வழக்கமா எல்லா படத்துலயும் ஹீரோவும் ஹீரோஇனும் பாத்ததும் காதலிக்க ஆரம்பிச்சுடுவாங்க, கொஞ்ச நாள் கழிச்சு ப்ரொபோஸ் பண்ணி கல்யாணம் பண்ணிப்பாங்க... இந்த படமும் அப்படி தான் இருக்கும் னு நினச்சு பாக்க ஆரம்பிச்சேன்..
இதுல ஒரு சின்ன மாற்றம்.. முதல் பத்தில சொன்னது எல்லாம் படம் ஆரம்பிச்சு பத்து நிமிஷத்துலயே முடிஞ்சுடும்... இதுல சின்ன சிக்கல் என்ன னா ஹீரோவும் ஹீரோயினும் கல்யாணம் பண்ணிகரதுக்கு முன்னாடி அவங்க "Marriage Preparation Course" அ முடிக்கணும் னு அவங்க கல்யாணம் பண்ணிக்க போற சர்ச்சோட பாதிரியார் சொல்லுவார்..
அந்த பாதிரியார் சொல்லுற மாதிரி லாம் நடந்துகிட்டா தான் அவங்க கல்யாணம் நடக்கும்... அந்த ஹீரோயின் இந்த கோர்சுக்கு ஒத்துக்கும்.. அந்த ஹீரோவுக்கு இது பிடிக்காது...
அந்த கோர்ஸ் ல அவங்க என்னலாம் பண்றாங்க எப்பிடி பண்றாங்க னு லாம் ரொம்ப நகைச்சுவையா காட்டிருப்பாங்க...
(இது கிரீப்பி ரோபோட் பாப்பா .. அவங்க கோர்ஸ் ல இந்த பாப்பாவையும் ஒழுங்கா பாத்துக்கணும்... ஆனா ஹீரோ அதுங்க பண்ற அலும்புல டென்ஷன்ஆகி ஒரு பாப்பாவ ஒடச்சுருவான்!!)
கல்யாணத்தன்னைக்கு அந்த பொண்ணு " இல்ல எனக்கும் அவனுக்கும் ஒத்து வராது இந்த கல்யாணம் வேணாம்" னு சொல்லிட்டு போய்டுவா..அந்த பொண்ணும் பையனும் சேர்ந்தாங்களா னு படம் பாத்து தெரிஞ்சுகோங்க... :)
அந்த பாதிரியார் அப்பிடி ஒரு கோர்ஸ் வைக்கறதுக்கு காரணம் கல்யாணம்ங்கறது பப்பி லவ்வ தாண்டி ஆழமான புரிதலோட இருக்கனும் னு தான்!!! ( இது தான் இந்த படத்தோட மெசேஜ் )
பி.கு:
நான் அதிகமா ரொமான்டிக் காமெடி படம் தான் பார்ப்பேன். இங்க எழுதுறது எல்லாம் பழைய படங்கள் தான்.. ஏற்கனவே படம் பாத்தவங்களுக்கு ஒரு சின்ன நினைவூட்டல் பாக்காதவங்களுக்கு நல்ல படம்ங்கற தகவல் அவ்ளோ தான்...
அப்புறம் இன்னும் ஒண்ணு சொல்லணும்... சுத்த தமிழ் ல எழுத முயற்சி பண்றேன்... ஆனா அங்கங்க ஆங்கிலம் வர தான் செய்யுது.. :( அதுக்கும் மன்னிச்சு விட்டுருங்க...
28 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:
சுத்தத் தமிழ்ல யாருமே எழுதறதில்ல. அப்படி எழுதினா இங்க யாருக்குமே அது புரியாது..
உனக்கு இயல்பா வருகின்ற எழுத்து நடையிலேயே எழுதும்மா..
நல்லா இருக்கு விமர்சனம்.. முடிவைச் சொல்லாம நீங்களே பார்த்துக்குங்கன்னு சொல்லிட்ட.. குட்.. வெரிகுட்..!
@உண்மைத்தமிழன்
//உனக்கு இயல்பா வருகின்ற எழுத்து நடையிலேயே எழுதும்மா..//
நீங்களே சொல்லிட்டீங்க... ரைட் சகா...
ரெண்டாம் முறையா பின்னூட்டம் போட்டதுக்கு நன்றிங்க...
நல்லா இருக்கு -- கட்டுரையில், உங்க உழைப்பு தெரியுது.
வாழ்த்துக்கள்.
காசு சோபனா
http://engalblog.blogspot.com
ம் தகவலுக்கு நன்றி.. இந்தப்படத்தை நம்மலும் பார்க்கணும் போல இருக்கு..
இன்னும் நிறைய படத்தை பார்த்துட்டு நமக்கும் சொல்லுங்க... அப்போத்தான் நல்ல படங்கள் எல்லாரையும் ரீச் ஆகும்! :}
படத்தை மாத்தினதுக்கு நன்றிபா, :))
இந்த படத்தை இரண்டு வருடங்களுக்கு முன்னால்
சத்யம் தியேட்டரில் பார்த்ததாக நினைவு....
ஆனா எனக்கு தான் ஒன்னும் புரியுல.....
நல்லா விமர்சனம் செஞ்சிருக்கீங்க.. இந்த சினிமாவை பார்க்க முயற்சி செய்யறேன்.
@Anonymous
//நல்லா இருக்கு -- கட்டுரையில், உங்க உழைப்பு தெரியுது.
வாழ்த்துக்கள்.//
வாழ்த்துகளுக்கு நன்றி :)
@மயில்
அட இதுக்கெல்லாம் எதுக்கு நன்றி சொல்லிக்கிட்டு.....!!!
@ஜெட்லி
இன்னொரு தரம் பாருங்க புரியும்.....
@சென்ஷி
பாருங்க பாருங்க...
உங்களுக்கு பிடிக்கல னா ஆட்டோ லாம் அனுப்ப மாட்டீங்க தானே....??!!
ஒரு டவுட் அதான் தப்பா நினச்சுகாதிங்க.....
அண்ணே உண்மைதமிழன் அண்ணே விமர்சனம் எழுதறத பத்தி நீங்க சொல்லக்கூடாது.. அதுலேயும் க்ளைமாக்ஸ் பத்தி நீஙக் பேசவே கூடாது..
ரசனைக்காரிக்கு.. எனக்கென்ன்வோ படம் அவ்வளவாக பிடிக்கவில்லை.. உங்க திருதிரு துறு துறு நிச்சயம் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
@கேபிள் சங்கர்
//எனக்கென்ன்வோ படம் அவ்வளவாக பிடிக்கவில்லை.. உங்க திருதிரு துறு துறு நிச்சயம் பிடிக்கும் என்று நினைக்கிறேன். //
விடுங்க ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ரசணை... திரு திரு துறு துறு இந்த வாரதுக்குள்ள பாத்துடுறேன்... நன்றி சொன்னதுக்கு :)
இந்த படம்லாம் எங்க தேடி பார்க்கிறது.
@யோ வாய்ஸ்
www.watch-movies-links.net
நீங்க இந்த வலைத்தளத்துல எல்லா ஆங்கில படங்களும் பாக்கலாம்....!!
thanks ரசனைக்காரி for the link. it's amazing.
சரி, அப்பிடியே அடுத்த வாரம் அக்க்ஷய் போட்டுருங்க...ஹி ஹி :)
@யோ வாய்ஸ்
You are welcum..... எத்தன வருஷமா வெட்டியா ப்ரொவ்ஸ் பண்றேன் இந்த லிங்க் கூட தெரிஞ்சு வச்சுக்கலனா பின்ன எப்பிடி...
நல்லா எல்லா படமும் பாருங்க...... :)
@மயில்
//சரி, அப்பிடியே அடுத்த வாரம் அக்க்ஷய் போட்டுருங்க...ஹி ஹி :)//
அய்யயோ அடுத்த வாரம் சான்னிங் டாட்டம் படம் போடுறேன் னு வாக்கு கொடுத்துடேனே....!!
HBO ல கொஞ்சம் மட்டும் பார்த்தேன்!
அடுத்த முறை முழுசா பார்க்கனும்!
@வால்பையன்
அடிக்கடி போடுவான்.... எப்ப வேணும்னாலும் பாக்கலாம் :)
அநேகமா உங்களுக்கு அதிக நேரம் இருக்கு போல... வார இறுதியில் எந்த ஒரு குப்ப படமா இருந்தாலும் பார்த்திடுவேன். உங்க தெரிவு நல்லா இருக்கு.. முடிஞ்சா கொரியன் முவீ பாருங்க...
அருமையான photography, இழைந்தோடும் மெல்லிய காதல் கதைகள், அருமையான ரசனையோட இருக்கு... முயற்சி பண்ணுங்க...
பார்த்திருக்கேன். காமெடி படம் தான். ஆனா சில இடங்கள் முகம் சுளிக்க வைத்தது. அந்தப் பாதிரியார் கொஞ்சம் ஓவரா போற மாதிரி இருக்கும். Esp. bugging the couple's apartment .. too much!
@சிம்பா
//அருமையான photography, இழைந்தோடும் மெல்லிய காதல் கதைகள், அருமையான ரசனையோட இருக்கு... முயற்சி பண்ணுங்க...//
நெறைய கொரியன் படங்கள் பாத்துருக்கேன் பாத்துகிட்டும் இருக்கேன்... கொரியன் படங்கள் பத்தி மூணு நாலு பதிவு போட்டுருக்கேன்... அத யாரும் பெருசா மதிச்ச மாதிரி தெரியல.... அதான் கொஞ்சம் ஆங்கில படங்கள் பத்தி எழுதிட்டு திரும்பவும் கொரியன் படங்கள் பத்தி எழுதலாம் னு இருக்கேன்.... மேலும் சப் டைட்டிலோட படம் பாக்க சொன்னா யாருனா திட்டிடுவாங்களோ னு ஒரு சின்ன பயம் தான்...
நன்றி சிம்பா...
@தீபா
//Esp. bugging the couple's apartment .. too much!//
சரியா சொன்னிங்க... எனக்கும் அந்த இடம் பிடிக்கல... ஆனா ஹீரோவையும் ஹீரோயினையும் எனக்கு பிடிச்சுருந்துச்சு ;)
பார்த்துட்டே இருக்கீங்களா... நல்லது... ஆமா சேரன் அதிகமா கொரியன் படங்கள் சுடுவாரமே.. உண்மையா?
@சிம்பா
சேரன் னு இல்லங்க... இப்ப லாம் நெறையா பேர் கொரியன் படத்துல இருந்து காட்சிகள எடுத்து போடுறாங்க... முழுப்படமா யாரும் எனக்கு தெரிஞ்சு எடுக்கல....
ரொமான்டிக் காமெடி வகையராக்களை வேண்டும் என்றால் ரசிக்கலாம்! ஆனா காமெடின்னு சில படங்கள் ஜெனர்ல போட்டுட்டு கடுப்புகளை கிளப்புற படங்களை என்னத்த சொல்ல?
Post a Comment
வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க