Thursday, December 17, 2009

பின் குறிப்பு : நான் உன்னை காதலிக்கிறேன்

ஒரு மனிதனுக்கு ரொம்ப ஒடம்பு சரி இல்லாம போச்சு. அவனுக்கு பிரைன் ட்யுமார் ன்னு சொல்லி மருத்துவமனைல சேர்க்குறாங்க. அவன குணப் படுத்த எவ்ளவோ முயற்சி பண்ற மருத்துவர்கள் நம்ம தமிழ் சினிமால வராப்புல அவர இனிமே காப்பாத்த mudiyathu ன்னு கண்ணாடிய கலட்டி தொடச்சுகிட்டே சொல்லிட்டு போய்டுவாங்க.

அப்புறம் கொஞ்ச நாள் கூட இல்லாம அந்த மனுஷன் செத்துபோய்டுவான். அவன் செத்து போனத நினச்சு நினச்சு அவனோட மனைவி ரொம்ப அழுவாங்க. அதுக்கு அப்புறம் எல்லா காரியங்களும் முடிஞ்சு அவங்க வீட்டுக்கு போவாங்க.

வீட்டுல புருஷனோட பீரோவ எதோ எடுக்குறதுக்காக திறக்கும்போது அதுக்குள்ளார ஒரு கவர் இருக்கும். சென்ட் அட்ரெஸ்ல மனைவி பெயர போட்டு. நமக்கு என்னத்துக்கு இவரு லெட்டர் எழுதி இருக்காரு அப்டின்னு அந்த பெண் அத திறந்து பாத்த அதுக்குள்ளே சிலபல மாத்திரைகளும் ஒரு கடிதமும் இருக்கும்.

"இந்த மாத்திரிகளை சாப்பிடும்மா. ரொம்ப நேரம் அழுதா உனக்கு ஜலோதோஷம் பிடிச்சுக்கும்"
ன்னு அந்த கடிதத்துல இருக்கிற வரிகள பாத்ததும் அந்த மனைவி அப்டியே ஒடஞ்சு அழுதுருவாங்க.


இதுல இருந்து என்ன தெரியுது???!!!!


மேல சொன்ன நாலு பத்தி கதைய மையமா வச்சு வந்த படம் தான் "P.S. I love You".


கணவன் மனைவியா இருக்கிற ஒவ்வொரு நாளும் சண்ட போட்டுகிட்டே இருக்காங்க ஹீரோவும் ஹீரோயினும். பிரிவு அவங்கள எப்பிடி பொரட்டி போடுது அப்டின்றது தான் கதை.

தான் இறந்து போனாலும் தன்னோட பிரிவு அவங்களுக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாதுன்னு நினைக்குற ஹீரோ கடிதங்கள் மூலமா அவங்களோடவே இருக்கிற மாதிரி காமிச்சுருப்பாங்க.
இந்த கடிதத்துக்கு அப்புறம் இந்த கடிதம்ன்னு ஹீரோ ஆர்டர் பண்ணி வச்சுருக்கதுலயே தான் மனைவி ஒவ்வொரு செயலையும் எப்பிடி செய்வா,இதுக்கு அவளோட ரியாக்க்ஷன் எப்படி இருக்கும்ன்னு ஹீரோ மனைவிய அவ்ளோ புரிஞ்சுவச்சுருப்பாறு.


தன்னோட மனைவிய தனிமைல விட்டுற கூடாது அப்பிடிங்கற எண்ணம் அவரோட ஒவ்வொரு கடிதத்துளையும் தெரியும். P.S. I love You ன்னு எல்லா கடிதத்துளையும் அவரு எழுதிருக்குறது அந்த பொண்ணுக்கு ரொம்ப ஆறுதலா அதேசமயம் இப்பிடி நம்மள நேசிச்சவன் விட்டுட்டு போயிட்டானேன்னு பீல் பண்ண வைக்கும்.


படம் பாக்க ஆரம்பிக்கும்போது ஒருவித சுவாரசியம் இல்லாம தான் ஆரம்பிச்சேன். ஆனா போக போக இந்த படம் எனக்கு பிடிச்சுச்சு.

பொழுதுபோக்குக்காக படம் பாக்குறவங்களுக்கு இது போர் சினிமாவ இருக்கும். கதைல ஒன்றி படம் பாக்குற டைப் னா மே பி உங்களுக்கும் பிடிக்கலாம். :)


ஓட்டு போடுங்க மக்களே!!

35 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:

உங்கள் தோழி கிருத்திகா said...

ithana naalaa itha paakama vittutanee....

DHANS said...

rompa naala system la vachuruken innum paakala

iniku paathuda vendiyathuthaan

யோ வொய்ஸ் (யோகா) said...

