Thursday, August 13, 2009

கவிதைங்கோ !!

குடும்பம்


கருவரையில் கடுகளவு

இருந்த என்னை

கருத்தூண்றி வளர்த்தவளே..

என் தாயே..

கண்டித்து வளர்த்தாலும்

கண் இமை போல

என்னை காத்தவரே..

என் தந்தையே..

வம்புக்கும்

பஞ்சமில்லை..

அன்புக்கும்

பஞ்சமில்லை..

தோழியான சகோதரியே..

வழிகோலுங்கள்..

உங்களை போல்

என்னை காதலிக்கும்

என்னவளும்

நம் குடும்பம் எனும்

கவிதை கூண்டுக்குள்

வர...

இந்த கவித என் நண்பனோடது.... அந்த வலைபக்கத்த பாக்க இங்க கிளிக்குங்க

http://kirukargalpakkam.blogspot.com

4 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:

தேவன் மாயம் said...

கருவரையில் கடுகளவு

இருந்த என்னை

கருத்தூண்றி வளர்த்தவளே.///

வரிகள் அருமை!!!

swizram said...

நன்றி தேவன் சார்...

இதுக்கு அந்த நண்பர் பக்கத்துல பின்னோட்டம் போட்ருந்தா இன்னும் மகிழ்ச்சியா இருக்கும்!!

Raju said...

\\இதுக்கு அந்த நண்பர் பக்கத்துல பின்னோட்டம் போட்ருந்தா இன்னும் மகிழ்ச்சியா இருக்கும்!!\\

அங்கயும் போயி பின்னூட்டுவோம்ல...
காசா,,பணமா.

Vishnu said...

தங்கச்சி,
இதுதான் கடை தேங்காய வழி பிள்ளையாருக்கு உடைக்கருதுங்களா?
விஷ்ணு

Post a Comment

வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location