ரீஸ் விதேர்ஸ்பூன் தான் இந்த படத்தோட கதாநாயகி. என்னமோ தெரியல இவங்கள எனக்கு பாத்த உடனே பிடிச்சுபோச்சு. இவங்க நடிச்ச படங்களா தேடி பிடிச்சு பாத்தகாலம் உண்டு.
அப்படி நான் பாத்ததுல முதல் படம் தான் "ஜஸ்ட் லைக் ஹெவென்".
இந்த படத்தோட கதைன்னு பாத்தாக்க ஹீரோயின் ஒரு டாக்டர். சதா சர்வ காலமும் கடமையே கண்ணா இருக்குறவங்க. வேலை முடிஞ்சு ஒரு நாள் அவங்க ப்ளைண்ட் டேட்ட பாக்க போற சமயத்துல எதிர்பாராத விதமா ஒரு விபத்துல மாட்டிக்கிறாங்க.
அப்டியே கட் பண்ணி அடுத்த சீன். மூணு மாசம் கழிச்சுன்னு போடுறாங்க. ஒருத்தர் வீடு தேடி அலைஞ்சுட்டு இருக்காரு. இவரு தான் ஹீரோன்னு சொல்லவும் வேணுவா??!! மார்க் ருபல்லோ அப்டின்னு ஒருத்தர். பாத்தவுடனே பிடிக்குற டைப் இல்ல. பட் இந்த படத்துல அந்த கதாபாத்திரத்த நல்லா செஞ்சுருக்காரு.
சரி கதைக்கு வருவோம். அப்படி வீடு தேடி வரவரு நம்ம ஹீரோயின் இருந்த வீட்டுல குடியிருக்க நேரிடுது. அங்க திடீர்னு ஹீரோயின் இவரு முன்னாடி வந்து நின்னு கண்டபடி திட்டுறாங்க. இது என் வீடு யார கேட்டு நீ வந்த?? ஏன் பொருள எல்லாம் எடம் மாத்தி மாத்தி வச்சுருக்க அப்பிடினுலாம். கொஞ்ச நேரம் ஹீரோவுக்கு ஒன்னுமே புரியாம குழம்பிபோய் நிக்கிறாரு.
அந்த பொண்ணு சாதாரண பொண்ணா தெரியல. திடீர் திடீர் ன்னு வருது போவுது. செவத்துலலாம் நடக்குது.பாத்து பயங்கரமா டெரர் ஆவுற நம்ம ஹீரோ அவரு நண்பர் ஒருத்தர் கிட்ட போய் கேக்குறாரு ஏன் இப்பிடிலாம் நடக்குதுன்னு. அது பேய் இல்ல ஒரு பொண்ணோட ஆன்மா அப்பிடின்னு சொல்ற நண்பர் அவ உன் கண்ணுக்கு மட்டும் தான் தெரியுறா அதுனால அவளுக்கு என்ன வேணும்ன்னு நீ தான் கேக்கணும் லாம் சொல்றாரு.
கொஞ்ச கொஞ்சமா அந்த பொண்ணுகிட்ட பேசி அவ யாரு என்னன்னுலாம் தெரிஞ்சுக்க முயற்சி பண்றாரு. பழசு எதுவும் ஞாபகம் வராத அந்த பொண்ணு கொஞ்சம் லேட்டா தான் தெரியுது இது வெறும் ஆன்மா மட்டும் தான் அப்பிடின்னு.
உயிரை கைல பிடிச்சுகிட்டு அப்பிடின்னு சொல்லுவாங்கல்ல அந்த மாதிரி அடி பட்டு எப்பிடியும் பொழச்சுடனும் ன்னு ஒரு நம்பிக்கைல ஹீரோயினோட உடம்பு ஹாஸ்பிட்டல்ல இருக்கும். இந்த ஹீரோ என்ன பண்ணாரு அந்த பொண்ண பொழைக்க வச்சாரா அப்பிடிலாம் யோசிக்கறவங்களுக்கு அவரு அந்த பொண்ண ரிஸ்க் எடுத்து பொழைக்க வச்சுடுவாறு. ஆனா பொழைக்குற அந்த பொண்ணுக்கு தான் இவரு மறந்து போயிரும் நம்ம மூன்றாம் பிறை ஸ்ரீதேவி மாதிரி. அப்புறம் என்ன ஆச்சுன்னு டிவிடியோ டோற்றேன்ட்டோ கெடச்சா பாருங்க.
அந்த பொண்ணு அவருக்கு மட்டும் தெரியுரதுக்கு காரணம் அவரு தான் அந்த பொண்ணு சந்திக்க போறதா இருந்த ப்ளைண்ட் டேட்.!!!!
அப்பறம் படத்தோட டெக்னிகல் ஆஸ்பெக்ட்லாம் பேசுறா அளவுக்கு எனக்கு அறிவு பத்தாது. ஸோ விட்டுடேன்.இந்த படம் முழுக்க அவங்க ஒரே காஸ்ட்யும்ல தான் வருவாங்க ஆனா அது போர் அடிக்கல. சில இடங்கள்ல வசனம் நல்லா இருந்துச்சு உதாரணத்துக்கு ஹீரோவும் ஹீரோயினும் படுக்கைல கைகோர்த்துபேசுற காட்சி அப்புறம் கடைசி சீன் இப்படி சில.
மொத்ததுல இது ஒரு ரொமாண்டிக்கான படம். அந்த வகை படங்கள் பிடிக்கும்னா தாராளமா பாருங்க. அப்டியே போறபோக்குல ஒரு ஓட்டையும் போட்டுட்டு போங்க மக்களே!!!
27 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:
அட இது நம்ம ராமநாராயணன் கதையாச்சே... அவர்கிட்ட கொடுத்திருந்தா இதைவிட சூப்பரா பண்ணியிருப்பாரு...என்னமோ போங்க...ஓட்டை போட்டாச்சு...
அந்த அம்மணி படம் ஜூப்பரு இன்னும் ரெண்டுபடம் போட்டுருக்கலாம்.
//அப்டியே போறபோக்குல ஒரு ஓட்டையும் போட்டுட்டு போங்க மக்களே!!!//
விமர்சனமும் நல்லா இருக்கு,ஓட்டும் போட்டாச்சுங்கோ :)
ரொம்ப பிடிச்ச படம். க்ளைமாக்ஸ்ல சாவிய கொடுக்குற மாதிரி தொடற சீன் ரொம்ப ரசிக்கிற மாதிரி இருக்கும் :)
(அப்புறம் போன பதிவுக்கான போட்டி முடிவுகள் என்னாச்சு? பெட்டி எப்ப வீட்டுக்கு வரும்? இல்ல செக்கா வருமா?)
நல்லதொரு பகிர்வு.
//(அப்புறம் போன பதிவுக்கான போட்டி முடிவுகள் என்னாச்சு? பெட்டி எப்ப வீட்டுக்கு வரும்? இல்ல செக்கா வருமா?)//
அதானே... இம்புட்டு பேரு ஆசையை தூண்டிவிட்டுட்டு இப்படி கம்முன்னு இருந்தா எப்படி... :))
பொண்ணு அழகா இருக்காளே ..
உங்களோட ஸ்பெஷல்லே....உங்க எழுத்து ஏதோ ஒரு கட்டுரைய படிக்கிறமாதிரி இருக்காது...யாரோ நம்ம நேர்ல நின்னு பேசுற மாதிரியே இருக்கும்...அவளவு அழகான எழுத்து நடை.........ஜஸ்ட் லைக் ஹெவென்".
படம் ஏற்கனவே பாத்தாச்சு...ஆனால் ஏற்கனவே சொன்ன innocent steps இப்பதான் பாத்தேன்... அழகு...நல்ல ரசனையும் கூட உங்களுக்கு....
வாழ்த்துக்கள்..
ரீஸ் பிடிக்குனா லீகலீ ப்ளாண்ட் கண்டிப்பா பாத்திருப்பீங்களே :)
எனக்கு பிடித்த படங்களில் இதுவும் ஒன்று. Reese-காக. :)
அந்த தோட்டமும் கடைசிகாட்சியின் இசையும், இன்னும் மனதில்.
இந்த மாதிரி கதையம்சம் இருந்தா, நாஞ்சில் பிரதாப் சொல்றமாதிரி நம்மூருக்கு ராமநாராயணன் தான் கரெக்ட். அப்புறம்.. ஹீரோ அசப்புல நம்ம மாதவன் மாதிரி இருக்காரில்ல..?
@நாஞ்சில் பிரதாப்
//அட இது நம்ம ராமநாராயணன் கதையாச்சே... அவர்கிட்ட கொடுத்திருந்தா இதைவிட சூப்பரா பண்ணியிருப்பாரு...என்னமோ போங்க...ஓட்டை போட்டாச்சு...
அந்த அம்மணி படம் ஜூப்பரு இன்னும் ரெண்டுபடம் போட்டுருக்கலாம்.//
ஏங்க ஒரு ரொமாண்டிக் படத்த பத்தி பேசிட்டு இருக்கும்போது ராமநாராயண ஞாபகப்படுத்துறீங்க ???!!!
@பூங்குன்றன்
//விமர்சனமும் நல்லா இருக்கு,ஓட்டும் போட்டாச்சுங்கோ :)//
ரொம்ப நன்றிங்கோ !!! :)
@நான் ஆதவன்
//ரொம்ப பிடிச்ச படம். க்ளைமாக்ஸ்ல சாவிய கொடுக்குற மாதிரி தொடற சீன் ரொம்ப ரசிக்கிற மாதிரி இருக்கும் :)//
ஆமா ஆமா.... நீங்க சீன தானே சொல்றீங்க ???!! ;)
//(அப்புறம் போன பதிவுக்கான போட்டி முடிவுகள் என்னாச்சு? பெட்டி எப்ப வீட்டுக்கு வரும்? இல்ல செக்கா வருமா?)//
எதுனாலும் ஆட்டோல வரும் !!!!
@துபாய் ராஜா
//அதானே... இம்புட்டு பேரு ஆசையை தூண்டிவிட்டுட்டு இப்படி கம்முன்னு இருந்தா எப்படி... :))///
வரும்..... ஆனா வராது .. ;)
விரைவில் வரும்ங்க...!!!
@Romeoboy
//பொண்ணு அழகா இருக்காளே ..//
பொண்ணைத்தாண்டி பதிவ படிக்கலையோ???!!!
@கமலேஷ்
//உங்களோட ஸ்பெஷல்லே....உங்க எழுத்து ஏதோ ஒரு கட்டுரைய படிக்கிறமாதிரி இருக்காது...யாரோ நம்ம நேர்ல நின்னு பேசுற மாதிரியே இருக்கும்...அவளவு அழகான எழுத்து நடை.........//
அப்பிடின்றீங்க.. ரைட்டு.....!!!
//ஜஸ்ட் லைக் ஹெவென்".
படம் ஏற்கனவே பாத்தாச்சு...ஆனால் ஏற்கனவே சொன்ன innocent steps இப்பதான் பாத்தேன்... அழகு...நல்ல ரசனையும் கூட உங்களுக்கு....
வாழ்த்துக்கள்..//
உங்களுக்கு அந்த படம் பிடிச்சுருந்துச்சா???
நன்றி உங்க வாழ்த்துக்கு.... உங்களுக்கும் வாழ்த்துக்கள் !!!
@சின்ன அம்மிணி
//ரீஸ் பிடிக்குனா லீகலீ ப்ளாண்ட் கண்டிப்பா பாத்திருப்பீங்களே :)//
பாத்துட்டேன் பாத்துட்டேன்.... அத பத்தி ஏற்கனவே என் தோழி எழுதிடாப்புல...
அங்கனையும் போய் பாருங்க
http://spiritual-indian.blogspot.com/2009/12/blog-post_14.html
@Saravana Kumar MSK
//அந்த தோட்டமும் கடைசிகாட்சியின் இசையும், இன்னும் மனதில்.//
நல்ல காட்சி நல்ல ரசனை... !! :)
@அன்புடன் மணிகண்டன்
//இந்த மாதிரி கதையம்சம் இருந்தா, நாஞ்சில் பிரதாப் சொல்றமாதிரி நம்மூருக்கு ராமநாராயணன் தான் கரெக்ட்.//
ஏன் இந்த கொலைவெறி ???!!!
//ஹீரோ அசப்புல நம்ம மாதவன் மாதிரி இருக்காரில்ல..?//
நீங்க போட்டோல குருட்டு கண்ணாடி போட்டுருக்கும்போதே நினச்சேன்!!!! ;)
ஒழுங்கா பாருங்க...!!!
:(
ஓ....இப்படி எங்காவது விமர்சனத்துல இங்க்லீஷ் படம் பத்தி தெரிஞ்சாதான் உண்டு...விமர்சனம் நல்லா இருந்ததுங்க...
@அன்புடன் மணிகண்டன்
//:(//
இதுக்கெல்லாம் சொகாச்சி ஸ்மைலி போட்டுக்கிட்டு ???!! ப்ரீயா விடுங்க...
thanks shriram
ஆட்டோல பரிசு வருமா? எங்கூட்டு அட்ரஸ் தெரியுமா?
எப்படி நண்பரே இப்படியெல்லாம் பதிவுகள் , வாழ்த்துக்கள் !!!
என்றும் அன்புடன்
சங்கரின் பனித்துளி நினைவுகள்
http://wwwrasigancom.blogspot.com/
@சங்கர்
//எப்படி நண்பரே இப்படியெல்லாம் பதிவுகள் , வாழ்த்துக்கள் !!!//
தோழியே அப்பிடின்னு போட்டுகங்க...
நன்றி உங்க வாழ்த்துக்கு....
உங்களுக்கும் வாழ்த்துக்கள்!!!
ம்ம் நான் இன்னும் பார்த்ததில்லை இந்த படம், பார்க்கிறேன். ரொம்ப நல்லா இருக்குற மாதிரி தெரியலையே... :-)
neenga tharukira seithikal super mihavum payanullavai
Post a Comment
வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க