Thursday, September 10, 2009

லவ் மீ நாட் - லவ் கிவ்வுலாம் ஒன்னும் தேவையில்ல பாஸ்

லவ் மீ நாட் படத்த பத்தி எழுதலாமா னு கேட்டதுக்கு லோகு சொன்னது அழகான ஹீரோயின் நடிச்ச படமா எழுது னு...

எனக்கு கொரியன் படத்துல ரொம்ப பிடிச்ச ஹீரோயின் Moon Geun-young.
சோ இந்த முறை அவங்க நடிச்ச படத்த பத்தி தான் எழுதபோறேன்.மை லிட்டில் ப்ரைட் படம் பாத்துட்டு இந்த பொண்ணு செம்ம கியூட் னு மட்டும் தான் நினச்சேன் .. ஆனா இந்த படம் பாத்ததும் தான் தெரிஞ்சது அந்த பொண்ணு அழகா நடிக்கவும் செய்யும் னு...



இந்த படத்தோட கதை இது தான்...


ஜுலியன் ங்கறவன் ரொம்ப சந்தோசமா அடுத்தவங்கள ஏமாத்தி பொழப்பு நடத்துறவன். எதிர்பாராத விதமா பிசினஸ் லாஸ் காரணமா அவனுக்கு நெறைய கடனா போய்டுது. ஒரு மாசத்துல கடன கட்டலனா அவன கொலை பண்ணிருவோம் னு வழக்கம் போல மிரடிட்டு போகுது. அவன் அவன காப்பாத்திக்க இருக்க ஒரே வழி பெரிய சொத்துக்கு வாரிசா இருக்க ஹீரோ யினோட அண்ணனா (சின்ன வயசுலயே வீட்ட விட்டு ஓடி போன) நடிச்சு அப்புறம் அந்த பொண்ணையும் கொன்னுட்டு அவ சொத்த தன்னோடது ஆக்கிக்கறது தான்.
மின் ங்கற அந்த ஹீரோயினுக்கு எதோ ஒரு காரணமா சின்ன வயசுலயே கண் பார்வை இல்லாம போய்டுது. அந்த பொண்ணுக்கு அவன் தன்னோட அண்ணன் இல்ல னு ஒரு இன்ஸ்டிங் சொல்லுது. ஆனா கொஞ்ச கொஞ்சமா அவன் மேல ஒரு லவ் வும் வருது. அவள ஏமாத்தனும் னு நினச்சு வந்த ஜுலியன் உம் கொஞ்ச கொஞ்சமா அவள விரும்ப ஆரம்பிக்கிறான்.

இந்த ஸ்டோரி திருப்பம் னா ஜுலியன் குற்ற உணர்ச்சியோட குற்றவாளி யா தனக்கு தானே தெரிஞ்சே தண்டனை கொடுதுக்கறது. இந்த படத்தோட தீம் னு பாத்த இன்னொசென்ட் லவ் மற்றும் நம்பிக்கை துரோகம்.
இந்த படத்த பத்தி படத்தோட டைரக்டர்(Lee Cheol-ha) இப்டி சொல்கிறார்:

"The moment when two people desperately long for one another, the moment when love cannot possess but subsists - that’s what I tried to put on screen. Julian and Min are not your regular melodrama characters. When love unexpectedly comes to the two very people mistrusting love, it becomes more ardent than ever.”




படத்த பாக்க விருப்ப படறவங்க

இங்க கிளிக்குங்க








3 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:

லோகு said...

என் கோரிக்கையை ஏத்துகிட்டதற்கு ரொம்ப நன்றி.. இந்த பொண்ணு நெஜமாலுமே அழகா இருக்கு.. இந்த பொண்ணுகாகவே நான் படம் பார்க்கிறேன்.. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நன்றி..

swizram said...

உனக்காகவே இன்னும் நெறைய அழகான கொரியன் படமா போடுறேன் லோகு....

Deepan Mahendran said...

நானும் My Little Bride படம் பார்த்ததில் இருந்து யங் மூனோட விசிறி ஆயிட்டேன்... :)

Post a Comment

வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location