ஒரு படம் மிச்சம் வைக்கிற ஐடியொ இல்லையா?

கார்க்கி said...

அப்பாடா..யார்கிட்டயோ சிக்கிட்டாங்கடா சொர்ணாக்கான்னு சந்தோஷமா வந்தா புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

அண்ணாமலையான் said...

படம் நல்லாருக்கோ இல்லயோ சொன்ன விதம் நல்லாருக்குது. ட்ரை பன்றேன்.

malarvizhi said...

அருமையான கதை. இது மாதிரி படங்களை தான் நான் தேடித்தேடி பார்த்து ரசிப்பேன் . விரைவில் இதையும் பார்க்கிறேன்

Sangkavi said...

நல்ல கதை.... எழுதியவிதம் நல்லாயிருக்கு.........

Anonymous said...

அப்படியே நடிச்சவங்களைப்பத்தியும் கொஞ்சம் சொல்லுங்க.

ரசிக்கும் சீமாட்டி said...

@உங்கள் தோழி கிருத்திகா
//ithana naalaa itha paakama vittutanee....//

இன்மேல்ட்டு பாத்துரு.....

ரசிக்கும் சீமாட்டி said...

@DHANS
//rompa naala system la vachuruken innum paakala

iniku paathuda vendiyathuthaan //

பாத்துட்டு உங்க அப்பிப்ரயாத்தையும் சொல்லுங்க....

ரசிக்கும் சீமாட்டி said...

@யோ வாய்ஸ்
//ஒரு படம் மிச்சம் வைக்கிற ஐடியொ இல்லையா?//

10 பெர்சென்ட் படம்கூட பாத்துமுடிக்கல... அதுக்குள்ள இப்பிடி சொன்னா நா என்ன பண்றது ???!!!
அவ்வ்வ்வவ்வ்வ்வவ்....

ரசிக்கும் சீமாட்டி said...

@கார்க்கி
//அப்பாடா..யார்கிட்டயோ சிக்கிட்டாங்கடா சொர்ணாக்கான்னு சந்தோஷமா வந்தா புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்//

நினைக்குறபடியா சகா எல்லாம் நடக்குது??!!!
ப்ரீயா விடுங்க பாஸ்.....

ரசிக்கும் சீமாட்டி said...

@அண்ணாமலையான்
//படம் நல்லாருக்கோ இல்லயோ சொன்ன விதம் நல்லாருக்குது. ட்ரை பன்றேன்.//

ட்ரைதானே பண்ணுங்க பண்ணுங்க...!!

ரசிக்கும் சீமாட்டி said...

@மலர்விழி
//அருமையான கதை. இது மாதிரி படங்களை தான் நான் தேடித்தேடி பார்த்து ரசிப்பேன் . விரைவில் இதையும் பார்க்கிறேன்//

பாருங்க பாருங்க.... படம் உங்களுக்கு பிடிக்கலன்னா என்னைய திட்டக்கூடாது சொல்லிட்டேன் ஆமா!!!

ரசிக்கும் சீமாட்டி said...

@sangkavi
//நல்ல கதை.... எழுதியவிதம் நல்லாயிருக்கு.........//

அப்டியா சொல்றீங்க???!!....

ரசிக்கும் சீமாட்டி said...

@சின்ன அம்மிணி
//அப்படியே நடிச்சவங்களைப்பத்தியும் கொஞ்சம் சொல்லுங்க.//

அப்பிடின்றீங்க...?!! இனிமே சொல்ல முயற்சி பண்றேங்க !!

அன்புடன் மணிகண்டன் said...

நீங்கள் சொல்லியிருக்கும் விதம் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.. நான் பார்க்க வேண்டிய படங்களின் லிஸ்டில் இதையும் சேர்த்திருக்கிறேன்..
:)

ரசிக்கும் சீமாட்டி said...

@அன்புடன் மணிகண்டன்
//நீங்கள் சொல்லியிருக்கும் விதம் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.. நான் பார்க்க வேண்டிய படங்களின் லிஸ்டில் இதையும் சேர்த்திருக்கிறேன்..
:)//

இதுவும் வந்ததுக்காக எதுனா கமெண்ட் போடணும்ன்னு போட்டதா??

அதி பிரதாபன் said...

நல்ல படம், இன்னும் கொஞ்சம் விரிவா எழுதியிருக்கலாம். நேரம் இல்லியோ?

ரசிக்கும் சீமாட்டி said...

@அதி பிரதாபன்

//நல்ல படம், இன்னும் கொஞ்சம் விரிவா எழுதியிருக்கலாம். நேரம் இல்லியோ?//

ஆமா பாஸ்....
டோர்ரென்ட் டவுன்லோட் எப்பிடிங்க பண்றது???

