Wednesday, September 23, 2009

என் கஸின் ( அசின் இல்லங்க கஸின் ) - மொக்கைசாமி

இன்னைக்கு பதிவு போட ஒரு கதையும் கிடைக்கல... என் கஸின் அஸ்வின் கிட்ட பேசிட்டு இருக்கும் போது அவன் ஸ்கூல்ல உலவுகிற சில சின்ன புத்திசாலித்தனமான (மொக்கையான!!) விஷயங்களை சொன்னான்... அத உங்க கூட பகிர்ந்துக்குறேன்..

கேள்விய கவனமா படிச்சா தான் உங்களால சரியா பதில் சொல்ல முடியும்.. சோ கேள்விய கவனமா படிங்க..

ஒரு ரூம் முழுக்க தங்கம் இருக்கு
ஒரு ரூம் முழுக்க பஞ்சு இருக்கு
இன்னொரு ரூம் முழுக்க வைரம் இருக்கு

எதிர்பாராத விதமா மூணு ரூம் லையும் தீப்பிடிச்சுடுது... இந்த தீய அனைகறதுக்கு அவசரமா ஆம்புலன்ச கூப்பிடுறாங்க..
காப்பாத்த வரவங்க எந்த ரூம் மொதல்ல தீய அணைப்பாங்க??!!

ரொம்ப புத்திசாலி தனமா பஞ்சு இருக்க ரூம் தான் னு வேகமா சொன்னேன்..

"அட லூசு அம்புலன்ஸ் எந்த ஊருலயாவது தீய அணைக்குமா?!! பெருசா புத்திசாலி னு நினைப்பு " அப்படி னு சொல்லி என்ன காமெடி பீஸ் ஆகிட்டான்!!

இது பத்தாதுன்னு அடுத்த மொக்கைய வேற சொன்னான்

தங்கத்த வச்சு தங்க செயின் பண்ணலாம்
வெள்ளிய வச்சு வெள்ளி செயின் பண்ணலாம்
நாய வச்சு நாய் செயின் பண்ண முடியுமா ??!!இப்படி எல்லாம் செந்தில்ளோட வாரிசு மாதிரியே கேள்வி கேட்டா நான் என்னங்க பண்றது... நீங்களே சொல்லுங்க ??!!!
என்னடா அஷ்வின் னு சொல்லிட்டு பொண்ணு போட்டோ போட்டுருகேன் னு பாக்குறிங்களா ?? இது அவன் தான் சும்மா ஜாலி க்கு எடுத்தது...


அவனோட உண்மையான போட்டோ இது தாங்க... அவனுக்கும் ரசிகர்கள் நா ரொம்ப ஈடுபாடு நம்ம தமிழ் ஹீரோஸ் மாதிரி அதான் அவன் போட்டோவையும் போட சொன்னான்... உங்க கமெண்ட்ஸ் லா மறக்காம சொல்லிட்டுபோங்க...

இதேமாதிரி தினமும் வந்து இப்படி மொக்க பிட்டா போடுறேன் னு சொல்லிட்டு வேற போயிருக்கான்.... கவலை படாதிங்க எல்லாத்தையும் இப்படி மொக்க பதிவா போட்டுடுவேன் னு ... நல்ல பதிவோட அடுத்து மீட் பண்றேன்.


முடிஞ்சா உங்களால முடிஞ்சா மட்டும் இந்த பதிவுக்கு வோட்டு போடுங்க... கமெண்ட் எழுதலைனாலும் பரவாயில்ல வோட்ட மறந்துறாம போட்டுட்டு போய்டுங்க ப்ளீஸ்.... ( கஸின் கிட்ட அடி வாங்குன தான் வலி தெரியும் பாஸ்!! :( )

9 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:

அமுதா கிருஷ்ணா said...

அஷ்வினி நல்லா இருக்கா!!!

உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) said...

இளம் மொக்கசாமி அஸ்வின் வாழ்க

Varadaradjalou .P said...

//இளம் மொக்கசாமி அஸ்வின் வாழ்க//

ரிப்பீட்டு.

க.பாலாஜி said...

//தங்கத்த வச்சு தங்க செயின் பண்ணலாம்
வெள்ளிய வச்சு வெள்ளி செயின் பண்ணலாம்
நாய வச்சு நாய் செயின் பண்ண முடியுமா ??!!//

வேண்டாம்....வலிக்குது....அழுதுடுவேன்...அழுதுடுவேன்....

நீங்க இவவளவு தூரம் சொன்னதுக்கப்பறம் ஓட்டு போடாம இருக்கலாமா? அதான் போட்டுட்டேன்....

ரசனைக்காரி said...

@ அமுதா கிருஷ்ணன்
//அஷ்வினி நல்லா இருக்கா!!!//

நல்லா சொன்னீங்க... உங்க கமெண்டுக்கு பின்னிட்டான் போங்க "ஏன் இந்த போட்டோ வ போட்டா "னு...

ரசனைக்காரி said...

@உலவு.காம்

வாழ்த்துக்கு நன்றி...
அஸ்வின் " வேற எதுவும் பட்டம் கொடுக்க மாட்டீங்களா ?!"

ரசனைக்காரி said...

@varadaradjalou

மேல உள்ள பதில் பின்னூட்டம் உங்களுக்கு ரீப்பீட்டு!!!!

ரசனைக்காரி said...

@க. பாலாஜி

//வேண்டாம்....வலிக்குது....அழுதுடுவேன்...அழுதுடுவேன்....//

இந்த டயலாக் அ என்னைய சொல்லவைக்காம காப்பாத்துன நீங்க வாழ்க பல்லாண்டு...!!
நீங்களும் நானும் தாங்க இதுக்கு ஒட்டு போட்டுருகொம் இதுவரைக்கும்...

openbook said...

கஸின்கிட்ட அடிவாங்கினா வலிக்குதே, அதுவே
அஸின்கிட்ட வாங்கினா வலிக்குமா?

Post a Comment

வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin