பாவும் அம்மாவும் பொய் சொல்றதுக்கு உனக்கு அளவே இல்லாம போச்சு ன்னு சொலிட்டு அந்த பையன் சொல்றத நம்பமாட்டேன்றங்க...

"நான் பொய் சொல்லுறவன் தான், ஆனா இந்த விசயத்துல பொய் சொல்லல" அப்டின்னு நிரூபிக்கிரதுக்காக அவனும் அவனோட ப்ரென்ட் அந்த பொண்ணு ( அமன்டா ப்ய்ன்ஸ் ) உம் பண்ற கலாட்டா தான் மிச்ச படம்....

படத்தோட பெயர் "BIG FAT LIAR".....

இந்த ரெண்டு படத்தையும் பத்தி சொன்னதுக்கு காரணம்


"நான் முழு நேர வெட்டி ஆபீசரா இருக்கேன் "
அம்புட்டு தான்....
நான் கலர் கலரா எழுதி இருக்கிறது தான் தலைப்பு!!!
பி.கு:
டிவி ல போடுற படத்த பத்தி எழுத தான் இந்த பில்ட்அப்பான்னு யாரும் கேக்கக்கூடாது சொல்லிட்டேன் !!!

21 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:

கார்க்கி said...

குட்.

நீங்க எதையெல்லாம் வெட்டுவிங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?

ரசிக்கும் சீமாட்டி said...

என்ன க்விக்கா கமெண்ட் வருது...

//நீங்க எதையெல்லாம் வெட்டுவிங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?//

இப்படி கேப்பீங்கன்னு யோசிக்காம விட்டுட்டேனே!!!!

க‌ரிச‌ல்கார‌ன் said...

பி.கு:
டிவி ல போடுற படத்த பத்தி எழுத தான் இந்த பில்ட்அப்பான்னு யாரும் கேக்கக்கூடாது சொல்லிட்டேன் !!!

ச‌ரி கேக்க‌ல‌

தர்ஷன் said...

உங்கள் ரசனையில் எனக்கு நல்ல நம்பிக்கையுண்டு
Tom hanks இன் You've got a mail மற்றும் what a girl wants ஆகிய படங்களின் உங்கள் விமர்சனம் இன்னமும் ஞாபகத்தில் உண்டு. ஆனால் தலைவரை அங்கிள் என்பதுதான் அத்தனை நல்ல ரசனையாக தெரியவில்லை. முடிந்தால் வந்துப்பாருங்கள்

http://sridharshan.blogspot.com/2009/12/10.html

உங்கள் தோழி கிருத்திகா said...

ரஜினி அங்கிள் அப்படின்னு கூப்புட நமக்கு :) முழு தகுதி உண்டு...இருந்தாலும் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் :)
செரி தலைவர் ரசிகர் படையில் நீயும் சேர்ந்துட்டியா??
ரெண்டாவது படத்தை பார்த்துட்டேன் :) முதலுக்கு இது ஓ.கே..ஆனா அவளவா நல்லாலை

யோ வொய்ஸ் (யோகா) said...

"நான் முழு நேர வெட்டி ஆபீசரா இருக்கேன் "

நீங்க கொடுத்து வைச்சவங்க

அன்புடன் மணிகண்டன் said...

தலைப்பும் பதிவும் அருமை.. :)

ரசிக்கும் சீமாட்டி said...

@கரிசல் காரன்
//ச‌ரி கேக்க‌ல‌//

இப்டி டிசென்ட்டா கேட்காம விட்டதுக்கு ரொம்ப நன்றி தல !!!

ரசிக்கும் சீமாட்டி said...

@தர்ஷன்
//ஆனால் தலைவரை அங்கிள் என்பதுதான் அத்தனை நல்ல ரசனையாக தெரியவில்லை.//

இதுல ரசனை இல்லைங்க... நிஜம் தான் இருக்கு !!!
உங்கள புன்படுதணும் னு இல்லை... நீங்க தலைவர்ன்னு சொல்றதுக்காக நானும் தலைவர் ன்னு சொல்லமுடியாதுல...!!!

ரசிக்கும் சீமாட்டி said...

@கிருத்திகா

//முதலுக்கு இது ஓ.கே..ஆனா அவளவா நல்லாலை//

முதல் படம் பாத்த ஹான்கோவர் ல ரெண்டாவது படம் பாத்து இருந்தா பிடிச்சுருக்கும் ன்னு நினைக்குறேன்....!!!

ரசிக்கும் சீமாட்டி said...

@யோ வாய்ஸ்
//நீங்க கொடுத்து வைச்சவங்க//

இந்த நக்கலு தானே வேணான்றது...
நீங்க வேற ஓடுற தண்ணில கரண்ட்ட பாச்சாதிங்க பாஸ் !!!

ரசிக்கும் சீமாட்டி said...

@அன்புடன் மணிகண்டன்

//தலைப்பும் பதிவும் அருமை.. :)//

வந்ததுக்கு எதுனா பின்னூட்டம் போடணும்ன்னு போட்டுருக்கீங்க பாருங்க.... ஐ லைக் இட்!!!

அன்புடன் மணிகண்டன் said...

கண்டுபுடிச்சிட்டீங்களா?? Cho Sweeet.. :)

ரசிக்கும் சீமாட்டி said...

@அன்புடன் மணிகண்டன்

//கண்டுபுடிச்சிட்டீங்களா?? Cho Sweeet.. :)//

ஆண்டவா என்ன ஏன் தான் இம்புட்டு புத்திசாலியா படைச்ச ???!!!!

கமலேஷ் said...

பதிவுல இருந்து நிறைய படம் பாபீங்கன்னு தெரிது...
எதாவது நல்ல படம் இருந்த சொல்லுங்களேன்..
ஏன்னா நானும் உங்கள மாதிரி பல மொக்க படத்தை
மணிகணக்கா டவுன்லோட் பண்ணிட்டு அப்புறம் உக்காந்து
அழுகுற டைப்... so please give me some good movie names..

ரசிக்கும் சீமாட்டி said...

@கமலேஷ்
//பதிவுல இருந்து நிறைய படம் பாபீங்கன்னு தெரிது...
எதாவது நல்ல படம் இருந்த சொல்லுங்களேன்..//

என்னங்க இப்டி கேட்டு புட்டீங்க ....

http://www.watch-movies-online.tv/

இந்த வலைதளத்துல போய் பாருங்க....
இப்ப ரிலீஸ் ஆகுற படத்துல இருந்து பழைய படங்கள் வரை அம்புட்டும் இருக்கும்...
உங்களுக்கு பிடிச்ச வகைல படம் தேடிக்கலாம்...!!!!

ஆனா என்ன ஒன்னு இந்த சைட் ல ஆன்லைன் ல தான் படம் பாக்க முடியும்...!!!!
டவுன்லோட் பண்ற வழி தெரிஞ்சா எனக்கும் சொல்லுங்க பா...

அதி பிரதாபன் said...

டவுன்லோடு பண்றதுக்கு முன்னாடி நம்ம கிட்ட கேட்டுருக்கலாம்ல... இதுதான் நமக்கு பொழப்பே... சொல்லுங்க, நல்ல படத்தோட டொரண்ட மட்டும் அனுப்பி வைக்கிறேன்...

அகநாழிகைக்கு வந்தீங்களா? நா கூட வந்திருந்தேன். தெரியாமப் போச்சே...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

ரசிக்கும் சீமாட்டி said...

@அதி பிரதாபன்

//நல்ல படத்தோட டொரண்ட மட்டும் அனுப்பி வைக்கிறேன்...//

இந்த டோர்றேன்ட் வச்சு டவுன்லோட் பண்றது எப்டினே விளங்கலப்பா... அத மொதல்ல தெரிஞ்சுகிட்டுல உங்க கிட்ட நல்ல படத்தோட டோர்றேன்ட் வாங்குறதுக்கு...!!

//
அகநாழிகைக்கு வந்தீங்களா? நா கூட வந்திருந்தேன். தெரியாமப் போச்சே...//

நான் அங்க வரலைங்க... !!

ரசிக்கும் சீமாட்டி said...

//

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)
//
நானும் சிரிப்பேன் :)

Anonymous said...

ரெண்டு படமும் நல்லா இருக்கா இல்லியான்னு சொல்லவே இல்லையே

Post a Comment

வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin