கேள்விய கவனமா படிச்சா தான் உங்களால சரியா பதில் சொல்ல முடியும்.. சோ கேள்விய கவனமா படிங்க..
ஒரு ரூம் முழுக்க தங்கம் இருக்கு
ஒரு ரூம் முழுக்க பஞ்சு இருக்கு
இன்னொரு ரூம் முழுக்க வைரம் இருக்கு
எதிர்பாராத விதமா மூணு ரூம் லையும் தீப்பிடிச்சுடுது... இந்த தீய அனைகறதுக்கு அவசரமா ஆம்புலன்ச கூப்பிடுறாங்க..
காப்பாத்த வரவங்க எந்த ரூம் ல மொதல்ல தீய அணைப்பாங்க??!!
ரொம்ப புத்திசாலி தனமா பஞ்சு இருக்க ரூம் தான் னு வேகமா சொன்னேன்..
"அட லூசு அம்புலன்ஸ் எந்த ஊருலயாவது தீய அணைக்குமா?!! பெருசா புத்திசாலி னு நினைப்பு " அப்படி னு சொல்லி என்ன காமெடி பீஸ் ஆகிட்டான்!!
இது பத்தாதுன்னு அடுத்த மொக்கைய வேற சொன்னான்
தங்கத்த வச்சு தங்க செயின் பண்ணலாம்
வெள்ளிய வச்சு வெள்ளி செயின் பண்ணலாம்
நாய வச்சு நாய் செயின் பண்ண முடியுமா ??!!
இப்படி எல்லாம் செந்தில்ளோட வாரிசு மாதிரியே கேள்வி கேட்டா நான் என்னங்க பண்றது... நீங்களே சொல்லுங்க ??!!!
அவனோட உண்மையான போட்டோ இது தாங்க... அவனுக்கும் ரசிகர்கள் நா ரொம்ப ஈடுபாடு நம்ம தமிழ் ஹீரோஸ் மாதிரி அதான் அவன் போட்டோவையும் போட சொன்னான்... உங்க கமெண்ட்ஸ் லா மறக்காம சொல்லிட்டுபோங்க...
இதேமாதிரி தினமும் வந்து இப்படி மொக்க பிட்டா போடுறேன் னு சொல்லிட்டு வேற போயிருக்கான்.... கவலை படாதிங்க எல்லாத்தையும் இப்படி மொக்க பதிவா போட்டுடுவேன் னு ... நல்ல பதிவோட அடுத்து மீட் பண்றேன்.
முடிஞ்சா உங்களால முடிஞ்சா மட்டும் இந்த பதிவுக்கு வோட்டு போடுங்க... கமெண்ட் எழுதலைனாலும் பரவாயில்ல வோட்ட மறந்துறாம போட்டுட்டு போய்டுங்க ப்ளீஸ்.... ( கஸின் கிட்ட அடி வாங்குன தான் வலி தெரியும் பாஸ்!! :( )