அதி பிரதாபன் said...

அதெல்லாம் ஓபனா சொல்ல முடியாது... மெயில்ல வாங்க.

அன்புடன்-மணிகண்டன் said...

இப்படி கேட்டா எப்படிங்க?? இப்போ தாங்க உங்க பதிவுகளுக்கு வர ஆரம்பிச்சிருக்கேன்.. படிச்ச முதல் மூணுமே சினிமா விமர்சனம்.. அதுவும் நான் பார்க்காத படங்கள்.. அதுல எப்படிங்க நான் கருத்து சொல்லிட முடியும்.. நான் விளையாட்டா "கண்டுபுடிச்சிட்டீங்களா"ன்னு கேட்டது அவ்வளோ பெரிய தப்பா??? (இந்த பின்னூட்டமாவது ஓகே'ன்னு நெனைக்கிறேன்) :)

ரங்கன் said...

நல்ல விமர்சனம்..நல்ல படம்..

மேலும்..மெருகூட்டுங்கள்..இன்னும் சிறந்த விமர்சகராக வாழ்த்துக்கள்!!

ரசிக்கும் சீமாட்டி said...

@மணிகண்டன்
//(இந்த பின்னூட்டமாவது ஓகே'ன்னு நெனைக்கிறேன்) :)//

என்னவோ சொல்றீங்க.... சரி இது ஓகே ....

ரசிக்கும் சீமாட்டி said...

@ரங்கன்
//நல்ல விமர்சனம்..நல்ல படம்..

மேலும்..மெருகூட்டுங்கள்..இன்னும் சிறந்த விமர்சகராக வாழ்த்துக்கள்!!
//

என்னைய போய் சொல்றீங்க.... உங்களுக்கே நகைச்சுவையா இல்ல ???!!!

கிருபாநந்தினி said...

ஒரு சினிமா கதையை இத்தனைச் சுலபமாக, அழகாகச் சொல்ல முடியுமா? புல்லரிக்க வெச்சுட்டீங்களேக்கா!

Chitra said...

படத்தை நன்றாக ரசித்து, ரசனை குறையாமல் எழுதி இருக்கீங்க.
P.S. நல்லா வந்திருக்குங்க..

பூங்குன்றன்.வே said...

விமர்சனம் படிக்கும்போதே படத்தை பார்க்க தூண்டுகிறது..

ரசிக்கும் சீமாட்டி said...

@கிருபாநந்தினி
//ஒரு சினிமா கதையை இத்தனைச் சுலபமாக, அழகாகச் சொல்ல முடியுமா? புல்லரிக்க வெச்சுட்டீங்களேக்கா!//

அக்காவா???!! ஏன் அக்கா இப்டி கலாய்க்குறீங்க ??
தங்கச்சினே சொல்லுங்க!!!

ரசிக்கும் சீமாட்டி said...

@சித்ரா

//படத்தை நன்றாக ரசித்து, ரசனை குறையாமல் எழுதி இருக்கீங்க.
P.S. நல்லா வந்திருக்குங்க..//

முதல் முறையா பின்னூட்டம் போட்டதுக்கு ரொம்ப நன்றிங்கோ!!!
தொடர்ந்து விசிட் பண்ணுங்கோ !!

ரசிக்கும் சீமாட்டி said...

@பூங்குன்றன்

//விமர்சனம் படிக்கும்போதே படத்தை பார்க்க தூண்டுகிறது..//

இவ்ளோ நல்லவரா நீங்க???!! பின்னூட்டம் கூட மனசு நோகாத அளவுக்கு போடுறீங்க !!!

போவாஸ் said...

படத்திற்கான லிங்க் கொடுத்திருந்தா கொஞ்சம் நல்லா இருந்திருக்கும்.....
படத்திற்கான லிங்க் - http://www.letmewatchthis.com/watch-1035-PS-I-Love-You
ஹாலிவுட் படங்களைப் பார்க்க www.letmewatchthis.com

ரசிக்கும் சீமாட்டி said...

@போவாஸ்

ரொம்ப பயனுள்ள தளத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே...
டிவிடி ல இந்த படம் பாத்ததுனால லிங்க் கண்டுபிடிச்சு அனுப்பல..
இனிமேல்ட்டு லிங்க் கொடுக்க முயற்சி பண்றேன்..

தகவலுக்கு நன்றி !!!

ramasamy kannan said...

நல்ல படம்...

வழிப்போக்கன் said...

கதைல ஒன்றி paarkaporen. ;-)

Post a Comment

வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin