Saturday, December 19, 2009

நச் கமென்ட்டர் அவார்ட் காத்திருக்கு...

என்னையும் மதிச்சு ஒரு பதிவர் அவார்ட்லாம் கொடுத்துருக்காங்க...

அவங்க கொடுத்த அவார்டுகள பகிர்ந்துக்கணும்ன்னு பிரியப்படுறேன்..!!

பட்டாம்பூச்சி அவார்டும் பிளாக்கர் எக்ஸ்செல்லன்ஸ் அவார்டும் யாரு யாருக்குன்னு அடுத்த பதிவுகள்ல சொல்றேன்...

இப்பதைக்கு கமெண்ட் கிங்/க்வீன் அவார்ட் யாருக்கு கொடுக்கலாம்ன்னு முடிவு பண்ண தான் இந்த பதிவு...

இந்த அவார்ட் உங்களுக்கும் கிடைக்கணும்னா பெருசா லாம் ஒன்னும் பண்ண வேணாம்... கீழ உள்ள படத்த பாத்துத்துட்டு உங்க மனசுல என்ன தோணுதோ அத பட்டுன்னு பின்னூட்டத்துல சொல்லுங்க...


எந்த கமெண்ட் நச்சுன்னு இருக்குன்னு "அவார்ட் கமிட்டி பீல் பண்ணுதோ (நானும் நண்பர்களும்) அவங்களுக்கு ஒரு சுபயோகா சுபதினத்தில் விருது அறிவிக்கப்படும் என்பதை மிகவும் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு ,
ரசிக்கும் சீமாட்டி. :)


ரெடி ஸ்டெடி கோ........

24 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:

சரண் said...

நாங்க கேட்டத வாங்கி கொடுக்காம ஒபாமா எங்கள அழவிட்டுட்டு போயிட்டாரு. யாரக் கேட்டு அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுத்தீங்க?

அண்ணாமலையான் said...

‘ஙேன் ... நான் அவ்தார் பார்த்தேன்... இவன் வேட்டைக்காரன் பார்த்தான்... ஆனா என்ன விட அதிகமா சத்தம் போட்டு அழறான்... அவார்ட விஜய்க்கே குடுங்க....”

உருப்புடாதது_அணிமா said...

எவ்ளோ சொல்லியும் எதுக்கு எங்களை வேட்டைக்காரன் படம் பார்க்க தியேட்டருக்கு கூட்டிக்கிட்டு வந்தீங்க???

உருப்புடாதது_அணிமா said...

எனது ரசனை பதிவெல்லாம் கண்டிப்பா படிக்கனும்ன்னு சொல்லி எதுக்கு இப்படி எங்களை அழவைக்குறீங்க???

ஷாகுல் ஹக் said...

அண்ணன் சீமானோட கானொளி எதையாச்சும் ராஜபட்சே சகோதரர்கள் பாத்துடாய்ங்களோ.....

துபாய் ராஜா said...

1.அழுகுற சகோதரர்கள்.

2.குருவி பார்த்து நான் அழ ஆரம்பிச்சேன். வில்லு பார்த்து இவன் அழ ஆரம்பிச்சான். அதுக்குள்ளே லொள்ளு வேட்டைக்காரன் வந்திடுச்சு.. இன்னும் எறாவோ, சுறாவோ வருதாமே... அதுக்குள்ளே எங்களை பத்திரமா பண்டாரா தேசத்துல கொண்டு விடுங்க....

simba said...

sathiyama soldren, avan thaan annan. Naan avanoda thambi. Ithu etho graphics maayaajaalam. nambaatheenga...

ஜீவன் said...

எனக்கு நச் கமண்டர் அவார்ட் கொடுக்காட்டி நானும் இப்படித்தான் அழுவேன்...!

அன்புடன் மணிகண்டன் said...

நான் தம்பிகிட்ட எவ்வளவோ சொன்னேங்க... கேக்காம வேட்டைக்காரன் கூட்டி போகச்சொல்லி அடம் புடிச்சான்.. இப்போ பாருங்க, தூக்கத்துல எழுந்து அழுவுறான்.. எந்த கோயிலுக்கு கூட்டிபோய் மந்திரிக்கிறதுன்னு தெரியிலையே....

