Sunday, December 13, 2009

நிலா - குட்டி கவிதை

கவிதைகள் பல விதம்.... ஒவ்வொன்றும் ஒரு விதம்...
இப்பலாம் எல்லாரும் கவிதை எழுதுறாங்க... நல்லாவே எழுதுறாங்க...
எனக்கு தான் அது ஒத்துவரமாட்டேங்குது...
நான் ஏற்கனவே எழுதுன

இது கவிதை இல்ல.... கவிதை மாதிரி....

அப்டிங்கற இந்த பதிவ படிச்சவங்களுக்கு அது நல்லாவே தெரியும்... அத படிக்காதவங்க இப்ப நியூ tab ஓபன் பண்ணி படிச்சு என் கவி திறமைய (!!!) தெரிஞ்சுகோங்க....

என்ன தெரிஞ்சுகிட்டீங்களா.... ??!! அதுல பின்னூட்டத்துலயே பல பேர் எச்சரிச்சாங்க உங்களுக்கு இந்த கவிதை பொல்லாப்புலாம் வேணாம்னுட்டு...

என்ட்டர் கவிதை, எதிர் கவுஜன்னு எல்லாரும் தினமும் தினுசா தினுசா எழுதி கவிதை எழுதினா தான் பெரிய ஆளு அப்டின்ற மாதிரி வலை உலகம் ஒரு பாதைல போயிட்டுருக்கு... போற போக்குல நானும் எதுனா எழுதியே ஆகணும்ன்னு முடிவு பண்ணிட்டேன்...

அப்படி கவிதை எழுதலாம் ன்னு பேப்பரும் பேனாவுமா யோசிக்க (!!!) ஆரம்பிச்சது தான் தாமதம்... ஒரு மாசமா காண்டக்ட்லயே இல்லாத நண்பன் மெசேஜ் அனுப்பினான்... என்ன பண்ற அப்படி ன்னு கேட்டான்... நான் என்ன கலெக்டர் உத்தியோகமா பண்றேன் .. சும்மா நாச்சுக்கும் கவித எழுதலாம்ன்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்னு சொன்னேன்...

நான் உனக்கு ஒரு கவித சொல்றேன்ன்னு சொல்லி ஒரு மெசேஜ் அனுப்பினான்...நிலவே....
நீ என்ன "அயிட்டம்" ஆ..
இரவில் மட்டும் வருகிறாய்...??!!

கொஞ்ச நஞ்சம் கவிதை எழுதலாம்ன்னு யோசிச்ச மேட்டர் அத்தனையும் போச்சு.... இனிமேல்ட்டு என்னத்த யோசிக்க...!!!

எதோ என்னால முடிஞ்சத யோசிச்சு திரும்ப கவிதை எழுத முயற்சி பண்ணுவேங்க... நீங்க படிக்க தயாரா இருங்க....!!!
14 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:

பாலா said...

yemma
ippadi

நிலவே....
நீ என்ன "அயிட்டம்" ஆ..
இரவில் மட்டும் வருகிறாய்...??!!

sema comedy but konjam orumaathiri irukku
okok
naan accept pannikuten

ரசிக்கும் சீமாட்டி said...

@ பாலா
//sema comedy but konjam orumaathiri irukku //

என்னோட ப்ரென்ட் அனுப்பினதுங்க.... என்னைய தப்பா நினைச்சுக்காதிங்க!!!!

கமலேஷ் said...

நிலவே....
நீ என்ன "அயிட்டம்" ஆ..
இரவில் மட்டும் வருகிறாய்...??!!

உங்களுக்கு என்னாச்சி...
ஏன் இப்படி கொடுமை பன்றிங்க,

இது கூட பரவாயில்ல இதுக்கும் முன்னாடி என்னோட கவிதையை படிக்காதவங்க படிச்சி தெரிஞ்சிகோங்கன்னு சொன்னதை நம்பி போய் படிச்சிட்டு.....

உன்னுடனான என் நிமிடங்கள்
வாழ்கையின் சுவையை கூட்டுங்கின்றன
அண்டா பாயசத்தில் ஆங்காங்கே
மிதக்கும் முந்திரி போன்று.....

உன்னுடனான என் நிமிடங்கள்
வாழ்கையின் சுவையை கூட்டுங்கின்றன
பிரியாணியில் போடப்படும்
பிரிஞ்சி இலை போன்று....

இதுக்கு match அ ஒரு அண்டால பாயாசத்த வேற போட்டு வட்சிருந்திகளா...

உண்மைலேயே வயறு வலிக்க சிரிச்சிருக்கேன்...

but something very intresting your blog , I like your blog...

( for my comments, please don't mistake me madmmm.....)

கார்க்கி said...

ஆவ்வ்வ்வ்வ்வ்..

வேண்டாம்...

க‌ரிச‌ல்கார‌ன் said...

நீங்க‌ளுமா?????????????????

ரசிக்கும் சீமாட்டி said...

@கமலேஷ்
//( for my comments, please don't mistake me madmmm.....)//

ச்சச்சா.... அப்டிலாம் ஒன்னும் இல்லைங்க....
தொடர்ந்து படிங்க... பட் பின்னூட்டம் போடணும் னா மட்டும் நல்லதா போடணும்...!!
ஓகே யா.......??

ரசிக்கும் சீமாட்டி said...

@ கரிசல்காரன்
//நீங்களுமா ??//

நான் இல்லை நான் இல்லை.....

Sangkavi said...

ஏ... இப்படி?

நல்லாத்தனே போய்கிட்டு இருந்தது...............

பூங்குன்றன்.வே said...

இந்த கவிதையை உரையாடல் போட்டிக்கு அனுப்பலாமே :)

ரசிக்கும் சீமாட்டி said...

@பூங்குன்றன்
//இந்த கவிதையை உரையாடல் போட்டிக்கு அனுப்பலாமே :)//

என்னா நக்கலு.... ???!! விடுங்க பாஸ்....

நர்சிம் said...

திருநங்கைகளைக் கேவலப்படுத்துவது எவ்வளவு தவறோ அதே தான் பணத்திற்காக உடல்விற்றுப் பிழைக்கும் சபிக்கப் பட்ட ஜென்மங்களைப் பரிகசிப்பதும் என்பது என் கருத்து(மட்டுமே)

ரசிக்கும் சீமாட்டி said...

@நர்சிம்
//திருநங்கைகளைக் கேவலப்படுத்துவது எவ்வளவு தவறோ அதே தான் பணத்திற்காக உடல்விற்றுப் பிழைக்கும் சபிக்கப் பட்ட ஜென்மங்களைப் பரிகசிப்பதும் என்பது என் கருத்து(மட்டுமே)//

என் கருத்தும் அது தான்... கேவலமா சொல்லணும் ன்னு லம் ஒன்னும் சொல்லலைங்க..
இப்டி ஒரு மெசேஜ் அனுப்பி என்னைய கவித எழுதவிடாம பண்ணிட்டான்னு தான் சொல்ல வந்தேன்...

எதுனா தப்பு இருந்தா மன்னிச்சுக்கோங்க தல.....!!

பாலா said...

பூங்குன்றன்.வே said...
இந்த கவிதையை உரையாடல் போட்டிக்கு அனுப்பலாமே :)

repeatingssssssssssss

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

கவிதையைக் கவிதையாய் மட்டுமே பார்க்க வேண்டும்.
அந்த வகையில் இந்த "குட்டி"நிலா கவிதை நல்லாத்தான் இருக்கு.

Post a Comment

வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin