Sunday, August 15, 2010

பெயர் அளவில் செல்ல பிராணிகள்...



வணக்கம் மக்களே ..

உங்கள் ல எத்தன பேர் வீட்ல செல்ல பிராணி வளர்க்குறீங்க??!!
அந்த ஜீவன வாக்கிங் கூட்டிட்டு போற பழக்கம் இருக்கா??...
எனக்கு சமயத்துல இப்படி வாக்கிங் கூட்டிட்டு போற அனிமல்ஸ் அ பாத்த பாவமா இருக்கும்..

தொப்ப கொரயனும்ன்னு மனுஷங்க நடக்குறாங்க.. நாய் க்கு என்ன வந்துச்சு....
இவரு நடக்குறதுக்காக காலங்காத்தால அந்த நாயையும் எழுப்பி விட்டு மாங்கு மாங்கு ன்னு நடக்க விடறபாத்த ஏன் இப்படி ன்னு கூட தோணும்...

அதுவும் சும்மா கூட்டிட்டு போவ மாட்டாங்க.. அதுக்கு கழுத்துல ஒரு பெல்ட் அதோட செயின் இவர் கைல !!
கூட்டிட்டு போறவங்க எந்த வழி ல போறாங்களோ அதே வழில வேற சாய்சே
இல்லாம போவனும்...
காலாற நடக்க கூட முடியாது... கூட்டிட்டு போறவங்க வேகமா நடந்தா அதுவும் வேகமா நடக்கணும்..
மெல்லாம நடந்தா அதும் மெல்லாம நடக்கணும்....

நீங்க வேணா யாருகிட்டயாச்சும் கேட்டு பாருங்களேன் "ஏன்யா பெல்ட் கட்டி நாய வாக்கிங் கூட்டிட்டு போற" ன்னு ...
அப்படி கூட்டிட்டு போவலன்னா அது எங்கனயாச்சும் ஓடிடும்ன்னு சொல்லுவாங்க...
தொப்ப கொறைய சரி சரி ஒடம்ப மெயின்டைன் பண்ண தானே வாக்கிங் போறாப்புல ..
அந்த ஜீவன கொஞ்ச தூரம் ஓட விட்டு பிடிகட்டுமே.. நாயும் சுதந்திரமா சுத்துன மாதிரி இருக்கும் இவரும் நல்லா ஓடி வேர்வ சிந்தட்டும்,..
என்ன நான் சொல்றது??!! இத சொன்னா நம்மள லூசுன்னுவாங்க...


பேர் தான் செல்ல பிராணி... அந்த பிராணிட்ட கேட்டாத்தான் இவங்க கூட அது என்ன பாடு படுதுன்னு தெரியும்..
(நாய் கூட இவ்ளோ பீல் பண்ணிருக்காது ன்னு நீங்க சொல்றது கேக்குது!!! )

எதுக்கு இந்த வெட்டி பேச்சு... நம்ம ஊர்லனாச்சும் நாய்க்கு தான் இந்த நிலைமை...






இந்த கொடுமைய எங்க போய் சொல்லுவீங்க??
நம்ம ஊர்ல இந்த நிலைமை இன்னும் வரல ன்னு சந்தோஷ பட்டுக்க வேண்டியதுதான்... வேற என்ன செய்றது...


குழந்தை நா அங்க இங்க ஓட தான் செய்யும்.. இப்ப ஓடாம எப்ப ஓடறது..
குழந்தைய அது இஷ்டத்துக்கு இருக்க விடாம இப்படி கயத்த கட்டிவிட்றாங்க..
கேட்டா டெக்னாலஜி ன்னு சொல்லுவாங்க.. அப்படி இல்லைன கிருஷ்ண பகவானையே அவங்க அம்மா இப்படி தான் கட்டி வச்சுருந்தாங்க ன்னு சொல்லுவாங்க...



என்ன சொல்லுங்க மக்களுக்கு எல்லாத்துக்கும் ஒரு காரணம் ரொம்ப சுலபமா கெடச்சுடுது...

2 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:

யோ வொய்ஸ் (யோகா) said...

யக்கா நாங்களெல்லாம் நாய்களை வாக்கிங் கூட்டிட்டு போறவுங்க, செல்லப்பிராணிகளின் எக்சைசுக்காக...

எப்புடி

Chitra said...

டிஸ்னி வேர்ல்ட் மாதிரி இடங்களில் இது ரொம்ப common . அங்குள்ள பல attractions மத்தியில் , குழந்தைகள் சில நிமிடங்களில் தொலைந்து போக வாய்ப்பு இருக்கிறது. அப்படி தொலைந்து விட்டு பதறி போய் இருந்த குழந்தை ஒன்றை நானும் என் தோழியும் கூட்டிக்கிட்டு போய், authority உதவியுடன் பெற்றோர்களிடம் சேர்க்கும் படி செய்தோம். குழந்தை ஓடி விளையாடுவதை தடுக்க, பெற்றோர்கள் இங்கு இந்த leash ஐ உபயோகிப்பது இல்லை. கூட்டம் நிறைந்த இடங்களில், குழந்தைகள், அந்த கயிறு தூரம் தாண்டி சென்று விடாமல் இருக்கத்தான்.. மேலும், அந்த மாதிரி பொது இடங்களில், கார் போகும் பாதையில் குழந்தைகள், ஆர்வம் மிகுதியால் திடீர் என்று பாய்ந்து ஓடி விடாமல் தடுக்கும். எல்லோரும் உபயோகிப்பது இல்லை. உபயோகித்த சிலரின் கருத்துக்களை கேட்ட பொது, தவறாக தோன்றவில்லை.

Post a Comment

வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location