[அப்பாடி... அவார்ட் நமக்கில்லைன்னாலும், பின்னூட்டம் போட முறையான வாய்ப்பு.. :) ]

gayathri said...

எப்படி இருந்த நான் இப்படி ஆய்ட்டேன்

அவ்வ்வ்வ்வவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வவ்வ்வ்வ்

க‌ரிச‌ல்கார‌ன் said...

அவ்ளோ தாண்டா த‌ம்பி டாக்ட‌ர் ஊசி போட்டு முடிச்சுட்டாரு
அழுகாதே நீ அழுக‌ற‌த‌ பாத்து அண்ன‌ணுக்கும் அழுகையா வ‌ருது

அன்புடன் மலிக்கா said...

ஓ ரசிக்கும் சீமாட்டி ரசனையோடு எழுதுவதை ரசிப்போகிறேன்..

http://niroodai.blogspot.com

☀நான் ஆதவன்☀ said...

அவ்வ்வ்வ்வ் சத்தியமா நான் உங்க இடுப்பை கிள்ளலங்க.... இவன் தான் கிள்ளிட்டு ஒன்னுந்தெரியாத அப்பாவி மாதிரி அழறான்...அவ்வ்வ்வ்வ்வ்

உங்களில் ஒருவன்... said...

வந்துட்டு போனதுக்கு ரொம்ப நன்றி!!அடிக்கடி வாங்க.

ஸ்ரீராம். said...

நான் அழுதா தாங்க மாட்டே...இவன் அழுதா தூங்க மாட்டே...

உங்களில் ஒருவன்... said...

வேட்டைக்காரன் பார்க்க போக வேண்டாம் வேண்டாம்னு சொன்னேன்...கேட்டியா பாவி பயலே....இப்போ இப்படி திடீர் திடீருன்னு அழுது என்னயுமில்ல பயமுறுத்தி அழ வைக்கிற....

நாஞ்சில் பிரதாப் said...

1. வந்தவாசி இடைத்தேர்தல்ல ஒட்டுப்போட்டேன்னு சொன்னா நம்பாம அழறான்...நம்பலைன்னா விரல்லப்பாருங்க மை இருக்கு... நம்புங்கப்பா....

2. இது என்தம்பிதான் ஆனா இவன் போட்டுருக்குற சட்டை என்னது இல்ல...

3.ஐயோ...இது என்னோட குழந்தை இல்லங்க... நானே ஒரு ஒரு குழந்தை எனக்கு எப்படி??
ஊரே என்னை சந்தேகப்படுதே... வேவேவேவே...

ஒரு கமண்டுதான் போடனும்னு விதிமுறைகள் எதுவும் இல்லையே அதான் மூணு...

Romeoboy said...

இந்த மொக்கை பதிவுக்கு எங்கள போஸ் குடுக்க சொல்லுறிங்களே ..

அண்ணாமலையான் said...

ரிசல்ட் எப்ப? அவார்ட் வாங்க வரப்போவ செலவுக்கு பனம் தருவீங்களா?

பூங்குன்றன்.வே said...

////ரொம்ப நல்லா கவிதை எழுதுறீங்க !!எனக்கு தான் கவிதை எழுத சொல்லிதரமாட்டேன்னு சொல்லிடீங்க//

இடுகையின் பின்னூட்டத்தில் இடைமறித்தலுக்கு வருந்துகிறேன் சீமாட்டி. உங்களுக்கான பதில் என் இடுகையின் பின்னூட்டத்தில் எழுதிருக்கேன்.நன்றி!!!

http://poongundran2010.blogspot.com/2009/12/blog-post_20.html

silentboy said...

விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் சீமாட்டி!

Anonymous said...

நான் அவனில்லை, நான் அவனில்லை

கிருபாநந்தினி said...

“யம்மா... இவன் நான் அழுவுற மாதிரியே அழுது காட்டி என்னைப் பழிக்கிறான்..!”

THOWHEED GUIDE said...

தம்பிக்கு வூட்வர்ட் க்ரிபெவட்டர் வாட்டர் 130ml Pet போட்ட்லஸ் கொடுங்க நன் சின்ன பிள்ளைய ஈருகச்ச அதுதான் கொடுத்தாங்க......!!!

Post a Comment

வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin