

ஒரு மனுஷனுக்கு தான் பெண்டாட்டிக்கு காது கேக்காம போயிருச்சோ னு சந்தேகம் வந்துச்சு...
ஆனா அவ கிட்ட வே எப்டி கேக்குறது னு யோசிச்சு பாத்தான்... எதுக்கும் டாக்டர் கிட்ட ஒரு வார்த்த கேட்கலாம்-னு போனான்...
அந்த டாக்டர் இதுக்கு சிம்பிள் அ ஒரு வழி இருக்கு னு சொன்னாரு... "நான் சொல்ற படி செய் அவ கிட்ட இருந்து ஒரு 40 அடி தள்ளி நின்னு பேச்சு கொடு, பதில் வரல னா, 30 அடி கிட்ட போ , அப்புறம் 20 அடி இப்டியே அவ பதில் சொல்ற வரைக்கும் கேட்டுட்டே இரு"
அவனும் அன்னைக்கு சாயந்தரம் அவன் பெண்டாட்டிக்கு 40 அடி தள்ளி நின்னு "இன்னைக்கு என்னமா சாப்பாடு ?" னு கேட்டான்...
பதில் இல்ல.
சரி னு இன்னும் கொஞ்சம் பக்கத்துல (30 அடிகிட்ட ) போய் "இன்னைக்கு என்னமா சாப்பாடு ?" னு கேட்டான்...
பதில் இல்ல.
இன்னும் பக்கத்துல போய் ( 20 அடிகிட்ட ) "இன்னைக்கு என்னமா சாப்பாடு ?" னு கேட்டான்...
இன்னும் பதில் கிடைகல.
10 அடி இடைவெளி ல போய் கேட்டான் "இன்னைக்கு என்னமா சாப்பாடு ?"
அட. இன்னும் பதில் வரல.
சரி தான் போ னு நினைச்சுகிட்டு அவ பக்கத்துலயே போய் கேட்டுட்டான் "இன்னைக்கு என்னமா சாப்பாடு ?" னு...
;
;
;
;
;
" யோவ் அஞ்சாவது தரவயா சொல்லிட்டேன், பிரியாணி !"
இதுனால நான் சொல்ல வரது என்ன னா:
-------------------------------------------------
ப்ரெச்சனை-ங்கறது எப்பவுமே நாம நினைக்கிற மாதிரி அடுத்தவங்க கிட்ட இல்லைங்க... முக்கா வாசி நேரம் நம்ம கிட்ட தான்...!!!
*********************************************************
பி. கு: தமிழ் படுத்துனது மட்டும் தான் நான். நல்ல இல்ல னா திட்டிடுங்க. கோச்சுக்க மாட்டேன்.
5 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:
ஹாஹாஹா
செம காமெடிங்க!
நன்றி வால் பையன்!!
நீங்க என்னைய ஓட்டுறிங்களா பாரட்டுரிங்களா???!!!
ஒன்னுமே புரியல பா!!!
நான் ஏன் தல உங்களை ஓட்டுறேன்!
தன் பக்கம் குறையை வச்சிகிட்டு பொண்டாட்டி மேல பழிய போட்டவனை நினைச்சி சிரிச்சேன் தல!
நல்லது தலைவா!!!
Post a Comment
வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க