ஹலோ மக்களே...
எல்லாரும் எப்படி இருக்கீங்க ?? (பதிவ படிக்கிறது நாலு பேரு , இதுல எல்லாரும் எப்படி இருக்கீங்க ன்னு கேள்வி வேரயான்னு யாரும் திட்டக்கூடாது ....!!!)
கடைய அஃபிசியலா தொறக்குறேன் ன்னு அக்டோபர்ல ஒரு பதிவு போட்டேன்... இதெல்லாம் பதிவு எழுதினா என்ன ஆவுறது ன்னு என் லேப்டாப் டர்ர் ஆகிருச்சு போல.... OS அ மாத்துறேன்னு கையவச்சுகிட்டு சும்மா இல்லாம என்னத்தையோ டெலீட் பண்ணிவிட்டுடேன்... அது என்ன கண்றாவியோ தெரில...
என் லேப்டாப் அ மீட்டு கொண்டுவறதுக்கு ஒன்ற மாசம் ஆகிருச்சு :( சேட்டு கடைல இருந்து மீட்டுட்டு வந்தேன் ன்னு யாரும் நினச்சுரலயே??!!! ....
சரி ஒரு வழியா லேப்டாப் வந்தாச்சு என்னத்தயாவது(??!!!) எழுதலாம் னா எதபத்தி எழுதுறதுன்னு ஒரே கண்ப்யுஷன் .... இம்புட்டு நாளா இதெல்லாம் யோசிச்சியாக்கும் நீங்க கேக்க வர கேள்வி நியாயம் தான்... பட் அதாங்க உண்மை...
படத்த பத்தி எழுதலாம்னா ஒரு படம் பார்க்ககூட நேரம் இல்ல... :( அதுக்குன்னு அம்புட்டு உழைக்குரேன் ன்னு தப்பா எடுதுக்கவேணாம்... தியேட்டர் போய் பார்க்கவோ டவுன்லோட் செய்யவோ நேரம் பொது அறிவு சொல்ல வந்தேன்...
ஆனாலும் தமிழ் படங்கள் மட்டும் பாக்குறேன், பார்பேன்... தமிழ் படத்துக்கு எழுதுறதுக்கு நெறைய நெறைய நல்ல விமர்சர்கள் இருக்கதுனால நான் அந்த பக்கம் போவல...
பொது அறிவு , செய்தி இதபத்திலாம் எழுதலாம்னா மொதல்ல நமக்கு அத பத்தி கொஞ்சநாச்சும் தெரிஞ்சுருக்கனும் ..... உம்ம்மம்ஹ்ம்ம்.... சுத்தமா பூஜ்யம் தான் ....
கதை கிதை எழுதலாம்னா இதெல்லாம் ஒரு கதையான்னு யாருனாச்சும் கேட்டுட்டா என்ன பண்றதுன்னு யோசனையாவே இருக்கு....
அட்லீஸ்ட் கவித??!! ஏற்கனவே நா எழுதின இத கவித இல்ல கவித மாதிரி பதிவ படிச்சவங்க மீண்டும் இந்த வலைபூவுக்கு வந்ததா எந்த சுவடையும் காணோம் ...
ரைட்டு எல்லாத்தையும் சேத்து ஒரு கலவையா எழுதலாம்னா சரியான "தலைப்பு" சிக்கல....
நீங்களே சொல்லுங்க.. அடுத்து நா எதபத்தி எழுதலாம்ன்னு ....
இன்னைக்கு ரசிச்சது :
என்ன வேணாம் பண்ணலாம்....
பதிவு பிடிச்சுருந்தா பின்னூட்டமும் ஓட்டும் போடுங்க மகா ஜனங்களே........