Thursday, September 10, 2009

One Fine Day - மிக மோசமான நாளில் நடக்கும் சில சந்தோஷ தருணங்கள்



அட எவ்ளோ நாள் தன் கொரியன் படத்த பத்தியே எழுதுறது.. அதான் ஒரு சேன்ஜ் க்கு நாமளும் இங்கிலீஷ் படத்த பத்தி எழுதுவோம் னு டிசைட் பண்ணிட்டேன்... எத பத்தி எழுதுனாலும் அத படிக்க நமக்கு னு ஒரு நாலு பேரு கிடைக்காமலா போயிருவாங்க னு ஒரு குருட்டு தைரியம் தான்...

ஜார்ஜ் க்ளூனீ னு ஒரு நடிகர் இருக்காருங்கரதே எனக்கு ஒஷேன்ஸ் சீரிஸ் பாத்த பெறகு தான் தெரியும்... அதுக்கு அப்புறம் அவர் நடிச்ச படங்கள் சிலத தேடிப்பிடிச்சு பாத்தேன்.. அப்டி பாத்ததுல முதல் படம் தான் "One Fine Day ".


1996 ஆம் ஆண்டு இந்த படம் ரிலீஸ் ஆச்சு. நா பாத்தது போன வருஷம். அப்போ எனக்கு வலைப்பக்கம் பத்திலாம் தெரியாது. இப்போ தான் சமீபமா ஆரம்பிச்சேன் ( வீட்டுல வெட்டியா இருக்கதுனால ஆரம்பிச்சது , அதுக்கு முன்னாடி மட்டும் என்ன வெட்டி கிழிச்ச னு கமெண்ட் போட்டு யாரும் கிழிக்க வேணாம் )
இந்த படம் ஒரு ரொமான்டிக் காமெடி. இதுல்ல நடிச்சு இருக்கவங்க George Clooney and Michelle Pfeiffer. மெலனி பார்கெர் மற்றும் ஜாக் டயலர் ரெண்டு பேரும் தனி பெற்றோர்கள் (single parents க்கு இது சரியான தமிழ் படுத்தலா னு யாராச்சும் சொல்லுங்க பாஸ்) . இவங்க ரெண்டு பேரும் ஹெக்டிக்கான ஒரு வேலை நாள் லா அவங்க குழந்தைங்களும் அவங்க கூட இருக்க மாதிரி ஒரு சந்தர்பத்துல மாட்டிக்கிறாங்க.



அந்த ஒரு நாள்ல அதுக்கு முன்னாடி பழக்கமே இல்லாத அவங்க ரெண்டு பேரும் ஒருதருக்குஒருத்தர் எப்டி ஹெல்ப் பண்ணி அவங்க வேலைகள் பாதிக்காம என்ன என்ன பண்றாங்க ங்கறது தான் படத்தோட கதை.
இந்த படம் ஆஸ்கார் லயும் கோல்டன் க்ளோப் யும் பல நாமினேஷன்ஸ் இடம் பெற்றுச்சு. படத்துல க்ளூனீ யோட பொண்ணா நடிச்ச Mae Whitman YoungArtist Award மற்றும் YoungStar Award a இந்த படத்துக்காக வாங்கிருக்காங்க.




இந்த படத்துக்கு யூடியுப் லிங்க் கிடைக்கல. அதுனால டிவிடி வாங்கி படம் பாத்துகோங்க!!!









6 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:

உங்கள் தோழி கிருத்திகா said...

அம்மா கலகிட்ட போ :) எங்கேருந்து புடிக்கற இந்த படத்தலாம்???

லோகு said...

மேடம் ஒரு முடிவோடத்தான் களம் இறங்கிட்டீங்க போல.. உலக பட விமர்சனமா வந்து குவியுது...

ஆனாலும் அழகு கொரிய தேவதைகள் இல்லாத படத்தை பார்க்க சொல்வதை என்னால் ஏத்துக்க முடியல..

வால்பையன் said...

நல்ல படமா தெரியுது!

பாத்துரலாம்!

three kings!

ஜார்ஜ் நடிச்சது தான் பாருங்க, நல்லாயிருக்கும்!

Anbu said...

நல்லா இருக்கு உங்க விமர்சனம்..

சென்ஷி said...

பகிர்விற்கு நன்றி!

swizram said...

@ kiruthiga

ஹே இதெல்லாம் நாங்க ஹாஸ்டல்ல இருக்கும் போதே பாத்தது மாமி....!!

@லோகு

அப்டி லாம் இல்ல பாஸ்.. நெறைய படம் பாப்பேன் அத உங்க கூட லாம் பகிர்ந்துக்கலாம் னு ஒரு நல்ல எண்ணம் தான்....

@ வால்பையன்

படம் பாக்க ஆரம்பிச்சுட்டேன்... நன்றி வாழ் பையன் ஒரு நல்ல படத்த பத்தி சொன்னதுக்கு...

@ அன்பு

முதல் தடவையா பின்னோட்டம் போட்டதுக்கு நன்றி அன்பு

@ சென்ஷி

உங்களுக்கும்,
முதல் தடவையா பின்னோட்டம் போட்டதுக்கு நன்றி சென்ஷி

Post a Comment

வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location