Thursday, November 18, 2010

இன்னைக்கு ரசிச்சது

ஹலோ மக்களே...
எல்லாரும் எப்படி இருக்கீங்க ?? (பதிவ படிக்கிறது நாலு பேரு , இதுல எல்லாரும் எப்படி இருக்கீங்க ன்னு கேள்வி வேரயான்னு யாரும் திட்டக்கூடாது ....!!!)

கடைய அஃபிசியலா தொறக்குறேன் ன்னு அக்டோபர்ல ஒரு பதிவு போட்டேன்... இதெல்லாம் பதிவு எழுதினா என்ன ஆவுறது ன்னு என் லேப்டாப் டர்ர் ஆகிருச்சு போல.... OS அ மாத்துறேன்னு கையவச்சுகிட்டு சும்மா இல்லாம என்னத்தையோ டெலீட் பண்ணிவிட்டுடேன்... அது என்ன கண்றாவியோ தெரில...

என் லேப்டாப் அ மீட்டு கொண்டுவறதுக்கு ஒன்ற மாசம் ஆகிருச்சு :( சேட்டு கடைல இருந்து மீட்டுட்டு வந்தேன் ன்னு யாரும் நினச்சுரலயே??!!! ....

சரி ஒரு வழியா லேப்டாப் வந்தாச்சு என்னத்தயாவது(??!!!) எழுதலாம் னா எதபத்தி எழுதுறதுன்னு ஒரே கண்ப்யுஷன் .... இம்புட்டு நாளா இதெல்லாம் யோசிச்சியாக்கும் நீங்க கேக்க வர கேள்வி நியாயம் தான்... பட் அதாங்க உண்மை...

படத்த பத்தி எழுதலாம்னா ஒரு படம் பார்க்ககூட நேரம் இல்ல... :( அதுக்குன்னு அம்புட்டு உழைக்குரேன் ன்னு தப்பா எடுதுக்கவேணாம்... தியேட்டர் போய் பார்க்கவோ டவுன்லோட் செய்யவோ நேரம் பொது அறிவு சொல்ல வந்தேன்...

ஆனாலும் தமிழ் படங்கள் மட்டும் பாக்குறேன், பார்பேன்... தமிழ் படத்துக்கு எழுதுறதுக்கு நெறைய நெறைய நல்ல விமர்சர்கள் இருக்கதுனால நான் அந்த பக்கம் போவல...

பொது அறிவு , செய்தி இதபத்திலாம் எழுதலாம்னா மொதல்ல நமக்கு அத பத்தி கொஞ்சநாச்சும் தெரிஞ்சுருக்கனும் ..... உம்ம்மம்ஹ்ம்ம்.... சுத்தமா பூஜ்யம் தான் ....

கதை கிதை எழுதலாம்னா இதெல்லாம் ஒரு கதையான்னு யாருனாச்சும் கேட்டுட்டா என்ன பண்றதுன்னு யோசனையாவே இருக்கு....

அட்லீஸ்ட் கவித??!! ஏற்கனவே நா எழுதின இத கவித இல்ல கவித மாதிரி பதிவ படிச்சவங்க மீண்டும் இந்த வலைபூவுக்கு வந்ததா எந்த சுவடையும் காணோம் ...

ரைட்டு எல்லாத்தையும் சேத்து ஒரு கலவையா எழுதலாம்னா சரியான "தலைப்பு" சிக்கல....

நீங்களே சொல்லுங்க.. அடுத்து நா எதபத்தி எழுதலாம்ன்னு ....


இன்னைக்கு ரசிச்சது :

இத பாத்ததும் ஒரே யோசனை... பத்து மாசம் பிள்ளை என்னலாம் பண்ணும்ன்னு... அறிவியல் பூர்வமா தெரிஞ்சாலும்(??!!!!!!) கற்பனைக்கு அளவு இல்லைல...
என்ன வேணாம் பண்ணலாம்....

பதிவு பிடிச்சுருந்தா பின்னூட்டமும் ஓட்டும் போடுங்க மகா ஜனங்களே........
8 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:

பிரபு . எம் said...

இது உங்க பதிவு... நீங்க என்ன வேணா எழுதலாம்...
வாசிக்குறவங்க வாசிக்காதவங்கள பத்தி எல்லாம் ஏன் கவலை படுறீங்க...??
என்ன வேணா எழுதுங்க... நல்லா எழுதுங்க நல்ல கமெண்ட்ஸ் கண்டிப்பா வரத்தான் போகுது...
என்னங்க.... அப்டியும் சந்தேகமா என் பதிவுக்கு வாங்க இவனே எழுதும்போது நமக்கென்னன்னு தன்னம்பிக்கை வந்திடும்!!... எதுக்கு இவ்ளோ குழப்பம் :)

மாணவன் said...

நல்லா இருக்கு தொடருங்கள்...

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

நன்றி
நட்புடன்
மாணவன்

Lakshmi said...

எதைப்பத்தி எழுதலாம்னு தலைப்புலயே இவ்வளவு பெரிய பதிவா. சூப்பர்.

கிருபாநந்தினி said...

சூப்பரோ சூப்பர்!
இன்னொரு ஜோக்:
வயித்துல இருக்கிற பெண் குழந்தை: “கடவுளே! எனக்கு அன்பான பெற்றோர்களைக் கொடு!”

Kavi said...

உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க .... http://www.padugai.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.padugai.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி

Part Time Jobs said...

Latest Google Adsense Approval Tricks 2011

Just Pay Rs.1000 & Get Google Adsense Approval Tricks.

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

New google adsense , google adsense tricks , approval adsense accounts,

latest adsense accounts , how to get approval adsense tricks, 2011 adsense tricks ,

Quick adsense accounts ...

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

Gayathri said...

உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க .... http://www.padugai.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.padugai.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி

Part Time Jobs said...

No 1 Free Indian Classified Site உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க Free Classified New Website . Just Post Your Post Get Free Traffic ....http://www.classiindia.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.classiindia.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி

Post a Comment

வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin